நாம வாழற இந்த உலகத்தை பொறுத்தவரைக்கும் ஆச்சரியங்களுக்கும், மர்மங்களுக்கும் மேலும் மறைச்சு வைக்கப்பட்ட மர்ம ரகசியங்களுக்கும் பஞ்சமே கிடையாது. அந்த வகையில சாதாரண மனிதர்களால, அவ்வளவு ஈஸியா நெருங்க முடியாத பாதுகாப்பு நிறைஞ்ச இந்த உலகத்துல இருக்கிற சில மிஸ்டிரியஸான பிளேசஸ் பத்திதான் இன்னைக்கு நம்ம சுட சுட அப்டேட்ஸ் வலைதளத்துல பார்க்க போறோம்.

வழக்கம் போல இன்னைக்கான பதிவும் இன்ட்ரஸ்டிங்கான ஒன்னாவேதான் இருக்கும். சோ பதிவை கடைசி வரைக்கும் படிச்சி முடிச்சதும் கண்டிப்பா பேஸ்புக்ல ஒரு லைக் குடுங்க. அதோட இந்த வலைதளத்துக்கு இப்பதான் நீங்க முதல் தடவை வரீங்கனா கீழ இருக்கிற ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் இருக்கும் டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
அப்பதான் நம்ம வளைதளத்துல அப்டேட் ஆகுற ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு உடனடியா தெரியவரும். வாங்க இப்ப டாபிக் குள்ள போகலாம்.
தி லார்ஜஸ்ட் கோல்ட் வாலட் இன் தி வேர்ல்ட்
தி லார்ஜெஸ்ட் கோல்ட் வால்ட் இன் தி வேர்ல்ட் அமெரிக்காவோட பெடரல் ரிசர்வ் பேங்க் வாலட்தான் இந்த உலகத்திலேயே அதிக அளவு தங்கத்தை தேக்கி வச்சிருக்கிற கோல்ட் டெப்பாசிட்டரி. அதாவது தங்க களஞ்சியமா அறியப்படுது. நியூயார்க் நகரத்தோட லோவர் மேன்ஹாட்டன் பகுதியில இருக்கிற, பெடரல் ரிசர்வ் பேங்கோட அண்டர் கிரவுண்ட் செக்ஷன்லதான் இவ்வளவு தங்கத்தையும் பாதுகாத்துட்டு வராங்க.
இந்த உலகத்துல இதுவரைக்கும் மைனிங் பண்ணி தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்துல 25% வரைக்கும் இங்கதான் பதுக்கி வச்சிருக்காங்க, அதுவும் தங்க கட்டிகளா மாத்தி வச்சிருக்காங்க. இதோட மொத்த எடைமட்டுமே கடைசியா கிடைச்ச தகவல்களோட அடிப்படையில பாக்குறப்போ 5620 மெட்ரிக் டன்கள். இந்த விஷயத்தை இப்ப நீங்க பார்த்துட்டு இருக்கிற இந்த சமயத்துல இது கூடியும் இருக்கலாம், குறைஞ்சும் இருக்கலாம்.
அமெரிக்க டாலர் மதிப்புல இதை கணக்கு போட்டா இதோட மதிப்பு ஏறத்தாழ 260 பில்லியன் டாலர்கள் இருக்கும். இந்த வால்டுக்குள்ள இருக்கிற மொத்த தங்கமும் அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தமில்லை. வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 28 சென்ட்ரல் பேங்குகளுக்கு சொந்தமான தங்கமும் இதுல அடக்கம். இதுல இன்னும் குறிப்பிட்டு சொல்லணும்னா இதுல அமெரிக்காவுக்கு சொந்தமான தங்கம் வெறும் 5% மட்டும்தான்.
1924 ஆம் வருஷம் உருவாக்கப்பட்ட இந்த வால்ட்டை கிரைனட் கற்களை சுத்தி, அதன்மேல் திக்கான லேயர்னால கான்க்ரீட்டை ஏற்படுத்தி கட்டமைச்சிருக்காங்க. இதோட மெயின் வால்ட்டுக்குள்ளார நுழையறதுக்கான என்ட்ரன்ஸோட மெட்டல் ஆர்க் மட்டும் 2 m உயரத்துக்கு அதாவது 140 டன் இடையில உருவாக்கப்பட்டிருக்கு.
இப்படிப்பட்ட இந்த வால்ட்டுக்குள்ளார ஒருத்தர் நுழைஞ்சு அந்த கதவு மொத்தமா அடைக்கப்பட்டா, அவரால அதுக்குள்ளார இருக்கிற காத்த சுவாசிச்சு அதிகபட்சமா மூன்று நாட்கள் வரை மட்டும்தான் உயிர் வாழ முடியும். சோ இதுக்குள்ளார கொள்ளை அடிக்க கும்பலா மட்டும் உள்ள நுழைஞ்சா, அது அவங்களுக்கு அவங்களே சமாதி கட்டிக்கிறதுக்கு சமம்.
வாட்டிகன் அபோஸ்டாலிக் அர்சீவ் (Vatican Apostolic Archive)
வாட்டிகன் சிட்டி இந்த உலகத்திலேயே நம்ப முடியாத, பலருக்கும் தெரியாத லட்சக்கணக்கான ரகசியங்கள் மறைச்சு வைக்கப்பட்டிருக்கிற பகுதி எதுன்னு கேட்டா, அது இந்த வாட்டிகன் சிட்டி தான். இத்தாலிய நாட்டோட ரோம் நகரத்தில் இருக்கிற தன்னாட்சி கொண்ட, யாருடைய தலையீடுமே இல்லாத ஒரு தனி நாடுதான் இந்த வேட்டிகன் சிட்டி.
