இவர்கள் எல்லோரும் மீன் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. என்ன நண்பர்களே தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்கும் சற்று நேரத்தில் பயம் வந்திருக்கும் அல்லவா. ஆம்.! அப்படி பயம் வந்திருந்தால் நீங்கள் மீன் விரும்பி என்பதில் சந்தேகமே கிடையாது. ஒரு சிலர் மட்டும் மீன் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் சொல்லி இருப்பேன். அதுவும் ஓரிடத்தில் மட்டுமே. ஆனால் மற்றபடி மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும். எந்த மீன் சாப்பிடுவது.? ஆற்று மீனா இல்லை கடல் மீனா என்பதைப் பற்றி இந்த பதிவு சற்று விளக்கமாக கூறும். பொறுமையாக படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பல சுவாரஸ்யம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்ள உதவும்.

கடல் நீர்ல வாழ்ற மீன்கள் மற்றும் நன்னீர்ல வாழ்ற மீன்கள் இது ரெண்டுத்துல எதை சாப்பிடுறது நமக்கு நல்லது. இந்த கேள்வியை நிறைய பேர் கமெண்ட்ல கேட்டுட்டு இருந்தாங்க. நிறைய வீடியோஸ் கமெண்ட்ல நான் பார்த்தேன். ஏன் இந்த கேள்வி வருதுன்னா, பொதுவாவே கடல்ல உள்ள மீன்கள் தான் சுவை அதிகமா இருக்கும். அதுல தான் சத்துக்களும் ரொம்ப அதிகமா இருக்கும்னும், நன்னீர்ல வாழ்ற நாட்டு மீனு சொல்லுவோம்ல அதை சாப்பிடுறதே வேஸ்ட் அதுல எந்த சத்துமே கிடையாது அப்படின்னு சொல்லுவாங்க. நிறைய பேர் சொல்லியும் கேள்வி பட்ருக்கேன்.
ஆனா தமிழ்நாட்டோட கடற்கரை பகுதியில வாழக்கூடிய மக்களுக்கும் சரி அல்லது கடற்கரையை ஒட்டி வாழக்கூடிய மற்ற மக்களுக்கு எல்லாத்துக்குமே சரி, அந்த கடல் மீன்கள் கிடைக்கிறது ரொம்ப சுலபம். ஆனா தமிழ்நாட்டோட மையப்பகுதியிலயும் சரி மேற்கு பகுதிகளிலும் வாழக்கூடிய மக்களுக்கும் சரி கடல் மீனை கொண்டு வந்து சேர்க்கிறது கஷ்டம். அதாவது கடல் மீன்னுங்குறது கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம். அப்படியே கிடைச்சிச்சுனாலும் ஐஸ் வச்ச பழைய மீனை தான் கொண்டு வந்து சேர்ப்பாங்க. அப்படி இருக்கும்போது அவங்க அதிகபட்சமா அந்த மீன் புரத உணவுகளுக்கு அவங்க சார்ந்து இருக்கிறது நாட்டு மீன்களை தான்.
அவங்களுக்கு இந்த ஆத்துல, குளத்துல உள்ள மீன்கள் தான் அதிகமா கிடைக்கும். இப்படி இருக்கும்போது கடல் மீன் நல்லதா, ஆத்து மீன் நல்லதா, இல்ல நாட்டு மீன் நல்லதா அப்படின்றதை தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம் நம்மலுக்கு ஏற்ப்படுது. அதே நேரத்துல பொதுவாவே இந்த கடல் மீன், ஆத்து மீன் இப்படி எல்லாம் இல்லாம பொதுவாவே மீனு எடுத்துக்கிட்டோம்னா அதை யாரெல்லாம் அதிகமா சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடுறதை தவிர்க்கலாம் அப்படின்றதை பத்திதான் இன்னைக்கான பதிவுல பார்க்க போறோம்.

