ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள். ஆம் நண்பர்களே நம்மில் பலருக்கும் இது பற்றி தெரியாது. அதனாலயே என்னவோ தான் ஆரஞ்சு பழத்தை நிறைய நண்பர்கள் வெறுக்கிறார்கள். இப்போது நான் சொல்லக்கூடிய இந்த நன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் ஆரஞ்சு பழத்தை புறக்கணிக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த பழத்தைப் பற்றி இப்போது தெளிவாக கூறப் போகிறேன். தொடக்கம் முதல் இறுதி வரை முழுமையாக படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு இந்த பதிவு பயனைக் கொடுக்கும்.

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

பழங்களில் எவ்வளவு வகைகள் இருந்தாலும் ஒரு சில பழங்கள் மட்டுமே உலக அளவில் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகின்றன. அப்படிபட்ட ஒரு பழம் தான் “ஆரஞ்சு” பழம். தமிழில் இந்த பழத்தினை கமலா பழம் என்று அழைக்கின்றனர். ஆசிய கண்டதை சேர்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பயிரிட்டு வளர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருகின்றனர். நம்மில் பல பேருக்கு இந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனாலயோ என்னவோ பழம் புளிப்பாக இருக்கிறது, இனிப்பாக இல்லை என்று சிலர் வெறுத்து ஒதுக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, இந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

விந்தணுக்கள்

புத்திர பாக்கியம் தரும் ஆரோக்கியமான விந்தணுகளின் உற்பத்திக்கு ஆண்கள் ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். விந்து உற்பத்திக்கு மிகவும் சிறந்த பழம் ஆரஞ்சு என்றே கூறவேண்டும். ஏனென்றால் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் உயிர்ச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமான முறையில் வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும் போது ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுதன்மை நீங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகை செய்கிறது.

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

இருதய நோய்கள்

இருதய நோய்கள் மற்றும் இருதய பாதிப்புகள் உள்ளவர்கள் இயற்கையான உணவுகள் அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் எனனும் உயிர்ச்சத்தும் அதிக அளவில் இருக்கிறது. ஆரஞ்சு பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு, இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் அதாவது அடைப்பு ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

ஈறுகள், பற்கள்

ஆரஞ்சுபழத்தை அதிக அளவில் சாப்பிடுவதால் அதில் உள்ள அமிலத்தின் காரணமாக, வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. நம்மில் பலருக்கு

  • ஈறுகளில் வீக்கம்,
  • ரத்தம் வடிதல்,
  • பற்கூச்சம்,


பற்களில் சொத்தை ஏற்படுவது, இது போன்ற உபத்தரங்கள் வாய் மற்றும் பற்களில் உள்ள கிருமிகளால் பல பிரச்சனைகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. ஆரஞ்சு பழங்களை பிழிந்து அதன் சாறை தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் குடித்து வந்தால் வாய் மற்றும் பற்கள் சம்பந்தமான அனைத்து தொல்லைகளும் நீங்கும்.

See also  இவர்கள் எல்லோரும் மீன் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது

ஊட்டச்சத்து

ஆரஞ்சு பழம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல உயிர்சத்துகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. இதில் அப்படி என்ன சத்து இருக்குனு நீங்க யோசிக்கிரீங்கலா..? வாங்க அதையும் பார்ப்போம், இதில்

  • பொட்டாசியம்,
  • கால்சியம்,
  • வைட்டமின் சி,
  • வைட்டமின் ஈ,
  • இரும்புசத்து,


பாஸ்பரஸ் இது போன்ற பல உயிர்ச்சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின்

  • எலும்புகளின் வளர்ச்சி,
  • எலும்புகளின் உறுதி,
  • இதயம்,
  • ரத்தம்,
  • நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு ஆரஞ்சு உதவுகிறது.
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

கண்பார்வை

ஆரஞ்சுப் பழத்தில் கரோட்டினாய்டு என்னும் பொருள் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடும் போது, கரோட்டினாய்டு நமது உடலில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்தாக மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் “எ” உயிர்சத்து மிகுதியாக நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. கண்ணின் பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. ஆகவே கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆரஞ்சு பழங்களை தினசரி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

