தஞ்சாவூர் பெரிய கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல பழமையானதுனு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா அந்த பெரிய கோவிலை விட பழமையான ஒரு கட்டிடம் ஜப்பான்ல இருக்குனு சொன்னா உங்களால நம்ப முடியுதா..? ஆமாங்க நீங்க நம்பியே ஆகனும்.! 122 அடி உயரம் இருக்கக்கூடிய அந்த பழமையான கட்டிடத்தை கட்டி 1300 வருடங்கள் ஆகுது. இப்ப வரைக்குமே இந்த கட்டிடத்துல எந்த பிரச்சனையும் ஏற்படாம நல்லா ஸ்ட்ராங்கா நிக்குது. அட போமா காவியா.! 1000 வருடத்துக்கு மேல வெயில், புயல் மற்றும் பல போர்கள் பாத்த எங்க தஞ்சை பெரிய கோவில் விட இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லனு நீங்க சொல்லலாம்.

ஆனா அப்படின்னு யோசிச்சோம்னா அதைவிட ஒரு பெரிய விஷயம் ஒன்னு இருக்கு. அது என்னன்னா இந்த கட்டிடம் ஜப்பான்ல இருக்கு. இப்ப நமக்கே நல்லா தெரியும். ஜப்பான்ல அளவுக்கு அதிகமான நிலைநடுக்கங்கள் ஏற்படும் அப்படின்னு நமக்கு நல்லாவே தெரியும். அதுலயும் குறிப்பா இந்த கட்டடம் இருக்கக்கூடிய பகுதியில ரெக்டார் ஸ்கேல்ல ஏழு மற்றும் அதைவிட அளவுக்கு அதிகமான நிலநெடுக்கங்கள் 46 முறை பதிவாயிருக்கு. ஆனா எந்த நிலநடுக்கத்துக்கு அப்புறமும் இந்த கட்டிடத்துக்கு எந்த பிரச்சனையுமே ஏற்படல. அது எப்படி?
இத்தனை 100 ஆண்டுகள் தாண்டி இவ்வளவு நிலநடுக்கத்தையும் தாண்டி ஒரு கட்டிடத்தால ஸ்ட்ராங்கா நிக்க முடியும்ன்னு கேட்டா அதுக்கு ஒரு குச்சிதான் மிக முக்கியமான பாதுகாப்பா இருக்குனு சொன்னா இப்போ உங்களுக்கு ஆச்சர்யமா இருக்குமே..! அதுதான் எல்லா நிலநடுக்கத்துல இருந்து இந்த கட்டிடத்தை காப்பாத்திட்டு இருக்கு. அப்படி என்ன குச்சி அது? அது அவ்ளோ ஸ்ட்ராங்கான குச்சியா.? இதை பத்திதான் இன்னைக்கு நம்ம இந்த பதிவுல பார்க்க போறோம். ஆகவே எனது அன்பார்ந்த வாசகர்களே இந்த பதிவு உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்த கொடுக்கும் முழுசா படிச்சி பாருங்க. வாங்க இப்போ நாம அந்த குச்சியை பத்தி தெளிவா பார்க்கலாம்.

பொதுவா இந்த மாதிரி கட்டடிடங்களை பகோடாஸ் (Pagodas) அப்படின்னு சொல்றாங்க. புத்த மதம் சார்ந்த வழிபாட்டு தளங்கள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி கட்டப்படுது. இப்போ இதோட வரலாறை பார்த்தோம்னா, அது இந்தியாவில இருந்துதான் ஆரம்பமாகுது. ஏன்னா இந்தியாவுல புத்த மதம் உருவாகி அது சைனா வழியா மற்ற கிழக்காசிய நாடுகளுக்கு எல்லாம் போய் சேருது. அப்படி போய் சேரும்போது அந்த சமயத்துல இந்தியாவுல ஸ்டூபா (Stupa) அப்படிங்கிற இந்த ஸ்ட்ரக்சர் ரொம்ப பிரபலமா இருக்கு. எப்படி புத்த மதம் மற்ற நாடுகளுக்கு போய் சேர்ந்துச்சோ அதே மாதிரி கூடவே இந்த ஸ்டூபா ஸ்ட்ரக்சரும் மற்ற நாடுகளுக்கு போய் சேருது.
