எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

இந்த பதிவில் எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை அதாவது ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றியும், கிளியோபட்ராவை பற்றியும் இந்த பதிவானது சில விஷயங்களை கூறும். மேலும் எகிப்து கல்ச்சரை பயன்படுத்தி நமது தமிழ் கல்ச்சருகாக ஒரு தகவலை சொல்ல வந்திருக்கிறேன். தயவு செய்து புறக்கணிக்காமல் முழுவதையும் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். நிச்சயமாக நீங்கள் படிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் நீங்கள் நிச்சயமாக பதில் அளிப்பீர்கள் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஈஜிப்ட் (Egypt) சொன்னாவே நமக்கு ஞாபகம் வர முதல் விஷயம் கிளியோபட்ரா தான். கிளியோபட்ரா பேரழகி மட்டுமின்றி அதையும் தாண்டி அவங்களோட ஆட்சி அதாவது அரசோட அந்த ஆளுமைத்தனத்தினாலதான் இப்ப வரைக்கும் கிளியோபட்ராவோட பேரு இங்க வரைக்கும் தெரிய வந்திருக்கு. இருந்தாலும் கிளியோபாட்ராவ பத்தி சொன்ன கதையே எல்லாருமே திருப்பி திருப்பி சொல்றாங்க. ஆனா இப்ப வரைக்கும், இந்த நிமிஷம் வரைக்கும் பிரமிட்ல இன்னும் ஆர்கியாலஜிஸ்ட் புதிய புதிய மருமகளை கண்டுபிடிச்சுட்டு தான் இருக்காங்க.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

அப்படி இருக்குற இந்த சமயத்துல தான் ரீசன்ட்டா ஈஜிப்ட்ல கிளியோபாட்ரா பத்தி நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. அப்படி அவங்க கண்டுபிடிச்சது என்னென்ன அப்படிங்கறத தான் இந்த பதிவுல சொல்ல வந்திருக்கேன். சோ வாங்க இன்னைக்கான பதிவுக்குள்ள போகலாம்.

பொதுவாவே கிளியோபட்ராவை பேரழகி அப்படின்னு சொல்றது நமக்கு எல்லாருக்குமே தெரியும். படத்துல கூட கிளியோபட்ராவை அழகான வெள்ளை உடலோட தான் காமிப்பாங்க. ஆனா நிஜமாவே கிளியோபட்ரா கலரு கருப்புனு சொன்ன உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க.! கருப்பா இருந்தாலும் கலையாகவும், அழகாகவும் இருந்திருக்காங்க பல இடத்துல இவங்கள கருப்பழகி அப்படின்னு சொல்லிதான் மென்ஷன் பண்ணிருக்காங்க.

ஆனா இப்ப வரைக்கும் நடந்துட்டு இருக்குற ரேசிசம்னால கிளியோபட்ரா வெள்ளைதான் அப்படிங்கிற மாதிரி எல்லா படத்துலயும் காமிச்சிருக்காங்க அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது. கிளியோபட்ரா தான் இறந்தபோது என்னோட உடல் எந்த ஒரு ஆணுக்கும் கிடைக்கக்கூடாதுன்னு சொல்லிதான் இறந்து போனாங்க. அப்படி இருக்குறப்பதான் இவங்களோட உடல் எங்க எங்கன்னு பல ஆண்கள் தேடிட்டு இருந்தாங்க. ஏன் கடைசியா 2021 வரைக்கும் தேடாத ஆண்களே இல்லை. அதாவது தப்பான எண்ணங்களையும் தாண்டி நிஜமாவே கிளியோபட்ரா யார் என்ற ஒரு மோகத்துல தேடின ஆண்கள் எத்தனையோ பேர்.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

