இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பெண்களுக்கு பாதுகாப்பே இந்தியாவில் கிடையாது, ரொம்பவும் மோசமா இருக்கு. வெளியே போனாலே பயமா இருக்கு. அப்படி இப்படின்னு சொல்லி ஒரு பதிவு ஒன்று போட்டு இருந்தோம். அதாவது அண்ணா யுனிவர்சிட்டில நடந்த சம்பவத்தை பத்தி கொஞ்சம் டீடைல் எக்ஸ்ப்ளைன் பண்ணி பேசியிருந்தோம். ஆனா இப்போ இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்-னு ஆண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பதிவை போட வச்சிட்டாங்க..!

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
காமக் கொடூரனின் மோசமான செயல்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள்

அந்த பதிவை படிக்கிறதுக்காக கடைசியா நான் லிங்க் கொடுக்கிறேன். கிளிக் பண்ணி செக் பண்ணி பாருங்க. பெண்களுக்கு ஆதரவா சப்போர்ட் பண்ணி ஒரு பதிவை போட்ட நேரமோ, என்னமோ தெரியல..! இப்போ ஒரு சம்பவம் தடாலடியா வெடிச்சிருக்கு. அட ஆமாங்க உங்க எல்லாத்துக்குமே தெரிஞ்ச சம்பவம் தான் யாருன்னு கேக்குறீங்களா..? வாங்கணுமா பதிவுகளை போய் பார்ப்போம்…

தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவன் தலையில் தடாரென்று அம்மி கல்லை போட்ட பொம்மியாண்டி. திடீரென தப்பித்து ஓடும்போது ஊர்காரர்கள் கையில் பிடிபட்டார். பிறகு ஊர்காரர்கள் அனைவரும் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். என்னடா சம்பந்தமே இல்லாம ஏதோ உளறிகிட்டு இருக்கு அப்படின்னு பார்க்கிறீர்களா..? உளறலாம் இல்லைங்க..! ஒரு காலத்துல இது மாதிரி நியூஸ் எல்லாம் பாத்துட்டு இருந்தோம்.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

ஆனா இப்ப என்னடானா டிசைன் டிசைனா நியூஸ் வருது. அதாவது எப்படி ஆச்சும் அவன கொன்னே ஆகணும்டா..! அதுக்கு என்ன வேணாலும் பண்ணலான்டா..! அப்படிங்கற மாதிரி 10 ல இருந்து 15 முறை டிசைன் டிசைனா கொலை பண்ணலாம்னு ஐடியா போட்டு கடைசியா அதுல சாதிச்சும் காட்டி இருக்காங்க பாரு எம்மாடியோ..! அந்தப் பொண்ணு சாதாரண பொண்ணே கிடையாதுப்பா..!

அந்த பொண்ணு வந்து ஒரு மோசமான குடிய கெடுக்கக்கூடிய ஒரு சாத்தான்..! அதனால இந்த பொண்ணுக்கு நாங்க கேப்பிடல் பனிஷ்மெண்டான மரண தண்டனை விதிக்கிறோம்ன்னு சொல்லிட்டு கேரளாவோட யங்கஸ்ட் பெண் டு கெட் (Youngest women to get capital punishment) மரண தண்டனை. அதாவது தூக்குல போடக்கூடிய ஒரு தண்டனை இப்போ கிரீஷ்மா அப்படிங்கிற ஒரு பொண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்குது. இந்த பொண்ணு வந்து ரொம்ப சின்ன பொண்ணு. இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கரெக்டா..? பாவமன்னிப்பு கொடுத்து இருக்கலாமா..? அதப் பத்தின டீடைலான விளக்கத்தை இந்த பதிவுல பார்க்கலாம்.