ஆனா அப்படி போய் சேர்ந்தது ஒவ்வொரு நாட்டிலயும் அங்க காலநிலை எப்படி இருக்கு? நில அமைப்பு எப்படி இருக்கு அப்படிங்கறதெல்லாம் பொறுத்து அந்த ஸ்டூபா அமைப்புல நிறைய மாற்றங்கள எல்லாம் உருவாக்குறாங்க. அப்படித்தான் இந்த பகோடாஸ் உருவாகுது. இப்ப சைனா, ஜப்பான் மாதிரி நிறைய நாடுகள்ல இந்த பகோடாஸ் பார்க்கப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் ஏத்த மாதிரி சில சில மாற்றங்களை ஸ்டூபா அதாவது அந்த அமைப்புல உருவாக்குறாங்க. அதுல ஜப்பான்ல நிலநெருக்கங்கள் அதிகமா ஏற்படும் அப்படிங்கறதுனால அதை சமாளிக்கிற விதமா நிறைய மாற்றங்களை அதுல உருவாக்கி வச்சிருக்காங்க.

அந்த மாற்றங்கள் எல்லாம் சேர்த்துதான் இந்த பகோடாஸ இத்தனை 100 ஆண்டுகள் தாண்டியும் நல்லா ஸ்ட்ராங்கா நிக்க வச்சிருக்கு. இதுல நம்ம ஆரம்பத்துல பார்த்தது ஹோரியூஜி டெம்பிள் அப்படிங்கற பகோடா. உலகத்தோட ரொம்ப பழமையான பகோடாவா இதுதான் இருக்கு. ஜப்பானுடைய நாரு ப்ரீபெக்சர் (Nara prefecture) அதுல இகாருகா-சோ (Ikaruga-cho) அப்படிங்கற ஊர்லதான் இதை கட்டி இருக்காங்க. இப்ப நம்ம ஊர்ல மாநிலங்கள் அப்படின்னு பிரிச்சு வச்சிருக்காங்க இல்லையா.! அந்த மாதிரி ஜப்பான்ல ப்ரீபெக்சர் அப்படிங்கற பிரிவு இருக்கு. 607வது ஆண்டுலதான் இந்த பகோடாவை முதல் முறையா கட்டுறாங்க. அப்படி கட்டி கொஞ்ச நாட்கள்லயே அது வந்து மின்னல் தாக்கி நிறைய பாதிக்கப்பட்டிருக்கு. அது ஏன் அப்படின்னா.? அந்த பகோடாஸ் முழுக்க முழுக்க மரத்தால மட்டுமே செய்யப்பட்டிருக்கு.
அதானால அதுமேல பல முறை மின்னல் தாக்கியாதால அது பயங்கரமா பாதிக்கப்படுது. அப்படி அந்தப் பகோடாஸ் பாதிக்கப்பட்டதுனால, மறுபடியும் அதே இடத்துல அதே மாதிரி ஒரு பகோடாவை கட்டுறாங்க. அந்த பகோடாஸ்தான் இத்தனை நூறு ஆண்டுகள் தாண்டியும் நல்லா ஸ்ட்ராங்கா நிக்குது. ஓகே, இதுவரைக்கும் இதோட வரலாறை பாத்தோம்.? இப்போ இதோடைய கட்டுமானத்துல என்னென்ன விஷயங்கள் பண்ணிருக்காங்க அப்படிங்கறத நம்ம ஒண்ணு ஒண்ணா பார்ப்போம். ஒரு குச்சியாலதான் அது ஸ்ட்ராங்கா நிக்குதுன்னு சொன்னோம் இல்லையா? அது என்ன கதை அப்படிங்கறதையும் நம்ம போக போக பார்ப்போம். ரொம்ப சின்ன சின்ன விஷயத்துல கூட கவனமா பிளான் பண்ணி கட்டி இருக்கறதுனாலதான் இந்த பகோடாஸ் இப்ப வரைக்குமே ஸ்ட்ராங்கா நிக்குது.
