இந்த பதிவு வெறும் டிரைலர் போன்ற ஒரு சிறு தொகுப்பாகும். இதைப் பற்றிய டீடெய்லாக இனிவரும் பதிவுகளில் நிச்சயமாக பார்ப்போம். அதற்காக நமது டெலிகிராம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்திருங்கள். telegram அக்கவுண்ட் இல்லாதவர்கள் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள். இணைந்து கொள்வதற்கு கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்சை கிளிக் செய்யவும். நிச்சயமாக அந்த பதிவுகள் அப்டேட் செய்தவுடன் உங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் வந்து சேரும்.

யாரும் பயப்பட வேண்டாம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை இங்கு யாரும் பார்க்கப் போவதில்லை. அதாவது உங்களுடைய ப்ரொபைல். நம்பர் எதுவும் யாருக்கும் தெரியப்போவதில்லை. என்னையும் சேர்த்துதான் நீங்கள் வெறும் சேனலில் ஒரு மெம்பராக மட்டும் தான் இருப்பீர்கள் பயப்பட வேண்டாம். நம்பி இணைந்திருங்கள். வாங்க இன்னைக்கான பதிவு கொள்ள போகலாம். நான் உங்கள் காவியா நீங்கள் இணைந்திருப்பது என்னுடன், வெல்கம் டு சுட சுட அப்டேட்ஸ்.
ஒரு காலகட்டத்துல ரொம்ப பெரிய அளவுல செல்வ செழிப்போடு இருந்து. அதுக்கப்புறம் ஒண்ணுமே இல்லாம அழிஞ்சு போன நிறையவே நாகரீகங்கள் இந்த உலகத்துல இருந்திருக்கு. அதுல சில நாகரீகங்களைப் பற்றி பின் நாட்கள்ல தெரிய வந்து. அதை பத்தி பல்வேறு ஆராய்ச்சிகளையும் பண்ணி இருக்காங்க.

அப்படி தற்போதைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதியில ஒரு காலகட்டத்துல ரொம்ப பெரிய அளவுல வளர்ச்சி அடைந்திருந்த ஒரு நாகரிகம்தான் சிந்து சமவெளி நாகரிகம். இதை பத்தின சில ஆச்சரியமான தகவல்களை தான் இந்த பதிவுல நாம பார்க்க போறோம். என்னதான் இந்த இண்டஸ் வேலி சிவிலைசேஷன்றது 5000 ஆண்டுகளுக்கு முன்னாடி ரொம்பவே செழிப்பா வளர்ந்த ஒரு சிவிலைசேஷனா இருந்தாலும், கால ஓட்டத்துல இது காணாம போன மறக்கப்பட்ட ஒரு சிவிலைசேஷன்னு தான் குறிப்பிடணும்.
இது பற்றின வரலாற்று தகவல்களும் பெருசா எதுவும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படல, ஏன்..? 20 ஆம் நூற்றாண்டோட ஆரம்பத்துல ஹரப்பா, மொகஜதாரோ மாதிரியான இடங்கள்ல நடந்த எக்ஸ்கவேஷன்க்கு அப்புறம்தான் இந்த இடத்துல ஒரு பெரிய நாகரீகமே செலித்து வளர்ந்திருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. ஒருவேளை அந்த எக்ஸ்கவேஷன்ஸ் மட்டும் நடக்காம போயிருந்தா இந்தியாவிலயும் இந்த மாதிரி ரொம்பவே பழமையான ஒரு நாகரீகம் இருந்து அது அழிஞ்சு போச்சுன்ற தகவலே நமக்கு தெரியாம கூட போயிருக்கலாம்.
