குறைந்த விலையில் விண்வெளியில் பயணிப்போம் வாருங்கள்.. இந்த கட்டுரைக்கு ஏன் இந்த தலைப்பு வச்சேன்னா..? முழுசா படிச்சு பாருங்க நிச்சயமா உங்களுக்கு ஏன் இந்த தலைப்பு வச்சேன்னு புரியும். நான் சின்ன குழந்தையா இருக்கும்போது ஒரு விடுகதை சொன்னாங்க வீட்டுல. அந்த விடுகதைக்கு ஏத்த கதையா தான் இந்த கட்டுரை இருக்கும். அப்படி என்னடா விடுகதை அதுனு கேக்குறீங்களா..?
அப்பா காசை எண்ண முடியாது அம்மா சேலையை மடிக்க முடியாது அது என்ன..?
இதுதான் அந்த விடுகதை இந்தப் பதிவை ஃபுல்லா படிச்சிட்டு இந்த விடுகதைக்கான கமெண்ட் பதில மறக்காமல் கமெண்ட்ல சொல்லிட்டு இந்த பதிவை பத்தி நான் உங்களோட தனிப்பட்ட கருத்தையும் பதிவிடுங்க. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பதிவு ரெடி பண்ணி இருக்கேன் அதுக்காகவாது கொஞ்சம் பொறுமையா படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ளீஸ்…🙏🙏🙏…😢

ஹலோ நண்பர்களே நம்மல்ல நிறைய பேரு இந்த டயலாக்கை அடிக்கடி யூஸ் பண்ணி இருப்போம். அதாங்க அவரு ரொம்ப பெரிய ஆளு. இல்லைன்னா என்னை விட பெரிய ஆளு யாருமே கிடையாதுன்னு மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஏன் நம்மளே கூட சில நேரத்துல நீ என்ன அவ்வளவு பெரிய ஆளான்னு சொல்லி இருப்போம். ஆனா உண்மையிலேயே நம்ம எவ்வளவு பெரிய ஆளுன்னு இதுவரைக்கும் நீங்க யோசிச்சு பார்த்திருக்கீங்களா.? அதுவும் இந்த பிரபஞ்சத்துக்கு முன்னாடி மனிதர்களாகிய நம்ம எவ்வளவு பெருசுன்னு உங்களுக்கு தெரியுமா.?
இந்த பதிவை முழுசா படிச்சு பார்த்ததுக்கு அப்புறம் இந்த பிரபஞ்சமோடு நம்மள ஒப்பிடும்போது நம்மளுடைய எக்ஸிஸ்டன்ஸ் (Existence) அதாவது இருப்பை பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் இனி யார்கிட்டயும் நான்தான் பெரிய ஆளுன்னு பெருமையா பேசவே மாட்டோம். ஏன்னா இயற்கைக்கு முன்னாடி நாம்ம எவ்வளவு பெரியவங்கன்னு இன்னைக்கான பதிவுல விரிவா பார்ப்போம். வாங்க இந்த பதிவு ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருக்க போகுது சோ இதை கண்டிப்பா உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. புது வியூவர்ஸ் நம்ம telegram சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா இம்மீடியட்டா சப்ஸ்கிரைப் பண்ணுங்க, அப்பதான் நம்ம போடுற புது பதிவுகளோட விரைவான அப்டேட் உங்களுக்கு உடனே நோட்டிஃபை ஆகும்.