போப்பாண்டவர் தான் இதுக்கு தலைவர். இந்த உலகத்துல இருக்கிற எல்லா ரோமன் கேத்தலிக் சர்ச்சுக்கும் இதுதான் ஹெட் குவார்ட்டர்ஸ். அப்படிப்பட்ட இந்த வேட்டிகன் சிட்டிலதான் இந்த உலகத்தோட மர்மமான பல ரகசியங்களை உள்ளடக்கிய ஆவண காப்பகம் அமைஞ்சிருக்கு. ஆரம்பத்துல இதுக்கு வேட்டிகன் சீக்ரெட் ஆர்சிவ்ஸ்னு தான் பேரு வச்சாங்க. அதுக்கப்புறம் காலப்போக்கில இதுக்கு வேட்டிகன் அப்போஸ்டாலிக் ஆர்ச்சிவ்னு (Vatican Apostolic Archive) பேர் மாத்துனாங்க.

கிபி 1612 ஆம் வருஷம் ஐந்தாம் போபால்ங்கிறவர் இருந்தப்போ உருவாக்கப்பட்ட இந்த ஆவண காப்பகத்துல, இந்த காப்பகம் உருவாக்கப்படுறதுக்கு முந்தைய காலகட்டம், பிந்தைய காலகட்டம்னு பல கால சூழல்களை சேர்ந்த முக்கியமான டாக்குமெண்ட்ஸும் புத்தகங்களும் சேகரிக்கப்பட்டு இதுல பத்திரப்படுத்தப்பட்டிருக்கு. அதுல ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களும் அடக்கும்.
இந்த வாட்டிகனோட ஆவண காப்பகத்தில் என்ன ஒரு லட்சம் ரெண்டு லட்சம் புத்தகங்களையும் ஆவணங்களை பாதுகாத்திருப்பாங்களானு நினைக்கிற உங்களுக்கான பதில் இதோ… இதில் இருக்கிற புத்தகங்களையும், ஆவணங்களையும் அடுக்க பயன்படுத்திய அலமாறிகளை ஒன்னுக்கு பின்னாடி ஒன்னா ஸ்ட்ரெட்ச் (தைத்து) பண்ணி கொண்டுபோன 85 km தூரத்துக்கு புத்தகங்களை அடுக்க முடியும்னு சொல்றாங்க. அப்படின்னா யோசிச்சு பாருங்க இங்க எவ்வளவு புத்தகங்களும் முக்கியமான ஆவணங்களும் பாதுகாப்பு வைக்கப்பட்டிருக்குன்னு..!
இவ்வளவு ரகசியங்களை கொண்ட இந்த இடம் முழுக்க முழுக்க போப்பாண்டவருக்கு தான் சொந்தம். அவரோட கட்டுப்பாட்டுலதான் இருக்கும். ஒவ்வொரு தடவை போப்பாண்டவர்கள் மாறுறப்பவும் இதோட ஓனர்ஷிப்பும் மாறிக்கிட்டே இருக்கும். வரலாறு சம்பந்தமான தகவல்களை அக்சஸ் (தெரிந்துகொள்ள) பண்றதுக்கு 19-ஆம் நூற்றாண்டு வரைக்கும் யாருக்குமே இங்க அனுமதி இல்லை. சிலரை தவிர இன்னைக்குமே கூட ஸ்காலர்ஸ் அண்ட் ஹிஸ்டாரியன்ஸ் யாராவது புக் எழுதுறதுக்காக ரெக்வஸ்ட் பண்ணா மட்டும்தான் நிறைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில அனுமதிக்கப்படுறாங்க.
அதுலயும் ஜர்னலிஸ்ட்க்கும், ரிப்போர்ட்டர்ஸ்க்கும் எப்பயுமே அனுமதி கிடையாது. அதையும் தாண்டி யாராவது ரேரா அனுமதிக்கப்பட்டா கூட உள்ள கேமரா, மொபைல் போன் எழுதுறதுக்கான இங்க் பேனா முதற்கொண்டு எதையுமே உள்ள கொண்டு போக அனுமதி கிடையாது. இப்படி ரொம்ப பயங்கரமான பாதுகாப்பு நிறைஞ்சு இருக்குன்னா வெளியுலகம் தெரிஞ்சுக்க கூடாதுன்னு நினைக்கிற பல மர்ம ரகசியங்கள் உள்ள ஒளிஞ்சுகிட்டு இருக்குங்கறது மட்டும் நமக்கு தெரிய வருது.
அதனால இப்படிப்பட்ட இந்த ரகசிய பகுதிக்குள்ளார எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் எவிடன்ஸ் அதாவது மனிதர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பத்தின உண்மைகளும், குரோனோ வைசர்ங்கிற காலம் தாண்டி பயணிக்கிற டைம் மெஷின் ஒண்ணு கூட உள்ள மறைச்சு வைக்கப்பட்டிருக்குதுன்னும், நம்ப முடியாத விஷயங்களை பலரும் சொல்றாங்க.