கடல்ல வாழ்ற மீன்களுக்கும், நன்னீர்ல வாழ்ற மீன்களுக்கும் அவங்களோட உடல் அளவிலேயே நிறைய மாறுபாடுகள் இருக்கு. மேலும் பல வேறுபாடுகளும் இருக்கு. பொதுவா அந்த நிலத்துல வாழக்கூடிய மீன்கள் அதுங்க வாழ்ற அந்த சேறு நிரம்பிய சூழலுக்கு ஏத்த மாதிரி அதுங்க உடம்புல நிறைய புதுவிதமான தகவமைப்புகளை கொண்டிருக்கு. இந்த நாட்டு மீன்களுக்கு அதுங்களோட தோல்ல எபிடமிஸ்ன்னு ஒரு லேயர் இருக்கும். அதாவுது மனுசங்களுக்கு இருக்கிற மாதிரியே அவங்களோட தோல்லையும் எபிடமிஸ்ன்னு ஒரு லேயர் இருக்கு.
அந்த லேயர்ல ஸ்பெஷலான ஒரு செல் இருக்கு. அந்த செல்க்கு நேம் வந்து குளோப் பிளட் அப்படின்னு சொல்லுவாங்க. இந்த செல் வேலை வந்து அந்த மீன் மேல எப்போதுமே ஒரு சளி போன்ற திரவத்தை சுரந்துகிட்டே இருக்கும். இது எதுக்கு அந்த மீன்ங்களுக்கு பயன்படுதுன்னா.? அதுங்க வாழ்ற இந்த நன்னீர்ல ஆகவே இந்த நன்னீர்ல நிறைய சேறு நிரம்பிய இடம் இருக்கும். அப்புறம் அந்த நன்னீர் ஓடிக்கிட்டே இருக்கும் போது, அதுல நிறைய மண்ணு சேறு இதெல்லாம் அதுங்க மேல வந்து படுறதுக்கு வாய்ப்பு இருக்கு.
இது மட்டுமின்றி மத்த வேற ஏதாவது குச்சி, இலை, தலைன்னு இந்த மாதிரியான பொருட்கள் வந்து பட வாய்ப்பு அதிகமான வாய்ப்பு இருக்கு. இந்த சேறு நிரம்பிய அந்த சூழல்ல இருந்து இந்த மீன்களோட உடம்பை அதோட ஸ்கின்னை காப்பாத்தணுங்கறதுக்காகவும் அந்த சளி போன்ற திரவம் அதுங்க மேல் சுரக்குது. அதே நேரத்துல இப்ப ஆத்துலயோ, குளத்துலயோ, குட்டையிலயோ வாழ்ற ஒரு மீன் வந்து அந்த தண்ணி வத்துனதுக்கு அப்புறம் என்ன பண்ணும் அப்படின்னு நம்ம எல்லாருக்குமே நிறைய சந்தேகம் இருக்கும்.

அந்த ஆத்துல, குளத்துல வாழ்ற மீன்கள் எல்லாமே தண்ணி வத்த போகுது. கோடை வெயில் உச்சத்துக்கு வந்துருச்சு. இனிமேல் தண்ணி அடிமட்டத்துக்கு குறைஞ்சிரும். அப்படியே நம்ம இருந்தோம்னா கருவாடா மாறி செத்து போயிருவோம்னு நெனச்சி, தண்ணிக்கு அடியில சேத்துக்கு போயிட்டு, எவ்ளோ ஆழம் அடியில இன்னும் உள்ள குழி நோண்ட முடியுமோ நோண்டி உள்ள போயி அங்க ஒரு சின்ன பள்ளத்தை அமைச்சு அந்த பள்ளத்துக்கு அதாவது சேத்துக்கு அடியில சொல்றேன். ஒரு சின்ன ஒரு பள்ளத்தை அமைச்சு அந்த பள்ளத்துக்குள்ளேயே வாழ ஆரம்பிச்சுரும்.
எப்ப முற்றிலுமா தண்ணி வத்தி இந்த இடம் முழுக்க வறண்டு போகுதோ அப்ப அது உள்ளுக்குள்ள அது உடம்புல சுரக்குற அந்த சளி போன்ற திரவத்தை அதிகமா சுரந்து, வெளில எவ்வளவுதான் வறட்சியா இருந்தாலும் உள்ளுக்குள்ள அந்த இடத்தை மட்டும் கூலிங்காவே ஏதோ ஒரு திரவத்தன்மை நிறைஞ்சதாவே ஈரப்பதத்தோட தன்னோட உடம்பை வச்சுக்கிட்டு, மேலும் அங்கேயே சுவாசிச்சுக்கிட்டு கோடை காலம் முடிஞ்சு திரும்ப மழைக்காலம் வர வரைக்கும் அங்கேயே இருக்கும். நிறைய வீடியோஸ்ல நீங்க பார்க்கலாம் அந்த மாதிரி. அப்படியே நிலம் பேந்து பேந்து கிடக்கும்.
வெயில்ல அந்த பேந்திருக்கிற நிலத்தை அப்படியே தோண்டி எடுக்க எடுக்க உள்ள இருந்து மீன்களை அள்ளி போட்டுக்கிட்டே இருப்பாங்க. அது எல்லாமே உள்ளுக்குள்ள ஈரப்பதத்தோடயே இருக்கும். அந்த இடத்தை ஈரப்பதமா வச்சுக்கிறதுக்குமே இந்த கோடை வெயிலின் தாக்குதல் இருந்து தன்னோட உடம்ப ஈரப்பதமா வச்சுக்கிறதுக்குமே இந்த நன்னீர் மீன்கள் அதுங்களோட அந்த சளி போன்ற திரவத்தை சார்ந்து இருக்கு. ஆனா கடல்ல ஒப்பிடும் போது கடல்ல தண்ணி எப்போதுமே வத்தவே போறதில்லைன்றதுனால அதுங்களுக்கு அங்க இந்த தேவை ரொம்ப ரொம்ப கம்மி. அந்த சளி மாதிரியான அமைப்பு கடல்வாழ் மீன்களுக்கு அங்கங்க தேவையே இல்லாம போயிடுச்சு.