இன்னைக்கு தேதி வரைக்கும் பூமியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.1 பில்லியனை தொட்டுருக்கு. இந்த 8.1 பில்லியன் மக்கள் எல்லோரையும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெரிய பகுதியில ஒரே நேரத்துல இருக்கவைக்க முடியும்னு சொன்னா உங்களுக்கு ஆச்சர்யமா இருக்குல..! லாஸ் ஏஞ்சல்ஸ் 1300 km பரப்பளவை கொண்ட ஒரு தெற்கு காலிபோர்னியா நகரம். இங்கே இருந்து அப்படியே 10000km ட்ராவல் (Travel) பண்ணி விண்வெளிக்கு வந்தா நம்ம கண்ணுக்கு பூமி உருண்டையா தெரியும்.
லாஸ் ஏஞ்சல்ஸ ஒப்பிடும்போது பூமி ரொம்பவே பெருசு. நம்ம பூமியின் விட்டம் சுமார் 12742 km. அதுவே சந்திரனின் விட்டம் 3475 km. சந்திரனோட இந்த இடத்துக்குள்ள ஒரு லட்சம் இமயமலைகளை பொருத்த முடியும். அதுவே சந்திரன் போன்ற ஒரு கோளை பூமியில 50 பொருத்த முடியும். அப்போ நம்ம பூமியில் 50 நிலாவ அடச்சி வைக்க முடியும். அப்போ யோசிச்சு பாருங்க பூமி எவ்வளவு பெருசுன்னு.! இப்போ உங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்..! ஆனா இங்க சிந்திக்க வேண்டிய விஷயம் என்னன்னா நாங்கதான் பெரியவங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் மனிதர்கள் எங்க இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.?

நீங்க இன்னும் ஒத்துக்க முடியாதுன்னு சொன்னா சந்திரன் பூமியிலிருந்து 384000 km தொலைவுல இருக்கு. இந்த டிஸ்டன்ஸ்ல நம்ம சோலார் சிஸ்டம்ல இருக்கும் எட்டு கோள்களையும் பொருத்த முடியும். இதுவே சூரியனை பத்தி சொல்லணும்னா சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. சூரியனோட விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர். இது எவ்வளவு பெருசுன்னு சொல்லணும்னா.? சூரியன்ல 13 லட்சம் பூமிகளை பொருத்த முடியும். அதாவது இதோட அளவை நம்ம கண்ணை மூடி கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது. சூரியனோடு ஒப்பிடும் போது மனிதர்களாகிய நாம்ம சின்ன தூசி மாதிரிதான்.
அட மனிதர்கள் என்ன.! பூமியையோ, சந்திரனையோ கூட சூரியன் கூட ஒப்பிட முடியாது. நம்ம சோலார் சிஸ்டம்ல இருக்கும் மிகப்பெரிய கோளான ஜூபிட்டர்னாலயே, 1300 பூமிகளை அதுக்குள்ள வைக்க முடியும்னா பாருங்களேன். அதே மாதிரி சூரியனுக்குள்ள 1000 ஜூபிட்டர்களை பொருத்த முடியும். அப்போ சூரியன் பூமியை விட ஜூபிட்டரை விட எத்தனை மடங்கு பெருசுன்னு யோசிச்சு பாருங்க..! இதுவரைக்கும் நான் சொன்னது எல்லாமே வெறும் ஆரம்பம்தான். இனிமே தான் மெயின் ஷோவே இருக்கு. நம்ம சூரிய குடும்பம் அதாவது சோலார் சிஸ்டமோட விட்டம் சுமார் 287 பில்லியன் கிலோமீட்டர்.

இந்த சூரிய குடும்பத்துல எட்டு கிரகங்களும் அஞ்சு டிவார்ப் (Dwarf planets) கிரகங்களும் லட்சக்கணக்கான ஆஸ்ட்ராய்ட்ஸூம் கோடிக்கணக்கான மீட்ராய்ட்ஸும் (Meteoroids) இருக்கு. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையிலான தூரம் சுமார் 45 பில்லியன் கிலோமீட்டர். சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் நடுவுல ஒரு லைன நம்ம வரைஞ்சோம்னா அந்த லைன்ல 3000 சூரியன்களை பொருத்த முடியும். அப்போ இவ்வளவு நேரம் சூரியன் எவ்வளவு பெருசுன்னு சொன்னதே இப்போ நம்ம சோலார் சிஸ்டம்ல அது எவ்வளவு சின்னதா இருக்குன்னு பாருங்க. இந்த இடத்துல நம்ம எங்க பொருந்துவோம்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

ப்ளூட்டோ கிரகத்துல இருந்து சூரியனை பார்த்தா எப்படி தெரியும் என்பதை ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது நம்ம சோலார் சிஸ்டம்ல சூரியன்ல இருந்து ரொம்ப தூரமா இருக்கிறது ப்ளூட்டோ கிரகம் தான் அப்போ சோலார் சிஸ்டமோடு ஒப்பிடும்போது சூரியன் எவ்வளவு சின்னதுன்னு பாருங்க. இது மாதிரி இன்னும் பிரபஞ்சத்துல நிறைய நட்சத்திரங்கள் இருக்கு அது எல்லாத்தோடும் சூரியனோட சைஸ ஒப்பிட்டு பார்ப்போம் வாங்க.


