இங்க நீங்க போன திரும்ப வீட்டுக்கு வர மாட்டீங்க

ஹாய் ரீடர்ஸ் ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி, இயற்கையா உருவான 12 அருவிகளையும், குளங்களையும் பத்தி தான், நம்ம இந்த பதிவுல பார்க்க போறோம். இந்த இடங்கள் எல்லாம் பாக்குறதுக்கு செம்ம அழகா இருக்கும். இந்த பதிவ புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, அப்படியே நம்ம டெலிகிராம் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க.

இந்த ஸ்விம்மிங் ஃபூல் நீங்க போன திரும்ப வீட்டுக்கு வர மாட்டீங்க

இந்த ஒரு கட்டுரையை உருவாக்குவதற்கு எனக்கு மொத்தம் 17 நாட்கள் எடுத்தது. இந்த கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள். ஒரு ஒரு பேரகிராபை படித்த பிறகு வீடியோ பாருங்கள் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்று நம்புகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு இந்த ஒரு பதிவை உருவாக்கி இருக்கிறேன் உங்களது ஆதரவை வேண்டி…🙏

ஹவாசூ பால்ஸ் (Havasu Falls)

நம்ம முதல்ல பாக்க போறது ஹவாசூ பால்ஸ் (Havasu Falls) இந்த ஹவாசூ பால்ஸ் அமெரிக்கால உள்ள (Grand Canyon, Arizona, United States.) கேனியான்ங்கிற இடத்துல இருக்குது. இந்த அழகான மலைகளுக்கு நடுவுல இயற்கையா உருவாகி இருக்கிற இந்த வாட்டர் ஃபால்ஸ் இந்த ஸ்விம்மிங்பூல் மாதிரி நிறைய குளங்களை உருவாக்குது.

இங்க உள்ள தண்ணீரும் செம்ம கிரிஸ்டல் கிளியரா இருக்கும். அதுமட்டுமின்றி ஸ்விம்மிங் பூல்ல குளிக்கிற மாதிரி இங்க எந்த இடத்துல வேணும்னாலும் குளிக்க முடியும். முக்கியமா இந்த அருவி கொட்டுற இடத்தை பார்க்க ரொம்பவே அழகா இருக்கும். இங்க உள்ள மலைகளும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இதனாலயே இந்த இடத்துக்கு ஏக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து அவங்களுக்கு புடிச்ச இடங்கள்ல குளிக்கிறாங்க.

ஜியோலா லகூன் (Giola lagoon)

அடுத்தது ஜியோலா லகூன் (Giola lagoon) கிரீஸ் நாட்டுலதான் இந்த அழகான பீச் இருக்குது. இந்த பீச்சை ஒட்டி இருக்கிற ஒரு பாறையில இயற்கையா ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி இருக்கிற ஒரு அமைப்பு உருவாகி இருக்கு. அலைகள் வேகமா அடிக்கும் போது இதுக்குள்ள தண்ணீர் ஃபில் ஆகுறதுனால எப்பவுமே இங்க உள்ள தண்ணீரும் கிளீனா இருக்கும். இதனால நிறைய சுற்றுலா பயணிகள் வந்து இந்த இடத்துல குளிக்கிறாங்க.

வீடியோ இணைப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த வீடியோக்கான எக்ஸ்பிளநேஷன் இதோ, ஒருவர் இதுக்குள்ள குதிக்கும் போது இங்க உள்ள தண்ணீர் எவ்வளவு கிளீனா இருக்குது பாருங்க. இதனாலதான் இங்க நிறைய சுற்றுலா பயணிகள் குளிக்கிறாங்க இதை லாங் ஷாட்ல பார்க்க சின்னதா தெரிஞ்சாலும் ஒரே நேரத்துல 50 பேர் கூட குளிக்கிற அளவுக்கு ஒரு பெரிய இடம்.

சிவா ஒயசிஸ் (Siwa Oasis)

அடுத்தது சிவா ஒயசிஸ் (Siwa Oasis) எகிப்துல உள்ள பாலைவனத்துக்கு நடுவுலதான் இந்த சிவா ஒயசிஸ் குளம் இருக்குது. இது ஒரு உப்பு தண்ணி குளோங்கிறதுனால இதுக்குள்ள குதிச்சா நம்ம மூழ்க கூட மாட்டோம். தண்ணிக்கு மேல மிதக்கத்தான் செய்வோம். இதுக்கு காரணம் இந்த தண்ணில அளவுக்கு அதிகமா உப்பு இருக்குறதுனாலதான் இதுல குளிக்கிறவங்க தண்ணிக்குள்ள மூழ்காம மிதக்குறாங்க.