அப்படி இருக்குற இந்த சமயத்துலதான் கிளியோபட்ரா சொன்ன மாதிரியே அவரோட ஆசையும் நிறைவேறுச்சுனே சொல்லலாம். அதாவது தான் இறந்த பிறகு எனது உடல் எந்த ஒரு ஆணுக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் சொல்லியிருந்தார் அல்லவா. அதுதான் இப்போது நடந்தது அதாவது அவரது உடலானது எந்த ஒரு ஆண்களாலயும் கண்டுபிடிக்க முடியல. இப்ப கூட ஒரு பெண் தான் கண்டுபிடிச்சிருக்காங்க. அதுவும் நைல் நதி ஓரத்துல இரண்டு தங்க தட்டுகள் பூட்டப்பட்டுள்ள ஒரு மம்மிஸை கண்டுபிடிக்கிறாங்க. அதுல ஒன்னு கிளியோபட்ராவா இருக்க அதிக சான்சஸ் இருக்கிறதா சொல்றாங்க.

இதையும் தாண்டி எதை வச்சு இதை ப்ரூவ் பண்றாங்கன்னா அந்த மம்மி கிட்ட கீழ கிளியோபெட்ரா முகம் பொருந்திய காசுகளை கண்டுபிடிச்சிருக்காங்க. குட்டி குட்டி கிளியோபெட்ரா சிலை பொருந்திய முகங்களையும் கண்டுபிடிச்சிருக்காங்க. இதெல்லாம் பார்க்கும்போது கிளியோபெட்ராதான் இதுன்னு கன்ஃபார்மும் பண்ணிருக்காங்க.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

இப்போ நீங்க பார்த்துட்டு இருக்கிற பிரமிட்ஸ் மே பி உங்களுக்கு பிரவுனா தெரியும். இல்லனா இது மண்ணோட கலர்ல தான இருக்குன்னு சொல்லுவீங்க. ஆனா நிஜமாவே பிரமிட்ஸ் லைம்ஸ்டோனால கட்டப்பட்ட ஒண்ணு. அப்போ அழகா வெள்ளை மாளிகை போல ஜொலித்திட்டு இருந்துச்சு. ஆனா இப்பதான் மண்ணு பட்டு அது ஒழுங்கா பராமரிக்காம, மேலும் சரி வர பார்த்துக்காம இருந்ததால்தான் இப்போ இந்த கலர்ல காட்சி அளிக்குது அப்படிங்கறதும் குறிப்பிடத்தக்கது.

See also  இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய கொள்ளையர்கள்

பிரமிட் கட்டுனது கோவில் மாதிரியே இருக்கணுங்கிறதுக்காக தான். அதாவது எப்படி நம்மளோட தமிழ் கோவில்களுக்கு முன்ன அந்த கோபுரத்துல சிலைகள் எல்லாம் வச்சிருப்பாங்களோ அதே மாதிரி பிரமிட்ஸ்கு உள்ள சிலை வச்சிருக்காங்க. இதற்கு காரணம் நல்ல நேர்மறை எண்ணங்கள் வரணுங்கிறதுக்காக. இன்னும் தெளிவா சொல்லணும்னா எப்படி நம்ம கோவிலுக்கு போனாலோ அல்லது கோவில் சுத்தி வந்தா பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்னு நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்களோ அதே மாதிரி எகிப்திய மக்களும் அந்த பிரமிட சுத்தி வந்திருக்காங்க.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

இதிலிருந்து தமிழர்களுக்கும், எகிப்தியர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு உங்களுக்கு தோணுதுல அத பத்தி இப்போ பாக்கலாம்.

எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் என்னமோ நிறைய சிமிலாரிட்டிஸ் இருக்கு. ஆனா இதெல்லாம் உலகத்துக்கு தெரியாம பூட்டி வச்சிருக்காங்க. இப்ப அத பத்தி எல்லாத்தையும் தான் பார்க்க போகிறோம். அதாவது எகிப்திய மக்கள் உடுத்துற உடை

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

இதை பார்த்த உடனே உங்களுக்கு எதுவுமே கண்டுபிடிக்க முடியாது. ஆனா நீங்க நல்லா உற்று கவனிச்சா ஒரு விஷயம் நல்லா தெரியும்.அது வேற ஒன்னுமில்ல இந்த எகிப்திய மன்னன் அணிஞ்சிருக்கிற ஆடை வேஷ்டி. நம்ம தமிழகத்துல இருந்த ஒரு விஷயம் ஆச்சே இதுல இருந்தே தெரியுது தமிழர்களுக்கும் எகிப்திய மக்களுக்கும் எந்த மாதிரி ஒரு நட்புறவு இருந்திருக்குன்னு.

எகிப்திய மக்கள் இறந்ததுக்கு அப்புறம் திருப்பி வருவாங்கன்னு சொல்லி மம்மிஃபிகேஷன் பண்ணி இறந்தவர்களோட உடலை எல்லாம் எப்படி பதப்படுத்தி வச்சிருந்தாங்களோ, அதே மாதிரி தமிழர்களும் பண்ணிருக்காங்க அப்படின்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்குல. இது உண்மைதான் நண்பர்களே முதுமக்கள் தாழியில இறந்து போனவங்களை அந்த பெரிய பானையில அடைச்சு மண்ணுல புதைச்சு வைப்பாங்க. இதே மாதிரிதான் அங்கேயும் நம்புனாங்க. அதாவது இறந்தவர்கள் திருப்பி வருவாங்கன்னு. இப்ப அதேதான் ஈஜிப்ட்லயும் சரி தமிழ்நாடுலயும் சரி லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி இதை ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்காங்க.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

இதுவரைக்கும் நான் சொன்னது சிமிலாரிட்டிஸ், அதாவது எகிப்து கல்ச்சுருக்கும் நமது தமிழ்நாட்டு கல்சருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் தான். ஆனா இப்ப நான் உங்ககிட்ட சொல்லப்போறது ஆதாரங்கள். ஈஜிப்ட்ல ஆர்க்கியாலஜிஸ்ட் எப்பவுமே ஏதாவது மர்மமான தொல்லியல் பொருட்கள் கிடைக்குமா என்று தேடிட்டே தான் இருப்பாங்க. அப்படி புதுசு புதுசா தொல்லியல் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது ஒரு பானையோட ஓடு கிடைக்குது. அந்த ஓடுல தமிழி அப்படிங்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து எடுக்குறாங்க.

இந்த தமிழி அப்படிங்கறது தமிழோட முதல் பெயர்தான். தமிழி என்ற சொல்லானது கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம் மாற மாற தமிழ்னு மாற ஆரம்பிச்சது. இப்படி இருக்கிற இதே நிலையில தான் நம்ம தமிழகத்துல பல்வேறு இடங்களில் ரோமானிய பானைகளும் கிடைச்சிருந்தது. இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா ஈஜிப்ட்ல ரோமானியர்கள் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாங்க. அதே மாதிரி தமிழகத்துல தமிழ் மக்கள் இருந்தாங்க. இப்ப உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் தமிழகத்துக்கும், எஜிப்துக்கும் எவ்வளவு சம்பந்தம்னு. தமிழகத்துல எப்படி பொங்கல் கொண்டாடுறோமோ அதே மாதிரி எஜிப்ட்லயும் பொங்கல் கொண்டாடப்படுதுன்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமா இருக்கும்.! இது உண்மைதான்.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

