இறந்த மனிதன் உடலில் இவ்வளோ விஷயம் நடக்குமா? ஆம் நண்பர்களே..! மனிதர்களாகிய நாம் உயிரோடு இருக்கும் போது மனித உடலில் என்னலாம் நடக்கும்.? எப்படி எல்லாம் நமது உடலானது இயங்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இறந்த பிறகு நமது உடலுக்குள் நடக்கும் விஷயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.? நாம் இறந்த பிறகு எப்படி நமது உடலானது மக்குகிறது என்று தெரியுமா..? அத பத்தி தான் இன்னைக்கான பதிவுல நம்ம தெளிவா பார்க்க போறோம் சோ நண்பர்களே இந்த பதிவு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கக்கூடிய ஒரு பதிவாக இருக்கும் என்று நான் கூறிக்கொள்கிறேன். மேலும் பல பயனுள்ள தகவல்களையும் வழங்கும்.

ஒரு மனிதன் இறந்த பிறகு என்ன நடக்கும் என்கிற ஒரு சில விஷயங்களை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகு உனது உடலானது இயல்பு நிலையை விட மிகவும் சில்லென்று மாறும். அதுமட்டுமின்றி உடலானது விறைத்துப் போகும் மேலும் துர்நாற்றம் எல்லாம் அடிக்கும். மனித உடலை சுற்றி வழக்கத்திறகு மாறாக அதிகம் ஈ, பூச்சிகள் எல்லாம் சுற்றி தெரியும். இது பன்ற பல தகவல்கள் உங்களுக்கு தெரியும் ஆனால் இதையும் தாண்டி பல சுவாரசியமான விஷயங்கள் மறைந்து இருப்பது உங்களுக்கு தெரியுமா.?
ஆமாம் நண்பர்களே பல சுவாரசியமூட்டும் விஷயங்கள் நாம் இறந்த பிறகு நமது உடலில் நடக்கத்தான் செய்கிறது. அப்படி என்ன நடக்கிறது.? அந்த சம்பவங்கள் அனைத்தும் ஏன் நடக்கின்றன.? அவை அனைத்தும் எப்படி நடக்கிறது..? நாமே உயிரோடு இல்லையே.! அப்படி இருக்கும் பொழுது இந்த செயல்கள் அனைத்தும் எப்படி சாத்தியமாகும் என்ற பல சுவாரசியம் நிறைந்த சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய ஒரு பதிவாக இந்த பதிவு அமையும் வாருங்கள் இன்றைக்கான பதிவுக்குள் மூழ்குவோம். தயவு செய்து முழுமையாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
எப்படி மனிதனின் உடல் மக்குகிறது.?
ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது உடலானது மக்குவதற்கு நான்கு நிலைகளை எடுத்துக் கொள்கிறது. அதாவது ஆட்டோலிசிஸ் (Autolysis), பிளோடிங் (Bloating), ஆக்டிவ்டிகே (Active decay), ஸ்கெலிட்டோனிசேஷன் (Skeletonization). இதுபோல நான்கு நிலைகளில்தான் மனித உடலானது அழுகிப்போகிறது. இதுல ஆட்டோலிசிஸ் என்பது மிகவும் நீளமான பிராசஸ் (Process) ஆகும். அதைப்பற்றி முதலில் பார்ப்போம்.

