எனக்கு இப்பவும் மனசுக்குள்ள இந்த கேள்வி தான் ஓடிட்டு இருக்கு. இந்த மனுஷன் எவ்வளவு நல்ல காரியங்களை பண்ணிருக்காரு. ஆனா தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய பகுதிகளை மற்ற மாநிலங்களுக்காக விட்டுருகிறார் அப்படின்னு நினைக்கும் போது ஒரு பக்கம் இவர் மேல பயங்கரமா கோவம் வருது. காரணம் இன்னைக்கு நம்ம ஆந்திர பிரதேசத்தில் இருக்கக்கூடிய திருப்பதிக்கு போனா அங்க இருக்கக்கூடிய தமிழ் கல்வெட்டுகள் ஒன்னு ஒன்னும் அழிஞ்சுகிட்டு இருக்கு.
அதாவது அந்த கல்வெட்டுகள் அனைத்தையும் மறைச்சிட்டு அதுக்கு மேல தெலுங்குலயும், சமஸ்கிருதத்திலையும் கல்வெட்ட பொருச்சிக்கிட்டு இருக்காங்க. இப்படி ஒரு கேவலமான செயலை செஞ்சிட்டு இருக்காங்க ஆந்திரா காரனுங்க. போதாக்குறைக்கு காளகஸ்தி மேலும் சில பகுதிகள் ஆந்திராவிடம் கைவசம் ஆனது. சேலம் சைடு வந்தால் பெங்களூர், கோலார் இவை அனைத்தும் சேலம் ஜில்லாவோட இருந்த ஒரு பெரும் மாகாணம். இப்பேர்பட்ட பகுதிகளை கர்நாடகாவிடம் நாம் இழந்து விட்டோம். கேரளா சைடுக்கு வந்தா பாலக்காடு, நெடுமாங்காடு போன்ற பல்வேறு பகுதிகள் கேரளாவிடம் இழந்து நிற்கிறோம்.

இன்றைய பதிவில் இதைப்பற்றி தான் நம் சுவாரசியமான விஷயங்களை பார்க்க போறோம். சோ கைஸ் இந்த பதிவு தடாளடி பதிவா இருக்கும். ஒரு ஒரு தமிழனுக்கும் உள்ளுக்குள்ள ஃபையர வர வைக்க கூடிய ஒரு பதிவாக இருக்கும். படிச்சிட்டு இந்த பதிவு பிடிச்சிருந்தா லைக் ஷேர் கமெண்ட் செய்ய மறக்காதீங்க நண்பர்களே. நம்மகிட்ட இருந்து புடுங்கின பகுதியை வைத்து இன்னைக்கு அவங்க செழிப்பா இருந்துட்டு இருக்காங்க.
ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு இடத்துக்கு போகும்போதும் இதெல்லாம் நம்ம தமிழனோட இடம்ல அப்படின்னு நினைவுக்கு வரும்போது, ஒன்னும் பண்ண முடியாம நிக்கிற அந்த வலி இருக்கே அது மோசமான வலி. அந்த வலிகளை நீங்க உணர்ந்திருந்தீங்கன்னா நிச்சயமா இந்த பதிவு, உங்களுக்கு ஒருவித கோபத்தை காமராஜர் மேல் உண்டாக்கும். ஆனால் கரை படியாத மனிதன் அவர் என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.
ஆனால் இந்த சிறு தவறு செய்த காரணத்தினால் இன்று கர்நாடகாவிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம் தண்ணிக்காக, மேலும் கேரளாவிடம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தையும் முறையாக அவர் செய்துவிட்டு போயிருந்தாள் இன்று நாம் அல்லல் பட வேண்டிய துயரம் வந்திருக்காது. வாங்க இந்த பதிவுல இத பத்தி டீடெயிலா sudasudaupdates.com ல பாக்கலாம்…
முக்கிய குறிப்பு
ஐயா, அம்மா, சகோதர, சகோதரிகளே, தோழன், தோழிகளே ஒரு நிமிடம் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவானது காமராஜர் “நாடார்” என்பதால் ஜாதி பிரச்சனையை உண்டாக்கும் விதத்தில் இந்த பதிவு அமைக்கப்படவில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அவர் செய்த ஒரு சிறு தவறால் நாம் இன்று பல பகுதிகளை இழந்திருக்கிறோம்.