தமிழகத்துல பொங்கல் எதுக்காக கொண்டாடப்படுது இயற்கைக்கு நன்றி சொல்லணும் அப்படிங்கறதுக்காக. அதாவது சூரியனுக்கும் உழவுத் தொழிலுக்கு உதவக்கூடிய மாட்டுக்காகவும் அந்த விழா கொண்டாடப்படுது. அதே மாதிரி எஜிப்ட்ல சூரியனை ரா அப்படின்னு பேர் சொல்லி அழைக்கிறாங்க. இதே மாதிரி அவங்களும் சூரியனை வணங்குறதுக்காக ஒரு விழா கொண்டாடப்பட்டுள்ளது அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது. எல்லாருக்கும் சிலப்பதிகாரத்தை பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதுல கண்ணகி தன் கணவன் இறந்த உடனே கோவலனோட வெட்டிய பாகங்களை ஒண்ணா சேர்த்து மறுபடியும் வாழ்ந்ததா ஒரு கற்பிதம் தகவல் நம்ம தமிழகத்துல இருந்துட்டேதான் வருது.

See also  தஞ்சை பெரிய கோவிலை மிஞ்சிய அதிசயம்

இதே மாதிரிதான் ஈஜிப்ட்லயும் நடந்திருக்கு ஐசிஸ், ஓரிசிஸ் அப்படிங்கிற இவங்க இருவருமே காதலர்கள். ஓரிசிஸ் ஓட தம்பி செத் அப்படிங்கறவங்க ஓரிசிஸை கொன்னனால ஐசிஸ் பயங்கர கோபத்துல இருந்தாங்க. அதுக்கப்புறம் தன்னுடைய காதலனை காப்பாத்தனுங்கிறதுக்காக அதே மாதிரி வெட்டப்பட்ட பாகங்களான தன்னுடைய காதலனை ஒன்னு சேர்த்திருக்காங்க. அதுக்கப்புறம் என்ன கோவலன் எப்படி உயிரோடு வந்தாரோ அதே மாதிரி ஓரிசிஸூம் உயிரோட வந்துட்டாரு. இந்த கதையும் கோவலன் கண்ணகி கதையும் ஒரே மாதிரி இருக்கேன்னு கேட்டீங்களா இதுவும் உண்மைதான். சிலப்பதிகாரத்துல என்ன கதை சொன்னாங்களோ அதே மாதிரி ஈஜிப்ட்லயும் ஒரு கதை இருக்கு.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

இதையும் தாண்டி மிஸ்டரியா சொல்லணும்னா இப்ப நான் சொன்ன ஐசிஸ், ஓரசிஸ் அப்படிங்கிற இந்த இரு மனிதர்களை அப்போ கடவுளா பார்த்தாங்க. எப்படி நம்ம தமிழகத்துல கண்ணகிய கடவுளா பார்க்கிறோமோ அதுபோல. கடவுளா பார்த்தது, நிஜமாவே வணங்கினது, தன்னோட உயிர் அங்கதான் போகணும் என்னோட மம்மிய அங்கதான் வைக்கணும்னு சொன்ன ராணி யாருன்னு தெரியுமா.? அது வேற யாரும் கிடையாது கிளியோபட்ரா தான். இந்த பதிவுல உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் கிளியோபட்ரா வரைக்கும் நம்மளுடைய தமிழ் கதைகள் போயிருக்குனு.

எஜிப்துக்கும், தமிழகத்துக்கும் எவ்வளவோ சம்பந்தங்கள் இருக்கு. ஆனா அரசியல் பின்னணியினாலயும், தமிழ் வளரவே கூடாது அப்படின்ற பின்னணியினாலயும் இத்தனை விஷயங்கள் தெரியாமலே போயிருக்கு. இப்போ உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்ச தமிழர்கள், தெரியாத தமிழர்கள் எல்லாருக்கும் இந்த பதிவை அனுப்பி தமிழ் எப்படிப்பட்டது அப்படிங்கறத சொல்லுங்க.