அதே மாதிரி இந்த நன்னீர் மீன்கள் எல்லாம் அதுங்களோட எதிரிகளை சமாளிக்கிறதுக்கும் இந்த சளி போன்ற திரவத்தை பயன்படுத்தும். அதாவது ஒரு பாம்போ, ஒரு பறவையோ ஒரு நன்னீர் மீனை போய் பிடிக்கும் போது இந்த சளி போன்ற திரவம் சுரக்குறதுனால அது டக்குனு வழுக்கிட்டு போயிடும். அது தப்பிக்கிறதுக்கான வாய்ப்பை அது அதிகப்படுத்துது. அதே நேரத்துல ஏதோ ஒரு உயிரினம் அதை புடிச்சிருச்சுன்னா அதாவது அந்த சளி போன்ற அமைப்பையும் தாண்டி கெட்டியாக பிடித்து விட்டது என்றால் அது எவ்வளவு நேரம் அதை சாப்பிடுறதுக்கு எடுத்துக்குதோ அதாவது அதை முழுங்குறதுக்கு அந்த உயிரினம் ரொம்ப நேரம் எடுத்துக்கிச்சுன்னா, அந்த டைம்ல அந்த மீனோட உடம்புல இருந்து சளி கொஞ்சம் கொஞ்சமா சுரந்து ஒரு கட்டத்துல தேவைக்கு அதிகமாகவே சுரந்து எதிரியோட பிடியிலிருந்து ஈஸியா வழுக்கி தப்பிச்சு போயிடும்.

அது மட்டும் இல்லாம ஒரு பாம்பு அதை முழுங்க முயற்சி பண்ணுதுன்னா, அப்போ அந்த சளி போன்ற திரவம் ஃபுல்லா அந்த பாம்பு வாய்க்குள்ள போய் அடைச்சுக்கிட்டு முழுங்குறதையுமே கஷ்டமாக்கும். ஒரு பாம்பு நன்னீர் மீன்களை வேட்டையாடுதுனா எவ்வளோ சீக்கிரமா புடிச்ச உடனே முழுங்குதோ அப்போ அந்த பாம்புக்கு நல்லது. ஆனா அப்படி பண்ணாம ரொம்ப நேரம் டிலே பண்ணி சாப்டுக்கலானு நெனச்சா அதுக்கப்புறம் அந்த பாம்பு முழுங்குறது ரொம்பவே கஷ்டமா மாறிடும். அப்போ அந்த நேரத்துல அந்த பாம்பால அந்த மீன் முழுங்க முடியாம கக்க ட்ரை பண்ணும். அப்படி கக்கும்போது அந்த மீன் தப்பிச்சு போறது ரொம்ப சுலபமாயிடும்.
நாமளுமே இந்த நன்னீர் மீனை போய் பிடிக்கும் போது நம்ம கையில இருந்து அது வழுக்கிட்டு வழுக்கிட்டு ஓடும். ஏன்னா அந்த திரவம் இருக்கறதுனாலதான். ஆனா இதே விஷயம் கடல்ல நடக்கணும்ன்ற தேவையில்லை. ஏன்னா கடல் ரொம்ப பிரம்மாண்டமானது ஆகவே தப்பிச்சு போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. மேலும் நிறைய இடம் இருக்கு. இன்னொன்னு அதுங்களை வேட்டையாடுற உயிரினங்களுமே பெரிய பெரிய வாய் கொண்டது. சொல்லப்போனால் ஒரே வாயில முழுங்கிற உயிரினங்கள் எல்லாம் அங்க இருக்கு அதனால அங்க இந்த சளி போன்ற திரவம் இதுங்களுக்கு வேட்டையாடிகள் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு பெருசா உதவ போறதில்லை.

நன்னீர் மீன்கள் வாழ்ற இந்த சேறு மாதிரியான இந்த இடமும், மேலும் அதுங்க உடம்புல சுரக்குற இந்த திரவமும் தான் இந்த நன்னீர் மீன்களோட சுவையை கொஞ்சம் பாதிக்குதுனு சொல்றாங்க. அதனால நிறைய பேர் கடல் மீனோட சுவை நாட்டு மீனுக்கு வராது. நாட்டு மீன் என்ன இருந்தாலும் கொஞ்சம் சப்புன்னுதான் இருக்கும்னு சொல்லுவாங்க. மேலும் நம்மல்ல சில பேர் இந்த நாட்டு மீன் ரொம்ப கவிச்சு அடிக்கும் அப்படின்னு கூட சொல்றவங்க இருக்காங்க. இதுல நிறைய பேருக்கு மாற்று கருத்து இருக்கலாம். ஏன்னா ஒரு சிலருக்கு எல்லாம் என்ன தோணும்னா நாட்டு மீன்தான் உண்மையாவே சுவையானதுன்னு தோணும். அதையும் ஏத்துக்கத்தான் செய்யணும்.