இதுதான் வேகா ஸ்டார் (Vega star). இதோட விட்டம் 38 லட்சம் கிலோமீட்டர். இதுல கிட்டத்தட்ட 20 சூரியன்களை பொருத்த முடியும். இதைவிட பெரிய நட்சத்திரம்னா அது ஆர்க்டரஸ் நட்சத்திரம் தான் (Arcturus star). இதோட விட்டம் சுமார் 3 கோடி 70 லட்சம் கிலோமீட்டர் அகலம் இருக்கும். இதுல 17000 சூரியன்களை பொருத்த முடியும். இதையும் விட பெரிய நட்சத்திரம் இருக்குன்னா அது ரைகில்தான் (Rigel star). அதோட விட்டம் சுமார் 11 கோடி km வரை இருக்கும். அப்போ இந்த ரைகில் நட்சத்திரத்தில் எத்தனை சூரியனை பொருத்த முடியும் அப்படின்னு நீங்க மனசுல கணக்கு போட்டு யோசிச்சிட்டு இருப்பீங்க..?

இந்த ரைகில் நட்சத்திரத்தில, இரண்டாவதா பார்த்த நட்சத்திரம் அதாவது 50 ஆர்க்டரஸ பொருத்த முடியும். அப்படின்னா யோசிச்சு பாருங்க இந்த ரைகில் நட்சத்திரத்தில் எவ்வளவு சூரியனை அடக்க முடியும்னு. சும்மா கணக்கு போட்டு பார்த்தா கிட்ட தட்ட 485000 சூரியன்களை இந்த நட்சத்திரத்துல வைக்க முடியும். இது அத்தனையும் பெரிய சூரியன்னு நம்ம நினைச்சுகிட்டு இருக்க அந்த சூரியனோட ஒப்பிடும்போது சூரியன் எவ்வளவு சின்னதுன்னு பாருங்க. ஒரு செகண்ட் யோசிச்சு பாக்க கூட முடியல இல்ல கீழே இருந்து பார்க்கும்போது சூரியன் தான் பெரிய நட்சத்திரம் அப்படின்னு நினைச்சுட்டு இருப்போம் ஆனால் சூரியனுக்கே அப்பன் ஒருத்தன் இருக்கான்., அப்படிங்கிற மாதிரி இந்த ரைகில் நட்சத்திரம் இருக்கு.
அப்போ சூரியனுக்கே ஒரு அப்பன் இருக்கானா இந்த ரைகிலுக்கெல்லாம் அப்பனுக்கு அப்பன் ஒருத்தர் இருப்பான்ல அப்படின்னு இந்நேரம் நீங்க யோசிக்க ஆரம்பிச்சு இருப்பீங்க. அப்படி நீங்க யோசிக்க ஆரம்பிச்சிருந்தா நீங்க இந்த சோலார் சிஸ்டம் குள்ள பூந்துட்டீங்கன்னு அர்த்தம். என்னோட சேர்ந்து நீங்களும் இந்த சோலார் சிஸ்டம்குள்ள கொஞ்ச நேரம் பயணித்து பாருங்க. இன்னும் ஏகப்பட்ட நட்சத்திரம் இருக்கு அதை எல்லாத்தையும் பத்தியும் இப்போ இந்த பதிவுல டீடைலா சொல்றேன் படிச்சு பாருங்க.