அதுக்கு பின்னாடிதான் இந்த இண்டஸ் வேலி சிவிலைசேஷன் சம்பந்தமா நிறையவே ஆச்சரியத்தக்க பிரம்மிக்கத்தக்க தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுச்சு. இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாடி ஒன்றுபட்ட இந்தியாவாதான் ரெண்டு நாடுகளுமே இருந்தது. அந்த சமயத்துலதான் இங்க அகழ்வாராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுச்சு. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனா 1920களில் ஜான் மார்ஷல் என்ற ஒரு பிரிட்டிஷ் ஆர்க்கியாலஜிஸ்ட்னாலதான் இந்த ஹரப்பா பகுதியில இது சம்பந்தமான எக்ஸ்கவேஷன் ஆரம்பிக்கப்பட்டுச்சு.

குறிப்பா இந்த இடத்துல இந்த மாதிரியான எக்ஸ்கவேஷன் (Excavation- அகழ்வாராய்ச்சி) நடந்ததுக்கும் காரணங்கள் இல்லாம இல்லை. பொதுவா ஒரு இடத்துல அகழ்வாராய்ச்சியில ஈடுபடுவதுன்றது அவ்வளவு ஈசியான வேலை எல்லாம் கிடையாது. ஏன்னா ஒரு இடத்துல அகழ்வாராய்ச்சி செய்யணும்னா அதுக்கு ஒரு பெரிய மேன் பவர் தேவை. அதே மாதிரி அதுக்கு ஒரு பெரிய பொருட்செலவும் தேவைப்படும். இதன் காரணமாவே அகழ்வாராய்ச்சிக்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்னாடி நிறைய விஷயங்களை கண்டிப்பா கவனிப்பாங்க.
அப்படி இருக்கும்போது ஹரப்பாவுல அகழ்வாராய்ச்சியில ஈடுபடுவதற்கு தானாவே சில விஷயங்கள் நடந்தது. அப்படி என்ன நடந்ததுன்னா இந்த எக்ஸ்கவேஷன்லாம் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி அதாவது 1912-ல ஜான் பிளீட் என்ற ஒரு நபர் இந்த ஹரப்பாவிலிருந்து கண்டெடுத்ததா ஒரு மூணு சீல்ஸ (உடைந்த பானை மற்றும் கல்வெட்டுகள்) ஒரு ஜெர்னல் வெளியிட்டு இருக்காரு. இந்த சீல்ஸ் அவருக்கு எப்படி கிடைச்சதுன்றதுக்கு பின்னாடி பல்வேறு கதைகளை சொல்றாங்க. ஆனா பொதுவா எல்லாரும் என்ன தகவலை சொல்றாங்கன்னா..!
இவரு பிரிட்டிஷ் கவர்மெண்ட்ல ஒரு ஆபீசரா இருந்ததாகவும், அந்த சமயத்துல ஹரப்பாவில் இருந்த ஒரு ஸ்கூலை இன்ஸ்பெக்ட் பண்ண போனப்போ அங்க இருந்த ஒரு விவசாயி இந்த வித்தியாசமான சீல்ஸ எல்லாம் வச்சிருந்ததாகவும், அதை அவரு பணம் கொடுத்து வாங்கிட்டு வந்ததாகவும், அதுக்கப்புறம் அதை ஆராய்ச்சி பண்ணும்போது அவை ரொம்பவே பழமையான சீல்ஸ்ன்னு தெரிய வந்ததுக்கு அப்புறமா 1912-ல வெளியான ஒரு ஜர்னல்ல இதை போட்டதா சொல்றாங்க. இது நடந்து 10 வருடங்களுக்கு பிறகுதான் ஹரப்பாவுல ஒரு முறையான எக்ஸ்கவேஷன் ஜான் மார்ஷல் என்ற ஆர்கியாலஜிஸ்ட் தலைமையில ஆரம்பிக்கப்பட்டுச்சு.

