விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம். ஆம் நண்பர்களே இந்த பதிவில் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களின் பல நாள் போராட்டம் நாளை நிறைவேறும் என்பதை நாசா கூறி இருக்கிறது. அவர்கள் உண்மையாலுமே விண்வெளியில் சிக்கித் தவிக்கிறார்களா.? தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதா.? மேலும் நாசா மற்றும் சிக்கித் தவித்த இருவரும் ஏதேனும் மறைக்கிறார்களா என்பதைப் பற்றி இந்த தொகுப்பானது விவரிக்கிறது தொடர்ந்து முழுமையாக படித்துப் பாருங்கள்.

வெறும் 18 நாள் பயணமா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் போயிருந்தாங்க. ஆனா சுமார் ஒன்பது மாதங்களா அங்கேயே தான் தங்கி இருக்கிறாங்க. அவங்க எப்போது பூமிக்கு திரும்புவார்கள்..! அப்படிங்கிற ஒரு எதிர்பார்ப்பு அனைவருடைய மத்தியிலுமே இருக்கு. இந்த நிலையில தான் 19 ஆம் தேதி அவங்க பூமிக்கு வரப்போறாங்கனு நியூஸ்ல சொல்றாங்க. நேத்து விண்வெளி நிலையத்துக்கு போன அந்த குரூன் ஸ்பேஸ் கிராஃப்ட் மூலமா சுனிதா வில்லியம்ஸ் வரமாட்டாங்க அப்படின்னா.! வேறு எந்த ஸ்பேஸ் கிராஃப்ட்ல பூமிக்கு திரும்பி வருவாங்க.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

எதற்காக சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் போயிருக்காங்க.? அங்க அவங்களோட வேலை என்ன.? அமெரிக்கா ஸ்டார் லைனர் விண்கலம் மூலமா சுனிதா மற்றும் வில்மோர் இவங்க ரெண்டு பேர்த்த மட்டும் தனியா எதுக்காக அனுப்புனாங்க.? சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவதை பலரும் கல்பனா சாவ்லாவின் பயணத்தோட கம்பேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க.! அப்படின்னா சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது அப்படிங்கறது அந்த அளவுக்கு சிக்கலான ஒரு விஷயமா என்னானு இந்த பதிவுல விரிவா பார்க்கலாம்.

முதலில் சர்வதேச விண்வெளி நிலையத்துல இப்ப யாரெல்லாம் இருக்கிறாங்க அப்படிங்கறது பற்றி பார்க்கலாம். பூமியிலிருந்து ஏறத்தாழ 400 km உயரத்தில் இருக்கிறதுதான் சர்வதேச விண்வெளி மையம். அங்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். ரொட்டேஷன் அடிப்படையில விஞ்ஞானிகள் அங்கு தங்கி வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அந்த விண்வெளி நிலையத்துல ஒரே நேரத்துல மூன்று முதல் ஏழு பேர் வரைக்கும் தங்கி ஆய்வுகள்ல ஈடுபட முடியும். அதே நேரம் அங்கு 10, 11 பேர் தங்குற அளவுக்கு வசதியும் இருக்கு. அப்படி இருந்தாதான் குரூ ரொட்டேஷன் செய்யும்போது வசதியாவும் இருக்கும். எல்லோரும் தங்குறதுக்கு எளிமையாதுன் இருக்கும்.

2000 ஆம் ஆண்டுதான் முதன்முதலா மூன்று பேர் கொண்ட குரூ இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு போனாங்க. தற்போது வரைக்கும் மொத்தமா 72 குரூ அங்கு போயிருக்காங்க. அதாவது நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போனவங்க அங்கு ஏற்கனவே இருக்கிற 72 வது குரூவோட ஒரு பகுதியாதான் போயிருக்காங்க. சரி இந்த 72 வது குரூல யாரெல்லாம் இருக்கிறாங்கன்னா.? சர்வதேச விண்வெளி மையத்துல ஏற்கனவே இருக்கக்கூடிய சுனிதா வில்லியம்ஸ், புட்ஜ் வில்மோர், அலெக்ஸி ஓசனின், இவான் வாக்னர், டான் பெட்டிட், நிக் ஹியூக் அலெக்சாண்டர் கோர்போனோ இந்த ஏழு பேர்தான். மார்ச் 16 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் ஸ்க்ரூ டிராகன் அதாவது ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 10 ஸ்பேஸ் கிராஃப்ட் மூலமா புதியதா நான்கு பேர் அங்கு போயிருக்காங்க.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

