
லேட் டிவோனியன் (Late Devonian Period) பீரியட் அதாவது கிட்டத்தட்ட 375 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி பூமி எப்படி இருந்ததுனு கேட்டா..! நிச்சயமாக இப்ப இருக்கிற மாதிரி மட்டும் இல்லைனுதான் சொல்லனும். அப்புறம் எப்படி தான் இருந்தது ஒரு வரியில சொல்லு பாப்போம். அப்படின்னு நீங்க கேட்டா அதற்கு என்னோட பதில் இதுவாகத்தான் இருக்கும். மிக பிரம்மாண்டமான ஆழ்கடல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தரை மார்க்கத்துல வளைவு நெளிவான ஆறுகளும், ஆழமற்ற கடல்களும், பல உயிர்களுக்கு ஆதாயமாக இருந்தது.
ஆழ்கடல்கள்ல மிக பிரம்மாண்டமான உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமா டைவர்ட் ஆகி பிரிந்து வளர்ந்துட்டு இருக்கு. அதே சமயத்துல ஒரு சில உயிர்கள் தரையை நோக்கி வர ஆரம்பிச்சது. அப்படி வந்த உயிர்கள்ல இருந்து தான், இப்ப நாமெல்லாம் வந்திருக்கோம்னு சொன்னா நம்ப முடியுதா உங்களால..? நீங்க படிச்சிக்கிட்டு இருக்கிறது சுட சுட அப்டேட்ஸ் வலைதளத்துல நான் உங்கள் காவியா. வாங்க இன்னைக்கான பதிவுக்குள்ள போகலாம்…
நிலத்தை தொட்ட டிக்டாலிக் (Tiktaalik)
நிலத்துல இப்போதைக்கு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஸ்பீசியஸ் (Species) வாழ்ந்துட்டு இருக்கு. முக்கியமா டெட்ராபாத்ன்னு சொல்லப்படுற நம்மள மாதிரியான உயிரினங்கள் முதுகுத்தண்டு, கை, கால்கள், விரல்கள் இருக்கக்கூடிய இந்த உயிரினங்கள் தரையில வாழ்றது சாதாரண விஷயம் போல உங்களுக்கு தெரிஞ்சிருந்தாலும்.. யோசிச்சு பாருங்க..!

முதல் உயிர்ங்கிறது தண்ணிலதான் உருவாகி இருக்கு. தண்ணில உருவாக்கப்பட்ட இந்த உயிர்கள் எப்படி தரைக்கு வந்திருக்கும்..? அப்ப தரைக்கு வந்த முதல் உயிரினம் எதுங்கிற ஒரு கேள்வி நமக்குல எழும்புதுல..! இந்த கேள்வி நமக்கு மட்டும் இல்லைங்க.
யூஸ்தனப்ட்ராட் (EUSTHENOPTERON)
பல நூறு வருஷங்களா பேலியன்ட்டாலஜிஸ்ட் (Paleontologist) மற்றும் இதை பத்தி ஆராய்ச்சி பண்றவங்களுக்கும் இருக்கத்தான் செய்யுது. பல வித்தியாசமான அதாவது லட்சக்கணக்கான படிமங்கள் அவங்க கையில கிடைச்சாலும், முதன் முதலா தரையை தொட்ட உயிரினம் எதுங்கிற கேள்வி அவங்களுக்கு தொடர்ந்து இருக்கத்தான் செய்யுது.
அந்த வகையில கண்டுபிடிக்கப்பட்ட ஒரு படிமம்தான் யூஸ்தனப்ட்ராட் (EUSTHENOPTERON). யூஸ்தனப்ட்ராட் அப்படின்னு சொல்லப்படுற ஒரு மிருகத்தோட படிமத்தை அவங்க ரொம்பவே டீடைல்டா நோட் பண்றாங்க. கிட்டத்தட்ட 385 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி இந்த படிமம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

பார்க்க மீன் போலதானே இருக்கு..! மீன்தான அதுவும் அது தண்ணில வாழக்கூடியதுதான். ஆனா இதோட அந்த துடுப்பு இருக்குல்ல அதுல எக்ஸ்ட்ரா ஒரு லிம்பு இருக்குறத நோட் பண்றாங்க. மத்த மீன்கள் போல இல்லாம மனிதனோட அந்த ஃபோர் ஆர்ம்ஸ்ல (forearm -முன்னங்கை) இருக்கற மாதிரியான ஒரு எக்ஸ்ட்ரா எலும்பு அப்ப உருவாக ஆரம்பிச்சிருக்கு. அது சின்னதா தான் இருக்கு. ஆனா அந்த ஒரு அமைப்பு அந்த மீன்ல இருக்கு.
