2025 காண ஐபிஎல்-ன் மிகப்பெரிய தடாளடி அப்டேட்டுகள். ஆம் நண்பர்களே..! ஐபிஎல் அன்னவுன்ஸ்மென்ட் வந்ததும் போதும் நம்ம எல்லாருக்குமே பயங்கர குசியா ஆயிருச்சுனே சொல்லணும். ஏன்னா ஐபிஎல் இந்தியாவோட மிகப் பரிய திருவிழாவென்று சொல்லித்தான் ஆகணும் ஏனென்றால் மார்ச் முதல் மே மாதம் வரை எப்படி டைம் போகும் என்று தெரியாது அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு இந்த ஐபிஎல் கிரிக்கெட்டை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவளவில் பார்க்கப்பட்டு, சப்போர்ட் செய்யவும்படுகிறது.

அந்த வரிசையில் நமது வலைதளத்தை தினந்தோறும் பார்வையிடும் ஒரு நண்பர் ஒருவர் ஐபிஎல் சம்பந்தமாக ஏதேனும் அப்டேட்டுகள் வந்திருந்தால் அதைப்பற்றி ஒரு பதிவினை வெளியிடுங்கள் என்று என்னிடம் கேட்டார் அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னால் முடிந்த வரை சில தகவல்களை இன்று நான் கட்டுரையாக எழுதி இருக்கிறேன் முழுமையாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். மேலும் இந்த வருஷம் எந்த டீம் ஐபிஎல் கோப்பையை தட்டிச் செல்லும் என்பதை மறக்காமல் குறிப்பிடுங்கள்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரியே ஐபிஎல் ல நிறைய அப்டேட்ஸ ஒரே நாள்ல அணிகள் குவிச்சுட்டு வராங்க. அப்படி கடந்த 24 மணி நேரத்துல வெளியான அப்டேட்கள் பத்தி தான் இப்ப நம்ம பாக்க போறோம். இதுல முதல் அப்டேட் அதுவும் ரொம்ப முக்கியமான அப்டேட் எப்ப வரும்னு எல்லாரும் காத்துக்கிட்டு இருந்த அப்டேட். அது என்ன அப்படின்னா ஒரு வழியா டெல்லி கேப்பிடல்ஸ் அணி தன்னோட கேப்டன் யாரு அப்படிங்கிற அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க.

முதல்ல இவங்க வந்து ஏலத்துல கே எல் ராகுலை எடுக்கும்போது இவர்தான் அந்த அணியோட ஓட கேப்டனா இருப்பாரு அப்படின்னு எல்லாருமே எதிர்பார்த்து காத்துட்டு இருந்தாங்க. ஆனா கே எல் ராகுலே அவங்ககிட்ட எனக்கு கேப்டன்சி எல்லாம் வேணாம். டீம்ல ஒரு பிளேயரா நான் இருந்தாலே போதும் அப்படின்னு சொல்லிட்டதால, அதுக்கப்புறமா தகவல்கள் வெளியாச்சு. அதுக்கப்புறமா பார்த்தோம்ன்னா இந்த சாம்பியன்ஸ் ட்ராபியோட முடிவுக்கு அப்புறமா கேப்டனை வந்து அனௌன்ஸ் பண்ணலாம் அப்படின்னு இந்த அணி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கிறதாக சொல்லப்படுது.
அதே மாதிரி இப்ப சாம்பியன்ஸ் ட்ராபி முடிஞ்ச்சு அதற்கான கொண்டாட்டங்கள் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா எங்க டீமோட கேப்டன் அக்சர் பட்டேல்தான் அப்படின்னு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியிட்டு இருக்காங்க. இதை பத்தி அக்சர் பட்டேல் சொல்லும்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியோட கேப்டனா இருக்கிறது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