அவங்க யாருன்னா ஆனி மெக்கலைன், நிக்கோல் அயேர்ஸ், ஸ்டகுயா ஒனிஷி, கிரில் பெஸ்கோ இந்த நான்கு பேர்தான் 72 வது குரூ. அதாவது இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்திருக்கக்கூடிய 72 வது குரூக்கான பணி மாற்றம் என்பது இரண்டு நாட்கள் நடக்கும். ஏற்கனவே இருக்கிற குழு இவர்களுக்கு வொர்க்கை வந்து ஹேண்ட் ஓவர் பண்ணுவாங்க அதாவது ஏற்கனவே இருந்த குழு மெமபர்ஸ் அவர்கள் செய்து பாதியில் நிறுத்தி வைத்த வேலைகளை இவர்களுக்காக கொடுப்பார்கள். அதுக்கப்புறமா அங்கு ஏற்கனவே டோக் செய்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய ஸ்பேஸ் எக்ஸ் குரூ 9 ஸ்பேஸ் கிராப்ட் மூலமா சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹியூக், அலெக்சாண்டர் கோர்போனோ ஆகிய நான்கு பேரும் பூமிக்கு திரும்புவாங்க. 72 வது குரூல மீதம் இருக்கிற மூன்று பேர் ஏப்ரல் மாதம் பூமிக்கு திரும்புவாங்க.

அதுவரைக்கும் புதியதா வந்திருக்கக்கூடிய குரூ இருக்காங்க இல்லையா, அவங்களோடு சேர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வாங்க. இந்த 72 வது குரூ அவர்கள் ஒரு ஆறு, ஏழு மாதங்கள் அங்கேயே தங்கி ஆய்வுகளை மேற்கொள்வாங்க. சரி எதற்காக அமெரிக்கா ஸ்டார் லைனர் விண்கலம் மூலமா சுனிதா மற்றும் வில்மோரை அந்த ஐஎஸ்எஸ்க்கு அனுப்பினாங்க.? அதற்கு முன்பாக அமெரிக்கா பயன்படுத்தின ஸ்பேஸ் ஷர்ட்டில் பத்தியும் பார்த்தரலாம். பூமியிலிருந்து விண்வெளியில் இருக்கிற அந்த சர்வதேச விண்வெளி மையத்துக்கு போயிட்டு வர்றதுக்கு முன்பு அமெரிக்கா விண்வெளி ஓடம் அதாவது ஸ்பேஸ் ஷட்டில் ஒன்றை தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க. அதுலதான் அமெரிக்க விண்வெளி வீரர்கள் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க. ஸ்பேஸ் ஷட்டில்ல போயிட்டு வருவதுங்கறது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான். இருந்தாலும் கூட விண்வெளி வீரர்கள் துணிந்து அதுல போயிட்டு வந்துட்டு தான் இருந்தாங்க.

See also  காமக் கொடூரனின் மோசமான செயல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள்

சிலர் விண்வெளி பயணத்தின் போது இறந்தும் போயிருக்காங்க. என்னா காரணம்னா.? அதனுடைய காம்ப்ளக்ஸ் ஆன டிசைன். அதனால ராக்கெட் லான்ச், ஸ்பேஸ் டிராவல், ரீ என்ட்ரி தருணங்கள் அப்படின்னு சொல்லிட்டு எந்த நேரத்துல வேணாலும் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. இருப்பினும் கூட 2011 ஆம் ஆண்டு வரைக்கும் 135 மிஷன்கள் வெற்றிகரமா அதன் மூலமா மேற்கொள்ளப்பட்டிருக்கு. அதே நேரத்துல இரண்டு மிகப்பெரிய டிசாஸ்டர்ஸும் நடந்திருக்கு. ஒன்று 1986 ஆம் ஆண்டு நடந்த சேலஞ்சர் டிசாஸ்டர். பூமியிலிருந்து லான்ச் ஆன 73 செகண்ட்ஸ்ல சாலிட் ராக்கெட் பூஸ்டர் வெடித்து சிதறிச்சு. அந்த குரூல இருந்த ஏழு பேருமே பலியாகிட்டாங்க. இரண்டாவது கொலம்பியா டிசாஸ்டர். 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி அன்னைக்கு அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லா உட்பட ஏழு விண்வெளி வீரர்களை சுமந்துகிட்டு விண்வெளிக்கு பறந்தது.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