இது மட்டும் இல்லைங்க தமிழ் வளரவே கூடாது என்பதற்காக கூடிய மொத்த லைப்ரரியும் தீ வைத்து கொளுத்துனாங்க பாருங்க அந்த இடத்திலேயே தமிழரோட கெத்துங்கறது எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று பாருங்கள். நம்ம உயிரோடு இருக்கிற வரைக்கும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் நம்ம தாய்மொழியான தமிழர் சொல்லி தந்துகிட்டே இருப்போம். உலகத்துல முதல் முதலில் தோன்றின மொழி அப்படிங்கிறது நம்ம தமிழ் தான் என்பதற்கான ஆதாரமும் சாட்சியும் இருக்கு. அப்படி இருக்கும்போது நமது இந்தியாவில் இப்ப மும்மொழி கல்வி, நாக்க போட்டு வலினு ஏதேதோ சொல்லி தமிழையே இல்லாம பண்ணிடுவாங்க போல.

எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

அட ஆமாங்க இதுவரைக்கும் இந்தியாவுக்குன்னு எந்த ஒரு நேஷனல் லாங்குவேஜியும் அங்கீகரிக்கப்பட்டதா நான் கேள்விப்பட்டதில்லை. ஆனா இன்னைக்கு கூகுள்ல போய் தேடும் போது ஹிந்தியை நேஷனல் மொழின்னு கூகுள் சொல்லுது. இப்படி இந்திய நேஷனல் மொழின்னு google சொல்றதுனால தமிழ் மொழிக்கான அங்கீகாரம் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு வருது.

நம்ம தமிழர்கள் எல்லாம் சேர்ந்து google க்கு எடுத்து சொன்னோம்னா கூகுள் வந்து அந்த தவறான தகவல் நீக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த பதிவு முழுசா நீங்க படிச்சு இருக்கீங்க அண்ணா நிச்சியம் போய் கூகுள்ல தேடிப் பாருங்க ஹிந்தியில் சொல்லித்தான் நேஷனல் லேங்குவேஜ்ன்னு காட்டும். எனக்கு தெரிஞ்சு இப்ப வரைக்கும் இந்தியாவுக்குனு ஒரு நேஷனல் லேங்குவேஜ் கூட கிடையாது அப்படி இருக்கும்போது ஹிந்தியை மட்டும் ஏன் கூகுள் காட்ட வேண்டும். இதில் ஏதேனும் அரசியல் ஒளிந்து இருக்கிறதா என்று எனக்கு புரியவில்லை.

இந்த பதிவை பத்தி நான் உங்களுக்கு கருத்துக்கள் என்ன என்பதை மறக்காமல் கமெண்ட் இல் சொல்லுங்கள். இந்த பதிவை உருவாக்குவதற்கான முக்கிய நோக்கம் என்னவென்றால் என் மொழி மீது நான் வைத்திருக்கும் பற்று. அதனால் எகிப்து கலாச்சாரம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் உள்ள ஒற்றுமைகளை பயன்படுத்தி இந்த பதிவினை நான் எழுதியிருக்கிறேன். உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் வெளிநாட்டு பார்லிமென்ட் சபையில் கூட தமிழ் வசனம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன் அந்த வசனம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா.?

See also  இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய கொள்ளையர்கள்
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை
எகிப்து மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை

மேலும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தமிழர்களாகிய நாம் பெருமைப்படும் அளவிற்கு இவ்வளவு பெரிய வசனத்தை எழுதிய புலவர் யார் என்பதையும், தமிழ் மொழி அழியக்கூடாது என்பதற்காக பண்டைய காலத்தில் ஒரு மன்னன் கூட சங்கம் வைத்து தமிழை வளர்த்தினார் அவர் யார் என்பதையும் மறக்காமல் அமைந்தில் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