அதுக்கப்புறம்தான் ஹரப்பா சிவிலைசேஷன் வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பிச்சது. சரி இந்த நாகரீகத்துக்கு எப்படி இண்டஸ் வேலி சிவிலைசேஷன்னு பெயர் வந்தது.? ப்ராபப்லி இதுக்கும் எக்ஸ்கவேஷன்க்காக அங்க போன ஆராய்ச்சியாளர்கள் தான் காரணம். இண்டஸ் வேலி சிவிலைசேஷன் ஆராய்ச்சி பண்ணப்போ அவங்க பயன்படுத்தின சில எழுத்துருக்களை எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்கதான். ஆனா அவை என்னங்கிறதுக்கான அர்த்தம் இப்ப வரைக்கும் தெரியாமையே தான் இருக்கு. சொல்லப்போனா வரலாறு சார்ந்த பதிவுகளிலும் இது சம்பந்தமா பெருசா எந்த ஒரு தகவல்களும் கிடைக்கலன்றத நாம முதல்லயே பார்த்திருந்தோம். சோ இப்ப வரைக்கும் அந்த மக்கள் என்ன மொழி பேசினாங்க இந்த எழுத்துருக்களுக்கெல்லாம் உண்மையான அர்த்தம் என்னன்றது இப்ப வரைக்கும் கண்டுபிடிக்கப்படல.
அது ஒரு மர்மமாவே தான் இருக்கு. இப்படி இருக்க நிலையில அந்த சிவிலைசேஷனோட உண்மையான பெயர் என்னன்னு யாருக்குமே தெரியாது..! இந்த இடங்கள் எல்லாமே இந்தியா அண்ட் பாகிஸ்தான்ல ஓடக்கூடிய சிந்து நதி நதிகளுக்கு பக்கத்துல உருவாக்கப்பட்டிருந்ததால இதை எக்ஸ்கவேட் பண்ண போனவங்க இண்டஸ் வேலி சிவிலைசேஷன்னே இதை காயின் பண்ண ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அதே பேரு வரலாற்றுல தங்கிடுச்சுன்னு சொல்லலாம். இப்போ நம்மளோட அன்றாட வாழ்க்கையில பயன்படுத்திட்டு வர்ற ஆனா பெருசா கண்டுகொள்ளப்படாத பல்வேறு பொருட்கள்ல ஒண்ணுதான் பட்டன்ஸ்.
நாம போட்டுக்கிற உடைகள்ல ஆரம்பிச்சு பல விஷயங்கள்ல இந்த பட்டன்ஸ நாம இப்போ பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். ஆனா இந்த பட்டன்ஸோட ஆரிஜின் எதுன்னு உங்களுக்கு தெரியுமா..? அது இண்டஸ் வேலிதான்னு குறிப்பிடுறாங்க. இங்க நடந்த எக்ஸ்கவேஷன்ல ரொம்பவே ஆச்சரியமான பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அந்த சமயத்துல அங்க கண்டுபிடிச்ச ஒரு சின்ன ஜாடியில ஷெல்ஸ்னாலான (சிப்பிகள்) பட்டன்ஸ் இருந்ததை கண்டுபிடிச்சிருக்காங்க. அவை இப்போ நாம பயன்படுத்துற மாதிரியே ஓட்டையெல்லாம் போட்டு நூல்களுக்கு தைக்க வசதியாவும் இருந்திருக்கு.

இதை வச்சு என்ன சொல்றாங்கன்னா.? அந்த சமயத்துல இந்த பட்டன்ஸ் வெல்தியான பர்சன்னு காட்டுறதுக்காக பயன்படுத்தி இருக்கலாம்ன்னு ஒரு தகவலை சொல்றாங்க. ஏன்னா.? இப்போ வேணா இந்த பட்டன்ஸ நாம ஒரு சாதாரண பொருளா பயன்படுத்திட்டு இருக்கலாம். ஆனா அந்த காலகட்டத்துலன்னு பார்க்கும்போது இது உண்மையாவே ஒரு பெரிய விஷயம்தான். இது மட்டும் இல்லாம விளையாடுறதுக்கு பயன்படுத்துற டைஸையும் (தாயகட்டை) அங்க கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த மாதிரி நிறையவே ஆச்சரியமான விஷயங்கள் இண்டஸ் வேலில இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.