அப்போது ராக்கெட்டோட வெளிப்புற எரிபொருள் டேங்க வந்து பாதுகாக்குறதுக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு லேயர்ல இருந்து ஒரு சிறிய பகுதி உடைஞ்சு விழுந்துருச்சு. இந்த லேயர போம் இன்சுலேஷன்னு சொல்லுவாங்க. ராக்கெட்ல திரவ ஹைட்ரஜன் -183 டிகிரி செல்சியஸ்லயும், திரவ ஆக்சிஜன் -183 டிகிரி செல்சியஸ்ல ஒரு ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளா நிரப்பப்பட்டிருக்கும். இந்த அளவுக்கு குளிர் தன்மை கொண்ட அந்த எரிபொருள் நிரப்பி இருக்கும் டேங்க வந்து உரைய வச்சிடும். இதை தடுக்கணுங்கிறதுக்காக போம் இன்சுலேஷன் லேயர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதாவது தெர்மாகோல் மாதிரி இருக்கக்கூடிய இந்த லேயர் போன்ற அமைப்பு எரிபொருள் டேங்க உரைய விடாம வைக்கிறதுக்கும், சூரிய வெப்பத்திலிருந்து அந்த டேங்க பாதுகாக்குறதுக்கும் தான் அமைக்கப்பட்டது. ஆனா ஜனவரி 16 ஆம் தேதி அன்னைக்கு ராக்கெட் வானத்தை நோக்கி பறந்தபோது அந்த லேயர்ல இருந்து ஒரு துண்டு உடைந்து ராக்கெட்டோட இடது இறக்கையில வந்து சிக்கிச்சு இதை யாருமே வந்து கவனிக்கல.

ராக்கெட் பாதுகாப்பா விண்வெளிக்கு போய் சேர்ந்துருச்சு. அங்கு வேலையெல்லாம் முடிச்சுக்கிட்டு வீரர்கள் ஏழு பேரும் மறுபடியும் பூமிக்கு திரும்பி வர்றாங்க. அந்த விண்வெளி பயணத்துல ரொம்பவே ஆபத்தான கட்டம்ங்கிறது பூமிக்குள்ள ராக்கெட் நுழையக்கூடிய தருணம்தான். இந்த நேரத்துல சுமார் 25000 km வேகத்துல பூமியை நோக்கி ராக்கெட் வரும். இவ்வளவு வேகமா வர்றதுங்கறது ராக்கெட்டை சூடாக்கும். அதனுடைய வெப்ப நிலை பார்த்தீங்கன்னா 2730° ஃபாரன்ஹீட்ல இருந்து 5430° ஃபாரன்ஹீட் வரைக்கும் அதிகமாகும். சாதாரணமா நம்ம சென்னையில 100° ஃபாரன்ஹீட் வெயில் அப்படினாலே நம்மனால தாங்க முடியல. அப்படின்னா அதைவிட பல மடங்கு வெப்பத்தை அந்த வீரர்கள் எப்படி தாங்குவாங்க.? இந்த வெப்பத்தை குறைக்கக்கூடிய வேலையை தான் அந்த போம் இன்சுலேஷன் லேயர் வந்து செய்யுது. கல்பனாவோட ராக்கெட்ல இந்த லேயர் தான் வந்து டேமேஜ் ஆகி இருந்துச்சு.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