இப்போ போட்டோல பார்த்தீங்கல இதுதான் பீட்டல்கீயூஸ் நட்சத்திரம் (Betelgeuse). இதோட விட்டம் சுமார் 1 பில்லியன் 23 கோடி km ஆகும். இதுல கிட்டத்தட்ட 1500 ரீகல் நட்சத்திரங்களையோ இல்ல 67 கோடி சூரியன்களையோ பொருத்த முடியும். மனிதர்களாகிய நாம்ம எப்படி சூரியனுக்கு முன்னாடி ஒரு சின்ன தூசியோ அதுபோல இதுக்கு முன்னாடி சூரியன் ஒரு சின்ன தூசுமாறி. பீட்டல்கியூஸ்க்கும் மேல விவொய் கேனிஸ் மேஜரிஸ் (VY Canis Majoris) இருக்கு. இதோட விட்டம் சுமார் 2 பில்லியன் கிலோமீட்டர். இதுக்கு மேல யூவொய் ஸ்கூட்டி (UY Scuti) இருக்கு. இதோட விட்டம் 2 பில்லியன் 40 லட்சம் கிலோமீட்டர். இது எல்லாத்துக்கும் மேல ஸ்டெபன்சன் 2-18ங்குற (Stephenson 2-18) மிகப்பெரிய நட்சத்திரம் இருக்கு.

இதோட விட்டம் சுமார் 3 பில்லியன் கிலோமீட்டர். இதுக்குள்ள 9 பில்லியன் 83 லட்சம் சூரியன்களை பொருத்த முடியும். இதைவிட பெரிய நட்சத்திரம் வேற எதையும் இதுவரைக்கும் நம்ம கண்டுபிடிக்கல. இவ்வளவு பெரிய நட்சத்திரங்களோடு எல்லாம் கம்பேர் பண்ணும்போது சூரியன் ஒண்ணுமே இல்லை. அதுவும் மனிதர்களாகிய நம்ம எல்லாம் கணக்கே எடுக்க முடியாது. அப்போ பிரபஞ்சத்துல பூமி எவ்வளவு சின்னதுன்னு யோசிச்சு பாருங்க. பிரபஞ்சத்துல உள்ள பெரிய படைப்புகளை பத்தி சொல்லணும்னா பூமியிலிருந்து 3300 லைட் இயர்ஸ் தள்ளி இருக்கும் கேட்ஸ் ஐ நெபுலா லைட் இயர்ஸ்ங்கிறது (Cat’s Eye Nebula) ஒளி அதாவது லைட் அதை போய் சேரவே 3300 ஆண்டுகள் எடுக்கும். இந்த கேட்ஸ் ஐ நெபுலா 04 லைட் இயர்ஸ் அளவு பெருசு.

அப்படின்னா நான் ஏற்கனவே சொன்னது போல இதை கடக்க லைட்டுக்கு நாலு மாசம் 26 நாட்கள் எடுக்கும். இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திரத்தோடு ஒப்பிடும்போது இது ரொம்பவே பெருசு. இதுல 3000 ஸ்டெபன்சன் 2-18 நட்சத்திரங்களை பொருத்த முடியும். இதைவிட பெருசுன்னா அது ஹெலிக்ஸ் நெபுலா (Helix Nebula) இதோட விட்டம் அஞ்சு லைட் இயர்ஸ். அப்படின்னா லைட் இதை கடக்க அஞ்சு ஆண்டுகள் எடுக்கும். இதுல 15000 ஸ்டெபன்சன்களை பொருத்த முடியும். இதைவிட பெருசுனா ஓரியன் நெபுலா (Orion Nebula). இது 24 லைட் இயர்ஸ் விட்டம் கொண்டது. இதுக்கு மேல 150 லைட் இயர்ஸ் விட்டம் கொண்ட ஒமேகா சென்சுரி கான்ஸ்டலேஷன் இருக்கு (Omega centauri constellation). இது எல்லாத்தையும் விட பெருசு அதாவது இதுவரைக்கும் நம்ம பார்த்த எல்லா வகையான பெரிய நட்சத்திரங்களையும் இதுல அடக்க முடியும்.