ஆனா அதுல எல்லாம் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியல. ஆனா நம்மளால நினைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு பல சுவாரசியமான, ரகசியம் கலந்த ஆவணங்களையும், புத்தகங்களையும் இங்க ஒழிச்சி வச்சிருக்காங்க. இப்படி பட்ட ஒரு மிஸ்டரி, இந்த வாட்டிகன் சீக்ரெட் ஆர்கிவ்ஸ் (Vatican Apostolic Archive) உள்ள மறைஞ்சு இருக்குங்கறது மட்டும் உண்மை.
ஸ்விஸ் கிரிப்டோ கரன்சி வாலட்ஸ் (Swis crypto currency vaults)
பொதுவா ஸ்விட்சர்லாந்துன்னு சொன்னாலே அங்க தயாரிக்கப்படுற சாக்லேட், சீஸ், ஸ்விஸ் வாட்சஸ், ஸ்விஸ் பேங்க், இதெல்லாம்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். உலகத்துல இருக்கிற பல செல்வாக்கு மிக்க மனிதர்களும், பணக்காரர்களும் பிரைவசி ஸ்டெபிலிட்டி வெல்த் மேனேஜ்மெண்ட்ன்னு பல காரணங்களுக்காக, இந்த ஸ்விஸ் பேங்க் தான் தேர்ந்தெடுத்து அவங்களோட பணம் தங்கம்னு பல விஷயங்களையும் தனியா ஒரு வால்ட்டை கிரியேட் பண்ணி பாதுகாத்து வைப்பாங்க. இது உங்க எல்லாருக்குமே ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.
ஆனா உங்கள்ல பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா இன்னைக்கு இருக்கிற டிஜிட்டல் உலகத்துக்கு ஏத்த மாதிரி தன்னை அடாப்ட் பண்ணிக்க இந்த சுவிட்சர்லாந்து தேசம் கிரிப்டோ கரன்சிகளுக்கும் ஒரு செக்யூரான ஸ்டோரேஜ் கொடுக்கிற வேலையும் செஞ்சுட்டு வராங்க. இதுக்கு ஒரு பழமையான மிலிட்டரி (military bunker) பங்கரை தேர்ந்தெடுத்து அதை கிரிப்டோ கரன்சி வால்ட்டுக்கான இடமாவும் மாத்தி இருக்காங்க. கிரிப்டோ கரன்சின்னா என்னானு உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்.
இந்த கிப்டோவை நாம இப்போ பயன்படுத்துற நோட்டு, காயின் மாதிரி அதை பிசிகலா தொட்டு பயன்படுத்த முடியாது என்கிரிப்ஷன் அல்காரிதம்ஸ யூஸ் பண்ணி அதை டிஜிட்டல் வடிவத்துலதான் ஸ்டோர் பண்ணி வச்சிருப்பாங்க. இந்த கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தனும்னா நமக்கு செப்பரேட்டா ஒரு கிரிப்டோ கரன்சி வால்ட் தேவைப்படும். அப்படிப்பட்ட இந்த கிரிப்டோ கரன்சியை பாதுகாக்க செப்பரேட்டா ஒரு வால்ட்ட கிரியேட் பண்ணி செக்யூரிட்டி புரோட்டோகால்ஸ உருவாக்கி டாப் டயர் ப்ரொடெக்ஷன் கொடுத்து இந்த டிஜிட்டல் அசர்ட்ட ஸ்விஸ் நாட்ல பாதுகாக்குறாங்க.
சம்பந்தப்பட்டவங்களுக்கு ஒரு பிரைவேட் கீ கொடுத்துருவாங்க. அதை வச்சு அவங்களால மட்டும்தான் இந்த டிஜிட்டல் கரன்சியை அக்சஸ் பண்ணவே முடியும். அந்த அளவுக்கு சைபர் தெஃப்ட் (cyber theft – சைபர் திருட்டுகள்) எதுவுமே இல்லாத மேக்ஸிமம் ப்ரொடெக்ஷன் கொடுக்கிற, ஒரு இடம்தான் இந்த ஸ்விஸ் கிரிப்டோ கரன்சி வால்லட்ஸ்.
பக்கிங்ஹாம் பேலஸ் (Buckingham Palace)
பிரிட்டிஷ் ராயல் ஃபேமிலியோட ஹெட் குவார்ட்டர்ஸ் அண்ட் ரெசிடென்ட்னு ரெண்டு விதமாகவும் இயங்குற ஒரு செல்வாக்கு நிறைஞ்ச அதீத பாதுகாப்பு கொண்ட ஒரு இடம்தான் இந்த பக்கிங்ஹாம் பேலஸ். இந்த மாளிகையை சுத்தி எப்பவுமே அரச காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு ரோந்து பணிகளை ஈடுபடுத்தப்பட்டிருப்பாங்க. சாதாரண மனிதர்களும் முன்னனுமதி இல்லாதவங்களும் ஈசியா இந்த அரச மாளிகைக்குள்ளார நுழைஞ்சிடவே முடியாது.
இந்த பக்கிங்ஹாம் பேலஸ்ல மொத்தம் 775 அறைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட போர்ஷன்ல மட்டும்தான் அரச குடும்பங்கள் வாழ்றதோட அரசாங்கம் சார்ந்த செயல்பாடுகளும் நடக்கும். மற்ற அறைகள் காலியாவே இருந்தாலும் அது எப்பயுமே தூய்மைப்படுத்துற பணிகள் நடந்துகிட்டேதான் இருக்கும்.