இப்ப உதாரணத்துக்கு சொல்லணும்னா, ஹோரியூஜி பகோடாஸ் மட்டும் இல்லாம பெரும்பாலான பகோடாஸ்ல நீங்க பாத்தீங்கன்னா உள்ள மக்கள் இருக்கக்கூடிய அந்த சென்ட்ரல் ஏரியாவையும் தாண்டி வெளியில இருக்கக்கூடிய அந்த கூரையை ரொம்ப நீளமா வந்து கட்டி வச்சிருப்பாங்க. இது அழகுக்காக அப்படிங்கறது மட்டும் இல்லாம, இதுல ஒரு முக்கியமான காரணமும் இருக்கு. அது என்னன்னா.? இப்ப ஒரு நார்மலான கட்டிடம் இருக்கு. அந்த கட்டிடத்துக்கு மேல ஒரு கூரையை கட்டி வச்சிருக்காங்க. அது இவ்வளவு நீளமா இழுத்து கட்டாம ரொம்ப சுருக்கியே கட்டிருக்காங்க அப்படின்னா அங்க மழை அதிகமா பெய்யுது அப்படிங்கற பட்சத்துல அந்த கூரை வழியா தண்ணி எல்லாமே கீழ விழுகும். அது எங்க விழுகும் அப்படின்னா கீழ இருக்கக்கூடிய பவுண்டேஷனுக்கு பக்கத்துலயே விழுகும்.

அப்ப அங்க தண்ணி அதிகமா தேங்க தேங்க அது கீழ இருக்கக்கூடிய மண்ணையும், பவுண்டேஷனையும் பாதிக்க ஆரம்பிச்சிரும். அப்படி ஒரு பாதிப்பு ஏற்படக்கூடாதுங்கறதுனாலதான் இவங்க இந்த ஹோரியூஜி பகோடாஸ்ல ரொம்ப நீளமா அந்த கூரையை அமைச்சிருக்காங்க. அதனால தண்ணி அந்த கூரை வழியா வழிஞ்சு ஓடும்போது பவுண்டேஷனுக்கு பக்கத்துல இல்லாம கொஞ்சம் தள்ளி விழுந்து அந்த பவுண்டேஷன்ல எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாம அந்த பெரிய கூரை போன்ற அமைப்பு பாத்துக்குது. அடுத்து லோ சென்டர் ஆஃப் கிராவிட்டி (Low center of gravity). இதுக்கு விளக்கம் என்னான்னா.?அந்த கட்டடம் மொத்தம் அஞ்சு மாடி இருக்கு இல்லையா, அந்த அஞ்சு மாடிலையும் ஒவ்வொரு மாடி ஏற ஏற அந்த கட்டடத்தோட அகலத்தை குறைச்சுக்கிட்டே போறாங்க. உதாரணத்திற்கு கீழே பத்துக்கு பத்து ஆக இருக்கும் ஒரு அளவானது மேலே செல்ல செல்ல ஒன்பதுக்கு ஒன்பது, எட்டுக்கு எட்டு, ஏழுக்கு ஏழு என ஒவ்வொரு மாடிக்கும் குறைத்துக் கொண்டே போறாங்க. இப்படி பண்றது மூலமா அந்த கட்டிடத்தோட சென்டர் ஆஃப் கிராவிட்டி அதோடைய கீழ் தளத்திலயே மெயின்டென் ஆகுது.