இண்டஸ் வேலி சிவிலைசேஷனோட ஒரு பகுதியா பார்க்கப்படுற முகஞ்சதரோவை ஆராய்ச்சி பண்ணும்போது இன்னொரு ஆச்சரியமான விஷயத்தை கண்டுபிடிச்சாங்க. அதுதான் இப்ப இருக்க மாடர்ன் ஸ்விம்மிங் பூல் மாதிரியான ஒரு அமைப்பு. அந்த மாதிரியான ஒரு பெரிய அமைப்பை முகஞ்சதராவுல கண்டுபிடிச்சாங்க. இதோட அளவுன்னு பார்க்கும்போது 39 அடிக்கு 23 அடின்ற ஒரு நீள அகலத்துலயும் 8 அடின்ற ஒரு ஆழத்துல இப்படிப்பட்ட ஒரு செயற்கை நீர் தேக்கத்தை உருவாக்கி இருக்காங்க. அதுவும் இது முழுக்க முழுக்க செங்கற்களை பயன்படுத்தியே உருவாக்கி இருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட அமைப்பு உருவாக்கப்பட்டதற்கான காரணம் என்னன்னு இப்ப வரைக்கும் சரியா தெரியல.
ஒருவேளை மத சடங்குகள் செய்யக்கூடிய ஒரு இடமா இது இருக்கணும்ன்றதுக்காக இதை உருவாக்கினாங்களா..? இல்லை இது பொதுமக்களோட பயன்பாட்டுக்காக உருவாக்கினாங்களான்னு நிறையவே குழப்பங்கள் இருக்கு. பட் இந்த உலகத்திலேயே மிகப் பழமையான ஒரு ஸ்விம்மிங் பூல் மாதிரியான அமைப்புன்னா அது இதுதான்னு குறிப்பிடுறாங்க. அண்ட் இப்போ இதை வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்டாவும் அறிவிச்சு இதை பாதுகாத்துட்டு வராங்களாம். சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்ச்சி பண்ணும்போது கிடைச்ச ரொம்பவே ஆச்சரியமான முக்கியமான தகவல்கள்ல ஒன்னு, இவங்க மிலிட்டரி என்ற ஒரு விஷயத்தையே பயன்படுத்தலன்றதுதான். அட ஆமாங்க..! இங்க வாழ்ந்த மக்கள் ஒரு ஆக்டிவ்வான ஆர்மி போர்சஸ் வச்சிருந்ததுக்கான எந்த ஒரு அடையாளத்தையும் இப்ப வரைக்கும் கண்டுபிடிக்க முடியல.

இதுக்கும் இந்த நாகரிகம் ஏதோ சின்ன நிலப்பரப்புல தோன்றி வளர்ந்ததெல்லாம் கிடையாது.! இங்க பல பெரிய நகரங்கள் பல ஊர்கள் இருந்திருக்கு அங்க மக்கள் வாழ்ந்து வந்திருக்காங்கதான், அப்படி இருக்கும்போது இவங்க மிலிட்டரி பவரையே பயன்படுத்தலைன்றது ஒரு ஆச்சரியமான விஷயமா பார்க்கப்படுது. வரலாற்றின் படி இவங்க வாழ்ந்து வந்த அதே சமயத்துல மெசபடோமியா, எஜிப்ட், சீனா மாதிரியான நாகரீகங்கள் உருவாகி இருந்தது. அவங்க எல்லாருமே அவங்களோட ஆர்மி போர்சஸ்க்கு ரொம்பவே பெயர் பெற்றவங்களா இருந்தாங்க. அப்படி இருக்கும்போது இந்த இண்டஸ் வேலி சிவிலைசேஷன் ஒரு அமைதியை விரும்பக்கூடிய ஒரு நாகரீகமா இருந்தது என்றது ஒரு ஆச்சரியமான விஷயமா பார்க்கப்படுது.