நாலு மீட்டர் உயரத்துக்கு வெளியே மோஷன் சென்சார், சர்வைலன்ஸ் கேமரான்னு எல்லா விதமான பாதுகாப்பு விஷயங்களையும் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தோட மர்மங்களும், கடந்த கால ரகசியங்களும் ஒழிஞ்சிருக்கிற இந்த மாளிகை கிபி 1703 ஆம் வருஷம் கட்டப்பட்டதுல ஆரம்பிச்சு, 300 வருஷங்களை தாண்டியும் இன்னைக்கும் ஐரோப்பிய கண்டத்திலேயே ரொம்ப பாதுகாப்பு நிறைஞ்ச இடங்கள்ல ஒண்ணாவே இருந்துட்டு வருது.
டி மிலிட்டரியஸ்ட் ஜோன் (A demilitarized zone (DMZ))
1953 ஆம் வருஷம், நடந்து முடிஞ்ச கொரியன் போருக்கு அப்புறமா கொரியா பகுதி சவுத் கொரியா மற்றும் நார்த் கொரியான்னு ரெண்டு தனித்தனியான நாடுகளா பிரிக்கப்பட்டு ரெண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைக்கோட்டு பகுதியை டி மில்ட்டிரைஸ்டு ஜோன் மாத்தி இருந்தாங்க.
241 km நீளம் கொண்ட இந்த பகுதி ரெண்டு நாட்டுக்கு இடையில 4 km அகலத்துக்கு தடிமனான ஒரு பஃப்பர் ஜோனா (தாங்கல் மண்டலம்) கிரியேட் பண்ணப்பட்டிருந்தது. இதை ரெண்டு ரெண்டு km-ரா ரெண்டு நாடுகளும் பிரிச்சுக்கிட்டாங்க. இதுல சவுத் கொரியா சைடுல நிறைய மலைப்பகுதிகள் நிறைஞ்சதா இருக்குறதுனால அங்க சில மக்கள் கவர்மெண்ட் உதவியோட குறைஞ்ச எண்ணிக்கையில வாழ்ந்துட்டு இருக்காங்க.
ஆனா நார்த் கொரியர்கள் தான் இந்த பப்பர் ஜோன் பகுதியை ஒவ்வொரு நிமிஷமும் கண்கொத்தி பாம்பா கண்காணிச்சுக்கிட்டே வராங்க. அது எதுக்குனா.., ஏதோ எதிரி நாட்டுக்காரன் உள்ள நுழைஞ்சிருவானோங்கிற பயத்தினால கிடையாது. காரணம் வடகொரியாவுல இருக்கிற மக்கள் யாருமே இந்த 2 km தாண்டி தப்பிச்சு சவுத் கொரியாகுள்ள போயிடக்கூடாது.
அதுதான் அவங்களோட முக்கியமான இந்த சர்வைலன்ஸ்க்கு (கண்காணிப்பு) காரணம். அப்படின்னா யோசிச்சு பாருங்க வடகொரியா கவர்மெண்ட் அவங்க நாட்டு மக்களை எந்த அளவுக்கு கண்ட்ரோல் பண்ணி அடிமைகளா வச்சிருப்பாங்கன்னு. இந்த வடகொரியா பண்ற அட்டூலியங்களை பத்தி இரண்டு பெரிய கட்டுரைகளை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன் அந்த கட்டுரைகளை கூடிய விரைவில் பதிவேற்றமும் செய்வேன். அந்த கட்டுரைகளை படிக்க விரும்பும் நபர்கள் கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து டெலிகிராமில் மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள்.
ஒயிட் ஹவுஸ் (White house)
அமெரிக்காவோட ஜனாதிபதி அஃபிஷியலா தங்கியிருக்கிற அதீத பாதுகாப்பு நிறைஞ்ச மாளிகைதான் இந்த ஒயிட் ஹவுஸ்ங்கிறது. உங்க எல்லாருக்குமே தெரியும் வாஷிங்டன் டிசியோட (Washington Dc) மிக முக்கியமான லேண்ட்மார்க்கான இங்க மட்டும், ஒவ்வொரு வருஷமும் தோராயமா 125 மில்லியன் டூரிஸ்ட் வந்து விசிட் பண்ணிட்டு போறாங்க. ரொம்ப கிளாசிக்கான டிசைன்ல கட்டமைக்கப்பட்ட இந்த ஒயிட் ஹவுஸ்க்கு தோராயமா ஒவ்வொரு நாளும் 5000 பேராவது வந்து பார்த்துட்டு போறாங்க.
ஆனா ஒவ்வொருத்தரோட என்ட்ரியுமே உலகத்துல வேற எங்கேயுமே இல்லாத அளவுக்கு இங்க ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாவே இருக்கும். ஒயிட் ஹவுஸ் ஒருத்தர் பார்வையிட வரணும்னா 21 நாளுக்கு முன்னாடியே அவங்க தரக்கூடிய ஒரு ஃபார்ம ஃபில் பண்ணி பாஸ்போர்ட் முதற்கொண்டு பல விஷயங்களையும் முன்னாடியே அமெரிக்கன் கவர்மெண்ட் கிட்ட சப்மிட் பண்ணி இருக்கணும். அதுக்கப்புறம்தான் அனுமதியே கிடைக்கும்.