இப்போ நின்னுட்டு இருக்க பொருள் எப்ப கீழ விழுகும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் ஒருமுறை சொல்லுரேன் தெரிஞ்சிக்கோங்க.! அதாவது ஒரு பொருள் கீழே விழாம ஸ்ட்ராங்கா நிக்கறதுக்கு காரணம் சென்டர் ஆஃப் கிராவிட்டிதான். ஒவ்வொரு பொருளுக்குமே ஒரு சென்டர் ஆஃப் கிராவிட்டினு ஒன்னு இருக்கும். அந்த சென்டர் ஆஃப் கிராவிட்டிய தாண்டி அந்த பொருள் சாயும்போது அது கீழ விழுந்துரும். அப்படி பார்க்கும்போது இந்த பகோடாவோட சென்டர் ஆஃப் கிராவிட்டிய அவங்க கீழதான் மெயின்டென் பண்றாங்க. அப்போ ஒரு பூகம்பமோ அல்லது அதிகமான காத்து வீசினாலோ கூட இந்த பகோடாவால அந்த சென்டர் ஆஃப் கிராவிட்டியை தாண்டி சாய முடியாது. இப்படி ஒரு கட்டுமானம் இதுல இருக்குறதால இது அவ்வளவு சீக்கிரத்துல கீழ விழுகாது.
அதனால இந்த பகோடாஸ்க்கு எந்த பிரச்சனையும் பூகம்பத்தாலயோ, காத்தாலயோ ஏற்படுறது இல்லை. அடுத்துதான் ரொம்ப முக்கியமான விஷயம். 122 அடி உயரம் இருக்கக்கூடிய அந்த கட்டிடத்துல ஆணி அடிச்சு ஒரு பாகத்தையும், இன்னொரு பாகத்தையும் கனெக்ட் பண்றத முடிஞ்சவரை அவங்க ரொம்பவே கம்மி பண்ணிருக்காங்க. ஏன்னா, இப்ப ஒரு பாகத்துக்கும், இன்னொரு பாகத்துக்கும் இடையில நம்ம ஆணி அடிக்கும் போது, அது ரெண்டுக்கும் இடையில ஒரு ஸ்ட்ராங்கான பிணைப்பு ஏற்பட்டு, அது ரெண்டுமே ஒரே ஸ்ட்ரக்சர் அப்படிங்கற மாதிரி ஆயிடுது. அப்படி ரெண்டுமே ஒரே ஸ்ட்ரக்சர் மாதிரி ஆகிடக்கூடாதுங்கறதுனாலதான், ஆணி அடிக்கிறதை முடிஞ்சவரை தவிர்த்துட்டு, இன்டர்லாக்கிங் முறையில ஒன்னையும் இன்னொன்னையும் கனெக்ட் பண்ணிருக்காங்க.

இது எதுக்காகன்னா.? இப்ப ஒரு நிலைநடுக்கம் ஏற்படுதுனு வச்சிக்குவோம். அந்த நிலைநடுக்கம் கொஞ்சம் மைல்டான நிலநெடுக்கமா இருந்துச்சுங்கிற பட்சத்துல, அந்த பில்டிங்குக்கு பெருசா எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏன்னா ரொம்ப அசைய போறதில்லை. ஆனா அதுவே ரொம்ப சக்தி வாய்ந்த நிடுக்கமா இருக்கு அப்படிங்கற பட்சத்துல அந்த மொத்த ஸ்ட்ரக்சருமே அந்த பக்கமும் இந்த பக்கமும் அப்படியே அசைய ஆரம்பிக்கும். கொஞ்ச நேரத்துலயே அதோட ஸ்டெபிலிட்டி இழந்து அது மொத்தமா கீழ விழுந்துரும்.