காதலியே காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில மாணவி கிரீஷ்மா குற்றவாளி அப்படின்னு தீர்ப்பு கொடுக்கப்பட்டது. கிரீஷ்மா தனக்கு வெறும் 24 வயதுதான் ஆகிறது அப்படின்னும், கிரிமினல் பின்னணி இல்லாததால தன்னுடைய கல்வியை தொடர விரும்புவதாகவும் கூறி அதிகபட்ச மன்னிப்புக்காக முறையிட்டார். கிரீஷ்மா ஒரு இளைஞனை கொலை செய்தது சாதாரண வழக்கல்ல ஒருவருடைய நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து அவரைக் கொன்றது கொடூரமானது. அதனால மரண தண்டனை விதிக்கணும்ன்னு அரசு தரப்புல வாதிடப்பட்டது.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அதற்கு கிரீஷ்மா தரப்புல என்ன சொல்லப்பட்டுச்சுன்னா..? கிரீஷ்மா மன உளைச்சலை எதிர்கொண்டு ஷரோனுடனான தன்னுடைய உறவை முறித்துக் கொள்ள பலமுறை முயன்றதாவும், ஆனா அவர் அதற்கு மறுத்து மிரட்டல் விடுத்ததாகவும் வாதம் வச்சிருக்காங்க. ஷரோன் தன்னை மிரட்டுவதற்காக தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியதாகவும், நெருக்கமான காட்சிகளை பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில திங்கட்கிழமை அதாவது ஜனவரி 20 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிச்சாங்க. என்ன சம்பவம் என்ன பிரச்சனை அப்படிங்கறத விரிவா பார்க்கலாம்.

ஷாரோன் கொலை வழக்குல காதலி கிரிஷ்மா மற்றும் விஷம் வாங்கிக் கொடுத்த அவருடைய தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்ன்னு நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கு. இரண்டாம் குற்றவாளியா சேர்க்கப்பட்டிருந்த கிருஷ்மாவுடைய தாய் சிந்து விடுவிக்கப்பட்ட நிலையில குற்றவாளிகளுக்கான தீர்ப்பு கேரள அரசு அறிவிச்சிருக்காங்க. கேரள எல்லைப் பகுதியான பாரசால (Parassala) மூரியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் 23 வயதான ஷாரோண் ராஜ் பிஎஸ்சி ரேடியாலஜி (Bsc radiology) படிச்சு வந்தாரு.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

இவர் களியக்காவிலை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா அப்படிங்கிற 22 வயது பெண்ணை காதலிச்சு வந்தாரு. கிரீஷ்மா கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய கல்லூரியில எம்ஏ (MA) இரண்டாம் ஆண்டு படிச்சு வந்தார். இந்த நிலையில ஷாரோன் ராஜ் தன்னுடைய நண்பர் ஒருவரோட காதலியோட வீட்டுக்கு போயிருக்காரு. அப்போ ஷாரோன் நண்பர் வாசல்ல காத்திருக்க ஷாரோன் மட்டும் கிரீஷ்மா வீட்டுக்குள்ள சென்றுவிட்டு சிறிது நேரத்திலேயே வெளிய வந்துட்டாரு. ஆனா அடுத்த சில நிமிஷத்திலேயே ஷாரோன் ராஜுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு.

காதலி தனக்கு கசாயமும், ஜூஸும் தந்ததா நண்பர்கிட்ட சொல்லவும் உடனடியா பாரசால அரசு மருத்துவமனையில ஷாரோனை சிகிச்சைக்காக அனுமதிச்சிருக்காரு அவருடைய நண்பர். ஆனால் ஷாரோனுடைய நிலைமை படு மோசமானது. இதனால திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஷாரோன் பரிதாபமா உயிரிழந்தார். இதையடுத்து ஷாரோனின் அப்பா ஜெயராஜன்., தன் மகனுடைய காதலியும், அவருடைய பெற்றோரும் சேர்ந்து ஜூஸ்ல விஷம் கலந்து கொடுத்து கொலை செஞ்சிருக்கலாம்ன்னு பாரசால போலீஸ்ல புகார் கொடுத்தாரு. இந்த புகாரின் பெயரில இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு தனிப்படையும் வைத்து விசாரணையும் ஆரம்பமாச்சு.

See also  விண்வெளியில் சிக்கித் தவித்த இருவரும் பூமிக்கு பயணம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அப்போ கிரீஷ்மா அவருடைய பெற்றோர் உட்பட நான்கு பேர் திருவனந்தபுரம் எஸ்பி ஆபீஸ்ல (Sp office) விசாரணைக்காக ஆஜரானாங்க. இது தொடர்பான விசாரணையில கிரீஷ்மா பல்வேறு தகவல்களை கூறி போலீசாரை அதிர்ச்சி அடைய வச்சாரு. அதாவது ஷாரோனை கிரீஷ்மா காதலிச்சு வந்தபோது ராணுவ வீரர் ஒருவரை தங்களுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செஞ்சிருக்காங்க. அதோட கிரீஷ்மாவுக்கு அந்த ராணுவ வீரர் கூட நிச்சயதார்த்தமும் நடத்தி இருக்காங்க. இதை கேள்விப்பட்ட ஷாருண் கிரிஷ்மா கிட்ட வந்து தன்னை ஏமாற்றிட்ட அப்படின்னு சொல்லி கதறி அழுது இருக்காரு.