இவங்க பூமிக்குள்ள நுழையும் போது வெப்பம் உடனடியா அதிகரித்ததுனால லேயர்ல அழுத்தம் அதிகரித்து ஓட்ட விழுந்துருச்சு. இதனால ராக்கெட் மொத்தமா வெடித்து சிதறியது. ஏழு வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனாங்க. ஆக அமெரிக்காவோட அந்த விண்வெளி பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்ட அந்த ஸ்பேஸ் ஷட்டில் வகை விண்கலம் இந்த இரண்டு பெரிய விபத்துக்களை சந்தித்து 14 உயிர்களையும் காவு வாங்குச்சு. இந்த ஸ்பேஸ் ஷட்டில் வகை விண்கலத்துல ரிஸ்க் இருந்ததுனாலயும் அதனுடைய விலையும் அதிகமா இருந்தது அப்படிங்கறதுனால அதை பயன்படுத்துறதை 2011 ஆம் ஆண்டே அமெரிக்கா நிறுத்திட்டாங்க. அதுக்கப்புறமா ரஷ்யா அடிக்கடி அவங்களுடைய விண்வெளி பயணங்களுக்கு பயன்படுத்தின சுயஸ் விண்கலத்தை வந்து அமெரிக்கா பயன்படுத்த தொடங்கினாங்க. நாசா ஒரு அமெரிக்க வீரரை இந்த சுயஸ் விண்கலம் மூலமா விண்வெளிக்கு அனுப்பணும் அப்படின்னா 90 மில்லியன் டாலர் செலவு பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

இந்த நிலையிலதான் கடந்த 2014 ஆம் ஆண்டு நாசா தனியாரோடு இணைந்து அந்த கமர்சியல் க்ரூ ப்ரோக்ராம வந்து தொடங்குறாங்க. அதன்படிதான் ஸ்பேஸ் எக்ஸ், போயிங் ஆகிய நிறுவனங்கள் ஹியூமன் ஸ்பேஸ் பிளைட்ட வந்து தயாரிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டதோடு மட்டுமில்லாமல் அதன்படி தயாரிக்கவும் தொடங்கினாங்க. அதன்படி 2022 ஆம் ஆண்டு முதன்முதலா ஸ்பேஸ் எக்ஸ் ஓட க்ரூ டிராகன் விண்ணுல பறந்தது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டு நாசா விஞ்ஞானிகளை சுமந்துகிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமா பறந்து சென்றது ஸ்பேஸ் எக்ஸ் குரூ டிராகன். ரஷ்யாவின் சூயுஸ் விண்கலத்தை ஒப்பிடும்போது ஸ்பேஸ் எக்ஸோட இந்த குரூ டிராகன்ங்கறது ரொம்ப சீப்பர், சேஃபர் மற்றும் ரீயூசபிலாகவும் இருக்கு. இந்த குரூ டிராகன் மூலமாதான் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பயணங்களை மேற்கொண்டு வராங்க. அவங்க மட்டும் இல்லாம சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுகிட்டு இருக்கு.

See also  இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அந்த வரிசையில தயாரானது தான் போயிங் நிறுவனத்தோட ஸ்டார் லைனர் விண்கலம். இது ஏற்கனவே ஆள் இல்லாம பரிசோதனை செய்யப்பட்டுச்சு. அதுக்கப்புறமா குரூ பிளைட் டெஸ்ட் அதை மேற்கொள்வதற்காகத்தான் இந்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலமா பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் செய்தாங்க சுனிதா வில்லியம்ஸும், புட்ஜ் வில்மோரும். கடந்த ஜூன் ஐந்தாம் தேதி சுனிதா வில்லியம்ஸ் புட்ஜ் வில்மோரு இவங்க ரெண்டு பேரும் இந்த ஸ்டார் லைனர்ல அமெரிக்காவோட ஃப்ளோரிடா மாகாணத்துல இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் ஆறாம் தேதி போய் சேர்ந்தாங்க. அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகளை எல்லாமே செய்துட்ட பிறகு அதே ஸ்டார் லைனர் விண்காலத்துல பூமிக்கு திரும்புறதா இருந்தது.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