அகான்தோஸ்டேகா (Aconthostega)
அதே மாதிரி அகான்தோஸ்டேகா. இது 365 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்துட்டு இருக்கக்கூடிய ஒரு மிருகமா இருந்திருக்கலாம். இது பார்க்க பல்லி போல தெரியலாம். ஆனா அதோட ஃபின்ஸ்ல (Fins) பாத்தீங்கன்னா எக்ஸ்ட்ரா நாலு, அஞ்சு எலும்புகள் பார்க்க கை விரல்கள் போல அமைஞ்சிருக்கிறதை நோட் பண்றாங்க. அண்ட் அதோட அந்த வெயிட்ட சப்போர்ட் பண்ற அளவுக்கு அதோட பின்ஸ்க்குமே ஸ்ட்ரென்த் இருந்திருக்கலாம் அப்படிங்கிற மாதிரி சொல்லப்படுவது.

அண்ட் இதால காற்றை சுவாசிக்க முடியும். ஃபின்ஸும் இருக்கு லங்ஸூம் இருக்கு. மீன்கள் மாதிரியான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கு. பல்லி போன்ற உருவத்துல இருக்கக்கூடிய படிமமும் இருக்கு. அந்த சமயத்துல இது ரெண்டுத்துக்கும் நடுவுல ஏதாவது இருக்குமா..?
இது ரெண்டுத்துக்கும் இன்டர்மீடியட்டா பிரிட்ஜ் மாதிரி ஏதாவது ஒரு உயிரினம் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்குமான்னு சொல்லி தேட ஆரம்பிக்கிறாங்க. இந்த தேடுதல் வேட்டையில ஒரு குரூப் ஆஃப் பேலியன்ட்டாலஜிஸ்ட் பாத்தீங்கன்னா முக்கியமா பங்கேற்காங்க. அதுல நீல் சுபின் (Neil Shubin) தான் அந்த டீமை லீட் பண்றாரு.

அதிகமான படிமங்கள் லேட் டிவோனியன் ஃப்ளூவியல் சிஸ்டம்லதான் கிடைக்கும் (late Devonian fluvial system). அதுவும் 375 மில்லியன் வருஷங்களுக்கு பின்னாடி போகணும்னா, அதுக்கு ஏத்த மாதிரி அந்த சமயத்துல எங்க நிலம் இருந்திருக்கும்..? அதுவும் முக்கியமா ஆழமற்ற கடல்கள் எங்கெங்க அமைஞ்சிருக்கும்னு சொல்லி அந்த மாதிரியான இடங்களை தேட ஆரம்பிக்கிறாங்க.
இவங்க தேடுன இடத்துல எல்லாம் சில பல்லி மாதிரியான உருவங்கள் சில டெட்ராபோட்ஸ் (Tetrapods) அந்த படிமங்கள் கிடைக்குதே தவிர்த்து மிஸ்ஸிங் லிங்க்ன்னு சொல்லி இவங்க தேடுனது எதுவுமே கிடைக்கல. அதாவது நாம் முன்னே சொன்னது போல இரு உயிரினங்களுக்கு நடுவில் பிரிட்ஜ் போல இருக்கும் ஒரு உயிரினம் கிடைக்கவில்லை.

அந்த தேடுதல் வேட்டை 2004 ஆம் வருஷம் இவங்கள ஆர்டி பகுதியை நோக்கி கொண்டு போகுது. அங்கதான் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்குது. பாக்குறதுக்கு லைட்டா இந்த முதலை போன்ற ஒரு உருவ அமைப்புல இருக்கக்கூடிய மூக்கு போன்ற படிவம் கிடைக்குது. இவங்க எதிர்பார்த்த மாதிரி ஒரு சப்ப மூக்காதாங்க இருக்கு அதாவது முதலை போல இருக்கும்னு சொல்லலாம்.