இது எல்லாத்தையும் விட கோடிக்கணக்குல பெருசுனா அது நம்மளுடைய கேலக்ஸியான தி மில்கி வே தான். இது ஒரு லட்சம் லைட் இயர்ஸ் விட்டம் கொண்டது. இது எவ்வளவு பெருசுனா லைட் அதாவது ஒளி இதை கடக்கவே ஒரு லட்சம் ஆண்டுகள் எடுக்கும். ஒளியின் வேகம் 3 லட்சம் கிலோமீட்டர் பர் செகண்ட்ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். மில்கிவே கேலக்ஸில இது மாதிரி 400 பில்லியன் பெரிய நட்சத்திரங்களும் அதே எண்ணிக்கையில கிரகங்களும் இருக்கு. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது இது எவ்வளவு பெருசுன்னு நம்மளால யோசிச்சு கூட பார்க்க முடியாது. கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத இவ்வளவு பெரிய மில்கிவே கேலக்ஸில பூமி சுத்துறத நிறுத்தினா கூட அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்த போறது கிடையாது.
சூரியன் இறந்தாலும் மில்கிவே கேலக்ஸிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போகிறது இல்லை. பிரபஞ்சத்தின் மிகப்பெரிய நட்சத்திரத்தின் மரணம் கூட மில்கிவே கேலக்ஸில எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனா நம்ம பிரபஞ்சம் இதோட முடியல நம்ம இன்னும் கொஞ்சம் மேல போனா அங்க நம்மளுடைய நெய்பரிங் (Neighbouring) அதாவது பக்கத்து கேலக்ஸியான ஆண்ட்ரோமேடா இருக்கு (Andromeda Galaxy). இது நம்ம மில்கிவே கேலக்ஸியை விட ரெண்டு மடங்கு பெருசு. இந்த கேலக்ஸில சுமார் 10 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கு. இந்த கேலக்ஸில ஸ்டெபன்சன் அளவுல இருக்கிற நட்சத்திரங்களை பொருத்தினா 40000 பில்லியன் நட்சத்திரங்களை பொருத்த முடியும்.

பூமியில இருந்து 23 கோடி லைட் இயர்ஸ்க்கு நாம்ம நகர்ந்தா அங்க ugc 2885 கேலக்ஸி இருக்கும். இதோட விட்டம் 463000 லைட் இயர்ஸ் பெருசு மற்றும் இது நம்ம மில்கிவே கேலக்ஸியை விட நாலு மடங்கு பெருசு. அப்படின்னா இதுல சுமார் 50 பில்லியன் நட்சத்திரங்களை பொருத்த முடியும். பூமியிலிருந்து 100 கோடி லைட் இயர்ஸ் தொலைவுல ic101 கேலக்ஸின்னு கூப்பிடப்படும் மிகப்பெரிய கேலக்ஸி இருக்கு. இது சுமார் 40 லட்சம் லைட் இயர்ஸ் விட்டம் கொண்டது மற்றும் இதுல 1000 பில்லியன் நட்சத்திரங்களை பொருத்த முடியும். இதுக்கு மேல போனா அல்சியோனசிஸ்ன்னு (Alcyoneus Galaxy) சொல்லப்படும் மாபெரும் கேலக்ஸி இருக்கு. இது பூமியிலிருந்து 300 கோடி லைட் இயர்ஸ் தூரத்துல இருக்கு மற்றும் இது ஒரு கோடியே 60 லட்சம் லைட் இயர்ஸ் விட்டம் கொண்டது. இதுல 40 லட்சம் மில்கிவே கேலக்ஸிகளை பொருத்த முடியும்னு சொன்னா ஆச்சரியத்தில் உறைஞ்சு போயிட மாட்டீங்க..!

அட ஆமாங்க நீங்க நம்புனாலும் நம்பலனாலும் அதுதான் உண்மை. இப்போ நம்ம பிரபஞ்சத்தோட மிகப்பெரிய அளவுக்கு வந்திருக்கோம் உங்க தலைக்கு மேல நம்ம சோலார் சிஸ்டம் இருக்குனு கற்பனை பண்ணிக்கோங்க. இப்போ மில்கிவே கேலக்ஸியை ஒப்பிடும்போது நம்ம கேலக்ஸி ரொம்பவே சின்னது. இதுவரைக்கும் பிரபஞ்சத்தை பத்தி கண்டுபிடிக்கப்பட்ட பகுதின்னு பார்த்தா அது 93 பில்லியன் லைட் இயர்ஸ் வரைக்கும் இருக்கு. இதுல 200 பில்லியன் கேலக்ஸிஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்றாங்க. அதாவது நம்ம பிரபஞ்சத்தோடு எல்லை இல்லாத அளவோடு ஒப்பிடும்போது நான் கொஞ்சம் முன்னாடி சொன்ன அல்சியானசஸ் கேலக்ஸி (Alcyoneus Galaxy) கூட வெறும் ஒரு தூசிதான்.