அதுமட்டுமில்லாம உள்ள வர்ற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா போட்டோ ஐடி கொடுப்பாங்க. தடை செய்யப்பட்ட எந்த ஒரு பொருளுக்கும் உள்ள அனுமதி இல்லை. இது மட்டுமல்ல வெள்ளை மாளிகை அமைஞ்சிருக்கிற பகுதியை சுத்தி குறிப்பிட்ட தூரத்துக்கு வானத்துல எந்த விதமான விமானமும் பறக்கக்கூடாது. ப்ராப்பரான ஆத்தரைசேஷன் இல்லாம மாளிகைக்குள்ள பிரசிடெண்ட் இருக்கிற ஏரியாவை யாராலயும் நெருங்க கூட முடியாது. இந்த உலகத்திலேயே பயங்கரமான பாதுகாப்பு நிறைஞ்ச இடம்னா அது இந்த அமெரிக்க வெள்ளை மாளிகையாதான் இருக்கும்.
ஏ டி எக்ஸ் ப்ளோரன்ஸ் பிரிசன் (ADX florence)
கலரோடாவில் (colorado) இருக்கிற ப்ளோரன்ஸ் டவுன்ல அமைஞ்சிருக்கிற இந்த ஏடிஎக்ஸ் பிரிசன் இந்த உலகத்திலேயே ரொம்ப செக்யூரான பிரிசன்ஸ்ல ஒன்னு. ரொம்ப ஆபத்தான குற்றவாளிகளை அடைச்சு வைக்கிறதுக்காகவே இந்த சிறைச்சாலையை ரொம்ப பிரத்தியேகமா வடிவமைச்சிருக்காங்க.
அதிதீவிரமான போலீஸ் பெட்ரோல், எக்ஸ்டென்சீவான கன் டவர்ஸ்ன்னு பக்காவா பிளான் பண்ணி கட்டமைக்கப்பட்டு, ஒவ்வொரு கைதியும் தனித்தனியா கண்காணிக்கிற இந்த சிறைச்சாலையிலிருந்து ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது.
டெஸ்லா
இன்னைக்கு டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு போயிருக்கிற நிறுவனம் எதுன்னு கேட்டா, அது இந்த எலான் மஸ்கோட டெஸ்லா தாங்கிறது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். தானாவே டிரைவ் பண்ற கார்கள் மேலும் பெட்ரோல், டீசல் இல்லாம லித்தியம் அயான் பேட்டரியை சார்ஜ் பண்ணி, எலக்ட்ரிக் வாகனங்கள்னு 2008 ஆம் வருஷம் இவங்க முன்னெடுத்த இந்த விஷயம் இன்னைக்கு பல இடங்கள்ல பயன்பாட்டுக்கு வந்தாச்சு.
நம்மள பலருமே கூட இன்னைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிட்டோம். இன்னைக்கு நிலைமைக்கு டெஸ்லாவுக்கு உலகம் முழுக்க ஏழு ஃபேக்டரிஸ் இருக்கு. இவங்க எலக்ட்ரிக் கார்ஸ மட்டும் தயாரிக்கிறாங்கன்னு நினைச்சா அது தான் நம்மளோட அறியாமை மாறாக அந்த காருக்கு தேவையான பவர்ஃபுல்லான லித்தியம் அயான் பேட்டரியை உருவாக்குற முயற்சியிலயும் ஈடுபட்டுட்டு வராங்க.
அதுல நெவேடாவுல அமைஞ்சிருக்கிற ஒரு ஃபேக்டரியை தான் இப்ப நாம்ம பார்க்க இருக்கோம். 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு உருவான இந்த தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரம் மொத்தமும் சோலார் எனர்ஜி மூலமாதான் கிடைக்குது. இந்த ஃபேக்டரி டெக்னாலஜிக்கலி அட்வான்ஸ் ஆனதுங்கிறதை உள்ள போய் பார்த்தவங்களாலதான் முழுசா உணர முடியும். அந்த அளவுக்கு இந்த ஃபேக்டரியை கட்டமைச்சு எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கிட்டு வராரு எலான் மஸ்க்.
பங்கர் அட் கிரீன் பிரேயர் (Greenbrier Bunker)
வெஸ்ட் வெர்ஜினியா மலைப்பகுதிகளுக்கு நடுவில் அமைஞ்சிருந்த இந்த கிரீன் பிரேயர் ரெசார்ட் ஹோட்டல்ல ஒரு ரகசிய பங்கர் உருவாக்கப்பட்டிருந்த விஷயமே 1992 ஆம் வருஷம்தான் உலகத்துக்கு தெரிய வந்திருந்தது. ஆடம்பரமான வசதிகளோட பணக்காரர்களுக்கும், அரசாங்கத்தோட முக்கியமான பொறுப்புல இருக்கிறவங்களுக்கும், ஃபேவரட்டான டூரிஸ்ட் டெஸ்டினேஷனா இருந்த இந்த ஹோட்டலுக்கு அடியில யுஎஸ் கவர்மெண்ட்க்கு சொந்தமான ரகசிய பங்கர் ஒன்னு அதோட பேஸ்மென்ட்ல 1950களோட இறுதியில இருக்கு.
வோல்டு வார் காலகட்டத்துல காங்கிரஸ் சபையை மாற்றி அமைக்கிறதுக்கான ஒரு ஆல்டர்நேட்டிவ் இடமா இதை உருவாக்கி வச்சிருந்திருக்காங்க. அமெரிக்காவோட செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் அரசியல்வாதிகள்னு சொல்லி போர் உருவாக்குற சூழ்நிலை ஏற்பட்டா ரகசியமான பாதுகாப்போட அவங்களை தங்க வைக்கிறதுக்காகவே இதை உருவாக்கி இருக்காங்க.