Autolysis
மனித உடல் ஆனது இறந்த பிறகு சில்லுனு மாறுவதற்கு அல்கர் மார்ட்டீஸ்னு (Algor mortis) பேர் வச்சிருக்காங்க. இது ஏன் நடக்கிறது என்ற கேள்வி இந்நேரம் உங்களுக்குள் வந்திருக்கும்.! அதற்கான பதில் இதோ., நமது உடலில் உயிரோடு இருக்கும் பொழுது ரத்த ஓட்டமானது தொடர்ந்து உடல் முழுவதும் பாய்ந்து கொண்டே இருக்கும். அச்சமயத்தில் நமது உடலானது உடலுக்கு தேவையான வெப்பநிலையோடு பாதுகாக்கப்படுகிறது. அதாவது நமது உடலில் பாயக்கூடிய ரத்த ஓட்ட நிகழ்வானது மனித உடலுக்குத் தேவையான வெப்பத்தை உருவாக்கி நமது உடலை சீரான வெப்பநிலையோடு தொடர்ந்து வைப்பதற்கு உதவுகிறது.
இவ்வாறு நாம் உயிரோடு இருக்கும் பொழுது தொடர்ந்து நடக்கக்கூடிய ஒரு நிகழ்வானது இறந்தவுடன் தடைப்படுபவதால் நமது உடல் ஆனது சீரான வெப்பநிலையை இழந்து சில்லென்று மாறுகிறது. அதனால் தான் இறந்து போகும் தருவாயில் உள்ள ஒரு நபரை அதாவது உடலுக்கு முடியாத தள்ளாடும் வயதில் உள்ள முதியவர்களை முதலில் தொட்டுப் பார்க்கும்போது சில்லென்று இருந்தால் இவரின் நிலை இன்னும் சில நேரங்களுக்கு மட்டும் தான் சொந்தக்காரர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இந்த மாதிரி அவங்க சொல்லும் போது நமக்கு ஒரு செகண்ட் கோபம் கூட வரலாம்.!
அச்சமயத்தில் நமக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் போகும் அதனால்தான் நமக்கு கோபம் ஆனது வருகிறது. அப்போது தெரிந்திருக்காது அவர்கள் சொன்னது விளையாட்டல்ல உண்மை என்று. ஆம் நண்பர்களே ஒரு மனித உடலானது இறந்த பிறகு மட்டும்தான் சில்லென மாறும் என்று நினைக்காதீர்கள். ஒரு மனிதன் உயிருக்கு போராடும் நிலையில் அதாவது மரணப் படுக்கையில் இருக்கும் போது அது முதியவர்களாக இருந்தாலும் சரி, இளைஞர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் அனைவருக்கும் உடலானது சில்லென மாறும். அதற்குக் காரணம் நமது உடலானது சீராக இயங்கவில்லை அச்சமயத்தில் ரத்த ஓட்டம் ஆனது குறைவாகவே நடக்கிறது அதனால் தான் உடலின் சீரான வெப்பநிலையானது குறைந்து சில்லென மாறுகிறது.
இதற்கு ஒரு உதாரண சம்பவத்தை நான் உங்களுக்கு கூறி புரிய வைக்கிறேன். உங்களது இடது கையோ அல்லது வலது கையோ.! ஏதோ ஒரு கைவிரலை எடுத்து இரண்டு அங்குலம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மீதம் இருக்கும் ஒரு இன்சி இடைவெளியில் ரப்பர் பேண்டை எடுத்து இறுக்கமாக தலை முடியை பின்னுவது போல் பின்னி வையுங்கள். சிறிது நேரத்தில் நீங்களே அந்த சில்னசை (Chilness) உணர்வீர்கள். இதிலிருந்து உங்களுக்கு புரிகிறதா நமது உடலில் ரத்த ஓட்டம் குறையும் போது உடலானது இயல்பான சூட்டை இழந்து போவதால் நமது உடல் ஆனது சில்லென மாறுகிறதென்று.
இதுவரைக்கும் நம்ம உடலானது இறந்த பிறகு சில்லுனு மாறுவதற்கான காரணத்தை பார்த்தோம். அடுத்ததாக நமது உடலானது எப்படி விரைத்து போகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
Rigor Mortis
ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் பொழுது அவனது உடல் உறுப்புக்கள் அனைத்தும் விரைத்து போகாமல் இருப்பதற்கு பல்வேறு விதமான காரணிகள் இருந்தாலும் நமது உடலில் உள்ள தசைகள் ஒரு முக்கிய பங்கை செய்து வருகிறது. அதாவது நமது தசைகள் நாம் உயிரோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் சுருங்கி விரிவதால் விரைத்துப் போகும் தன்மையானது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நமது தசைகள் சுருங்கி விரிவதற்கு மூலப்பொருளாக பயன்படுவது ஃபைபர் எனப்படும் ஒரு விதமான ஊட்டச்சத்து தான். இந்த ஃபைபரை நமது தசைகள் எவ்வாறு பெரும் என்ற கேள்வி உங்களுக்குள் இந்நேரம் எழுருந்திருக்க வேண்டும்.!