இதை தடுக்கணுங்கறதுக்காகதான் இந்த ஹோரியூஜி கட்டிடத்துல இன்டர்லாக்கிங் முறையை கையாண்டுருக்காங்க. ஏன் அப்படின்னா, இப்ப நீங்க ரெண்டு பொருளை இணைக்க ஆணி அடிக்கிற மாதிரியே, அந்த ஒட்டுமொத்த கட்டிடத்துல உள்ள அனைத்து பாகங்களையும் இணைக்க ஆணி அடிச்சு, ஆணி அடிச்சு கனெக்ட் பண்ணி இருக்கீங்கங்கிற பட்சத்துல, அது ஒட்டுமொத்தமா ஒரே ஸ்ட்ரக்சர் அப்படிங்கற மாதிரி ஆயிருது. அப்போ ஒரு நிலநடுக்கம் ஏற்படும் போது, ஒட்டுமொத்த ஸ்ட்ரக்சருமே சேர்ந்து அசைஞ்சு அதுக்கு பெரிய அளவுல பாதிப்பு ஏற்படுது. ஆனா இங்க இன்டர்லாக்கிங் முறையை கையாண்டு இருக்காங்க அப்படிங்கறதுனால, ஒவ்வொரு ஸ்ட்ரக்சராலயுமே தனியா செயல்பட முடியும். இதைதான் ஸ்நேக் டான்ஸ் தியரி (Snake dance theory) அப்படின்னு சொல்றாங்க.
அப்படின்னா என்னன்னா இப்ப ஒரு பாம்பு எப்படி நகரும்? பாம்போட முன்பாகம் ஒரு பக்கம் இருக்கும், நடுபாகம் ஒரு பக்கம் இருக்கும், அதே மாதிரி பின்பாகம் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா.! அதாவது ஒரே பாம்புதான் ஆனா நகரும் போது ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு பக்கம் இருக்கும் இல்லையா.! அதே மாதிரிதான் இந்த ஹோரியூஜி இன்டர்லாக்கிங் முறையில கனெக்ட் ஆயிருக்குங்கறதுனால நிலநடுக்கம் ஏற்படுறப்போ, அதுல அஞ்சு மாடி இருந்தாலும் ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு திசையில அப்படியே நகந்துகிட்டே இருக்கு.

இது கூடவே இதுல சின்பஷீரா (Shinbashira) அப்படின்னு ஒன்னு இருக்கு. இப்ப இந்த சின்பஷீராதான் நான் பதிவோட ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா ஒரு குச்சி மாதிரி இருக்கும்னு. அந்த குச்சிக்குதான் சின்பஷீரா அப்படின்னு பேரு. அதுவும் சேர்ந்துதான் இந்த கட்டடத்தை காப்பாத்திட்டு இருக்கு. ஹோரியூஜி பகோடாவோட சென்டர்ல, அதாவது அதோட மையத்துலதான் இந்த சின்பஷீரா இருக்கும். கீழ பேஸ்மெண்ட்ல இருந்து டாப் ஃப்ளோர் வரைக்குமே அது போகும். ஆனா என்னதான் மொத்த நீழத்துக்கும் அது போனாலும் எல்லா இடத்துலயுமே எல்லாம் அந்த பகோடாவோட கனெக்ட் பண்ணிருக்க மாட்டாங்க. ஒரு சில முக்கியமான இடத்துல மட்டும்தான் அதை கனெக்ட் பண்ணிருப்பாங்க.
அதே மாதிரி பேஸ்மெண்ட்ல அது போகுது இல்லையா? அந்த பேஸ்மெண்ட்ல தரையோட அப்படியே ஊண்றி வச்சிருக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா கீழ ஒரு குழி தோண்டி அந்த குழிக்குள்ள இத அப்படியே ஃபிக்ஸ் பண்ணிதான் வச்சிருப்பாங்க. அதாவது ஆட்டுகல்லுகுள்ள போட்ட உரல் மாதிரி இருக்கும். அப்படி குழிக்குள்ள அத பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்கன்றதுனால ஒரு நிலநடுக்கம் ஏற்படும்போது இந்த சின்பசீராவாலையும் அந்த பக்கமும் இந்த பக்கமும் நல்லா ஈஸியா அசைஞ்சு கொடுக்க முடியும்.