இப்படி இருக்கும்போது பூமியையும், சூரியனையும் இந்த லிஸ்ட்ல சேர்க்கக்கூட முடியாது. அப்படின்னா மனிதர்களாகிய நம்ம இந்த பிரபஞ்சத்துக்கு முன்னாடி எவ்வளவு சின்னதுனு யோசிச்சு பாருங்க. அதாவது இந்த பிரபஞ்சத்துக்கு முன்னாடி நம்ம எல்லாருமே கண்ணுக்கே தெரியாத தூசின்னுதான் சொல்லணும். இந்த பூமியில இன்னைக்கு 8.1 பில்லியன் மக்கள் இருக்காங்க நம்ம எல்லோரும் ஒன்னு சேர்ந்தா கூட இந்த பிரபஞ்சத்துக்கு முன்னாடி அது ஒண்ணுமே இல்லை. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்துல பூமியில மட்டுமே உயிர்கள் இருந்தா அப்போ நம்ம தனிமையில இருக்கோம். கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத இவ்வளவு பெரிய பிரபஞ்சம் காலியா இருக்குன்னா அப்போ நம்ம எவ்வளவு தனிமையில இருக்கோம்னு யோசிச்சு பார்க்கவே பயமா இருக்குல..!

அப்படியே இந்த பிரபஞ்சமோட ஏதோ ஒரு மூளையில உயிர்கள் இருந்தாலும் அவங்களை நம்ம சந்திக்கிறது சாத்தியமற்ற ஒரு நிகழ்வு. ஏன்னா இந்த பிரபஞ்சத்தை நம்ம இன்னும் முழுசா கண்டுபிடிக்கல. இது எங்க ஆரம்பிச்சு எங்க முடியுது..? இதை தாண்டி வேற ஏதாவது இருக்கான்னு கூட நம்மளுக்கு தெரியாது..? ஆனா ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரியுது அது இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்சத்தோட அளவுக்கு முன்னாடி நம்ம எல்லோரும் ஒரு சின்ன தூசிக்கான மதிப்பை கூட பெற மாட்டோம். விஞ்ஞானிகளுமே பிரபஞ்சத்தை எல்லையில்லா அளவ பாத்து மனிதர்களாகிய நம்ம எவ்வளவு சின்ன தூசிகளா இல்ல இல்ல தூசுக்கு கூட தேற மாட்டோம்னு ஆச்சரியப்படுறாங்க.

195 நாடுகளில் வாழும் 8.1 பில்லியன் மனிதர்களின் ஒரு சின்ன கிரகத்துல, அது சுத்தி வரும் ஒரு சின்ன நட்சத்திரத்தை, அது இருக்கும் ஒரு சின்ன கேலக்ஸியை இந்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடும் போது நம்ம எவ்வளவு பெரியவங்கன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அதனால இனி உங்களைப் பத்தி பெருமைப்படுறதுக்கோ இல்ல சிறப்பா சொல்றதுக்கோ ஏதாவது இருக்கா..? ஏன்னா 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி பூமியையே முழுசா ஆண்டு நம்மளை விட பெரிய சைஸ்ல இருந்த இனம் ஒரே ஒரு ஆஸ்ட்ராய்ட்னால முழுமையா அழிஞ்சு போச்சு. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய பிரபஞ்சம் நம்மள ஒரே நொடியில அழிச்சு நம்மளுடைய நிகழ்காலத்தை வரலாறா எப்ப வேணும்னாலும் மாத்தலாம்.
டைனோசர் வாழ்ந்த காலம் மற்றும் அது அழிந்ததை பத்தி மற்றும் பல சுவாரசியமான தகவல்களை நமது வலைதளத்தில் பதிவேற்றியுள்ளேன் படிக்க விருப்பம் இருந்தால் நமது வலைதளத்தின் ஹோம் பக்கத்தில் சென்று லேட்டஸ்ட் போஸ்ட்களை படித்து பயன்பெறுங்கள். Interesting info