1958 ஆம் வருஷத்துல நியூக்ளியர் பங்கரை கிரியேட் பண்றங்கிற பேர்ல உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த ரகசியமாக தங்கும் சுரங்கம், 112000 சதுர அடி பரப்பளவுல இருக்கும். இதுல ஒரே நேரத்துல 1000 மனிதர்கள் தங்கக்கூடிய அளவுக்கு, கடைசியா 1961 ஆம் வருஷம் மண்ணுக்கடியில முழுமையா கட்டி முடிக்கப்பட்டிருக்கு.
ஹாஸ்பிடல் கிச்சன் மீட்டிங் ஹால்னு குறைந்தபட்சம் 60 நாட்கள் வரைக்கும் மனிதர்கள் வெளியவே வராத அளவுக்கு அவங்க உள்ளேயே வாழ்றதுக்கு தேவையான சகல வசதிகளையும் உருவாக்கி வச்சிருந்திருக்காங்க. இப்படி 30 வருஷத்துக்கு மேல ரகசியமாவே இருந்த அந்த பங்கரோட உண்மை 1992 ஆம் வருஷம் ஜர்னலிஸ்ட் ஒருத்தர் மூலமா வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில வெட்ட வெளிச்சமாகி இருந்தது.
தி குளோபல் சீட் (Seed-விதை) வால்ட்
நார்வே நாட்டோட ஆர்டிக் பிரதேசத்தை ஒட்டி இருக்கக்கூடிய பனி நிறைஞ்ச பகுதியில, நீளமான பாறையொன்றுக்கு உட்புறமா குடைஞ்சு உருவாக்கப்பட்ட இந்த சுரங்கத்துக்குள்ளார, இந்த உலகத்தோட பல்வேறு பகுதிகள்ல இருந்து சேகரிக்கப்பட்டு கொண்டு வந்த லட்சக்கணக்கான வெவ்வேறு வகையான உணவு தானியத்தை தரக்கூடிய தாவரங்களோட விதைகளை இங்கதான் பக்காவா பாதுகாத்துட்டு வராங்க.
2006 ஆம் வருஷம் உருவாக்கப்பட்ட இந்த வால்ட்டுக்குள்ளார இன்னைக்கான சூழ்நிலைவரை கிட்டதட்ட 9 லட்சம் வகையான உணவு தானிய விதைகள் பாதுகாக்கப்பட்டுட்டு வருது. மிக பிரம்மாண்டமான பாறையை 120 மீட்டர் நீளத்துக்கு குடைஞ்சு ஆட்கள் இல்லாத பணி நிறைஞ்ச சூழ்நிலையில எப்பயுமே ஒரே மாதிரி சீரான நிலைல இருக்கிற மாதிரியான டெம்பரேச்சர்ல இந்த விதைகள் பாதுகாக்கப்படுது.
அணு ஆயுத பேரழிவு சுனாமி பூகம்பம்னு சொல்லி எப்படிப்பட்ட பேரழிவு உண்டானாலுமே இந்த சீட் வால்ட்ட மட்டும் அழிக்கவே முடியாது. இந்த உலகமே மேக்ஸிமம் அழிஞ்சு போய் அன்னைக்கு ஒருவேளை சில மனிதர்கள் மட்டும் மிஞ்சி இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகுறப்போ மனிதர்கள் இந்த பகுதியிலிருந்து தானியங்கள் எடுத்து மறுபடியும் பயிர் செஞ்சு விளைய வச்சு இன்னொரு தடவை இந்த பூமியில இயற்கையை உருவாக்கி மனித இனம் வாழ்றதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிற விதமாதான் இந்த சீட் வால்ட்ட முன்னாடியே யோசிச்சு இந்த இடத்துல உருவாக்கவும் செஞ்சிருக்காங்க.
அதனால இது ஒரு மிகப்பெரிய பேரழிவு உண்டாகுறப்போ மனித இனம் மிஞ்சி இருந்ததுன்னா அவங்களுக்கு இது ஒரு பெரிய உதவியாவும் இருக்கும். அதுக்கான ஒரு தொலைநோக்கு பார்வையோட இந்த விதைகள் காப்பகத்தை உருவாக்கி இருக்காங்க. இன்னைக்கு சூழ்நிலைக்கு பொதுமக்கள் யாரும் இதுக்குள்ள நுழைய அனுமதி இல்லை.
நோர்டு பங்கர் (The Cheyenne Mountain Complex in Colorado Springs)
1961 ஆம் வருஷம் கலாரோடவுக்கு பக்கத்துல நார்த் அமெரிக்கன் ஏரோஸ்பேஸ் டிஃபன்ஸ் (aerospace defence) கமெண்டுக்காக அண்டர் கிரவுண்ட்ல உருவாக்கப்பட்ட ஒரு பங்கர் தான் இந்த நோராட். கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்துல சைனிங்கிற மலைப்பகுதியை கொடைஞ்சு தொடர்ந்து ஆறு வருஷம் வேலை செஞ்சு இந்த பங்கரை உருவாக்கி இருக்காங்க. அந்த டைம்ல இந்த பங்கர குடைஞ்சு உருவாக்குறதுக்காக மட்டுமே 453000 கியூபிக் மீட்டர் அளவுக்கான பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கு.