அப்படி அழுது கொண்டிருக்கும் போது, குடும்ப சூழ்நிலையால விருப்பமில்லாம இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதா கிரீஷ்மா சொல்லி இருக்காரு. இருந்தாலும் கிரீஷ்மா தன்னை விட்டு பிரிஞ்சிருவாளோ அப்படின்னு நினைச்ச ஷாரோன், அழுத்தபடியே இருந்திருக்காரு. இதுக்கு நடுவுல தன்னுடைய திருமணத்திற்கு ஷாரோன் இடைஞ்சலா இருக்கலாம்ன்னு நினைச்ச கிரீஷ்மா., அவரை கொலை செய்ய முடிவெடுத்திருக்காங்க. அதுபடி சம்பவத்தன்று தன்னுடைய வீட்டுக்கு ஷாரோனை வரவழைச்சு ஜூஸ்ல விஷம் கலந்து கொடுத்திருக்காங்க.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அதாவது ரப்பர் மரத்துக்கு அடிக்கக்கூடிய விஷத்தை ஜூஸ்ல கலந்து ஷாரோனுக்கு கொடுத்திருக்காங்க. இது அத்தனையும் விசாரணையில அம்பலமானதையடுத்து, கிரீஷ்மாவும் அவருக்கு உடந்தையாய் இருந்த அவருடைய தாய்மாமன் உள்ளிட்டோரும் கைதாகினாங்க. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையிலதான் கிரீஷ்மா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளின்னு அறிவிச்சி நெய்யாற்றின்கரை கூடுதல் செக்சன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கு. இந்த தீர்ப்பானது பலருடைய கவனத்தையும் பெற்று வருது. காரணம்…

ஷாரோன் கொலை சம்பவமானது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்துச்சு. இது தொடர்பான விசாரணைகளும், கிரீஷ்மாவின் வாக்குமூலங்களும், வழக்கு தொடர்பான தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கை விவரங்களும் தமிழகம் மற்றும் கேரள மக்களை நிலை குலைய வச்சிருக்கு. ஒன்றுக்கு 10 முறை ஷாரோனை கொல்ல முயன்று கடைசியாதான் அதுல வெற்றி பெற்றிருக்காரு கிரீஷ்மா. மிக மிகத் தெளிவா ஸ்கெட்ச் போட்டு அந்த அப்பாவியை கொலை செஞ்சிருக்காங்க.

கடைசியா கசாயம் அப்படிங்கிற பெயர்ல அவர் கொடுத்த விஷத்தை சாப்பிட்ட ஷாருனுக்கு வாந்தி வந்திருக்கு. பிறகு வழக்கம் போல இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது whatsappல கிரீஷ்மா கிட்ட வாந்தியா வருது அப்படின்னு சொல்லி இருக்காரு ஷாரோன். அதுக்கு கிரீஷ்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல பேசாம தூங்கு சரியாயிடும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இதுக்கு முன்னாடி ஜூஸ் சேலஞ்ச் நடத்தி அதுல டோலா மாத்திரைகள் கலந்து தந்து ஏற்கனவே ஷாரோனை கொலை செய்ய முயன்றவர்தான் இந்த இளம்பெண் கிரீஷ்மா.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

ஷாரோனை கொலை செய்வது அவருடைய அம்மா சிந்துவுக்கும் தெரியுமாம். அதுமட்டுமல்ல கிரீஷ்மாவுக்கு பூச்சி மருந்து வாங்கிக் கொடுத்ததே அவருடைய தாய்மாமன் நிர்மல்குமார் அப்படிங்கறதும் விசாரணையின் முடிவுல தெரிய வந்திருக்கு. கொலை செய்வதற்கு முதல் நாள் உடலுறவுக்கு அழைக்க ஷாரோனை பலமுறை தொடர்பு கொண்டாராம் கிரிஷ்மா. இதுவும் குற்றப்பத்திரிக்கையில பதிவாகி இருந்தது. ஷாரோன் மருத்துவமனையில படும் அவதியை பார்த்த உறவினர்கள் கிரீஷ்மா விஷம் வச்சிருக்கலாம்ன்னு சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்காங்க.