ஏன்னா ஆழமற்ற அந்த கடலுக்குள்ள இருந்து தலையை எட்டி வெளிப்பக்கமாக வந்து அந்த ஆக்சிஜனை சுவாசிக்கிறதுக்கு தட்டையான முக அமைப்பு அவசியம். சோ இவங்க எதிர்பார்த்த எல்லா கண்டிஷனுமே இது பூர்த்தி பண்ற சமயத்துல நாம தேடி வந்த பொருள் இதுவா இருக்குமோன்னு சொல்லி அந்த படிமத்தை ரீஸ்டோர் பண்றாங்க. மிகப்பெரிய ஷாக் இவங்க தேடுன அந்த மிஸ்ஸிங் லிங்க் இதுதான் இதுக்கு டிக்டாலிக் (Tiktaalik) அப்படிங்கிற ஒரு பேரை கொடுக்குறாங்க.





அங்க வாழ்ந்துட்டு இருந்த பூர்வ குடியினர்களுக்கு சமர்ப்பணமாதான் இந்த பேரை கொடுத்திருக்காங்க. அவங்க பாஷையில டிக்டாலிக்னா நல்ல தண்ணியில் வாழும் மிகப்பெரிய மீனுன்னு அர்த்தம். பார்க்க முதலை போல இருக்க இந்த மீனு நாலுல இருந்து 9 அடி வரைக்கும் மிகப்பெருசா வளரக்கூடியது. இந்த மீன் ஒரு பிரிடேட்டர் அதாவது அதோட பற்களை வைத்து வேட்டையாடி சாப்பிடக்கூடிய ஒரு ஹன்டர் மீன். இந்த மீனுக்கு நாலு ஃபின்ஸ் (துடுப்புகள்) இருக்கு. இந்த ஃபின்ஸ் நாலும் கால்கள் போல ஆழமற்ற கடல்கள்ல இருக்க அந்த சமயத்துல அந்த மீனுக்கு தண்ணிக்கு அடியில கால்களாகத்தான் வேலை செஞ்சிருக்குன்னு சொல்லப்படுவது.

இந்த பின்ஸால அதோட வெயிட்ட கம்ப்ளீட்டா தூக்க முடியாது. மேலும் கால்கள் போல நிறுத்தி நிக்க முடியாது. பட் இருந்தாலும் ஒரு குட்டையிலிருந்து இன்னொரு குட்டைக்கு நடந்து போறதுக்கோ, இல்ல தன்னைத்தானே இழுத்துட்டு போறதுக்கோ இந்த கால்கள் உதவி செஞ்சிருக்கலாம். இதனுடைய முகம் ஏன் சப்பையா இருக்குனு கேட்டா..? ஆழமற்ற குளம் குட்டைகள்ல இது வாழ்ந்துட்டு இருக்கு, அந்த காரணத்தினால தேவைப்படக்கூடிய ஆக்சிஜனை தரைக்கு மேலதான் வந்து எடுக்க முடியும். முதலைகள் போல ஜஸ்ட் தரையிலிருந்து எட்டி பார்த்து அந்த ஆக்சிஜனை சுவாசிக்கிறதுக்காக கூட இதோட அந்த மேல்புற ஸ்ட்ரக்சர்ங்கிறது சப்பையான வடிவத்துல அமைக்கப்பட்டிருக்கலாம்.
அதனுடைய மூக்குன்னு சொல்லப்படுற இந்த துவாரங்கள் மேல்புறம் அதனுடைய தலைக்கு மேலதான் இருக்கும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த படிமத்துல முக்கியமா அவங்க நோட் பண்ண ரெண்டு விஷயங்கள்., இந்த மீனுக்கு கழுத்து இருக்கு. வழக்கமா மீன்களுக்கு கழுத்து இருக்காது. ஆனா இதனுடைய தலையை மட்டும் திருப்பி பார்க்கிற அளவுக்கு இந்த மீனுக்கு கழுத்தமைப்பு அமைஞ்சிருக்கு. தரையில நடக்கும்போது எந்த ஒரு சேதமும் ஏற்படாத அளவுக்கு அதனுடைய விலா எலும்பு ஸ்ட்ராங்கா இருந்திருக்கு. அண்ட் ஃபின்ஸ்லயுமே பார்த்தீங்கன்னா ஃபோர் ஆர்ம்ஸ் (FOREARMS) முட்டி போன்ற அந்த வித்தியாசமான அமைப்புகளோட ஆரம்ப நிலையை (STARTING STAGE) நோட் பண்ணிருக்காங்க.