பிப்ரவரி 1966 ஆம் வருஷம் ஓபன் பண்ணப்பட்ட இந்த நீளமான சுரங்கம் 610m நீளத்துல மூணு பிரைமரி டனல்ஸும், நாலு குறுக்கு பாதைகளும் இருக்கிற மாதிரி கட்டமைக்கப்பட்டதோட 115000 ஆங்கர் போல்ட்ஸ் (shock absorber போல இருக்கும் ஓர் அமைப்பு. வீடியோ இணைப்பில் அதை பார்ப்பீர்கள்) இதை தாங்குற மாதிரியும் உட்புறமா இதை கட்டமைச்சிருந்திருக்காங்க.
அமெரிக்க எல்லைகளை சுத்தி எந்த விமானம் பறந்தாலும் சரி, ஏதாவது சிக்னல் கிடைச்சாலும் சரி, அது உடனடியா இந்த பங்கர் குள்ள இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போயிரும். உடனடியா அலர்ட் Mode-க்கு வந்துருவாங்க. அணுகுண்டே வெடிச்சாலும் சரி இந்த பங்கருக்கு மட்டும் ஒண்ணுமே ஆகாது. இப்படிப்பட்ட இந்த பங்கர், ஃபுல் செக்யூரிட்டியோட செயல்படுறதுனால அவ்வளவு ஈஸியா ஒரு ஈ காக்கா கூட உள்ள நுழைய முடியாது.
கோக்ககோலா வால்லட்
உலகம் முழுக்க வாழுற எல்லா மனிதர்களாலயும் விரும்பி குடிக்கப்படுற முதன்மையான குளிர்பானம் எதுன்னு கேட்டா இந்த கோக்ககோலாதான். கிபி 1884 ஆம் வருஷம் ஜான் ஸ்டேட் மெம்பரட்டன்ங்கிற பார்மசிஸ்ட் (John Stith Pemberton, American pharmacist) அதாவது ஒரு மருந்தியல் நிபுணரால தயாரிக்கப்பட்ட இது ஒரு மெடிசன் மாதிரிதான் ஆரம்பத்துல பயன்படுத்தப்பட்டது. அதுக்கப்புறம் இதோட தனித்துவமான சுவைக்காக எல்லாரும் குடிக்கிற மாதிரியான ஒரு கூல் ட்ரிங்கா மாத்தி பலருக்கும் விற்க ஆரம்பிச்சாங்க.
1892 ஆம் வருஷம் தொடங்கப்பட்ட இந்த கோக்ககோலா கம்பெனியை 1894 ஆம் வருஷம் கிரிக்ஸ் கேண்ட்லர்ங்கிறவர் விலை கொடுத்து வாங்கி இருக்காரு. அன்னைக்கு தொடங்கி இன்னைக்கு வரைக்கும் இந்த கோக்ககோலா பிரபலமான ஒண்ணாவே இருந்தாலும், இந்த கார்பனேட்டட் டிரிங்கோட ரெசிபியும், சீக்ரெட்டும் அதாவது இதோட தயாரிப்பு முறையும் அதுக்கான மூலப்பொருள் சம்பந்தமான விஷயங்களும் ரகசியமாவே தான் இருக்கு.
அட்லாண்டாவுல இருக்கிற இந்த கோக்ககோலா நிறுவனம் அந்த சீக்ரெட்டை ஒரு சீக்ரெட்டான வால்ட்டுக்குள்ளார வச்சு இன்னைக்கும் பாதுகாத்துட்டு தான் வராங்க. இந்த வால்ட்டை பொதுமக்கள் கொஞ்சம் தூரம் தள்ளி நின்னு பார்க்கலாமே தவிர, கிட்ட போகவும் உள்ள நுழையவும் அனுமதி இல்லை. என்னதான் இதை பொக்கிஷமா பாதுகாத்தாலும் இதை குடிச்சு பார்த்த என்னோட தனிப்பட்ட அனுபவத்தை வச்சு நான் என்ன சொல்லுவேன்னா இந்த கோக்ககோலா ட்ரிங்க் உண்மையில 10 பைசாவுக்கு கூட ஒர்த் கிடையாது.
சொல்லப்போனால் மாட்டுக்கு ஊத்துற கழிவுநீர் தண்ணி, இதைவிட எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் என்னோட தனிப்பட்ட கருத்து. உங்களோட கருத்து என்னங்கிறத மறக்காம கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
டேட்டா சென்டர் இன் மிலிட்டரி பங்கர் (Bahnhof data center sweden)
பேன்ஹாப்ங்கிற ஸ்வீடனை சேர்ந்த இந்த இன்டர்நெட் சேவையை வழங்குற டேட்டா சென்டரை, ஆழமான மிலிட்டரி பங்கர் ஒண்ணுக்குள்ளார செட் பண்ணிருக்காங்க. ஸ்வீடன் நாட்டோட லீடிங் இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடரான இவங்களோட டேட்டா சென்டரை, ஸ்டாக்ஹோம்ல இருக்கிற கிரைனேட் பாறைகளை குடைஞ்சு பல அடி ஆழத்துக்கு உருவாக்கப்பட்ட பங்கர் அதாவது வோல்டு வார் காலகட்டத்துல அணு ஆயுத தாக்குதல்ல இருந்து தப்பிக்க உருவாக்கான ஒரு மிலிட்டரி பங்கர் குள்ளார இப்போ செட் பண்ணி வச்சிருக்காங்க.