பொதுவா வரலாற்றுப் பதிவுகளை எடுத்து பார்க்கும்போது இந்த உலகத்துல ஏதோ ஒரு பகுதியில தோன்றி ரொம்ப பெரிய அளவுக்கு வளர்ந்து அப்புறம் ஒண்ணுமே இல்லாம காணாம போன பல்வேறு நாகரீகங்களை பத்தின தகவல்களை நம்மளால பார்க்க முடியும். அப்படிப்பட்ட நாகரீகங்களோட வளர்ச்சி எப்படி இருந்தது அவங்க எப்படி அழிஞ்சு போனாங்கன்றதுக்கான பல்வேறு தரவுகளையும் நம்மளால பார்க்க முடியும். ஆனா இதுக்கு நேர்மாறா நடந்த ஒரு இடம்தான் இண்டஸ் வேலி இப்ப வரைக்கும் கிடைச்ச ஆதாரங்களை வச்சு பார்க்கும் போது கிமு 3300 என்ற காலகட்டத்திலிருந்து ஆரம்பிச்சு, கிமு 1300 என்ற காலகட்டம் வரைக்கும் சுமார் 2000 வருஷம் என்ற ஒரு மிகப்பெரிய காலகட்டத்துக்கு ரொம்பவே செழிப்பா இருந்த ஒரு நாகரீகம்தான் இந்த சிந்து சமவெளி நாகரிகம்.
ஆனா அதுக்கப்புறம் இந்த நாகரீகத்துக்கு என்ன ஆச்சு..? இங்க வாழ்ந்த மக்கள் எல்லாம் எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரியல. இண்டஸ் வேலியோட டவுன்ஃபால் அதாவது வீழ்ச்சி எப்படி இருந்திருக்கலாம்ன்றதுக்கு பின்னாடி நிறையவே தியரிஸ சொல்றாங்கதான். ஆனா எதுக்குமே இதுவரைக்கும் சாலிடான ஆதாரம்ன்றது கிடைக்கவே இல்லை. ஏன் காலப்போக்குல அந்த பகுதியில இப்படி ஒரு நாகரீகம் இருந்ததுக்கான சுவடே இல்லாம போயிருச்சுன்னுதான் சொல்லணும். ஒரு காலகட்டத்துல ரொம்ப செல்வ செழிப்போட இருந்த ஒரு நாகரீகம் எப்படி ஒண்ணுமே இல்லாம காணாம போச்சுன்றதுக்கான மர்மம் இப்ப வரைக்குமே விடை கண்டுபிடிக்கப்படாத ஒரு கேள்வியாதான் இருக்கு.

இவைதான் சிந்து சமவெளி நாகரீகத்தை பத்தின சில ஆச்சரியமான தகவல்கள். இதை பத்தின உங்களோட கருத்துக்களை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. இதே மாதிரியான புதிய பதிவுகளை படிக்க மறக்காம நம்ம telegram அல்லது வாட்ஸ் ஆப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ண நினைக்கும் நண்பர்கள் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் ஐ கிளிக் செய்து மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் உடனடி அப்டேட்டுகள் உடனே கிடைக்கும்.
இது வெறும் முன்னுரை போன்ற ஒரு சிறிய தொகுப்பு தான் இந்த அகழ்வாராய்ச்சி பற்றி பல்வேறு விதமான பகுதிகளுடன் கூடிய பதிவுகள் விரைவில் நமது வலைதளத்தில் பதிவேற்றுவோம். அந்த அப்டேட்டுகளை பெறுவதற்கு மறக்காமல் இணைந்திருங்கள். நிச்சயமாக ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பத்தி பேசும் பொழுது ஓரிரு பதிவுகளில் முடிக்க வேண்டிய விஷயம் கிடையாது. இது வெறும் ஒரு ட்ரைலர் தான் இது கிட்டத்தட்ட பல பதிவுகளை உள்ளடக்கிய ஒரு நாகரீகம். எனவே மற்ற பதிவுகள் கூடிய விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள் மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் நான் உங்கள் காவியா 📝