நிலநடுக்கம் ஏற்படும்போது ஒவ்வொரு மாடியும் ஒரு பாம்பு மாதிரி வேற வேற திசையில அசையும்னு ஏற்கனவே பார்த்தோம், அதோட சேர்த்து இந்த சின்பசீராவும் அசையும். இப்போ ஒரு அளவுக்கு அதிகமான நிலநெடுக்கம் ஏற்படுதுங்கற பட்சத்துல கட்டடம் ரொம்பவே அதிகமா அசையும் இல்லையா? இந்த சின்பஷீராவையும் கட்டடத்தையும் நம்ம ஏற்கனவே ஒரு சில இடங்கள்ல கனெக்ட் பண்ணிருக்கோங்கறதுனால அங்க உருவாகக்கூடிய அதிகப்படியான அந்த அதிர்வுகளை இந்த சின்பஷீரா தனக்குள்ள வாங்கி வச்சுக்கிட்டு அது இந்த கட்டடத்தோட அதிர்வுகளுக்கு எதிர்திசையில அந்த பக்கமா, இந்த பக்கமா அசைஞ்சு அந்த அதிர்வுகளை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு கொடுக்கும்.

இப்படிதான் இந்த ஹோரியூஜி பக்கோடாஸ் தன்னத்தானே இத்தனை வருஷங்களா இவ்வளவு நிலநடுக்கங்கள்ல இருந்து காப்பாத்திக்குது. இப்படி கட்டக்கூடிய கட்டுமானம் முறையான கட்டுமானமா இருக்குமானு சொல்லி கேட்டப்போ.! இத டெஸ்ட் பண்ணி பா்கறதுக்காக இதே மாதிரியான ஒரு மாடல மரத்தால செய்றாங்க. ஒரிஜினல் பில்டிங்ல எப்படி ஆணி அடிக்கிறத கம்மி பண்ணிருக்காங்களோ அதே மாதிரி இங்கேயுமே இன்டர்லாக்கிங் முறையில எல்லாத்தையுமே கனெக்ட் பண்ணி ஒரு நிலடுக்கம் உருவாகுறப்போ என்ன மாதிரியான அதிர்வுகள் ஏற்படுமோ அதே அதிர்வுகளை செயற்கையா உருவாக்கி டெஸ்ட் பண்ணி பாக்கறாங்க. அந்த மாடல் அந்த பக்கம், இந்த பக்கமா அசைஞ்சதே தவிர ஒட்டுமொத்தமா அது கீழ சரிஞ்சு விழுகவே இல்லை.
இது மூலமா கன்ஃபார்ம் பண்றாங்க. ஓகே இந்த இந்த விஷயங்கள்தான் பகோடாஸ சாயவிடாம பாதுகாத்துகிட்டு இருக்கு. மேலும் இது மூலமாதான் இந்த பகோடாஸால இவ்வளவோ வருஷத்துக்கு ஸ்ட்ராங்கா நிக்க முடியுதுங்கறது கன்பார்ம் ஆகுது. இந்த ப்ளேன் எல்லாமே இந்த ஹோரியூஜி பகோடாஸ்ல மட்டும் இல்லாம ஜப்பான்ல இருக்கக்கூடிய மற்ற பகோடாஸ்லயுமே கூட இதே ஐடியாவை இம்ப்ளிமென்ட் பண்ணிருக்காங்க. அதனாலதான் மற்ற பகோடாஸ்மே கூட இதே பகோடாஸ் மாதிரி நல்லா ஸ்ட்ராங்கா இத்தனை நிலநடுக்கங்களை தாண்டியுமே நிக்குது.