See also  அமேசான் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்கள் பகுதி 2

இதனாலயே இங்க அதிக நேரம் குளிக்கவும் முடியாது. இந்த தண்ணில ஒரு அரை மணி நேரம் குளிச்சாலே உடம்பு முழுக்க உப்பு ஆயிடும். ஆனா இயற்கையே ஒரு ஸ்விம்மிங் ஃபூல் கட்டுன மாதிரி, இந்த இடத்தையும் இங்க உள்ள தண்ணீரையும் பார்க்க செம்ம அழகா இருக்கும்.

எல் கே கில் சினோட் (Ik Kil cenote)

அடுத்தது எல் கே கில் சினோட் (Ik Kil cenote) மெக்ஸிகோலதான் இயற்கையா உருவான இந்த அழகான நீரோடை இருக்குது. மனிதர்கள் பிளான் பண்ணி கட்டினா கூட மலை குகைகளுக்கு நடுவுல இப்படி ஒரு அழகான இடத்தை கட்ட முடியாது.

மாயன்கள் காலத்துல இருந்தே இந்த குகைக்குள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்காங்க. இங்க வர தண்ணீர்ல குளிச்சிருக்காங்க. இயற்கையா உருவான மலை குகைகளுக்கு நடுவுல 200 m அகலமுள்ள இந்த பள்ளத்தாக்கு உருவாகி இருக்கு.

இங்க உள்ள ஆறுகள்ல இருந்து வர தண்ணி இதுக்குள்ள கொட்டிக்கிட்டே இருக்கிறதுனால இங்க உள்ள தண்ணீர் எப்பவும் கிளீனாவே இருக்குது. இந்த இடத்தை பார்க்க கிணறு மாதிரி வட்டமா இருக்குறதுனால, எல்லா பக்கத்துல இருந்தும் இதுக்குள்ள குதிச்சு குளிக்க முடியும்.

இதனாலயே இங்க வர நிறைய சுற்றுலா பயணிகள் மேல இருந்து தண்ணிக்குள்ள குதிச்சு என்ஜாய் பண்றாங்க இந்த தண்ணீர்ல நிறைய மீன்களும் கூட இருக்குது. இதனால இங்க குளிக்க வர நிறைய பேர் இங்க உள்ள மீன்களையும் பிடிச்சு சாப்பிடுறாங்க.

ஹிட்டன் லேக் ஸ்விம்மிங் ஃபூல் (Hidden Oasis in a Remote Desert Canyon)

அடுத்தது ஹிட்டன் லேக் (Hidden Oasis in a Remote Desert Canyon) அமெரிக்கால உள்ள ஓஎஸ்சிஸ் பாலைவன பகுதிக்கு நடுவுலதான் இந்த அழகான லேக் இருக்குது. இந்த இடத்தை பார்க்க எவ்வளவு அழகா இருக்குதுனு வீடியோ இணைப்புல பார்ப்பீங்க. வீடியோவோட இணைப்பு இந்த பேரகிராபிக்கு கீழேயே இருக்கும் பாருங்க.

இயற்கையா உருவான இந்த இடத்தை வீடியோல பாக்குறதுக்கு, கிராபிக்ஸ்ல உருவாக்கின மாதிரி செம்ம அழகா இருக்கும். இந்த அழகான இந்த மலைகளுக்கு நடுவுல இயற்கையாவே ஒரு நீரூற்று உருவாகுது.

இந்த இடத்துக்குள்ள இருந்து எப்படி தண்ணி வந்துகிட்டே இருக்குது பாருங்க. இந்த தண்ணீர்தான் இப்படி மலைகளுக்கு நடுவுல ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி தேங்கி நிக்குது. ட்ரக்கிங் போய் என்ஜாய் பண்ணனும்னு நினைக்கிற நிறைய பேர் இந்த இடத்துக்கு வந்து அவங்களுக்கு புடிச்ச இடத்துல டென்ட்ட போட்டு தங்கி என்ஜாய் பண்றாங்க.