ஜூன் 14 ஆம் தேதியே அவங்க பூமிக்கு திரும்பி இருக்கணும் ஆனா திட்டமிட்டபடி அவங்க வரல. காரணம் அந்த விண்கலத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சனை தான். அது என்னன்னா.? ஸ்டார் லைனர்ல ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆகியவற்றாலதான் அவங்க பூமிக்கு திரும்புறதுல சிக்கல் ஏற்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்புறதுக்கு ஆறு மணி நேரம் தேவைப்படும். இந்த ஆறு மணி நேரத்துல த்ரெஸ்ட் ஃபெயிலியர் மேலும் வால்வ் லீக்கேஜ் இதெல்லாம் இல்லாம இருக்கணும். இதனால இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து அந்த விண்கலத்துல மறுபடியும் ஏன் திரும்பி வரணும் அப்படிங்கறதுக்காக அவங்க அங்கேயே தங்கிட்டாங்க.

இந்த நிலையிலதான் அந்த ஸ்டார் லைனர் ஸ்பேஸ் கிராஃப்ட் இருக்கு இல்லையா, அத அப்படியே ஆட்டோமேட்டிக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி பூமியில கொண்டு வந்து தரை இறக்குனாங்க. இந்த ஸ்பேஸ் கிராஃப்ட்டுக்கான சோதனைகள் எல்லாம் தற்போது நடந்துகிட்டு இருக்கு. அதுல என்ன பிரச்சனை அப்படிங்கறதை பார்த்துக்கிட்டு இருக்காங்க.? இந்த ஸ்டார் லைனர் ஸ்பேஸ் கிராஃப்ட் சர்வதேச விண்வெளி நிலையத்தோட இணைக்கிறதை அதாவது டோக் பண்றது மற்றும் அங்கு இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஆய்வுகளை செய்துட்டு அதுக்கப்புறம் அன்டோக் செய்யறது, ஸ்பேஸ் டிராவல் இதுக்கெல்லாம் இந்த ஸ்டார் லைனர் எப்படி இருக்குங்கறதை பார்க்கிறதுக்காகத்தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூட்ஜ் வில்மோர் வந்து அந்த ஸ்டார் ஸ்பேஸ் கிராப்ட்ல வந்து போயிருந்தாங்க.

ஆனா அதுல பிரச்சனை ஏற்பட்டதன் காரணமா அதை மட்டும் ஆட்டோமேட்டிக்கா பூமிக்கு கொண்டு வந்துட்டாங்க. எனவே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூட்ஜ் வில்மோர் இவங்க ரெண்டு பேரும் விண்வெளி நிலையத்திலேயே இருந்து ஆய்வுகளை வந்து மேற்கொண்டாங்க. பொதுவா சுனிதா வில்லியம்ஸ் ஓட வேலை என்னன்னா.? அவங்க பேசிக்கலி ஏர்போர்ஸ சேர்ந்தவங்க, பிளைட் கண்ட்ரோல் தான் அவங்களோட முக்கியமான வேலையே. கண்ட்ரோல்னா என்ன சொல்லலாம்னா.? திடீர்னு ஒரு விண்கல் வந்து இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை நோக்கி வருது அப்படின்னா அந்த ஸ்டேஷனோட டைரக்ஷனை வந்து மாத்தணும். பொதுவா விண்வெளியில இருக்கிற ஆய்வு மையத்துக்குன்னு பார்க்கும்போது விண்கற்கள் மற்றும் விண்வெளி குப்பைகள் மூலமா ஆபத்துகள் இருக்கு.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

ஆக அந்த விண்வெளி குப்பையோ ஒரு விண்வெளி கல்லோ வருது அப்படிங்கும் போது அதனுடைய பாதையிலிருந்து அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை வேறொரு பாதைக்கு மாற்றணும். சோ இதை வந்து அவங்க கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். விண்வெளி மையத்துல ரேடார் கருவிகள் எல்லாம் இருக்கு சோ அதை வைத்து கண்காணிப்பாங்க. அதுபோக ரிசர்ச் வொர்க்கும் இருக்கும். ஆய்வு அப்படின்னு வரும்போது புவியீர்ப்பு விசை இல்லாத அந்த இடத்துல ஒரு செடியை எப்படி முளைக்க வைக்கலாம்.? அப்படிங்கறதும் அது எப்படி வளருதுனு அதையெல்லாம் சோதனை செய்து பார்ப்பாங்க. அதுபோக இரண்டு உலோகங்களை கலந்தா அது எப்படி கலக்குதுனு உள்ளிட்ட பல ஆய்வுகளையும் வந்து அங்க இருக்கிறவங்க செய்வாங்க.