இப்ப என்னயவே எடுத்துக்கிட்டா எனக்கெல்லாம் நாட்டு மீன்னா ரொம்பவே பிடிக்கும். அதுலயும் குறிப்பா பட்டை மீனு, விரா மீன் எல்லாம் பயங்கர டேஸ்டா இருக்கும் அதையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஏன்னா நான் ஒரு கிராமத்து பொண்ணு. இதை மட்டுமே அதிகமா சாப்ட்டு சாப்ட்டு வளந்த பொண்ணுங்கறதால இதோட ருசி என் நாக்கை விட்டு வெளியவே போறதில்லை. நாட்டு மீன்கள் மீது அதிகம் கவிச்சு அடிக்குதுன்னா கடல் மீன்ல உப்பு அதிகாமா இருக்கும். அதாவது நாட்டு மீன்களோட ஒப்பிடும்போது கடல் மீன்களோட உடம்புல உள்ள உப்பு தன்மை ரொம்ப அதிகம்தான். இப்போ கடல்ல உள்ள மீன்களோட அந்த கில்ஸ் இருக்குல்ல அதாங்க செவுல்னு நம்ம தமிழ்ல சொல்லுவோம்ல, அந்த பகுதி எல்லாம் கடல் தண்ணிய அது குடிச்சு வடிகட்டும் போது, உப்பு தன்மையை முழுசா வடிகட்டும்.
அப்படி கடல்ல உள்ள உப்பை வடிகட்டினாலும் கொஞ்சம் உப்பு அதுங்களோட உடம்புல சேரத்தான் செய்யுது. நாட்டு மீன்களோட உடம்புல உப்போட அளவு வந்து 0.5% இருக்குன்னா, அதைவிட பல மடங்கு கடல் மீன்களோட உடம்புல உப்போட அளவு ரொம்ப அதிகமா இருக்கும். அதுங்களோட உடல்ல உள்ள உப்போட அளவு எதை பொறுத்து நிர்ணயிக்கப்படுதுன்னா, அது எந்த மாதிரியான கடல் பகுதியில வாழுது மற்றும் அந்த கடல் பகுதியில எவ்வளவு உப்புத்தன்மை அதிகமா இருக்கு அப்படின்றதெல்லாம் பொறுத்து மாறுதுன்னு சொல்றாங்க. அதாவது உப்பு தன்மை கடல்ல அதிகமா இருந்துச்சுன்னா அங்க வாழக்கூடிய மீன்களோட உடம்புல உள்ள உப்புத்தன்மையும் கொஞ்சம் அதிகமா இருக்கும்.

ஆனா இவ்வளவு உப்பு இருக்குன்றதுனால கடல் மீன் கெட்டதா.? நமக்கு உடம்புல உப்புச்சத்து அதிகமாகி அதனால பிபி (blood pressure) எல்லாம் வரதுக்கு வாய்ப்பு இருக்கா அப்படின்னு ஒரு சந்தேகம் வரும். நமக்கே இந்த மாதிரியான யோசன வரும் போது, பல ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மாதிரியான யோசனைகள் வந்திருக்கு. அதனால அவங்க ஆராய்ச்சி பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்கன்னா, கடல் மீனோட உடம்புல உப்பு தன்மை நாட்டு மீனோட ஒப்பிடும் போதுதான் அதிகமே தவிர, நாம உட்கொள்ளும் போது அது நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும்ன்ற அளவுக்கு அதிகம் இல்லை. அதனால கடல் மீனோட உடம்புல உள்ள உப்பு நமக்கு பெரிய அளவுல பாதிப்பை ஏற்படுத்தாதுன்னு சொல்றாங்க.
அதே நேரத்துல கடல் மீனோட ஒப்பிடும் போது நாட்டு மீன்களோட அதாவது நன்னீர்ல வாழக்கூடிய மீன்களோட உடம்புல உள்ள கால்சியம் கண்டென்ட் கொஞ்சம் அதிகமா இருக்கு. அதாவது எலும்புகளுக்கு தேவைப்படக்கூடிய கால்சியம் கொஞ்சம் அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. ஏன்னா நன்னீர்ல வாழக்கூடிய மீன்களுக்கு அதுங்க வாழக்கூடிய அந்த நிலப்பரப்புல மரங்கள், செடி, கொடினு நெறையா இருக்கும். இந்த தாவரம் எல்லாம் சூழ்ந்து அந்த நிலப்பரப்புல அதிக்கப்படியான கால்சியம் சத்துக்கள அந்த மண்ணுல சேத்து வைக்கும். அந்த மண்ணுல அங்க உள்ள அந்த செடிமெண்ட்ஸ சாப்பிட்டு வாழக்கூடிய புழுக்களையும், பூச்சிகளை எல்லாம் நன்னீர் மீன்கள் உட்கொண்டு வாழுதுன்றதுனால இதுங்களோட உடம்புல கடல் மீனோட ஒப்பிடும் போது கால்சியம் அதிகம்.
கடல் மீன்லயும் கால்சியம் இருக்கு. ஆனா கடல் மீனோட ஒப்பிடும்போது நாட்டு மீன்களுக்கு கால்சியம் இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. ஆகவே உங்களுக்கு உடம்புல எலும்பு இன்னும் கொஞ்சம் வலுவா இருக்கணும். கால்சியம் உங்களுக்கு அதிகமா தேவை அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா கடல் மீனை சாப்டுரதை விட அதிகமா நாட்டு மீனை சாப்டுறது நல்லது. அதே மாதிரி பொதுவா நாமெல்லாம் கொழுப்புனாலே ரொம்ப ஆபத்து, நம்ம உடம்புல கொழுப்பே இருக்கக்கூடாது அப்படின்னு நினைக்கிறோம். ஆனா உண்மை என்னன்னா கொழுப்புலயே ரெண்டு வகை இருக்கு. ஒன்னு குட் கொலஸ்ட்ரால் இன்னொன்னு பேட் கொலஸ்ட்ரால் (Good cholesterol and Bad cholesterol).