அதனால் நாம் பெறக்கூடிய கஷ்டங்களைப் பற்றி இந்த பதிவு விளக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன் இது ஜாதி சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பதிவு கிடையாது.
இந்தப் பதிவை முழுமையாக படித்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு நான் சொல்ல வரும் கருத்து புரிய வரும். ஜாதியை உள்நோக்கமாக வைத்து இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒரு தமிழனாக பிடித்து பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் சொல்ல வரும் கருத்துக்கள் புரியும்.
தமிழ்நாடு இழந்த பகுதிகள்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற வரிகளுக்கு ஏற்ப தெற்கே குமரி முனையிலிருந்து, வடக்கே வடவேங்கடமலை வரை பரவி வாழ்ந்தவர்கள் தான் நம்முடைய தமிழர்கள். ஒரு காலகட்டத்தில் தென்னிந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த நம்முடைய தமிழர்கள், கால ஓட்டத்தில் ஏற்பட்ட பல ஆட்சி மாற்றங்களாலும், பல அந்நிய படையெடுப்புகளாலும் நம்முடைய தமிழர்களின் நிலை சுருங்கி சுருங்கி இன்று தமிழ்நாடு எனப்படும் ஒரு சிறிய பகுதிக்குள்ள வாழ்ந்து வரோம்.
இன்றைக்கு இருக்கக்கூடிய நம்முடைய தமிழ்நாடு என்பது இந்தியா விடுதலை அடைந்த பிறகு உருவாக்கப்பட்ட ஒரு மாநிலம். இந்தியா விடுதலை அடைந்த சமயத்தில் நம்மிடத்தில் ஆட்சியும் இருந்தது, அதிகாரமும் இருந்தது, மேலும் ஜனநாயக உரிமையும் இருந்தது. அந்த சமயத்தில்தான் தமிழ்நாடு மாநிலத்திற்கான எல்லைகள் என்பது பிரிக்கப்பட்டது.

அனைத்து அதிகாரமும், அனைத்து உரிமைகளும் இருந்து தமிழ்நாட்டுக்கு எல்லைகளை பிரித்த சமயத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு முறைப்படி வந்து சேர வேண்டிய 70000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பரப்பை நம்முடைய பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிடம் நம்முடைய பெரும் நிலப்பகுதியை இழந்தோம்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள்தான். தமிழ்நாடு எல்லைப் பிரிப்பின் போது தமிழர்களுக்கு எப்படி துரோகம் நடந்தது.? அன்றைய சமயத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் அவர்கள் என்ன செய்தார்..? அன்றைய காலகட்டத்தில் நடந்த அரசியல் சூழ்ச்சிகள் என்ன..? இவை அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க…
1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த சமயத்தில் இந்தியாவில் பல்வேறு மாகாணங்கள் இருந்தது. ஆனால் மாநிலங்கள் இல்லை. இந்த மாகாணங்கள் என்பது ஒரே மாகாணத்தில் பல தேசிய இனங்களும், பல மொழி பேசக்கூடிய மக்களும் இருந்தாங்க. இப்படி அனைவரும் ஒன்றாக இருந்த காரணத்தினால் மொழி பிரச்சனையும், தேசிய இனங்களுக்கு இடையே பல பிரச்சனைகளும் இருந்தது. இதனால் இந்தியாவில் இருந்த பல தேசிய இனங்களும் எங்களுக்கு மொழி அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் மாநிலங்களை பிரிக்க வேண்டும். அப்படின்னு கோரிக்கை வச்சாங்க.
ஆனால் மக்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கம் ஏற்கவில்லை. தொடர்ந்து இந்தியாவில் மாகாணங்கள் தான் இருந்தது. இந்த சமயத்தில்தான் 1952 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதியன்று ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ ராமுலு என்பவர் தெலுங்கு பேசக்கூடிய மக்களுக்கென தனியாக ஒரு மாநிலம் வேண்டும். அப்படின்னு உண்ணாவிருத போராட்டம் இருக்க ஆரம்பிக்கிறார். அவருடைய போராட்டம் நீண்ட காலம் நடக்குது, ஆனால் அந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு பதிலுமே கொடுக்கல. இறுதியாக 1952 டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் அவர் சாப்பிடாமல் இருந்து இறந்து விடுறாரு.