அப்ப கூட தன்னுடைய உயிர் போகும் தருவாயிலும் காதலியை காட்டிக் கொடுக்க மறுத்த ஷாரோனுடைய காதல் பலருடைய மனசையும் நெகிழ செஞ்சிருக்கு. உயிருக்கு உயிரா நேசிச்சவனை துடிக்க துடிக்க கொலை செய்த இந்த 22 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்திருக்கு. அதாவது நாட்டையே உலுக்கிய ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் காதலி கிரீஷ்மா அவருக்கும், அவரது தாய்மா நிர்மல்குமார் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

காதலி கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை வழங்கியும், நிர்மல்குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் கிரீஷ்மாவிற்கு வழங்கப்பட்ட மொத்த தண்டனை என்னென்ன..? அவர் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கக்கூடும்..? எந்த காலகட்டத்தில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடும்..? அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை விவரங்கள் முழுமையாக என்னென்ன..? என்பதை இப்போது பார்க்கலாம். ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் மூன்று நபர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

See also  காமக் கொடூரனின் மோசமான செயல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அதாவது அக்யூஸ்ட் நம்பர் ஒன்னாக கிரீஷ்மாவும், அக்யூஸ்ட் நம்பர் இரண்டாக கிரீஷ்மாவின் தாய் சிந்துவும், அக்யூஸ்ட் நம்பர் மூன்றாக கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இதில் சிந்துவின் தாயார் அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதற்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அக்யூஸ்ட் நம்பர் ஒன்னு கிரீஷ்மாவிற்கு நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையின் படி., குற்றம் சாட்டப்பட்ட கிரீஷ்மாவிற்கு ஐபிசி பிரிவு 364-ன் படி கொலை செய்வதற்காக ஒருவரை கடத்துவது அல்லது கடத்தல் செய்து கொலை செய்வதற்கான ஆபத்தில் வைப்பது ஆகிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அபராதம் விதிக்க தவறும் பட்சத்தில் அவர் மீண்டும் ஒரு வருடம் அதற்காக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோல ஐபிசி பிரிவு 328-ன் படி ஷாரோன் ராஜை கொலை செய்யும் நோக்கத்துடன் விஷம் வைத்து தீங்கு விளைவித்ததற்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ₹50000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் அவர் ஆறு மாதங்கள் மீண்டும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதேபோல இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன் படி கொலை செய்ததற்காக அவருக்கு மரண தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றவாளி இறக்கும் வரை கழுத்தில் தூக்கு கயிறோடு தொங்கவிடப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை அபராதம் கட்ட தவறினால் சட்டத்தின்படி அபராதம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஐபிசி பிரிவு 303-ன் படி செய்த குற்றம் தொடர்பான தகவல்களை வழங்காமல் தவறான தகவல்களை வழங்கியதற்காக அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

இந்த குற்றத்திற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. அக்யூஸ்ட் நம்பர் மூன்று கிரீஷ்மாவின் மாமாவிற்கு ஐபிஎஸ்சி பிரிவு 201-ன் படி குற்றத்திற்கான ஆதாரங்களை மறைப்பது அல்லது குற்றவாளியை திரையிடுவதற்காக அதாவது தான் செய்த தவறை மறைப்பதற்காக தவறு செய்யாத ஒருவரை குற்றவாளியாக சித்தரித்ததற்கும், மேலும் தவறான தகவல்களை வழங்குவது ஆகிய குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையும், 50000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் மீண்டும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதேபோல குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதாவது கிரீஷ்மாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கேரள உயர்நீதிமன்றத்தின் உறுதிப்பாட்டிற்கு உட்பட்டது எனவும்., 30 நாட்களுக்குள் தீர்ப்பு மற்றும் தண்டனை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கிரீஷ்மாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை உயர் அதிகாரிகளால் குறைக்கப்பட்டால் அவர் அனுபவித்த தடுப்புக்காவல் காலத்திலிருந்து விளக்கு பெற அவருக்கு உரிமை உண்டு எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பின்படி கிரீஷ்மா மொத்தமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோல கிரீஷ்மாவின் மாமா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மொத்தமாக இருவரும் 4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதத்தொகை அனைத்தும் குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அவ்வளவுதான் இங்க காச வாங்கி அந்த பக்கம் கொடுத்தாலும் சரி அந்த பக்கத்தில் இருந்து காச வாங்கி இந்த பக்கம் கொடுத்தாலும் சரி., போன உயிரானது திரும்ப வரப் போறது கிடையாது. இவளை காதலித்த பாவத்திற்காக இறுதியில் சாரோன் ராஜ் தனது உயிரை இழந்துதுதான் மிச்சம். இதனால் அந்த குடும்பத்தின் நிலை என்னவாகும் என்று யோசிக்காத பெண்..! இப்படி கொலை செய்வதற்கு ஏன் காதலிக்க வேண்டும்…? இனி ஒரு பெண்ணையோ அல்லது பையனையோ காதலிக்க சற்று கடுமையான முடிவெடுத்த அப்பரம்தான் லவ் பண்ணனும் போல..!