இப்போ இதெல்லாமே ஆதிகாலத்துல கட்டப்பட்டது. இப்ப சமீப காலங்களலயுமே அதே மாதிரி ஜப்பான்ல பெரிய பெரிய கட்டடங்கள் எல்லாம் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க இல்லையா? அதுலயும் குறிப்பா இப்ப இந்த பக்கோடாஸை பொறுத்தவரைக்கும் வெரும் 122 அடி அதாவது 35 m தான். இதைவிட 20 மடங்கு அதிகமா 600 m உயரத்துல அங்க ஜப்பான்ல ஒரு கட்டடம் கட்டுனாங்க. அதோட பேரு டோக்கியோ ஸ்கைட்ரி (Tokyo Skytree) அப்படின்னு வச்சிருக்காங்க. அப்போ நம்ம புதுசா எதுவுமே யோசிக்க தேவையில்லை. ஏற்கனவே அவங்க நாட்டுடைய முன்னோர்கள் எல்லாம் என்ன பண்ணி இருக்காங்களோ அதையே இங்க இம்ப்ளிமென்ட் பண்ணிடலாம் அப்படின்னு சொல்லிட்டு இங்கயுமே அதே மாதிரி ஒரு சின்பஷீராவை அந்த பில்டிங்கு நடுவுல வச்சிட்டாங்க. அதுவும் 375 மீட்டருக்கு.
அதுல என்ன பண்ணிட்டாங்கன்னா கீழ இருக்கக்கூடிய முதல் 125 mக்கு அந்த சின்பஷீரா நகரவே நகராது. நல்லா ஸ்ட்ராங்கா அந்த பில்டிங்கோடைய ஃபிக்ஸ் ஆயிடுச்சு. மிச்சம் இருக்கக்கூடிய அந்த 250 m இருக்கு இல்லையா அங்கதான் அது அந்த பக்கமா இந்த பக்கமா அசையும். இப்போ கீழ இருக்கக்கூடிய அந்த ஸ்ட்ரக்சர்லயுமே அவங்க அப்படியே கனெக்ட் பண்ணி விடாம அவங்க என்ன பண்றாங்கன்னா.! ஃப்ளூயிட் டேம்பர்ஸ் அப்படிங்கற விஷயங்கள அதுல இன்ஸ்டால் பண்றாங்க.
இந்த ஃப்ளூயிட் டேம்பர்ஸ் என்ன பண்ணும் அப்படின்னா அதுக்குள்ள ஃப்ளூயிட்லாம் இருக்கும். அப்போ ஒரு அதிர்வு ஏற்படும்போது அந்த ஃப்ளூயிட் அந்த பக்கமா இந்த பக்கமுமா அசைஞ்சு அந்த அதிர்வுகளை தனக்குள்ள வாங்கி வச்சுக்கிட்டு எப்படி நம்ம ஹோரியூஜுல சொன்னோம் இல்லையா அதே மாதிரி இங்க அந்த அதிர்வுகளை தனக்குள்ள வாங்கி வச்சுக்கிட்டு அது காப்பாத்திக்கும். இது போக மேல 250 மீட்டக்கு நம்ம எந்த கனெக்ஷனும் இல்லாம ஃப்ரீயாதான் விட்டுருக்கோம் அப்படிங்கறதுனால அங்கே அந்த சின்பஷீராவால நல்லா அந்த பக்கமா இந்த பக்கமா அசைஞ்சு கொடுக்க முடியும். அப்போ அவ்வளவு பெரிய கட்டடிடத்தை இந்த சின்பஷீராவால ஈஸியா காப்பாத்திட முடியும்.