பியோனாங்கிற இந்த மிலிட்டரி பங்கர் அப்ராக்சிமேட்டா நிலமட்டத்துல இருந்து கீழ் நோக்கி 30 m ஆழத்துக்கு கொடையப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கு 40 cm திக்கான என்ட்ரன்ஸ் டோரால செக்யூர் பண்ணப்பட்ட இந்த மிலிட்டரி பங்கர் குள்ளார இன்னைக்கு வாட்டர்ஃபால் பசுமையான செடிகள்னு ஒரு அருமையான சூழ்நிலையை உருவாக்கி, 1100 ஸ்கொயர் மீட்டர் அளவுக்கான இந்த இடத்தை ஒரு டேட்டா சென்டராவும் பயன்படுத்திட்டு வராங்க.
சீ லேண்ட் (Sea land)
இந்த உலகத்திலேயே மிகச்சிறிய நாடு எதுன்னு கேட்டா இந்த கடல் தண்ணிக்கு மேல கம்பீரமா நின்னுகிட்டு இருக்கிற இந்த கட்டுமானம் தான்னு சொன்னா உங்கள்ல பலராலயும் நம்ப முடியாது. இருந்தாலும் அதுதான் உண்மை. மொத்தம் 23 மனிதர்கள் மட்டுமே இதுல இன்னைக்கு வாழுறாங்க.
1942 ஆம் வருஷம் பிரிட்டிஷ் கடற்படை இரண்டாம் முழக்கப்போற சமயங்கள்ல வானத்துல பறக்குற ஆன்ட்டி ஏர்கிராஃப்ட் அதாவது எதிரிகளோட ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துறதுக்காக, அவங்க அவங்களோட வடக்கு கடல் பகுதிகள்ல கன்ஸ மவுண்ட் பண்ணி வைக்கிறதுக்காக அதாவது துப்பாக்கிகளை தாங்கி பிடிப்பதற்காக நிறைய பிளாட்பார்மை இன்ஸ்டால் பண்ணி இருந்தாங்க.
ஆனா அடுத்த சில வருஷங்களிலேயே இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்துட்டதுனால நிறைய கடல் பிளாட்பார்ம்ஸ டெஸ்ட்ராய் பண்ணிட்டாங்க. ஆனா அதிர்ஷ்டவசமா இப்போ நீங்க பார்க்கிற இந்த சி பிளாட்பார்ம் மட்டும் பிரிட்டிஷ்காரங்களோட கடல் எல்லையை தாண்டி தொலைதூரத்துல இருந்திருக்கு. அதனால இதை மட்டும் அப்படியே விட்டுருக்காங்க.
அதுக்கப்புறம் பல வருடங்கள் கழிச்சு 1966 ஆம் வருஷம் ரிட்டயர்டான பிரிட்டிஷ் ஆர்மி மேஜரான பேட்டி ராய் பேட்ஸ்ங்கிறவரும் அவரோட பிரண்ட்ஸும் சேர்ந்து இந்த சீ பிளாட்பார்மை ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்கா உருவாக்க முடிவு பண்ணிருக்காங்க. ஆனா கடைசி வரைக்கும் அந்த திட்டத்தை முழுமையா செயல்படுத்த முடியாததுனால இவர் ஒருத்தரே இந்த பழைய கைவிடப்பட்ட சீ பிளாட்பார்மை தனக்கானதா கிளைம் பண்ணி அங்கேயே தன்னோட கடைசி காலத்தை வாழ்ந்து கழிக்கவும் முடிவு பண்ணி இருக்காரு.
அதுமட்டுமில்ல செப்டம்பர் 2 -1967 ஆம் வருஷம் இந்த பகுதியை ஒரு தனி ஸ்டேட்டா டிக்ளர் பண்ணி அதுக்கு அவரையே அரசனாவும் அறிவிச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாரு இந்த ஆர்மி மேஜர். இருந்தாலும் பல எதிர்ப்புகளையும் தாண்டி இது இன்னைக்கும் நடுக்கடல்ல கம்பீரமா கடந்த கால வரலாற்று நினைவுகளை சுமந்து நின்னுகிட்டு தான் இருக்கு.
இவ்வளவு நேரம் பொறுமையாக இந்த பதிவை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்றால் ஒரு தகவலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன் இது போல சுவாரசியமான தகவல்கள் தினமும் நமது டெலிகிராம் பக்கத்தில் வந்து கொண்டிருக்கும். மறக்காமல் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் ஐ கிளிக் செய்து அதில் இருக்கும் டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள். 🙏🙏🙏

ஃபைனலி இந்த பதிவோட இறுதிக்கு வந்துட்டோம், இந்தப் பதிவுல பார்த்த மர்மங்கள் நிறைந்த சில பகுதிகளில எந்தப் பகுதி உங்களுக்கு பிடிச்சிருந்ததுனு கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் மறக்காம லைக், சேர் பண்ணுங்க. மேலும் உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் கமெண்ட் மூலம் ஷேர் பண்ணுங்க. அதோட இந்த பதிவு உங்களுக்கு இன்ட்ரஸ்டிங்கான ஒன்னாவும் இன்பர்மேட்டிவ்வான ஒன்னாவும் இருந்ததுன்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா நம்ம telegram சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க நண்பர்களே…🙏
அவ்வளவுதான் நண்பர்களே இன்னிக்கு நான் பதிவை இதோட முடிஞ்சது மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவுல நாளைக்கு உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா…📝