இதுல குட் கொலஸ்ட்ரால்ன்றது பேருக்கு ஏத்த மாதிரி நம்ம உடம்புல இருக்க வேண்டிய நம்ம உடம்புக்கு தேவையான ஒண்ணு. அது இருந்தாதான் நம்ம உடம்புல ரத்த ஓட்டத்த சீராவே இயங்க முடியும். அதே மாதிரி பேட் கொலஸ்ட்ரால்ன்றது அதோட பேருக்கு ஏத்த மாதிரி நம்ம உடம்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒண்ணு. அது உடம்புல இருக்கவே கூடாது. இதுல அந்த நன்னீர்ல வாழக்கூடிய அதாவது ஆத்துல, குளத்துல, குட்டைல எல்லாம் வாழக்கூடிய மீன்களுக்கு அதுங்களோட உடம்புல மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (Mono unsaturated fatty acids) அப்படின்னு ஒன்னு இருக்கு. இது என்ன பண்ணுதுன்னா நம்ம உடம்புல உள்ள LDL-Low density lipoprotein அப்படின்னு சொல்லுவாங்க அதாங்க பேட் கொலஸ்ட்ரால். இந்த உடம்புல உள்ள இந்த LDL-ல பேட் கொலஸ்ட்ரால குறைக்கிறதுக்கான வேலையை இந்த மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ன்றது பாக்குது.
அதே மாதிரி நன்னீர்ல வாழக்கூடிய மீன்கள்ல இன்னொரு நல்லதும் இருக்கு. அது என்னான்னா, பொதுவா நன்னீர்ல வாழ்ற மீன்கள்ல பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ன்னு இன்னொன்ணு இருக்கு. இது என்ன பண்ணுதுன்னா, நம்ம உடம்புல ரத்தத்துல உள்ள பேட் கொலஸ்ட்ரால்ஸ குறைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுது. இது இப்படி பண்றதுனால நம்ம இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அப்புறம் உடம்புல அங்கங்க ஏற்படுற வீக்கங்கள், அப்புறம் உடலில் உள்ள செல்கள் சரியா குரோத் ஆகுறதுக்கும், மேலும் சரியான வளர்ச்சிக்கும் இது எல்லாத்துக்குமே இந்த பாலி அன்சாச்சுரல் ஃபேட்டி ஆசிட்ன்றது உதவுது.
அதனால இந்த ரெண்டு ஃபேட்டி ஆசிட்ஸும் நன்னீர் மீன்கள்ல தான் அதிகமா இருக்குன்றதுனால, நன்னீர்ல உள்ள மீன்கள் நம்ம உடம்புல உள்ள கொழுப்போட அளவை சரியா சமநிலையில வைக்கிறதுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணுது. இந்த ஃபேட்டி ஆசிட்ஸ் எல்லாம் கடல் மீன்களோட ஒப்பிடும்போது நன்னீர் மீன்களுக்கு ரொம்பவே அதிகமாயிருக்குது. கடல் மீன்களுக்கு கொஞ்சம் கம்மிதான். இதுவரைக்கும் சொன்ன இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் வச்சு பார்க்கும்போது நாட்டு மீன்தான் நல்லது போல.! அப்ப நாட்டு மீனை தான் சாப்பிடணும், கடல் மீன் கெட்டது போல அப்படின்ற முடிவுக்கு வந்துராதீங்க.