காலேஜ் படிக்கும் இந்த நான்கு வருடத்திற்கு தனக்கு ஒரு டைம் பாஸாகவும், செலவு செய்வதற்காகவும் மேலும் பல அரிப்புகளுக்காகவும் காதல் செய்து யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம். இதில் ஆண், பெண் என இருவரும் அடங்குவீர்கள். உண்மையாக திருமணம் முடிக்கும் ஆசை இருந்தால் மட்டும் லவ் பண்ணுங்க..! இல்லாட்டி அதையும் பண்ணாதீங்க..! வீட்டுலயே நல்ல பொண்ணையோ, பையனையோ பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க கட்டிக்கோங்க. அதுக்கப்புறம் நல்லா லவ் பண்ணுங்க யாரு வேனானு சொன்னா..? இப்ப பாரு ஒரு உசுரு அனாமத்தா போச்சுல…! நீ கொலை பண்ணுனவ. அதனால தண்டனைய அனுபவிக்குற., அந்த பையன் என்ன பண்ணான்..! பாவம் அந்த பையனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கோங்க…

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

என்னவோ கடைசியில் இப்படி ஆகிப்போச்சு சம்பவம்..! எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிஞ்சுச்ச கதையா மோசமான சம்பவமா இருக்குப்பா… ஜெயில்ல இருக்கக்கூடிய அந்த பத்து வருஷத்துலயாவது உன் மனசுமாறி சாகும்போதாசசும் குற்ற உணர்வு இல்லாம நல்லபடியா போயிட்டு வாங்க. மறக்காம ஆவிகள் உலகத்துல அந்த பயன மீட் பண்ணா எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு தெரியல..? பண்ணுன தப்புக்கு எப்படி சாரி கேப்பீங்களோ, என்ன பண்ணுவீங்களோ அது உங்க பாடு… ஆனா ஒன்னு துடிக்க துடிக்க சாக கிடக்கும் போதுகூட உன்ன காட்டி கொடுக்காமல் செத்திருக்கான் பாத்தியா அந்த பையன்..! அங்க உங்கள காண வருகைக்காக எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருப்பாப்ல சேம் அதே காதலோட…!

See also  காமக் கொடூரனின் மோசமான செயல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

கேரளா அரசு இதுபோல இந்த பெண்ணுக்கு கொடுத்த தண்டனையானது முறையானதா..? இல்லை தவறானதா..? உங்களது கருத்து என்ன என்பதை மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டு போங்க. மேலும் உங்கள் மனதில் ஏதேனும் இப்போதைய ஜெனரேஷனுக்கு அதாவது இந்த காலத்து பிள்ளைகளுக்கு (இருபாலரும்) ஏதேனும் அறிவுரைகளை சொல்ல விரும்பினால் கமெண்டில் சொல்லிட்டு போங்க அதையாவது பார்த்து அவர்களது புத்தியானது வளரட்டும். மேலும் காதலால் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கட்டும். உங்க பிரண்ட்ஸ் யாராவது இந்த கேஸ அதிகமா ஃபாலோ பண்ணிட்டு இருந்தாங்கன்னா அவங்களுக்கு இந்த பதிவ ஷேர் பண்ணுங்க. நெக்ஸ்ட் டைம் ஜூஸ் குடிக்கிறதுக்கு முன்னாடி பார்த்து குடிங்க யார் கொடுத்தாலும் சரி..! 