பொட்டி ஸ்ரீ ராம்லு அவர்களின் மறைவு என்பது தெலுங்கு பேசக்கூடிய மக்களுக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நாடெங்கும் பல போராட்டங்கள் வெடித்தது. இதன் பிறகு நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு, போராட்டத்தை இப்படியே விட்டால் பெரும் போராட்டமாக மாறிவிடும். இந்தியா உருக்குலைந்துபோய்டும் என்பதை உணர்ந்து, 1953 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தெலுங்கு பேசக்கூடிய மக்களுக்காக ஆந்திரா என்கின்ற ஒரு தனி மாநிலத்தை உருவாக்கியது.
அந்த மாநிலத்தின் தலைநகராக கர்னூல் எனப்படும் ஒரு மாவட்டம் இருந்தது. இப்படி தெலுங்கு பேசக்கூடிய மக்களுக்கு ஆந்திரா எனப்படும் ஒரு தனி மாநிலம் உருவான பிறகு, நாட்டில் இருந்த பல மொழி பேசக்கூடிய மக்களும், எங்களுக்கும் தனி மாநிலம் வேண்டும் அப்படின்னு போராட ஆரம்பிச்சாங்க. இதன் விளைவாக நாட்டில் பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில்தான் தமிழ்நாடு என்கின்ற ஒரு தனி மாநிலமும் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை தமிழ்நாடு என்பது மூன்று பகுதிகளாக இருந்தது. தமிழ்நாட்டின் ஒரு பகுதி மதராஸ் மாகாணத்திற்கு கீழும் மற்றொரு பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு கீழும் மற்றுமொரு பகுதி மைசூர் சமஸ்தானத்துக்கு கீழும் இருந்தது.