நமது உடலில் உள்ள தசைகள் சுருங்கி விரிவதற்கு தேவையான பைபரை நமது உடலில் உள்ள செல்களில் இருந்துதான் தனக்கு தேவையான ஆற்றலை பெறுகிறது. நாம் அறிவியல் பாடங்களில் ஏற்கனவே படித்திருப்போம் ஒரு செல் என்று இருந்தால் அதற்குள் பல்வேறு விதமான அமைப்புகள் இருக்கும் என்று நம் அறிந்ததே. அதை விளக்கக்கூடிய புகைப்படம் இதோ உங்களுக்காக கீழே இணைத்துள்ளேன்.
அந்த புகைப்படத்தில் நீங்கள் அனைத்தையும் தெளிவாக பார்த்து இருப்பீர்கள். அதில் இருக்கக்கூடிய மைட்டோகாண்ட்ரியா என்னும் ஓர் அமைப்புதான் நம்ம உயிரோடு இருக்கும்போது நமது தசைகள் சுருங்கி விரிவதற்கு தேவையான பைபர் ஆற்றலை கொடுக்கிறது அதிலும் முக்கியமாக ஏடிபி (ATP-ADENOSINE TRIPHOSPHATE) என்ற ஓர் அமைப்பானதுதான் இந்த பைபரை உற்பத்தி செய்து உடல் எங்கும் உள்ள தசைகளுக்கு அனுப்பி விடுகிறது. இப்போது நாம் பார்த்த அனைத்து செயல்களும் நாம் உயிரோடு இருக்கும் பொழுது தான் நமது உடலில் நடைபெறுகிறது.

அப்படி இருக்கையில் ஒரு மனிதன் இறந்த பிறகு தன் தசைகளுக்கு தேவையான பைபர் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய ஏடிபி ஆனது நமது உடலில் உற்பத்தியாகாது. இதன் மூலம் தசைகளுக்கு செல்லக்கூடிய ஆற்றலானது முற்றிலும் தடுக்கப்படுவதால் இறந்த பிறகு நமது உடலானது சுருங்கி விரியாமல் தசைகள் ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்கொண்டு விரைத்துப் போகும் தன்மையை ஏற்படுகிறது.

இது மட்டும் காரணம் இல்லை. நாம் இறந்த பிறகு நமது எலும்பில் உள்ள கால்சியம் சத்துக்கள் அனைத்தும் தசைகளில் வந்து படி இவ்வாறு தசைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது மட்டுமின்றி கால்சியத்தோடு இணைந்து நன்றாக இறுக ஆரம்பிக்கும். இவ்வாறு இறுகும் நிலைத்தான் தமிழில் நாம் விரைத்துப் போகிறது என்று சொல்கிறோம்.
இதற்கு அறிவியலில் ரிகர் மோர்டிஸ் னு (Rigor mortis) சொல்லுவாங்க. இந்த செயல்பாடுகள் அனைத்தும் அதாவது விரைத்துப் போகும் தன்மையானது ஒரு மனிதன் இறந்த பிறகு துல்லியமாக 84 மணி நேரத்திற்குள் நடந்திருக்கும். இது போன்ற செயல்பாடுகளால் தான் ஒரு விபத்து பகுதியில் ஒரு மனிதன் இறத்து கிடந்தால் எவ்வளவு நேரத்திற்கு முன்னால் இவர் இறந்திருப்பார் என்று சரியாக கனித்து மருத்துவர்கள் சொல்ல முடிகிறது.

Livor Mortis
ஒரு மனிதனின் உடலானது மக்காமல் பாதுகாப்பதற்கு ரத்தமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆமாம் நண்பர்களே நமது உடலில் உள்ள ரத்தமானது புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் ஓர் இயற்கை அமைப்பு. அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் மேலிருந்து ஒரு பொருளை தூக்கி எறிந்தால் அது மேலே போகாமல் ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி கீழே வரும்.

இதற்கு மாறாக நமது உடலில் உள்ள ரத்தமானது பாதத்திலிருந்து உச்சியில் உள்ள தலைவரை உடலெங்கும் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை தொடர்ந்து கொண்டு செல்வதால் நாம் உயிரோடு இருக்கும் பொழுது உடலில் ரத்தம் தேங்கும் நிலையானது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நாம் உயிரோடு இருக்கும் பொழுது உடல் முழுவதும் பாய்ந்து கொண்டிருக்க கூடிய ரத்தமானது நாம் இறந்த நிலையில் இருக்கும் பொழுது ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட முடியாமல் அனைத்தும் ஈர்ப்பு விசையை நோக்கி கீழே இழுக்கப்படும்.