குவாங் பால்ஸ் ஸ்விம்மிங் ஃபூல் (Kuang Si Waterfall)

அடுத்தது குவாங் பால்ஸ் (Kuang Si Waterfall) லாவோஸ்ங்கிற ஒரு சின்ன நாட்டுலதான் இந்த அழகான பால்ஸ் இருக்குது. இந்த இடத்தை பார்க்கவே செயற்கையா உருவாக்கின இடம் மாதிரி செம்ம அழகா இருக்கும். ஆனா இது எல்லாமே இயற்கையா உருவான பாறைகள்.

பிளேன் பண்ணி கட்டினா கூட இந்த அளவுக்கு ஒரு அழகான இடத்தை கட்ட முடியாது. இந்த பால்ஸ்ல குளிக்கிறதுக்காகவே இந்த நாட்டுக்கு ஏகப்பட்ட சுற்றுலா பெண்கள் வராங்களாம்.

See also  எரிமலைக்குள் குப்பைகளை போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அந்த அளவுக்கு இந்த அருவியும் இந்த காட்டுப்பகுதியும் பாக்குறதுக்கு ரொம்பவே அழகா இருக்குது. நானும் கூடிய சீக்கிரத்துல போலாம்னு இருக்கேன் கனவுல தான் போக முடியும் நிஜத்தில் போக முடியாது. சரி அட்லீஸ்ட் கனவிலாவது போய் பார்ப்போம்.

லாகூல்ஸ் அமௌண்ட் டியூட்ஸ் (Lençóis Maranhenses National Park)

அடுத்தது லாகூல்ஸ் அமௌண்ட் டியூட்ஸ் (Lençóis Maranhenses National Park) பிரேசில்ல இருக்குற இயற்கை அதிசயம்தான் இந்த இடம். இந்த இடத்தை பார்க்கவே வித்தியாசமாவும், ரொம்பவும் அழகாவும் இருக்கும். மழைநீர்தான் இந்த மணல்களுக்கு நடுவுல இப்படி அழகா தேங்கி நிக்குது.

இந்த இடத்தை லாங் ஷாட்ல பார்த்தா ஏதோ வேற்று கிரகத்துக்கு வந்த மாதிரி ரொம்பவே அழகா இருக்கும். இங்க உள்ள தண்ணீரும் கண்ணாடி மாதிரி ரொம்பவும் கிளியரா இருக்கும். இதனாலயே இங்கேயும் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குளிக்கிறாங்க.

டெவில்ஸ் ஃபூல் (Devil’s pool zambia)

அடுத்தது டெவில்ஸ் ஃபூல் (Devil’s pool zambia) ஜாம்பியாவுலதான் இந்த அழகான ஆபத்தான டெவில்ஸ் ஃபூல் இருக்குது. வேகமா ஓடிட்டு இருக்குற இந்த நீர்வீழ்ச்சியோட கார்னர்லதான் இந்த டெவில்ஸ் ஃபூல் இயற்கையா உருவாகி இருக்கு.

1855-ல டேவிட் லிவிங்ஸ்டன் (Dr David Livingstone) இவருதான் இந்த இடத்தை முதல்ல கண்டுபிடிச்சாரு. அதாவது வேகமா போயிட்டு இருக்குற இந்த நீர்வீழ்ச்சியோட எட்ஜ்ல இயற்கையாவே ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி ஒரு அமைப்பு இருக்குது.

இதனால நிறைய பேர் இந்த கார்னர்ல குதிச்சு கூட விளையாடுறாங்க. ஏன்னா தண்ணீர் இழுத்துட்டு போனா கூட இதோட கார்னர்ல நம்ம நின்றுருவோம். இதனாலதான் நிறைய பேர் பயப்படாம இந்த நீர்வீழ்ச்சியோட எட்ஜ்ல வந்து குளிச்சிட்டு இருக்காங்க.

இங்க இருந்து கீழ விழுந்தா உயிர் பிழைக்கிறது ரொம்பவே கஷ்டம் ஆனா இங்க உள்ள பாறைகளே கரெக்டா ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி அமைஞ்சிருக்கிறதுனாலதான் எல்லாரும் இப்படி தைரியமா கார்னர்ல நின்று குளிச்சிட்டு இருக்காங்க.