இதன் பிறகு ஒரு ஊர் மொழி பேசக்கூடிய மக்களுக்கும் தனித்தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட சமயத்தில் தமிழர்களுக்கென தமிழ்நாடு எனப்படும் ஒரு தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த தனி மாநிலம் உருவான சமயத்தில் தமிழர்களுக்கு முறைப்படி வந்து சேர்ந்திருக்க வேண்டிய 70000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி நம்முடைய பக்கத்து மாநிலங்களுக்கு சென்றது. சென்றது என்று சொல்வதை விட அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.
தமிழ்நாடு ஆந்திரா, தமிழ்நாடு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா இந்த மூன்று மாநிலங்களுக்கு இடையே தமிழ்நாட்டுக்கான எல்லையை பிரித்த சமயத்தில் மத்திய அரசால் ஒரு ஆணயம் என்பது அமைக்கப்படுகிறது. அந்த ஆணயத்தின் பெயர் “பசல் அலி கமிஷன்” இந்த பசல் அலி கமிஷனின் வேலை என்னான்னா., இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய எல்லை பகுதிக்கு சென்று, அங்கு எந்த மொழி பேசக்கூடிய மக்கள் அதிகமாக இருக்காங்களோ அவங்களை அந்த மாநிலத்துடன் இணைப்பதுதான் அவங்களுடைய வேலையாக இருந்தது.
இதற்காக இவங்க பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டாங்க. ஆனால் இவர்கள் என்னதான் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு முறைப்படி வந்திருக்க வேண்டிய பல பகுதிகளை இவங்க பிரிச்சு பக்கத்து மாநிலங்களிடம் கொடுத்துட்டாங்க. இதனால அன்றைய காலகட்டத்துல தமிழ்நாடு மிகப்பெரும் நிலப்பகுதியை இழந்தது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கு இடையே எல்லைகளை பிரித்த சமயத்தில் தமிழ்நாடு ஆந்திராவிடம் கிட்டத்தட்ட 32000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பகுதி இழந்தது. இதில் மிக முக்கியமான பல பகுதிகளும் இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் ஆந்திராவில் இருக்கக்கூடிய சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற அனைத்து பகுதிகளுமே தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டியவை. ஆனால் அவங்க சூழ்ச்சி பண்ணி எடுத்துக் கொண்டாங்க. இது மட்டுமல்லாமல் தெலுங்கர்கள் மதராஸ் நமது என்று சொல்லி சென்னையையும் நீங்கள் ஆந்திரா கூட இணைக்க வேண்டும் அப்படின்னு சென்னைக்காக போராட ஆரம்பிச்சாங்க. அந்த சமயத்தில் தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம். அப்படின்னு மாபோசி அவர்கள் கிளறந்து எழுந்து வடக்கு பகுதியை காப்பாத்தினார்.
மாபோசி அவர்களின் பெரும் போராட்டத்தின் காரணமாக சென்னை, திருத்தனி போன்ற ஒரு சில பகுதிகள் மட்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. பெரும் பகுதிகளான அதாவது பெரும் வளமிக்க பகுதிகளான திருப்பதி, காலகஸ்தி, திருத்தூர், நெல்லூர் போன்ற பல பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்திலும் அந்த பகுதியில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்ந்து வராங்க. திருப்பதி கோவிலிலுமே ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் இருக்குது. அந்த தமிழ் கல்வெட்டுகளை அழித்துவிட்டு தெலுங்கு மற்றும் சமஸ்கிருத கல்வெட்டுகளை அமைப்பதில் அந்த மாநில அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அடுத்ததாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே எல்லைகளை பிரித்த சமயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பெங்களூரு மற்றும் கோளார் தங்கவையில் போன்ற பெரும் நகரங்கள் கர்நாடகாவுக்கு சென்றது. இதன் காரணமாக தமிழர்கள் மிகப்பெரும் செல்வ வளம் கொண்ட பூமி இழந்தாங்க. இதுமட்டுமல்லாமல் இந்த பகுதிகள் அனைத்தும் முறைப்படி தமிழ்நாட்டுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தால், இன்றைய காலகட்டத்தில் நமக்கு காவேரியில் அணைக்கட்டும் பிரச்சனையோ அல்லது காவேரியில் நீர் பிரச்சனையோ இருந்திருக்காது.

ஏனென்றால் காவேரி உருவாகும் இடமும் காவேரி கடலில் கலக்கும் இடம் அனைத்து இடமும் நம் தமிழ்நாட்டில் தான் இருந்திருக்கும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள் செய்த அலட்சியத்தால் இன்று நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையான எல்லை பிரிப்பின் போது தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய பல பகுதிகள் அவங்க கேரளாவுக்கு கூட இணைச்சாங்க. அந்த சமயத்துல தெற்கு எல்லைகளை போராடி மீட்டது யாருன்னா மார்ஷல் மணி அவர்களும் பிஎஸ் மணி அவர்களும் தான் போராடி மீட்டாங்க.
தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையில் எல்லை பிரித்த சமயத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை போன்ற பல பகுதிகளை அவங்களும் இனைச்சுக்கொண்டாங்க. இருந்தாலும் மார்ஷல் நேசமணி மற்றும் பிஎஸ் மணி ஆகியோர் போராடி தான் பெரும் பகுதிகளை மீட்டெடுத்தாங்க. மீட்டெடுத்தது சிறிய பகுதி என்றாலும் பெரும்பான்மையான பகுதி கேரளாவிடம் சென்றது. தேவிகுளம். பீர்மேடு அகத்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, பாலக்காடு போன்ற பல பகுதிகள் கேரளாவிடம் சென்றது.