சரும நலம்

ஆரஞ்சு பழத்தை தினசரி சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்புத் தன்மையை அதிகரித்து இளமை என்னும் தோற்றத்தை உண்டாக்கும். ஆரஞ்சு பழ சுளைகளை தினமும் காலையில் வெரும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. காலை மற்றும் மதிய வேளைகளில் ஆரஞ்சு பழங்களை பிழிந்து அதன் சாறை அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் நமது தோலில் பளபளப்பு தன்மை அதிகரித்து, நமது தோலில் பல சுருக்கங்கள் ஏற்படாமல் நம்மை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

பொலிவான சருமம்

பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரஞ்சு பழத்தில் நிறைந்து காணப்படுகின்றது. எனவே ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், சூரியக் கதிர்களால் தோலின் சரும செல்களில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க இருக்கும். மேலும் முதுமைத் தோற்றம் ஏற்ப்படுவது தடைபடும். இதனாலயோ என்னவோ தெரியல நதியா இன்னும் இளமையாகே இருக்காங்க.

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

எலும்புகள்

நமது உடலில் உள்ள எலும்புகள் நாம் வாழும் நாட்களின் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் மிகவும் கவனமாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற உயிர்ச்சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியமாகும். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உயிர்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளது. ஆதலால் இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை மிகவும் உறுதியாகிறது. மேலும் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதன் மூலம் “ஆஸ்டியோபொராஸிஸ்” என்று கூறப்படும் எலும்பு சார்ந்த நோயை ஏற்படுத்தாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால்

கொழுப்பைக் கரையக்கூடிய நார்ச்சத்தானது ஆரஞ்சு பழத்தில் மிக அதிகமாக நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நம்மை கொலஸ்ட்ராலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

See also  தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

ஆரோக்கியமான இதயம்

பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து ஆரஞ்சு பழத்தில் நிறைந்து காணப்படுகிறது. இது இதயத்தை மிக சீராக இயங்க வைக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்தாக திகழ்கிறது. மேலும் நமது உடலில் எப்போதெல்லாம் பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போதெல்லாம் தான் நமது இதயத்தில் பிரச்சனை என்னும் எமன் டிக்கட்டை கையில் வைத்துக்கொண்டு நீ வா போலாம்னு எருமைல வந்து சாட்டையோட நிப்பாரு மனுசன். நான் வரலன்னு எமன் கிட்ட சொல்லக்கூடிய நபர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய் என்னும் மாரடைப்பு எமனிடமிருந்து தப்பிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

ஆரஞ்சுப் பழத்தில் ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு நிறைந்திருப்பதால், ஆரஞ்சு பழங்களை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வருவதன் மூலம், இரத்த அழுத்தமானது குறைவதோடு மட்டுமல்லாமல் அதில் உள்ள மக்னீசியமானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

எடை குறைவு

தினமும் ஆரஞ்சு பழத்தை டயட்டில் சேர்த்துக்கொண்டு வருவதன் மூலம் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலில் தங்கியிருக்கும் கெட்ட நச்சுக்களை வெளியேற்றி, உடலின் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

மூட்டுவலிகள்

ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் மூட்டுகளில் வலிகளோ அல்லது வீக்கங்களோ இருந்தால் குணமாகும். இதற்கு காரணம் என்னவென்றால் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது. அதனால் மூட்டுகளில் வலியோ அல்லது வீக்கமோ இருந்தால் குணமாகும்.

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

அதிகமான நோயெதிர்ப்பு சக்தி

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் எந்த நோயும் நமது உடலை தாக்காதவாறு பாதுகாக்கும் பணியை ஆரஞ்சு பழம் சிறப்பாக செய்கிறது.