ஒயாசிஸ் ரிவர் ஃபூல் (Saturnia’s Tranquil Oasis)

அடுத்தது ஒயாசிஸ் ரிவர் ஃபூல் (River oasis) இத்தாலில உள்ள அழகான காட்டுப்பகுதிக்கு நடுவுலதான் இந்த ரிவர் இருக்குது. இந்த நகரமே ரொம்பவும் பழமையான ஒரு நகரம். இப்ப வரைக்கும் கூட இங்க மாடர்ன் கட்டிடங்கள் எதுவுமே கிடையாது.

எல்லாமே பழங்கால கட்டிடங்கள் தான். இந்த கட்டிடங்களுக்கு நடுவுல இந்த ஆறு ஓடிக்கிட்டே இருக்கும். இங்க உள்ள காட்டுப்பகுதிக்குள்ள போனா பல அழகான மலைகளை பார்க்க முடியும்.

இந்த மலைகளுக்கு நடுவுல ஓடுற தண்ணீர் அங்கங்க ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி நிக்குது. இயற்கையா உருவான இந்த மலைகளுக்கு நடுவுல இந்த தண்ணீரை பார்க்கவே செம்ம அழகா இருக்கும். இதனாலயே இத்தாலிக்கு வர நிறைய சுற்றுலா பயணிகள் இங்க வந்து குளிச்சு என்ஜாய் பண்றாங்க.

செபிகோ ஒயாசிஸ் (Chebika Oasis)

அடுத்தது செபிகோ வயாசிஸ் (Chebika Oasis) நார்த் ஆப்பிரிக்கால உள்ள (Chebika, Tozeur) டுசியூர்லதான் இந்த அழகான சின்ன நீரோடை இருக்குது. இந்த இடமே ஒரு இயற்கை அழகுதான். மிகப்பெரிய பாலைவன பகுதிக்கு நடுவுல இந்த ஊர் உருவாகி இருக்கு.

ஆரம்ப காலத்துல இங்க நிறைய மக்கள் வாழ்ந்திருக்காங்க. ஆனா காலநிலை மாற்றங்களால இங்க வாழ்ந்த மக்கள் இந்த இடத்தை அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க. இந்த பாலைவன பகுதியில வர ஒரே நீர் வீழ்ச்சி இதுதான். இங்க வர தண்ணி ஸ்விம்மிங் ஃபூல் மாதிரி அங்கங்க தேங்கி நிக்குது.

See also  இந்த ராட்சசர்கள் உயிரோடு இருந்தால் உலகத்தின் கதி?

எவ்வளவு வெயில் அடிச்சாலும் இங்க மட்டும் தொடர்ந்து தண்ணி வந்துகிட்டே இருக்குமாம். இயற்கையா வர இந்த தண்ணில வெளிநாட்டுல இருந்து வர சுற்றுலா பயணிகள் குளிச்சு என்ஜாய் பண்றாங்க.

இந்த ஸ்விம்மிங் பூல்ல இருக்குற தண்ணி கூட இயற்கையா வர தண்ணீர்தான் இயற்கையா உருவாகி ஓடுற நீர் பாதையிலேயே இந்த ஸ்விம்மிங் பூல்லை கட்டி வச்சிருக்காங்க.

ஹாச்சாச்சினா ஒயாசிஸ் (Huacachina oasis Village in Peru)

அடுத்தது ஹாச்சாச்சினா ஒயாசிஸ் (Huacachina oasis Village in Peru) பெருநாட்டுல உள்ள பாலைவன பகுதிக்கு நடுவுலதான் ஹாச்சாச்சினாங்கிற இந்த அழகான ஊர் இருக்குது. இந்த ஊர்ல மொத்தமாவே 100 குடும்பங்கள் தான் வாழ்றாங்க. இந்த குடும்பத்தை தவிர மத்த எல்லாருமே டூரிஸ்டா மட்டும்தான் வந்து போக முடியும்.

இந்த மாதிரி ஒரு மிகப்பெரிய பாலைவன பகுதிக்கு நடுவுல ஒரு பெரிய ஸ்விம்மிங் பூல்லை கட்டி வச்ச மாதிரி இந்த குளம் இருக்கும். பாலைவன பகுதிக்கு நடுவுல இந்த ஊரை பார்க்கவே செம்ம அழகா இருக்கும். இந்த மிகப்பெரிய பாலைவனமும் பாக்குறதுக்கு ரொம்பவுமே அழகா இருக்கும்.