அக்சர் பட்டேலை பொறுத்தவரைக்கும் இப்ப கடந்த இரண்டு ஆண்டுகளா எடுத்துக்கிட்டோம் அப்படின்னா, கிரிக்கெட்டிங் அதாவது கிரிக்கெட்ல அவரோட கரியரோட பீக்க தொட்டுட்டு இருக்காரு அப்படின்னு தான் சொல்லணும். ஆல்ரவுண்டர் அப்படிங்கறதுக்கான ஒரு ஃபுல் ஃபார்மையும் அவர் வந்து இப்ப உருவாக்கிட்டு இருக்காரு. அதாவது பேட்டிங் ஆகட்டும், பௌலிங் ஆகட்டும் தனக்கான ரோல் என்ன கொடுக்கப்படுதோ டீம்ல அதை வந்து ரொம்ப கனகச்சிதமா செய்யக்கூடிய வீரரா இருக்காரு. அதனாலதான் இந்த கேப்டன்சி அப்படிங்கிற வாய்ப்பும் அவரை தேடி வந்திருக்கு.
அது மட்டும் இல்லாம இதற்கு முன்னாடி அதாவது டெல்லி கேப்பிடல்ஸ் அணியோட தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலோட லிஸ்ட் வெளியாகும் போதே ஒருவேளை வந்து அக்சர் பட்டேல் தான் அந்த அணியோட கேப்டனா இருப்பாரோ அப்படிங்கிற ஒரு சந்தேகம் நிறைய பேருக்கு இருந்தது. ஏன்னா அவங்களோட லிஸ்ட்டை பொறுத்தவரைக்கும் முதல் தக்கவைக்கப்பட்ட வீரரா வந்து அக்சர் பட்டேல் தான் இருந்தாரு. சோ அதுக்கு ஏத்த மாதிரிதான் இப்ப அவருக்கான கேப்டன்சி அப்படிங்கறதும் கொடுக்கப்பட்டிருக்கு.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில இவ்வளவு சந்தோஷமான விஷயம் வந்து ஒரு பக்கம் நடந்துட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த அணிக்கு சோகமான ஒரு சம்பவமும் அரங்கேறி இருக்கு. அது என்ன அப்படின்னு பார்த்தோம்னா அந்த அணிக்காக ஐபிஎல் ல வந்துட்டு ஏலத்துல எதிர்க்கப்பட்ட வீரரான இங்கிலாந்தோட ஹாரி ப்ரூக்குக்கு இரண்டு ஆண்டுகள் ipl ல பங்கேற்கிறதுக்கு தடை அப்படிங்கறது விதிக்கப்பட்டிருக்கு. ipl பொறுத்தவரைக்கும் இப்ப அதாவது இப்ப ரீசன்ட்டா நடந்து முடிந்த மெகா ஏலத்துக்கு முன்னாடி வந்து நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் வந்து ஃபார்ம் பண்ணிருந்தாங்க.

அதுல ரொம்ப முக்கியமான ஒரு ரூலா இருந்தது என்ன அப்படின்னா, காயம் தவிர பிற காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் யாராவது ipl ல இருந்து விலகுறாங்க அப்படின்னா அவங்களுக்கு ipl பங்கேறதுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படும் அப்படிங்கறதுதான் அந்த ரூல். சோ அந்த ரூலின் படி முதல் முதலா தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் அப்படிங்கிற ஒரு மோசமான சாதனைக்கு ஹாரி ப்ரூக் சொந்தக்காரர் ஆயிருக்காரு. யார் இந்த ஹாரி ப்ரூக் அப்படின்னு பார்த்தோம்னா இங்கிலாந்து அணியோட வருங்காலம் நம்பிக்கை நட்சத்திரமா இப்படி எல்லாம் கொண்டாடப்படுற வீரர்தான் ஹாரி ப்ரூக்.
இவர்தான்ப்பா அடுத்த பென் ஸ்டோக்ஸ் அப்படின்னு இங்கிலாந்து டீம் இவரை பத்தி ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருக்காங்க. அதற்கு முக்கியமான காரணம் இவரோட பேட்டிங் பெர்ஃபார்மன்ஸ் அப்படிங்கறதுதான். சொல்லப்போனா இங்கிலாந்தோட ஒரு நாள் அணியோட அடுத்த கேப்டனா இவர்தான் இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது. ஏன்னா அந்த அணியோட கேப்டனான ஜாஸ் பட்லர் அண்மையிலதான் வந்துட்டு தன்னோட கேப்டன்சி பொறுப்புல இருந்து விலகுறதா அறிவிச்சு இருந்தாரு, அந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி தோல்விகளுக்கு அப்புறமா.
சோ அவருக்கு அடுத்த இடத்துல இந்த கேப்டன்சி இவரை தான் தேடி வரும்னு சொல்லப்படுது. சோ இங்கிலாந்து விளையாட இருக்கிற அடுத்தடுத்த போட்டிகளை காரணமா சொல்லிதான் இவர் வந்து இந்த ipl ல இருந்து விலகுறதா சொல்லி இருந்தாரு. அதன் மூலமாதான் இவருக்கு தடை அப்படிங்கறதும் விதிக்கப்பட்டிருக்கு.