இன்னும் சில விஷயங்கள் இருக்கு அதெல்லாம் ஃபுல்லா படிச்சதுக்கு அப்புறம் முடிவு பண்ணுங்க. இப்ப சொன்ன மாதிரியே எப்படி நாட்டு மீன்ல எவ்வளவு நல்லது இருக்கோ அதே மாதிரி கடல் மீன்லயும் சில முக்கியமான விஷயங்கள் இருக்கு. நம்ம நாட்டு மீன்கள் அதாவது நன்னீர்ல வாழக்கூடிய மீன்கள் எல்லாம் இங்க வாழக்கூடிய புழு, பூச்சிகளை எல்லாம்தான் உணவா பெரும்பாலும் எடுத்துக்குது இல்லையா. ஆனா கடல்ல வாழக்கூடிய மீன்கள் பெரும்பாலும் அங்க உள்ள பாசிகளை மட்டுமே பெரும்பாலும் உணவுகளா எடுத்துக்குது. அதுலயும் சின்ன சின்ன மீன்கள்தான் இந்த பாசிகளை அதிகமா உணவாக உட்கொள்ளுது.
இப்படி பாசிகள் உணவா உட்கொண்டு அதுங்களோட சத்துக்களை உள்ள எடுத்துக்கிட்டு ஜாலியா போய்கிட்டு இருக்கும்போது, அந்த சின்ன சின்ன மீன்களை பெரிய பெரிய மீன்கள் அதாவது சுறா மீன்ல இருந்து திமிங்கலம் வர இருக்கக்கூடிய எல்லா வேட்டையாடி மீன்களும் அதை உட்கொண்டு வாழுது. அப்படி பார்க்கும்போது இந்த பாசிகளை இதெல்லாம் அதிகமா உட்கொள்றதுனால அதுங்களோட உடம்புல ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அப்படின்னு ஒரு கண்டென்ட் அதிகமா இருக்கு. இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ன்றதும் நம்ம உடம்புக்கு ரொம்ப முக்கியமான ஒரு ஃபேட்டி ஆசிட். இது என்னென்னலாம் பண்ணுதுன்னா.? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர்றத கண்டிப்பா இது கட்டுப்படுத்தும். அதே மாதிரி மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வர்றதயும், பக்கவாதம் வர்றதையும் இதெல்லாமும் இது குணப்படுத்துதுன்னு சொல்றாங்க.

அதோட கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குமே இது ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க. சோ ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். நம்ம ஊர்ல கிடைக்கக்கூடிய மீன்கள்ல எதுல ஒமேகா 3 கண்டென்ட் அதிகமா இருக்குன்னு பார்த்தோம்னா மத்தி மீன்னு ஒரு மீன் சொல்லுவாங்க. அது நம்ம தமிழ்நாட்டுல ரொம்ப பெரும்பான்மையான இடங்கள்ல கிடைக்கக்கூடிய ஒரு மீன்தான். இந்த மீனுல முள்ளு கூட கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுல ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரொம்ப அதிகமா இருக்கு. அதனால அதை நம்ம அதிகமா சாப்பிட்டோம்னா நமக்கு இந்த சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.
பொதுவாவே கல் மீனை சாப்பிடும்போது கூட இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கும். இருந்தாலும் கல் மீனா இல்லை மத்தி மீனானு வரும்போது அதுல எந்த மீன்ல ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரொம்ப அதிகமா இருக்கு அப்படின்றதை கவனிச்சு அதை நம்ம அதிகமா சாப்பிட்டோம்னா நம்ம உடம்புக்கு ஒமேகா 3 நெறையா கிடைக்கும். அதாவது மத்தி மீன் மாதிரியான உயிரினங்கள அதிகமா சாப்பிட்டோம்னா நம்ம உடம்புக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க.
பொதுவாவே நம்ம ஊர்ல எல்லாரும் சொல்லுவாங்க மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது அப்படின்னு. அது ஏன்னா மீன்ல ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கு அதனாலதான் கண்ணுக்கு ரொம்ப நல்லது அப்படின்றதுனாலதான் நம்ம முன்னோர்கள் கிட்ட இருந்து இந்த வார்த்தைய வாழையடி வாழையாக நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நம்ம முன்னோர்கள் எவ்ளோ கிரேட்டுனு பாருங்க..! சரி பாப்பா வளவளன்னு பேசிட்டு இல்லாம எந்த மீனை சாப்பிடலாம்.? எந்த மீனை சாப்பிடக்கூடாதுன்றத சுருக்கமா சொல்லு அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. அதனால விடையையும் சுருக்கமாவே சொல்லிடுறேன்.