பெரு நாட்டிலேயே இங்கதான் அதிகமான சுற்றுலா பயணிகள் வராங்கலாம். ஆரம்பத்துல இங்க உள்ள தண்ணி ரொம்பவே சுத்தமா இருந்திருக்கு. ஆனா அதிகமா சுற்றுலா பயணிகள் வர ஆரம்பிச்சதுனாலயே அவங்க போட்ட குப்பைகளால, இங்க உள்ள தண்ணீரும் கெட்டு போயிடுச்சாம்.

வாடி பானி காலிக் (Wadi Bani Khalid)

நம்ம லிஸ்டுல கடைசியா பார்க்க போறது வாடி பானி காலிக் (Wadi Bani Khalid) ஓமன் நாட்டுல உள்ள பாலைவன பகுதிக்கு நடுவுலதான் இயற்கையா உருவான இந்த நீர்வீழ்ச்சி இருக்குது.

இங்க உள்ள பாறைகள் எல்லாம் பார்க்க செயற்கையா உருவான பாறைகள் மாதிரி ரொம்பவே அழகா இருக்கும். ஆனா இது எல்லாமே இயற்கையா உருவானது. இங்க உள்ள தண்ணீரும் ரொம்பவே கிரிஸ்டல் கிளியரா இருக்கும்.

இதனாலயே இங்க வர சுற்றுலா பயணிகளும் இந்த தண்ணில குளிச்சு என்ஜாய் பண்றாங்க. இந்த தண்ணீர் அங்கங்க பெரிய பெரிய நீச்சல் குளம் மாதிரி தேங்கி நிக்குது. இங்கேயும் எவ்வளவு வெயில் அடிச்சாலும் 365 நாளும் தண்ணி வந்துகிட்டே இருக்குமாம்.

இப்ப சொல்லுங்க நண்பர்களே, ஏன் நீங்கள் வீடு திரும்ப மாட்டீர்கள்னு சொன்னேனு புரிகிறதா..! இவ்வளவு அழகான இடங்களுக்கு சென்றாள் எப்படி தான் வீட்டுக்கு வர தோணும் அங்கேயே டென்ட் போட்டு தங்கிவிடலாம் என்று தான் இருக்கும். இப்ப நீங்க சொல்லுங்க, நம்ம லிஸ்ட்ல மொத்தம் பார்த்த 12 இடத்துல உங்களுக்கு ரொம்ப புடிச்சி இருந்த இடம்னா எத சொல்லுவீங்க. அந்த இடத்துக்கு நிஜமா நான் போயே தீரனும்னு ஒரு ஆசை மனசுல இருக்கும்ல, அப்படிப்பட்ட இடம் எது என்பதை மறக்காமல் கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

நம்மளோட இந்த பதிவை ஏதாவது ட்ராவலர் படிச்சிட்டு இருந்தா இந்த பனிரென்டு பிளேஸ்ல நீங்க எந்த இடத்துக்கு போய் இருக்கீங்கன்றத மென்ஷன் பண்ணுங்க. அடுத்ததா எங்க போலாம்னு இருக்கீங்க என்பதையும் மென்ஷன் பண்ணுங்க.

மறக்காம உங்க பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு இந்த பதிவை ஷேர் பண்ணி இதுல எந்த இடம் உனக்கு புடிச்சிருக்கு.? எங்க நம்ம போலாம்..? அப்படின்னு டிஸ்கஸ் பண்ணி ஜாலியா ஃபன் பண்ணுங்க.

இங்க நீங்க போன திரும்ப வீட்டுக்கு வர மாட்டீங்க

ஓகே நண்பர்களே இதுவரைக்கும் நீக்க இந்த பதிவ படிச்சிருக்கீங்கனா நிச்சயமா உங்களுக்கு பல தகவல தெரிஞ்சுக்கணுங்கற ஆர்வம் அதிகமா இருக்கும்னு நம்புறேன். இதுபோல பல சுவாரசியமான தகவலை தெரிந்து கொள்வதற்கு நம்ம டெலிகிராம் சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க…🙏

நமது டெலிகிராம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ள விரும்பினால் கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து அதில் இருக்கும் டெலிகிராமில் இணைந்து ஆதரவை கொடுக்கவும்…🙏 உங்கள் ஆதரவை வேண்டி…🙏

நாளைக்கு மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது, நான் உங்கள் நான் உங்கள் காவியா…📝

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