இதற்கு அடுத்த அப்டேட் என்ன அப்படின்னு பார்த்தோம்ன்னா, மும்பை அணியோட அப்டேட்தான் அது. இதுல வந்துட்டு பும்ரா இந்த ipl சீசன்ல விளையாடுவாரா இல்லை எவ்வளவு போட்டிகளுக்கு விளையாடுவாரு, எப்ப வருவாரு அப்படிங்கிற நிறைய சந்தேகங்கள் இருந்தது. இப்ப வந்திருக்கிற அப்டேட் என்ன அப்படின்னு பார்த்தோம்ன்னா, ஏப்ரல் முதல் வாரத்துல அவர் வந்து தன்னோட டீம் கூட ஜாயின் பண்ணுவாரு அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. இதுலயுமே ஒரு சின்ன ட்விஸ்ட் அப்படிங்கறது இருக்கு. அது என்னன்னா ஏப்ரல்ல அவர் மும்பை இந்தியன்ஸ் டீம் கூட வந்து ஜாயின் பண்ணிருவாரு ஆனா வந்த உடனே அவர் வந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவாரா, விளையாட மாட்டாரா அப்படிங்கறத இதுவரைக்கும் சொல்லல.
ஏன்னா அவரோட காயத்தின் தன்மை அப்படிங்கறது இப்ப வரைக்குமே வந்து குணமாகாமல் தான் இருக்காம். இப்ப வரைக்கும் அவர் வந்து தொடர்ந்து மருத்துவர்களோட கண்காணிப்புல தான் இருந்துட்டு வராரு. சோ அந்த வகையில பார்த்தோம் அப்படின்னா முதல்ல வந்து ஒரு இரண்டு போட்டிகளுக்கு அவர் இருக்க மாட்டாரு அப்படின்னு சொல்லப்பட்டது. ஆனா இப்ப இருக்கிற சூழலை பார்த்தோம் அப்படின்னா நிறைய போட்டிகளுக்கு வந்து பும்ரா இல்லாமதான் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை விளையாட வேண்டிய சூழல் அப்படிங்கறது உருவாகுறதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.
சரி நிறைய டீம்ஸ பத்தி பார்த்துட்டு இருக்கோமே நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தி ஏதாவது அப்டேட் இருக்கா அப்படின்னு கேட்டா கண்டிப்பா அந்த அப்டேட்டும் இருக்கு. அதுல முதலாவது அப்டேட் என்ன அப்படின்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட குட்டி சிங்கமான மதிஷா பதிரனா டீம் கூட ஜாயின் பண்ணிருக்காரு. இலங்கை வீரரான இவரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள்ள என்ட்ரி கொடுத்ததை வந்து ஒரு வீடியோ எல்லாம் வெளியிட்டு கொண்டாடி தீர்த்திருக்காங்க.