இம்மாபெரிய பிரபஞ்சத்தில ஒரு சின்ன தூசுக்கு கூட சமமா இல்லாம நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம். ஆனா இந்த வாழ்க்கையை கடந்து சாகறதுக்குள்ள நம்ம பண்ற அட்டூழியங்களும், அலிட்டாச்சியங்களும் இவ்வளவு தான் இல்ல. கடைசியா செத்துபோகும்போது தம்மா தூண்டு இடத்துக்கு தான் போக போறோம். அப்படி இருந்தும் ஆசை யாரைத்தான் விட்டுச்சு அளவுக்கு அதிகமான பணம், இடம், நகை அதோட சேர்த்து அளவுக்கதிகமான காமம் வேணும்னு அலைஞ்சுகிட்டு இருக்கோம். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம் எச்சச்சகச்சச்ச….
இப்ப புரியுதுங்களா நண்பர்களே நான் ஏன் இந்த தலைப்பை இந்த கட்டுரைக்கு கொடுத்தேன் என்று ஒரு பத்து நிமிடம் சின்சியராக இந்த கட்டுரையை நீங்கள் படித்திருந்தால் நிச்சயமாக இந்த இடங்களுக்கு எல்லாம் நீங்கள் பயணத்தில் இருந்தது போல கற்பனையாக ஒரு அனுபவம் வந்திருக்கும். எனக்கு இந்த கட்டுரையை உருவாக்கும்போது அவ்வாறான எண்ணம் தோன்றியது அதனால்தான் இந்த கட்டுரைக்கு இந்த ஒரு தலைப்பை வைத்தேன் உங்களுக்கும் அது போல ஒரு அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஓகே கைஸ் இன்னைக்கான பதிவு அவ்வளவுதான் இந்த பிரபஞ்சத்துக்கு முன்னாடி நம்ம எவ்வளவு பெருசுன்னு இப்ப உங்களுக்கு தெரியும். மேலும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுக்கு மேலயும் உங்கள பத்தி சொல்றதுக்கு ஏதாவது இருக்கா.? உங்க பதிலை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா ஃபேஸ்புக்ல இந்த போஸ்ட் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. இன்னும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான பதிவில் சந்திப்போம். மறக்காம நம்ம telegram மற்றும் வாட்ஸ்ஆப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி உங்க ஆதரவு கொடுங்க.
மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா…📝
எனது இந்த கடின உழைப்பை பாராட்டி நீங்கள் ஏதேனும் நன்கொடை செய்ய வேண்டும் என நினைத்தால் கீழே இருக்கும் எனது நண்பரின் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அமௌன்டை அனுப்பலாம். அது எனது வளர்ச்சிக்கு உதவும் என்று நான் நினைக்கிறேன். விருப்பம் இருக்கும் நபர்கள் உங்களால் முடிந்ததை உதவித்தொகையாக தரலாம். எனது கியூ ஆர் கோடை நான் நேரடியாக தரலாம் ஆனால் அதை ஸ்கேன் செய்யும் பொழுது எனது யுபியை ஐடியில் மொபைல் நம்பர் ஆனது தெரிகிறது. அதனால் தனிப்பட்ட பிரைவசியின் காரணமாக எனது நண்பனின் க்யூ ஆர் கோடை உங்களுக்கு தந்திருக்கிறேன்.

எனது நண்பனின் upi ஐடியில் அவனது பெயரானது வந்திருக்கும். அந்த இடத்தில் எனது மொபைல் நம்பர் இருந்த காரணத்தினால் நான் இந்த க்யூ ஆர் ஐ வழங்கியிருக்கிறேன். ஏதேனும் சந்தா செலுத்த விரும்பும் நபர்கள் இந்த க்யூ ஆர் கோடை ஸ்க்ரீன் ஷட் எடுத்தோ அல்லது நேரடியாக கீழே திரியும் யுபிஐ ஐடியை டைப் செய்து உங்கள் சன்மானத்தை அளித்து என்னை என்கரேஜ் செய்யலாம். UPI ID- eyenanr@pingpay