இதுபோல உடலில் உள்ள அனைத்து ரத்தங்களும் ஈர்ப்பு விசை காரணமாக கீழே கால் பகுதிக்குச் சென்று ஒரு குளம் போல தேங்க ஆரம்பிக்கும். அதனால்தான் ஒரு மனிதன் இறந்த பிறகு ரத்தம் தேங்கியுள்ள பகுதியில் சிகப்பு நிறத்திலும் அல்லது ரோஸ் கலரிலும் காணப்படும். அரிதாக சிலருக்கு நீல நிறத்திலும் தோற்றமளிக்கும். இதற்குக் காரணம் உடலெங்கும் பரவி பாயக் கூடிய ரத்தமானது ஒரே இடத்தில் குட்டை போல தேங்குவதால் இந்த நிறத் தோற்றம் ஏற்படுகிறது. இந்த செயல்பாடுகளுக்கு தான் லிவோர் மார்டிஸ்னு (Livor Mortis) சொல்லுறாங்க.
இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒரு மனிதன் இறந்தவுடன் 30 நிமிடத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் அனைத்து ரத்தங்களும் ஈர்ப்பு விசையை நோக்கி பாய்ந்து குட்டை போல தேங்க ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் இறந்த உடல் ஆனது ஒரே இடத்தில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் நாம் சொன்ன நேரத்தில் ரத்தமானது ஒரே இடத்தில் தேங்கும்.

மேற் சொன்னபடி கால்களில் வந்து ரத்தமானது தேங்காாமல் உடலில் ஆங்காங்கு திட்டு போல தேங்கி காணப்பட்டாள்., இந்த உடலை ஓரிடத்தில் நிலையாக வைக்காமல் அங்கும் இங்கும் எடுத்துக்கொண்டு சுற்றித் திரிந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த நிலையில் இறந்து கிடக்கும் ஒரு டெட்பாடியை (dead body) போலீஸார்கள் கண்டுபிடித்தால், இதுபோல ரத்தமானது ஓரிடத்தில் இல்லாமல் ஆங்காங்கு குட்டை போல தேங்கி இருப்பதை வைத்து., இந்த உடலை எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாக சுற்றி திரிந்திருக்கிரார்கள் என்று ரிப்போர்ட்டில் குறிப்பிடுவார்கள். மேலும் மருத்துவமனையிலும் இதை வைத்தே ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு பெண்ணை கற்பழித்துக் கொன்ற பிறகு அந்த நபர் அந்த உடலை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் காரில் எடுத்துக்கொண்டு சென்று ஏதோ ஒரு இடத்தில் எரிந்து விட்டு சென்றாள், அந்த உடலை போலீசார் அல்லது ஏதோ இன்வெஸ்டிகேஷன் டீம் கண்டுபிடித்தால் ரத்தம் தேங்கிய நிலையை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதுதான் இந்த Livor Mortis முறை.

இந்த உடலை பார்த்தவுடனே உங்கள் மனதில், நீ காலில் தானே ரத்தம் தங்கும் என்று சொன்னாய் ஆனால் இங்கோ முதுகு முழுவதும் காணப்படுகிறதே என்று கேட்டால் உங்களது கேள்வியானது நியாயமானது என்று நான் சொல்வேன். இதற்கு காரணம் இறந்த உடலானது இருக்கக்கூடிய நிலையை பொறுத்து ரத்தமானது ஈர்ப்பு விசையை நோக்கி பயணிக்கும். அப்போது இறந்த மனித உடல் நின்றபடி இருந்தால் காலுக்கு தான் செல்லும். நான் அதை கருத்தில் எடுத்துக் கொண்டுதான் மேலே எழுதி இருந்தேன். இப்படிப் படுக்கும் நிலையில் இருந்தால் எந்த இடம் ஈர்ப்பு விசைக்கு நேராக உள்ளதோ அதை நோக்கியே ரத்தமானது பயணிக்கும். அப்படி பார்த்தால் நமது தலையிலிருந்து பாதம் வரை நிச்சயம் இதுபோல கலராக தான் தெரியும். அதுவும் மேலே காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பது போல.