சென்னை அணிக்கு மதிஷா பதிரனாவோட என்ட்ரி அப்படிங்கறது அந்த டீம்க்கு ரொம்பவே முக்கியமான ஒண்ணா பார்க்கப்படுது. ஏன்னா கடந்த முறை ரொம்ப இக்கட்டான சூழல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கும்போது அந்த சமயத்துல இவருக்கு காயம் காரணமாக அந்த அணிக்காக விளையாட முடியாத சூழல் அப்படிங்கறது உருவாச்சு. அதுக்கப்புறமா உலகக்கோப்பை இந்த மாதிரியான விஷயங்களுக்காக அவர் வந்து பாதியிலேயே வந்து ஊருக்கு கிளம்பி போகிற மாதிரியான சூழல் எல்லாம் இருந்தது.
சோ அப்படிப்பட்ட மதிஷா பதிரனா மறுபடியும் என்ட்ரி கொடுத்திருக்கிறது அப்படிங்கறது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான நியூஸாதான் இருக்கும் இது. இதை தாண்டி இன்னும் ஒரு முக்கியமான அப்டேட் என்ன அப்படின்னு பார்த்தோம்னா ரிஷப் பண்ட் மற்றும் கல்யாணத்துக்காக போயிருந்த மகேந்திர சிங் தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட மறுபடியும் ரீ ஜாயின் பண்ணிருக்காரு. தோனி வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட முதல் கட்ட பயிற்சிக்கே வந்து வந்திருந்தாரு. ஆனா நடுவுல இந்த கல்யாணத்துக்காக மட்டும் அவர் வந்து டேராடூன் போயிருந்தாரு.
சோ கல்யாண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா அவரு இப்ப வந்து டீம்குள்ள வந்திருக்காரு. சோ இன்னும் நிறைய இளம் வீரர்களுக்கு வந்து தோனி அறிவுரைகள் வழங்குறது அந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவிலேயே வெளியிடுவாங்க அப்படின்னு எதிர்பார்க்கலாம்.

மேலும் ‘லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்’ ரவீந்திர ஜடேஜா வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஓட ஜெர்சி அந்த ஐந்து நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியோட இருக்கிற புகைப்படம் ஒன்னையுமே வந்து சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டு இருக்காங்க. அதுக்கு வந்து அவங்க கொடுத்திருக்கிற கேப்ஷன் வந்து அடுத்த சீசனுக்கு ரெடி ஆயாச்சு அப்படிங்கறதுதான் அந்த கேப்ஷனா அமைஞ்சிருக்கு. சோ இதுவுமே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு வந்து ஒரு சூப்பரான நியூஸாதான் அமைஞ்சிருக்கு.
அவ்வளவுதான் நண்பர்களே இதுதான் இன்னைக்கு சடனா ஐபிஎல் தொடர்பான அப்டேட்டுகள் இன்டர்நெட்ல உலாவிக்கிட்டு வந்தது அதைப்பற்றி நிறைய நண்பர்கள் என்கிட்ட நிறைய கேள்வி கேட்டீங்க ஏதோ என்னால் முடிந்தது என் கண்ணுக்கு தென்பட்டது என்னென்ன இருந்துச்சோ அது அத்தனையும் தூக்கிட்டு வந்து இங்க ஒரு ஆர்டிக்கலா எழுதியாச்சு.
இந்த கேள்வியை கேட்ட நண்பர் மூலமாக முதல் முறையாக நமது வலைதளத்தில் விளையாட்டுச் செய்திகளுக்காக ஒரு லேபிள் கிரியேட் செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.
நமது வலைதளத்தில் இது மட்டும் இன்றி பல்வேறு விதமான சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் உங்களுக்காக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தகவல்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் என்பதையும் மேலும் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் என்பதையும் இந்த இடத்தில் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

உதாரணத்திற்கு இந்த பதிவை படித்து முடித்த பிறகு கீழே இருக்கும் மற்றொரு லிங்கை கிளிக் செய்து அந்த பதிவையும் படித்துப் பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு நமது வலைதளத்தில் வெளியாக கூடிய பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவலாக இருக்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு பிறக்கும்.
மேலும் துவக்கத்தில் இருந்து இறுதிவரை இந்த பதிவை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்றால் பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே நண்பர்களே நமது வலைதளத்தில் தினந்தோறும் வெளியிடக்கூடிய பல பயனுள்ள தகவல்களின் அப்டேட்டுகளை உடனுக்குடன் பெறுவதற்காக நமது வலைதளத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக ஒரு whatsapp சேனலையும் டெலிகிராம் சேனலையும் உருவாக்கி இருக்கிறேன் மறக்காமல் அந்த சேனலில் இணைந்து உங்களது பொன்னான ஆதரவை கொடுத்து வாருங்கள்.
நமது சேனலில் இணைய விரும்பினால் கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து மறக்காமல் அதில் உள்ள சேனலை இணைந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝
உங்களுக்கு நேரம் இருந்தால் இந்தப் பதிவையும் படித்துப் பாருங்கள்…👇
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