இதனால் தமிழர்கள் மிக முக்கியமான அணைகளையும் இழந்தாங்க. முல்லை பெரியார் அணை பிரச்சனையும் இதனால்தான் இருந்தது. முல்லை பெரியார் அணை முறைப்படி நம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் அது கேரளாவிடம் சென்றது. அதன் விளைவாக இன்றைய காலகட்டத்தில் தென்மாவட்டங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையே எல்லைகளை பிரித்த சமயத்தில் மிகப்பெரும் போராட்டங்கள் வெடித்தது. அந்த போராட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 11 அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டாங்க.
தமிழ்நாடு எல்லைப் பிரிப்பின் போது பலகட்ட போராட்டங்கள் நடந்தது. அதில் ஒட்டுமொத்தமாக 36 பேர் உயிர் கொடுத்து தமிழ்நாட்டுக்கு பல பகுதிகளை மீட்டுக்கொடுத்தாங்க. மார்ஷல் நேசமணி, பி எஸ் மணி, விநாயகன் பிள்ளை, மாபோசி இவர்கள் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் இன்று தமிழ்நாட்டுடன் பல பகுதிகள் இருந்தது. இவர்கள் இல்லை என்றால் இவை அனைத்துமே பிற மாநிலங்களிடம் சென்றிருக்கும்.

அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள். காமராஜர் நினைத்திருந்தால் பெரும் பகுதிகளை மீட்டு அவற்றை தமிழ்நாட்டுடன் இணைத்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அன்றைய காலகட்டத்தில் காமராஜரிடம் அதிகாரம் இருந்தது. காமராஜர் சொல்வதைத்தான் நேருவும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எல்லைப் பிரிப்பின் போது காமராஜரின் மௌனத்தால் 70000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தமிழர்களாகிய நம்முடைய இடத்தை பக்கத்து மாநிலங்களிடம் இழந்தாங்க.
தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையே எல்லைகளை பிரித்த சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றது. அந்த சமயத்தில் காமராஜரிடம் தேவிகுளமும், பீர்மேடு பகுதியும் கேரளாவுக்கு செல்கிறது நீங்கள் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும், என தமிழர்கள் கோரிக்கை வைத்தாங்க. அந்த சமயத்தில் காமராஜர் கூறியது என்ன அப்படின்னா குளமாவது, மேடாவது எல்லாமே இந்தியாவில் தான் இருக்கிறது. போய் வேலையை பாருங்கப்பா அப்படின்னு காமராஜர் அதை தட்டிக்கழித்தார்.

இதன் விளைவாக அந்த பகுதிகள் கேரளாவுடன் இன்று இணைக்கப்பட்டது. காமராஜர் என்பவர் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர். அதே சமயத்தில் அவர் ஒரு தேசியவாதியாக இருந்தார். அவர் தேசியவாதியாக இருந்தது தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் தமிழர்களின் நலனுக்காக அவர் பல பகுதிகளை மீட்டிருக்க வேண்டும். ஆனால் அன்று அவர் அதை செய்யவில்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க உங்களுக்கு அடுத்து எந்த மாதிரி பதிவு வேணுங்கிறதை மறக்காம கமெண்ட் பண்ணுங்க. மேலும் இது போன்ற பல பதிவுகளுக்கு நம்ம telegram சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க நன்றி.
இதுவரை நீங்கள் இந்த கட்டுரையை படித்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இதுபோல பல சுவாரசியமான தகவல்களை தினம் தினம் அறிவதற்கு நமது telegram சேனலில் இணைந்து கொள்ளுங்கள். டெலிகிராம் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய நினைத்தால் கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் ஐ கிளிக் செய்து அதில் இருக்கும் டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்.
மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா…📝
நானும் இதுபோல நிறைய முறை அனுபவித்திருக்கிறேன். ஒருமுறை திருமண தோஷத்தின் காரணமாக காளகஸ்தி செல்ல வேண்டியிருந்தது. அப்போது அங்கிருந்த கோயில் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழில் பார்த்ததும் பூரிப்படைந்தேன். அது மட்டுமல்ல திருப்பதியிலும் பார்த்தேன் தமிழனுக்கு சொந்தமான பல இடங்கள் இப்போது ஆந்திராவிடம் இருக்கிறது என்று நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் நீங்கள் சொன்ன மற்ற பகுதிகளையும் நினைத்துப் பார்க்கும் பொழுது உடல் சிலிர்த்தேவிட்டது