இந்த ரெண்டு மீன பொறுத்தவரைக்கும் ரெண்டு மீனுமே உடம்புக்கு நல்லதுதான். ஆனா சுவையை பொறுத்தவரைக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு நிறைய பேர்ட்ட கேட்ட வரைக்கும், எனக்கு கடல் மீன் தான் சுவை அதிகமா இருக்குறதா தெரியுது. நாட்டு மீன்ல சுவை அந்த அளவுக்கு அதிகமா இல்லைன்னு தோணுது அப்படின்னு சொல்றாங்க. நாட்டு மீன் அந்த அளவுக்கு சுவை இல்லைன்றதுனால நிறைய பேர் சாப்பிடுறதையே தவிர்க்கிறாங்கனு பலர் சொல்லியும் நான் கேள்விப்பட்டேன். ஆனா என்ன பொறுத்தவரைக்கும் நாட்டுமீனோட சுவை கடல் மீனுக்கு தனிப்பட்ட சுவைதான். அததோட சுவை அதுக்கு தனித்தன்மையான சுவைதான் அமைஞ்சிருக்கு.
ஆகவே, யாருக்கு எந்த சுவை புடிச்சிருக்கோ அதை சாப்பிடுங்க. சிலருக்கு ரெண்டு சுவையுமே புடிச்சிருந்துச்சுன்னா ரெண்டு மீனையுமே சாப்பிடுங்க. இப்ப எனக்கெல்லாம் ரெண்டு சுவையுமே பிடிக்கும். இது கிடைக்கிறப்போ இதுன்னும், அது கிடைக்கிறப்போ அதுன்னும் சாப்பிட்டு போயிடுவேன். அந்த மாதிரி சாப்பிட்டுருங்க பிரச்சனையே இல்லை. ஏன்னா.? ரெண்டுத்துலயுமே அது அதுக்குனு தனித்தன்மையான சத்துக்கள் இருக்கு. அதே மாதிரி உங்களுக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமா கிடைக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா கடல் மீனை எடுத்துக்கோங்க. ஏன்னா நாட்டு மீன்கள்ல அது கிடையாது ரொம்ப கம்மியாதான் இருக்கு.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ன்றது நம்ம உடம்புக்கு ரொம்ப முக்கியமான ஒண்ணு. அது உங்களுக்கு கிடைக்கனும்னா கண்டிப்பா கடல் மீன்களை உங்களுக்கு எப்ப எப்பலாம் கிடைக்குதோ அப்பப்பலாம் கண்டிப்பா எடுத்துக்கோங்க அது ரொம்ப முக்கியம். அதே நேரத்துல மைக்ரோ நியூட்ரியன்ஸ்ன்னு சொல்லுவோம்ல அதுவுமே நம்ம உடம்புக்கு ரொம்ப முக்கியம். அது நாட்டு மீன்களோட ஒப்பிடும்போதும், நன்னீர் மீன்களோட ஒப்பிடும்போது, கடல் மீன்களுக்கு ரொம்ப அதிகமாவே இருக்கு. அதனால கடல் மீன்கள் உங்களுக்கு எப்ப எப்பலாம் கிடைக்குதோ வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் கடல் மீன்களை சமைச்சு சாப்பிட்டுருங்க. வாய்ப்பு இல்லை உங்களுக்கு நாட்டு மீன்தான் கிடைக்குதுன்னா அதை ஒதுக்க வேணாம் தாராளமா அதையும் சாப்பிடுங்க.

மீன்களே உடம்புக்கு நல்லதுதான். மத்தபடி மீன்கள் சாப்பிடுறதுனால ஏதாவது பக்க விளைவுகள் வரும் அப்படின்ற மாதிரி எல்லாம் எந்த விதமான ரிசர்ச்சும்மே கிடையாது கிடையாது. அந்த மாதிரி இதுவரைக்கும் யாரும் ப்ரூவ் பண்ணவே இல்லை. சோ மீன்களை தாராளமா எடுத்துக்கோங்க உடம்புக்கு நல்லது. ஆனா ஒரு சிலர் எல்லாம் இந்த மாதிரி மீன்களை சாப்பிடுறதை தவிர்க்கிறது இல்லைன்னா அதை கொஞ்சம் குறைச்சிக்கிறது ரொம்ப நல்லது. ஏன்னா பொதுவாவே கடல் மீன்கள்ல மெர்க்குரின்னு சொல்லப்படுற ஒரு கண்டென்ட் இருக்கு. இந்த மெர்க்குரி வந்து நம்ம உடம்புக்கு ரொம்ப ஹார்ம்ஃபுல் அதாவது ஆபத்தான ஒன்னு. பொதுவா இந்த மெர்க்குரி அதிகமா நம்ம உடம்புல சேர்ந்துருச்சு அப்படின்னா நமக்கு உடம்புல நடுக்கம், தசை படபடப்பு, தசை எல்லாம் செயலிழப்பு இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் வரும்.
சில சமயங்களில் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உட்பட இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் வரும். ஆனா இந்த மெர்க்குரி கடல் மீன்கள்ல எந்த அளவுக்கு இருக்குன்னு பார்த்தா நமக்கு அதிகமா ஹார்ம் பண்ற அளவுக்கு ரொம்ப அதிகமா இல்லை. ஆனா கடல் மீன்கள்ல இது ஓரளவுக்கு இருக்கத்தான் செய்யுதுங்குறதையும் தெரிஞ்சிக்கோங்க. இது எப்படி கடல் மீன்களுக்குள்ள வருதுன்னா அதுங்க சாப்பிடுற உணவு மூலமாவும், கடலோட நீர்ல இருக்கிற மெர்க்குரியும் இதுங்களோட உடம்புக்குள்ள போய் செட் ஆயிடுது. நீங்க எப்ப கடல் மீனை ரொம்ப அதிகப்படியா எடுத்துக்கிட்டே இருக்கீங்களோ அப்ப உங்க உடம்புல அதிகப்படியான மெர்க்குரி சேர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்போ இந்த மாதிரியான பிரச்சனைகள் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.
அதனால எல்லாருமே கடல் மீன் எல்லாம் ஒதுக்கணும் அப்படின்றது கிடையாது. ஏன்னா இது நாட்டு மீன்களிலுமே இருக்கு. கடல் மீன ஒப்பிடும்போது ஓரளவுக்கு ரொம்ப கம்மியான அளவு மெர்க்குரி இருக்கத்தான் செய்யுது. ஆனா நமக்கு பெரிய அளவுல பிரச்சனை பண்ணுமான்னு கேட்டா அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. ஆனா ஒரு சிலருக்கு ஒரு சில தருணத்துல இதை ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. யார் யாரெல்லாம்னா பிரெக்னன்சிக்கு பிளேன் பண்றவங்க, பிரெக்னண்ட்டா இருக்குறவங்க, அப்புறம் அஞ்சு வயசுக்கு ஆறு வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் இவங்க எல்லாம் அதிகப்படியா மீன்களை உட்கொள்றதை கொஞ்சம் தவிர்த்தரலாம் அப்படின்னு சொல்றாங்க.