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

இவன் உஷார் ஆயிட்டான். இவனுக்கு ஒரு பாயாசத்தை போட்ற வேண்டியது தான்னு சொல்லி யாராவது பாயாசத்தை போட்டாலும் போடுறதுககு வாய்ப்பு இருக்கு..! மத்தவங்க நமக்கு பாயாசம் போடுற மாதிரி நம்ம ஏன் நடந்துக்கணும்..! கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துகிட்டா நமக்கு பாயாசம் கிடையாது அமிர்தம் தான் கிடைக்கும். பாயாசமா..? அமிர்தமா..? எது வேணும்னு நீங்க தான் முடிவு பண்ணனும். யாரு சொன்னாலும் எதையும் கேட்க மாட்டாங்க லைக் என்னை உட்பட அப்படித்தான்.. திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு ஒரு பழைய பாடலொன்று இப்போது எனக்கு ஞாபகம் வந்தது… அது ஏன்…?

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

இது போல துயர சம்பவங்களில் உங்களை சந்திப்பதில் மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் இது நாட்டையே உலுக்கிய சம்பவம் மேலும் நிறைய நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் இதைப்பற்றி என்னால் முடிந்தவரை அலசி ஆராய்ந்து இந்த பதிவை கொண்டு வந்திருக்கிறேன். நான் ஏதேனும் இந்த பதிவில் தவறாக குறிப்பிட்டு இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் யாருக்கும் சாதகமாக பேசவில்லை. என் மனதில் என்ன இருக்கிறதோ அதாவது என் மன ஓட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இதைப் பற்றி அருகாமையில் இருக்கும் ஒரு பாட்டியிடம் விசயத்தை சொல்லும் போது., அவர்களின் மன ஓட்டங்கள் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்..! அப்போது அவர்கள் கூறிய சில பல விஷயங்களை இந்த பதிவில் இணைந்து இருப்பேன். இனியாவது அனைவரும் திருந்துங்கள்… யாரையும் காதல் பண்ண வேண்டாம்னு சொல்லல, பண்ணுவதும் பண்ணாததும் அவர் அவர்களின் தனிப்பட்ட விருப்பமே.

இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்
இப்படியும் ஒரு பெண்ணா, பிஞ்சிலேயே பழுத்த பழம்

அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்பது ஊடகத்தினுள் வராமல் இருக்கும் வரை மட்டுமே..! ஊடக உலகத்தினுள் வந்தால் அனைவரும் பேசத்தான் செய்வார்கள். உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை போல. மீண்டும் பல சுவாரசியமான பதிவில் நாளை வந்து உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝 

அச்சச்சோ மறந்திருப்பேங்க..! நல்ல வேலை ஞாபகம் வந்துச்சு அதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி பெண்களுக்கான ஒரு பதிவை வெளியிட்டேன் என்று முதல் பேரகிராபிலேயே சொன்னேன் அல்லவா..! அதற்கான லிங்க் இதோ கீழே இருக்கிறது. கிளிக் செய்து படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். மறக்காமல் இந்த பதிவிற்கான கருத்துக்களையும் பதிவிடுங்கள். நீதிபதி கொடுத்த நீதி சரியானதா..? இல்லை தவறானதா.? நீங்கள் நீதிபதியாக இருந்தால் உங்களது நீதி என்னவாக இருக்கும்..?

காமக் கொடூரனின் மோசமான செயல்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள்

இது மட்டுமல்லாது பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் நமது வலைதளத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து முதல் முறையாக நமது வலைதளத்துக்கு நீங்கள் வந்திருந்தால் தயவு செய்து கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள telegram இல் இணைந்து கொள்ளுங்கள். telegram இல்லாத நண்பர்கள் whatsapp சேனலிலும் இணைந்து கொள்ளலாம். நமது வலைதளத்தில் அப்டேட் ஆகக்கூடிய புதிய புதிய தகவல்களின் நோட்டிபிகேஷன் களை உடனடியாக பெறுவதற்கும் உங்களோடு எப்போதும் இணைப்பில் இருப்பதற்கும் இம்முறையானது உதவியாக இருக்கும். உங்கள் ஆதரவை வேண்டி 🙏

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