இவ்வளவு நேரம் பொறுமையாக இந்த பதிவை படித்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு பல சுவாரசியம் நிறைந்த புதிய புதிய தகவல்களை தினந்தோறும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது மட்டும் இன்றி நமது வலைதளத்தில் தினந்தோறும் பல்வேறு விதமான சுவாரசியம் நிறைந்த தகவல்களை உங்களுக்காக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவைகளின் உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்கு கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து அதில் உள்ள telegram மற்றும் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் இணைந்திருப்பது மூலம் நான் எழுதக்கூடிய ஒவ்வொரு சுவாரஸ்யம் நிறைந்த தகவல்களின் அப்டேட்களை உங்களுக்கு உடனடியாக என்னால் கொடுக்க முடியும். மேலும் நமது இந்த நண்பானது எப்போதும் இணைந்தே இருக்கும்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறிக்கொண்டு இந்த பதிவை இதோடு முடிக்கிறேன். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝

நண்பர்களே மறக்காமல் நான் கேட்டிருக்கும் மூன்று கேள்விகளுக்கும் விடையுங்கள். எந்த அளவிற்கு நீங்கள் தமிழ் மொழியின் மீது பற்றோடு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த கேள்வி ஒரு பரிசாக இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

உங்களுக்கு இன்னும் நேரம் இருந்தால் இந்த பதிவையும் படித்துப் பாருங்கள்..👇

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
இங்கே கொடுக்கப்பட்ட படமானது மார்புச் சளி மற்றும் அது நுரையீரல் மற்றும் இதயத்தை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குவதற்கான ஒரு மருத்துவ விளக்கப்படமாக உள்ளது. தவறான கண்ணோட்டத்தில் யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

Edit: நமது பதிவை படித்த நண்பர்கள் பலரும் இந்தியாவிற்கு நேஷனல் லாங்குவேஜ் என்று எதுவும் கிடையாது ஹிந்தி என்று தவறாக காட்டுகிறது அதை தயவு செய்து நீக்குங்கள் என்று ரிப்போர்ட் செய்ததாக எனக்கு நீங்கள் பேஸ்புக்கில் மெசேஜ் செய்திருந்தீர்கள் அதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது googleலும் அது நீக்கப்பட்டு இருப்பதாக நிறைய நண்பர்கள் சொன்னீர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நானும் ஒருமுறை கூகுளில் இதே கேள்வியை கேட்டேன் முன்பு வந்த பதிலை விட இப்போது டிஃபரண்டான பதிலை கூகுள் தருகிறது சந்தோஷமாக இருக்கிறது. ஆமாங்க என்னன்னு சொல்றது நேஷனல் லாங்குவேஜ் ஹிந்தி என்று google காட்டுவதால் தமிழில் எந்த படமும் மொழி பெயர்க்க மாட்டேன் என்கிறார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். உதாரணத்திற்கு கொரியன் வெப்சீரியஸ் இந்தியாவிற்கு வந்தால் முதலில் ஹிந்தியில் தான் வருகிறது தமிழில் வரவில்லை இதுவே மிகப்பெரிய வருத்தம்.

இதை சும்மா காமெடிக்காக சொன்னேன் நண்பர்களே. ஆனாலும் இதுதான் உண்மையும் கூட. வெளிநாட்டவர்கள் இந்தியாவில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துவிட்டால் கூகுளில் எது அபிசியல் லாங்குவேஜ் என்று தேடிப் பார்ப்பார்கள். அப்படி தேடும்போது ஹிந்தி வந்தால் முதலில் இந்திக்கு தான் முதல் உரிமை கொடுப்பார்கள். நான் சொல்வதில் காமெடி இருந்தாலும் ஒரு பாய்ண்ட் இருக்கிறது அல்லவா…🤣

இந்தப் பதிவை நான் எழுதி முடித்த பிறகு என் கண்ணில் பட்ட ஒரு வீடியோவை உங்களுக்காக இந்த இடத்தில் சமர்ப்பிக்கிறேன். இந்த வீடியோவும் நமது பதிவுக்கு ரிலேட்டாக இருப்பதால் இந்த இடத்தில் வீடியோவை இணைத்து இருக்கிறேன் மறக்காமல் வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு அதைப் பற்றியும் கருத்தில் கூறுங்கள் எப்படி இருந்தது என்று.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