அப்படி தவிர்த்ததுனால மெர்க்குரி கண்டென்ட் அதிகமா உள்ள போய் சேராது அது போய் கருவுல உள்ள குழந்தையை பாதிக்கிறது இதெல்லாம் தவிர்க்கப்படும் அப்படின்னு சொல்றாங்க. மத்தபடி நார்மலா மீன் சாப்பிடலாமா அப்படின்னா.! மீன்ல அந்த மெர்க்குரி கண்டென்ட்டே உள்ள இருந்துச்சுனாலும் பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை. ஆனா மெர்க்குரி கண்டென்ட் எதுல அதிகமா இருக்கு எதுல கம்மியா இருக்கு அப்படின்றதை தெரிஞ்சுக்கிறதுக்கு சில வழிகள் இருக்கு. அதை நீங்க ஒரு நல்ல டயட்டிசியனை போய் பார்த்து எந்தெந்த மீன்கள் எல்லாம் மெர்க்குரி இல்லை. எந்த மீனுல கம்மியா இருக்கு அப்படின்றதை தெரிஞ்சுக்கிட்டு அந்த மீன்களை சாப்பிடுங்கள்.
இப்பவும் சொல்றேன் நார்மலா இருக்கறவங்க எப்போதுமே மீன் எடுத்துக்கலாம். இத பத்தி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இப்ப நான் சொன்ன இந்த வகையில வரவங்க மட்டும் இந்த மாதிரி எந்தெந்த வகையில எல்லாம் மெர்க்குரி கம்மியா இருக்குன்றது டயட்டிசியனை கேட்டு முடிவு பண்ணி, அதுக்கப்புறம் சாப்பிடுறது நல்லது. மத்தபடி மீனை ஒதுக்கணும் மீன பார்த்தாலே பயப்படணும்ன்ற அவசியமே கிடையாது. அது நாட்டு மீனோ, கடல் மீனோ எதுன்னாலும் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது தான். சோ தாராளமா உங்களுக்கு எப்ப எப்பலாம் கிடைக்குதோ அப்பப்பலாம் சாப்பிடுங்க.
மீனுல ஏதுமா நல்லமீன்னு கெட்ட மீனு, மீனுனாலே அது நல்லது தானேனு நீங்க சொல்றது எனக்கு புரியுது. இந்த இடத்தில் மீனுங்குறது கெட்டதுன்னு நான் சொல்ல வரல. இந்த மீன்களை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். அதே மாதிரி அந்த மீன்களை சாப்டா உங்களுக்கு அந்த அளவுக்கு நன்மைகள் இருக்கு அப்படிங்கறத பிரிச்சு சொல்லி இருப்பேன்.

அதாவது நாட்டு மீன்களை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் குழம், குட்டை ஆறுகளில் வசிக்கும் மீன்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய சத்துகளையும், கடல் மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய சத்துக்களை பற்றியும் தெளிவாக பிரிச்சு சொல்லியிருப்பேன். நிச்சயமாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இதுவரை இந்த தகவலை நீங்கள் முழுமையாக படித்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு பல சுவாரஸ்யம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது மட்டும் இன்றி நமது வலைதளத்தில் பல்வேறு விதமான சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் உங்களுக்காக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அனைத்து தகவல்களும் உங்களுக்கு பயனுள்ள தகவலாக மட்டுமே இருக்கும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த விதத்திலும் உங்களின் நேரத்தை வீணாக்காது. எனது பதிவுகளை படிப்பதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள தவறிய பல தகவல்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும். மேலும் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அந்த தகவல்களை சற்று நினைவு கூற உதவி செய்யும்.
ஆகவே நண்பர்களே இது போன்ற தகவல்களின் உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்காக நமது வலைதளத்திற்கான பிரத்தியேகமான ஒரு வாட்ஸ்அப் சேனலையும் டெலிகிராம் சேனலையும் உருவாக்கி இருக்கிறேன். மறக்காமல் நமது வலைதளத்திற்கு வரும் பார்வையாளர்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். நமது சேனலில் இணைய விரும்பினால் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝
உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால் இந்த பதிவையும் படித்து பாருங்கள்..👇👇👇
நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