சோ கம்ப்ளீட்டா ஃபோர் ஆர்ம்ஸ் முட்டி எல்லாம் அதுக்கு டெவலப் ஆகல பட் அதோட ஆரம்ப நிலை இந்த இடத்துல அமைஞ்சிருக்கிறதா நோட் பண்றாங்க. அது மட்டும் இல்லாம இது தண்ணில இருந்து அடிக்கடி தரைக்கு வந்துட்டு போயிருக்கணும். அப்படி வர அந்த சமயத்துல தன்னுடைய உடலை இழுத்துட்டு போறதுக்கு இந்த ஃபின்ஸ் யூஸ் ஆகி இருக்கணும்னு, ஆய்வின் முடிவுல சொல்றாங்க. அதுமட்டுமில்லாம இதுக்கு கில்ஸ் (Gills- செவுல்கள்) இருந்திருக்கு. மீன்கள் போல தண்ணில சுவாசிக்கக்கூடிய அந்த கில்ஸ் இருந்திருக்கு அதே சமயத்துல காற்றை சேமிச்சு வைக்கக்கூடிய அல்லது வெளிப்புறம் இருக்கக்கூடிய அந்த காற்றை சுவாசிக்கிறதுக்கான அமைப்பு அதாவது நுரையீரல் மாதிரியான அமைப்பும் இருந்திருக்கணும்னு கண்டுபிடிக்கிறாங்க.
வழக்கமா இப்ப இருக்கக்கூடிய மற்றும் அப்போதைக்கு வாழ்ந்துட்டு இருந்த நிறைய மீன்களுக்கு ஸ்விம்மிங் பிளாடர்ங்கிறது ஒண்ணு இருக்கும் (காற்றை தக்க வைக்கும் பை). சோ இதுக்குள்ள காற்று நிரப்பி மீனோட அந்த பாயன்சி (Bouncy) அதாவது துள்ளல் மற்றும் மிதக்குற தன்மையை தண்ணிக்கடியில அதிகமாக்கும். சில மீன்கள் இதுல இருக்கக்கூடிய அந்த காற்றை ரத்த அணுகுள்ள வச்சு டைரக்டா அப்சர்வ் பண்ணிக்குமாம். நுரையீரல் போலவே அதுக்கான அந்த ஃபார்மேஷன் இந்த மீன்ல இருக்கற மாதிரி ஆதாரங்கள் கிடைச்சிருக்கு. சோ நுரையீரலும் இருந்திருக்கு, கில்ஸும் இருந்திருக்கு.

மேலும் கிடைக்கப்பட்ட படிமங்களை ஆராய்ச்சி செய்த போது கைகளுக்கான முதல் ஆரம்பக்கட்ட நிலையை அந்த மீனோட ஃபின்ஸ்ல நோட் பண்ணிருக்காங்க. அதுமட்டுமில்லாமல் தலையை மட்டும் திருப்பி பார்க்கக்கூடிய கழுத்தெலும்பு இருந்திருக்கு அண்ட் ரொம்பவே ஸ்லோவான ஆழமற்ற நீர்நிலைகள்ல இது வாழ்ந்துட்டு இருந்துருக்கு. இந்த சமயத்துல தான் தண்ணீர்ல இருக்க மீன்களுக்கும் தரையில வாழ்ற இப்போதைய உயிரினங்களுக்கும் மிக முக்கியமான ஒரு டர்னிங் பாயிண்ட்டா இந்த மீன் அமைஞ்சிருக்கலாம்னு ஆராய்ச்சியின் முடிவுல கண்டுபிடிக்கிறாங்க. டிக்டாலிக் ரோசேயே இதுக்கு முழுசா கொடுக்கப்பட்ட பெயர். அண்ட் இதே மாதிரி பல படிமங்கள் இவங்க தேடுன இடத்துல அந்த ஆர்டிக் லொகேஷன்ல பாத்தீங்கன்னா கிடைச்சிருக்காம். அதை வச்சி இந்த மீன்கள் கூட்டமாதான் வாழ்ந்திருக்குனு முடிவு பன்னுறாங்க.