இந்த முறையும் நாம் உயிரோடு இருக்கும்போது மட்டும்தான் நமது உடலில் நடக்கும். இறந்துவிட்டால் இந்த செயல்பாடுகளும் நின்று விடும். அதனால்தான் ஒரு மனிதன் இறந்த பிறகு சிவப்பு நிறமாகவோ அல்லது ரோஸ் கலர் ஆகவும் மேலும் நீல நிறத்திலும் தோற்றமளிக்கிறான். அதுவும் ரத்தம் தேங்கிய இடங்களில் மட்டும். இதை நாம் உயிரோடு இருக்கும் பதே சில சோதனைகள் மூலம் பார்க்கலாம். உதாரணத்திற்கு எறும்பு கடித்தால் கூட அந்த இடத்தில் வீங்கும் ரத்தமானது அந்த இடத்தில் சிறிது தேங்கி இருக்கும் அதை கூறலாம்.
மேலும் உங்களது கைகளை நன்றாக இறுக்கிப்பிடித்தால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் ஆனது சிறிது நேரத்திற்கு தடைப்படும். அப்போது ரத்தம் தேங்கிய நிலையை உங்களால் உணர முடியும் உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும். இந்த முறையில் சிறிது நேரத்திலேயே அவ்விடத்தில் தோற்றமளித்த சிவப்பு நிறம் ஆனது காணாமல் போய்விடும். மீண்டும் இயல்பு நிலைக்கு ரத்த ஓட்டம் ஆனது திரும்பியதே இதற்கு காரணம். இந்த செயல்பாடுகள் இறந்த ஒரு நபருக்கு நடைபெறாததால் உடலின் கீழ்ப்பகுதியில் இவ்வாறான நிறத்தோற்றம் உண்டாகிறது.

இதனால் இறந்த நபரின் உடலில் உள்ள செல்களுக்கு ரத்த ஓட்டம் முற்றிலுமாக தடைபட்டு போகும் நிலை ஏற்பட்டு, அந்த செல்களுக்குள் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற முடியாத நிலை உண்டாகும். இதனால் அந்த செல்களில் உள்ள கழிவுகள் அனைத்தும் அங்கு இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைடோடு வேதியல் வினைக்கு உட்பட்டு அசிட்டிக் அமிலமாக மாறுகிறது. அதாவது அமிலத்தன்மை கொண்டதாக மாறும்.
இது மட்டுமின்றி இந்த செல்களுக்குள்ளே இருக்கக்கூடிய செரிமான நொதிகள் உடலுக்குள்ளே இருந்து அந்த செல்களை முற்றிலுமாக அரிக்கக்கூடிய வேலையை செய்யும். மேலும் அந்த செல்கள் முற்றிலுமாக அரிக்கப்படும்போது சில கெட்ட வாயுக்கள் உடலில் உருவாக ஆரம்பிக்கும். இவ்வாறு உடலுக்குலிருந்து நமது உடலானது சிதையும் நிகழ்வுக்கு தான் ஆட்டோலிசிஸ்னு (Autolysis) அதாவது சுய செரிமானம்னு சொல்லுறாங்க. இப்போ பார்த்த அனைத்து நிகழ்வுகள் தன் ஒரு மனிதன் இறந்த பிறகு நடக்கக்கூடிய முதல் ஸ்டேஜ்னு சொல்றாங்க.
Bloating
பிளோடிங் அப்படின்னு சொன்ன உடனே நிறைய பேருக்கு இந்நேரம் என்னன்னு தெரிய வந்திருக்கும். தெரியாதவங்க தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்ளலம். அதாவது ஸ்டொமக் ப்லோட்டிங் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கலாம். அப்படி என்றால் என்னடா மாங்கா மடையானு நீங்கள் திட்டுவது எனக்கு புரிகிறது. தமிழில் சொன்னால் வயிறு உப்பசம் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டா..! இப்போது அனைவருக்கும் புரிந்து இருக்கும்..! உயிரோடு இருக்கும்போது வயிறு வீங்கி இருந்தால் ஒன்னு கர்ப்பம், இரண்டாவது தொப்பை, மூன்றாவது வாயுவால் நிரம்பிய வயிறு உப்பசம். இதுவே இறந்த பிறகு நடந்தால் தொடர்ந்து படியுங்கள்..!
முதல் நிலைக்கு பிறகு முதல் ஸ்டேஜில் நாம் பார்த்த செல்லினுடைய வெளிப்புற லேயரை கிழித்துக்கொண்டு அதில் இருக்கக்கூடிய திரவமானது உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும். இந்த நிகழ்வைத்தான் புளோட்டிங் என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வுதான் இரண்டாவது நிலையாக நடக்கும். இந்த நிலையில் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் குடலை விட்டு வெளியே வந்து இறந்த நபரின் உடலில் உள்ள மென்திசுக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும்.