இதுல இருந்து நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா.? ஜப்பான் என்னதான் நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி தொடர்ந்து அடாப்ட் ஆயிட்டே இருந்தாலுமே கூட அவங்களோட முன்னோர்கள் செஞ்சு வச்ச சில விஷயங்களை எடுத்துட்டு வந்து அதை அடாப்ட் பண்ணி அதுல நிறைய மாற்றங்கள் பண்ணிதான் அவங்களோட ஒட்டுமொத்த நாட்டையுமே அவங்க இப்ப வரைக்கும் உருவாக்கிட்டு இருக்காங்க. இங்க ஜப்பான் மாதிரியே டெக்னாலஜில அட்வான்ஸ்டா இருக்கக்கூடிய இன்னொரு முக்கியமான நாடுன்னா அது சைனா.

சைனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு விஷயம் பண்ணாங்க. அது என்னன்னா.? ஒரு டேம் கட்னாங்க. அதுவும் ஏதோ சின்ன டேம்லாம் கிடையாது. 2.3 km நீளத்துக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய டேம். இன்னைக்கு தேதியில உலகத்தோட மிகப்பெரிய டேமாவும் இதுதான் இருக்கு. அதே மாதிரி அந்த தண்ணில இருந்து கரண்ட் உற்பத்தி பண்ணுவாங்க இல்லையா.! ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர். அதுலயுமே இந்த டேம் தான் ரொம்ப அதிகமான மின்சாரத்தை உற்பத்தி பண்ணக்கூடிய பவரோட இருக்கு. சரி நல்ல விஷயம்தானே எப்ப வேணுமோ தண்ணிய மக்களுக்கு கொடுத்துக்கலாம். கரண்ட் நிறைய உற்பத்தி பண்ணிக்கலாம் அப்படின்னு நினைச்சோம்னா அதுல ஒரு முக்கியமான சிக்கல் ஏற்பட்டுச்சு.
அது என்னன்னா..? அந்த சிக்கல் அந்தந்த டேமை சுத்தி இருக்கக்கூடிய மக்களுக்கோ, இல்லன்னா அதுல இருக்கக்கூடிய சைனாவுக்கோ மட்டும் இல்லாம ஒட்டுமொத்த பூமிக்கே அந்த சிக்கல் உருவாச்சு. அது என்னன்னா, அந்த டேமை கட்டி அதுல தண்ணிய தேய்க்கி வச்சதுக்கு அப்புறமா, அது பூமியோட சுழற்ச்சி வேகத்தையே கம்மி பண்ணிருச்சு. அது எப்படி சாத்தியமாச்சுனு உங்களுக்கு சந்தேகம் வந்துருக்கும்.

அதுக்கான பதில் இதோ. அந்த டேம் என்னதான் பெருசாவே இருந்தாலும் பூமிங்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப பெருசு இல்லையா? அவ்வளவு பெரிய பூமியோட சுழற்சி வேகத்தை எப்படி ஒரு டேமால கம்மி பண்ணி இருக்க முடியும் அப்படின்னு கேட்டீங்கன்னா அது நிஜமாலே நடந்துருக்கு. அதுக்கு ஆதாரங்களும் இருக்கு. அது என்னென்ன அது உண்மையா அப்படிங்கறத பத்தி கூடிய விரைவுல ஒரு டீடைல் பதிவு ஒன்ன எழுதப் போகிறேன். அந்த பதிவு மிஸ் பண்ணாம படிக்க கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள telegram மற்றும் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம் நண்பர்களே..! அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝
அவ்ளோ நேரம் பொறுமையா இந்த பதிவை முழுமையாக படிச்சிருக்கீங்கனா, உங்களுக்கு பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தெரிஞ்ச்சுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே நண்பர்களே இந்த வலைதளத்தின் மூலம் நிறைய பல பயனுள்ள தகவல்களை தினந்தோறும் உங்களுக்காக நான் எழுதி வருகிறேன். இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள telegram மற்றும் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள் உடனடி அப்டேட்டுகளை உடனுக்குடன் பெறுகிறீர்கள். உங்கள் ஆதரவை வேண்டி காத்திருக்கும் நான் உங்கள் காவியா 📝.
நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