ஆனா ஏன் இந்த மீன் தண்ணீரை விட்டு தரைக்கு வரணும் கில்ஸ் இருந்திருக்கு உலகம் முழுக்கவே தண்ணீர் இருந்திருக்கு அப்ப அதுலயே வாழ்ந்துட்டு போயிருக்க வேண்டியதுதானேனு, தரைக்கு வரணுங்கிற அவசியம் எதனால ஏற்பட்டதுனு..? இன்னாரம் உங்களுக்கு இப்படிலாம் சந்தேகம் வந்துருக்கோனும். அதற்கு ஒரு காரணம் இருக்கு..! வாங்க அதென்னனு பார்க்கலாம். இதுக்கு முக்கியமா சொல்லப்படுற காரணம் அந்த காலகட்டத்துல நம்ம பூமியில ஆக்சிஜன் பற்றாக்குறைங்கிறது நடந்திருக்கலாமாம். அது முக்கியமா இந்த மீன் ஆழமற்ற நீர்நிலைகளை வாழ்ற அந்த சமயத்துல வெயில் காலங்கள்ல அந்த தண்ணீர் வறண்டு போயிருக்கலாம். இல்லனா அந்த தண்ணீர் வந்து பக்க பக்கமா பிரிக்கப்பட்டிருக்கலாம்.
பக்கம் பக்கமாக என்பது வேறொன்றும் கிடையாது ஒரே குழமாக இருந்த தண்ணீரானது அந்த குளத்தில் உள்ள பல சிறு சிறு குழிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி இருப்பது போல இருக்கக்கூடிய தோற்றத்தை இந்த இடத்தில் கூறி இருக்கிறேன். அதாவது வெயிலின் காரணமாக ஒரே குழமாக இருந்த குளத்தின் தண்ணீரானது கொஞ்சம் கொஞ்சமாக வற்றி பல பள்ளங்கள் நிறைந்த சிறு குழியில் நீர் தேங்கி இருக்கும் அமைப்பை உருவாக்கியது. அச்சமயத்தில் அந்த மீன்கள் ஒரு குழியில் இருந்து இன்னொரு குழிக்கு போவதற்காக தண்ணீரை விட்டு நிலத்திற்கு வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. இது போல தண்ணீர் வறண்ட காரணத்தினால் ஒரு குளத்தில் உள்ள தண்ணீரும் குறைக்கப்பட்டிருக்கும், ஆக்சிஜனும் குறைக்கப்பட்டிருக்கும் அண்ட் தண்ணில வாழக்கூடிய இந்த மீன்களுக்கான உணவும் குறைக்கப்பட்டிருக்கலாம்.
சோ உணவு, ஆக்சிஜன், தண்ணீர் இல்லாத அந்த சமயத்துல ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்கு நகரக்கூடிய ஒரு சூழ்நிலை இந்த மீன்களுக்கு ஏற்பட்டது அப்படித்தான் இது இவால்வ் (Evolve) ஆகி இருக்கணும்னு சொல்லி ஆய்வின் முடிவு கூறுகிறது. உயிருக்கு ஒரு ஆபத்துனா தரைக்கும் போக நான் தயார்ங்கிற மாதிரி இந்த மீனுக்கு தோணிருக்கும் போல. பட் டக்குன்னு இந்த எவல்யூஷன் ஒரே நாள்ல நடக்கல இந்த மீனுக்கு லங்ஸ் வரமாதிரி எவல்யூஷன் பல ஜெனரேஷனுக்கு முன்னாடியே உருவாகியிருக்கணும்.
அதே மாதிரி முன்னாடியே சொன்னேன்ல சில மீன்களுக்கு ஃபோர் ஆர்ம்ஸ், அந்த கைகள்ல இருக்க எலும்பு போல சில அமைப்புகள் முன்னாடியே தோன்றி இருக்கு. இதுக்கு முன்னாடியே நடந்த அந்த குட்டி குட்டி எவல்யூஷன்ங்கிறது இந்த மீனை தரைக்கு புஷ் பண்ணிருக்கு. அது மட்டும் இல்லாம அந்த சமயத்துல ஆழ்கடல்ல போட்டி அதிகமா இருக்குங்க. அதனால இனிமே தண்ணில நம்மால வாழ முடியாதுங்ற ஆபத்தான சூழ்நிலை ஆழ்கடல்ல நடந்திருக்கலாம். சோ தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகுமோ அப்படின்னு சொல்லி பயந்திருந்த டிக்டாலிக் முட்டையிட்டுறதுக்காக தரைக்கு வந்திருக்கலாம்.