அங்க இருக்கக்கூடிய அந்த க்ரூ 72 அதனோட கமாண்டர் வந்து சுனிதா வில்லியம்ஸ் தான் ஆக ஸ்டார் லைனர் ஸ்பேஸ் கிராப்ட்ல ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமா அவங்க அதே ஸ்பேஸ் கிராப்ட்ல வரல. அங்கேயே தங்கி ஆய்வுகளை எல்லாம் செய்துட்டு இருக்காங்க. தற்போது புதியதா அங்கு சென்றிருக்கக்கூடிய குழு கிட்ட அவங்களுடைய பணிகளை எல்லாம் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு, பூமிக்கு திரும்பப் போறாங்க. அவங்க இந்திய நேரப்படி 19-ஆம் தேதி மாலை ஐந்தரை மணி அளவுல பூமியை வந்தடைவாங்கனு சொல்லப்படுது. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் கிராஃப்ட்ல இருக்கிற அந்த 72 குரூ மெம்பர் இருக்காங்கலையா அவங்கள்ல மீதம் இருக்கக்கூடிய மூன்று பேர் ஏப்ரல் மாதம் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்பேஸ் கிராஃப்ட்ல வருவாங்க.

See also  காமக் கொடூரனின் மோசமான செயல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள்

இந்த இடத்துல கவனிக்க வேண்டியது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஜ் வில்மோர் உட்பட நான்கு பேர் இப்போது விண்வெளி மையத்துக்கு போன அந்த ஸ்பேஸ் எக்ஸ் குரூ டிராகன் மூலமா வரமாட்டாங்க. அது அப்படியே இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனோட அட்டாச் செய்யப்படும். அது ஆறு மாதங்கள் கழித்து தான் திரும்ப வரும். அதற்கு முன்பாக அங்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் குரூ 9 ஸ்பேஸ் கிராஃப்ட் தான் அங்க இருக்கு. அதுலதான் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வரப்போறாங்க. ஸ்பேஸ் எக்ஸ் குரூ 9 ஸ்பேஸ் கிராஃப்ட் மூலமா அவங்க முதல்லயே வந்திருக்கலாம். ஆனாலும் கூட ஏற்கனவே அங்க இருந்தவங்களுடைய பணிக்காலம் முடிந்து அவர்கள் வரும்போது அவங்களோடு சேர்ந்து வந்து விடலாங்கறதுக்காகத்தான் அங்கேயே தங்கி ஆய்வு பணிகளை எல்லாம் மேற்கொண்டுவிட்டு தற்போது அந்த க்ரூ ரொட்டேஷன் நடக்கும்போது அவங்களோட சேர்ந்து பூமிக்கு வர்றாங்க.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

அதனால அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ன சொல்றாங்கன்னா.? தற்போது போயிருக்கிற அந்த ஸ்பேஸ் எக்ஸ் குரூ 10 விண்கலம் மீட்பு பணிக்காக போகல, மேலும் சுனிதாவும் விண்வெளி நிலையத்துல சிக்கிக்கல. அதாவது ஒரு குரூ பூமியிலிருந்து விண்வெளி நிலையத்துக்கு போறாங்க அங்கு ஏற்கனவே இருக்கிற குரூ பூமிக்கு திரும்பி வர்றாங்க அவ்வளவுதான். அதுவும் அமெரிக்கா அடிக்க அடிக்கடி விண்வெளி பயணத்துக்கு பயன்படுத்தி வரக்கூடிய பாதுகாப்பான ஸ்பேஸ் எக்ஸ் குரூ டிராகன் விண்கலம் மூலமாதான் இதெல்லாம் நடக்குது. அதனால இதை கல்பனா சாவ்லாவோட பயணத்தோட இந்த விஷயத்தை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஆய்வுகளை முடிச்சுக்கிட்டு சுனிதா வில்லியம்ஸ், புட்ஜ் வில்மோர் பூமிக்கு திரும்புறாங்க அவ்வளவுதான்.