வைரஸ் நோய்த்தொற்றுகள்

ஆரஞ்சுப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஒருவகையான வேதிப்பொருள், நமது உடலில் வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மலச்சிக்கல்

ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆரஞ்சு பழத்தினை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் என்னும் பிரச்சனையை ஏற்படுத்தாமல் தடுக்கும்.

ரத்த அழுத்தம்

மனிதர்களாகிய நாம் 30 வயதை கடந்தாலே அனைவரும் அவரவர்களின் ரத்த அழுத்த நிலையைக் குறித்த தகவல்களை அறிந்திருப்பது மிக அவசியமானவைகளில் ஒன்றாகும். ஆரஞ்சு பழம் சாப்பிடும் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவுகள் சரியான அளவில் இருந்து மனித உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நமது உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது வரும் இதய நோய் அதாவது மாரடைப்பு, பக்க வாதம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

சிறுநீரக கற்கள்

நம்மில் சிலர் கால்சியம் அதிகமாக (அ) நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். நாம் சாப்பிடும் ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் உயிர்ச்சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது நமது உடலில் கால்சியம் சேரும் அளவினை அளவுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

See also  முகத்தை பளபளப்பாக்கும் கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்கள்
வெயில் காலத்தில் உங்களுக்கு அரிப்பு பிரச்சனையா?
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

சிறுநீரக நோய்கள்

ஆரஞ்சு பழத்தை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வருவதால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். குறிப்பாக சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பாக, ஆரஞ்சு பழத்தை பிழிந்து அதன் சாறை எடுத்து ஜூஸ் போட்டு குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம். ஏனென்றால் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.

புற்றுநோய்

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். இவை ஆரஞ்சு பழங்களில் அதிகமாகவே நிறைந்து காணப்படுகின்றது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு

நமது உடலில் எத்தகு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதாவது ரத்த வெள்ளை அணுக்கள் வலிமையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. ஏனென்றால் ரத்த வெள்ளை அணுக்கள் நமது ரத்தத்தில் சமமாக இருந்தால் தான் நோயை எதிர்த்து போராடி நமமை நோயிலிருந்து பாதுகாக்கும். ஆதலால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினந்தோரும் இரண்டு ஆரஞ்சு பழ சுளைகள் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். அல்லது மதிய வேளைகளில் ஆரஞ்சு பழத்தை சாறு பிழிந்து அதை குடித்து வருவதும் நல்லதொரு பலனை தரும்.

உடல்வெப்பம்

கோடைகாலங்களில் நம்மில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் அதாவது கொப்பளங்கள் தோன்றுவது, நீர் சுருக்கு, மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பப்பல பிரச்சனைகள் நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றன. ஆதலால் அக்காலங்களில் ஆரஞ்சு பழம் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வெப்பமானது தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வை மூலம் வெளியேறிய உயிர்ச்சத்துக்களையும் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துகள் ஈடு செய்கிறது.

ஆரம்பத்தில் இருந்து இந்த பதிவை இறுதிவரை நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இதுபோல பல சுவாரஸ்யம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே நண்பர்களே இது மட்டும் இன்றி நமது வலைதளத்தில் எழுந்தோறும் பல சுவாரஸ்யம் நிறைந்த தகவல்களை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை உங்களுக்காக நான் தினந்தோறும் எழுதுகிறேன். ஆனால் நிறைய நண்பர்களுக்கு தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால், வலைதளத்திற்கு பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே வருகிறார்கள். ஆகவே நமது வலைதளத்திற்கு வரும் நண்பர்களுக்காக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனல் உருவாக்கி இருக்கிறேன். கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து மறக்காம இணைந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் இணைந்து கொள்வதால் நாம் அனைவரும் எப்போதும் இணைந்தே இருப்பது போல ஒரு உணர்வு எனக்கு ஏற்படும். மேலும் உடனடி அப்டேட்டுகளையும் உடனுக்குடன் பெறலாம். மறக்காமல் இணைந்து உங்களது ஆதரவை கொடுங்கள் நண்பர்களே. மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝

உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த பதிவையும் படித்து பாருங்கள்…👇

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