ஏன்னா அந்த காலகட்டத்துல தரைவால் உயிரினங்கள் ஒண்ணுமே இல்லைல. சோ தன்னுடைய எதிர்காலத்தை ஒரு சேஃபஸ்ட்டான (Safest) லொகேஷன்ல ஆரம்பிக்கலாங்கிறதுக்காகவே முட்டையிட்டுறதுக்காக டிக்டாலிக் தரைக்கு வந்திருக்கலாம். இப்படி அடிக்கடி தரைக்கு வந்துட்டு போக இருக்கவும் எவல்யூஷன் ப்ராக்ரஸ்ல (progress) ஆம்பிபியனாகவும் (Amphibian) அடுத்தடுத்த ப்ராக்ரஸ்ல கம்ப்ளீட் நிலத்துல வாழக்கூடிய ஒரு உயிரினமாகவும் மாறி இருக்கக்கூடும். இதே மாதிரி உலகத்தோட பல மூளைகளிலும் சில மீன்கள்ல நடந்த சில வித்தியாசமான மாற்றங்களால உயிரினங்கள் தரைக்கு வந்திருக்கக்கூடும்.
இந்த ஒரு மீனாலதான் இப்ப இருக்கக்கூடிய மனிதர்களே தரையில வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்ல முடியாது. இப்போதைக்கு தரையில வாழ்ற பல உயிரினங்கள் உருவாகுறதுக்கே இந்த டிக்டாலிக்கும் ஒரு முக்கிய காரணம். அதாவது அந்த எவல்யூஷன் ப்ராக்ரஸ்ல ஒரு முக்கியமான ஸ்டேஜ்ல ஒரு முக்கியமான டர்னிங் பாயிண்ட்டா இந்த டிக்டாலிக் அமைஞ்சிருக்குன்னு சொல்றாங்க. இந்த டிக்டாலிக்குக்கு முன்னாடியோ இல்ல டிக்டாலிக் கூடவே சேர்ந்தோ இன்னும் நிறைய வித்தியாசமான உயிரினங்கள் இந்த உலகத்தோட பல வித்தியாசமான மூளை முடக்குகள்ல தோன்றி இருக்கலாம்.
நம்மகிட்ட இப்போதைக்கு இந்த ஒரு படிமம் மட்டும்தான் கிடைச்சிருக்கு இதே மாதிரி நம்ம அறியாத நம்ம கண்ணுக்கு புலப்படாத நம்ம கேள்வியே படாத பல உயிரினங்கள் கூட தரைக்கு வந்து அதிலிருந்து உயிர்கள் பல வகையில பிரிக்கப்பட்டு விதவிதமா இந்த உலகம் முழுக்கவே பரவி இருக்கக்கூடும்னு சொல்லி நம்பப்படுகிறது. நமக்கு கிடைச்ச எவிடன்ஸ்ல மிஸ் லிங்க் படி இந்த டிக்டாலிக் ஒரு முக்கியமான படிமமா கன்சிடர் பண்ணப்படுது. இதே மாதிரி இன்னும் எத்தனை படிமங்கள் மிஸ்ஸிங் லிங்க்கா இருக்குன்னு தெரியலையே அண்ட் எதிர்நோக்கி வர 100 கோடி வருஷங்கள்ல எந்த உயிர் எப்படி பரிணமிக்கும்னு தெரியலயேங்கிற அந்த எண்ணம் நம்மல இன்னும் ஆச்சரியப்படுத்துதுங்க.
இதுவரை நீங்கள் படித்த இந்த தொகுப்பினை ஒரு வீடியோவாக எடிட் செய்து கீழே இணைத்துள்ளேன் முழுவதும் படித்த நண்பர்களால் மட்டுமே அந்த வீடியோவை புரிந்து கொள்ள முடியும் வீடியோவை பாருங்கள் படித்து தெரிந்துகொண்டவைகளை அணு அணுவாக ரசிப்பீர்கள்
அவ்வளவுதான் நண்பர்களே இன்னைக்கான பதிவு இதோடு முடிஞ்சிடுச்சி மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝
இதுவரைக்கும் பொறுமையா இவ்ளோ பெரிய கட்டுரையை நீங்க படிச்சிருக்கீங்கனா உங்களுக்கு பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதனால் நமது வலைதளத்தில் புதிதாக வரக்கூடிய புதிய புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாசை கிளிக் செய்து அதில் உள்ள telegram எல்லோ அல்லது டெலிகிராம் இல்லாத நபர்கள் வாட்ஸ் அப்பில் இணைந்து கொள்ளுங்கள் உடனடியான அப்டேட்டுகளை உடனே பெறுவீர்கள்.