இந்த மீடியா மற்றும் பத்திரிக்கையில் வரக்கூடிய செய்திகளை பார்த்துவிட்டு, அவங்களுக்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கு அதனால்தான் மீட்கப்படுறாங்க அப்படி இப்படின்னு சொல்றதெல்லாம் அறிவியலுக்கு புறம்பானதுன்னு சொல்றாரு விஞ்ஞானி முனைவர் வெங்கடேஸ்வரன். சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமிக்கு திரும்புறதுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நாளைக்கு காலையில 8:15 மணிக்கு வந்து துவங்கும் அப்படின்னுட்டு நாசா சொல்லி இருக்காங்க. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்கலத்தை அன்டோக் செய்யக்கூடிய பணிகள் பார்த்தீங்கன்னா இந்திய நேரப்படி நாளைக்கு காலையில 10:15 மணிக்கு தொடங்கும்.

19 ஆம் தேதி அதிகாலை ஒரு 2:15 மணி அளவுல டிஆர்பிட் பணிகள் எல்லாம் நிறைவு பெறும். அதுக்கப்புறமாதான் அந்த தரை இறக்கிற நிகழ்வுகள் எல்லாம் நடக்கும். தொடர்ச்சியாக அந்த வானிலை எப்படி இருக்கு அப்படிங்கறதை பார்த்துதான் அதற்கு ஏற்றபடி அவங்க பூமியை வந்து சேருவாங்கன்னு சொல்லி இருக்காங்க நாசா. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க நண்பர்களே. ஆண்டவன் புண்ணியத்துல அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது பத்திரமா தரை இறங்கணும்னு நம்ம எல்லாரும் வேண்டிக்கலாம். என்ன நடந்துச்சு என்கிறது அந்த சிக்கி தவிச்ச அந்த ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்.

விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்

மேலும் கீழ இருந்து ஆய்வு செய்த நாசாவிற்கும் மட்டும்தான் அனைத்தும் தெரியும். பத்திரிகைகளிலும், மீடியாவிலும் என்ன வேண்டுமானாலும் வரலாம். அது உண்மையாக கூட இருக்கலாம் அல்லது பொய்யாக கூடவும் இருக்கலாம். என்ன வேண்டுமானாலும் அங்கு நடந்திருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு தாமதமாக ஆனாலும் பரவாயில்லை கல்பனா கல்பனா மற்றும் அவரோடு சேர்ந்து பயணித்த ஏழு பேர் அதற்கு முன்னர் பயணித்த ஏழு பேர் என 14 பேரை பலி கொண்ட சம்பவம் போல் இவர்களுக்கு வராமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். மீண்டும் இதுபோல் எந்த ஒரு சம்பவமும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வோம்.

அவ்வளவுதான் நண்பர்களே இன்னைக்கான பதிவு இதோட முடிஞ்சிருச்சு மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝

ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும் இந்த பதிவு நீங்க படிச்சு இருக்கீங்கனா பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது மட்டுமின்றி பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை நமது வலைதளத்தில் உங்களுக்காக தினந்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன் அவைகளின் உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்கு கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள telegram மற்றும் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நமது வலைதளத்தில் உள்ள பதிவுகளை அனைத்தும் படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பயன் தரும் பதிவுகளாக மட்டுமே இருக்கும். இந்தப் பதிவைப் படித்த பிறகு உங்களுக்கு சிறிது நேரம் இருந்தால் கீழே இருக்கும் அந்தப் பதிவையும் படித்து பாருங்கள்.

படிப்பதற்கு…👇

14 பேரை கொடூரமாக பழி வாங்கிய விண்வெளி பயணம்

14 பேரை கொடூரமாக பழி வாங்கிய விண்வெளி பயணம்
14 பேரை கொடூரமாக பழி வாங்கிய விண்வெளி பயணம்

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