இப்படி இந்த பாக்டீரியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது சில கழிவுகளை உருவாக்கும். அப்படி உருவாக்குகின்ற கழிவுகளில் சல்ஃபர் போன்ற வாயுவும் அதிகளவில் அடங்கி இருக்கும். இப்படி உருவான இந்த சல்பர் வாயுவானது ஆட்டோலிஸிஸ் நிலையில் வெளியேறிய கெட்ட வாயுவோடு இணைந்து உடல் முழுவதும் பரவி உடலினை உப்ப செய்து விடும். அதாவது உயிரோடு இருக்கும் போது இருந்த தோற்றத்தை விட இறந்த பிறகு இந்த இரண்டாம் நிலை நடந்த பிறகு மனிதனின் தோற்றமானது சில மடங்கு பெரிதாக வீங்கி காணப்படும். அதற்கு காரணம் இந்த கெட்ட வாயுக்கள் தான்.

இப்படி உப்பு செய்வது மட்டுமின்றி முதல் நிலையில் ஆங்காங்கு திட்டு திட்டாக ரத்தம் தேங்குவதாலும் அல்லது ஒரே இடத்தில் மொத்த ரத்தமும் தேங்குவதால் ஏற்பட்ட நிறமானது இரண்டாவது நிலையில் வாயுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உடலின் மொத்த தோள்களும் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். இப்படி உடல் முழுவதும் கெட்ட வாயுக்கள் நிரம்பி இருப்பதால்தான் இறந்த ஒரு நபரின் உடலில் இருந்து கெட்டவாடையானது வீச ஆரம்பிக்கிறது. இந்த சல்பர் வாயுவானது நாம் உயிரோடு இருக்கும் போது கூட உடலில் கெட்ட வாயுவை ஏற்படுத்தும்.
அதைத்தான் நாம் தமிழில் குசு என்றும், ஆங்கிலத்தில் ஃபார்ட் (Fart) என்றும் சொல்கிறோம். இது எவ்வாறு உருவாகிறது? இந்த செயல்பாடுகள் ஏன் மனித உடலில் நடக்கிறது? என்பதை பற்றி அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிறேன். இப்போது இந்தப் பதிவின் தொடர்ச்சியை மேலும் தொடருவோம்.

மனித உடல் முழுவதும் கெட்ட வாயுக்களால் நிரம்பி வீங்கச் செய்கிறது என்று ஏற்கனவே பார்த்தோம். இப்படி உடல் முழுவதும் பரவிய கெட்ட வாயுக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் உடலை விட்டு வெளியே வர வழியை தேடும். அச்சமயத்தில் இயற்கை துவாரங்கள் வழியாக சில வாயுக்கள் வெளியேறி மோசமான வாடையை உருவாக்கும். இது இயற்கை துவாரங்கள் வழியாக மட்டுமல்லாமல் தோல் மூலமாகவும் வெளியே வரும். அச்சமயத்தில் தான் மனித உடலில் பொண வாடை அடிக்கிறது என்று அனைவரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். அதுபோல மோசமான கெட்ட வாடையை உருவாக்கும்.
என்னதான் இந்த கெட்ட வாடையை மனிதன் வெறுத்தாலும் அந்த வாடையை வாசமாக நினைத்துக்கொண்டு ஈர்க்கப்படுகின்ற சில உயிர்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் அதிகமாக ஈர்க்கப்படுவதும் முதலில் ஈர்க்கப்படுவதும் ஈக்கள் தான். இவ்வாறு இந்த கெட்ட வாடையை மோப்பம் பிடித்துக் கொண்டு ஈக்களானது இறந்த உடலை சுற்றி பரவ ஆரம்பிக்கும். மேலும் மெது மெதுவாக இறந்த நபரின் உடலை சாப்பிட ஆரம்பிக்கும்.
வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவு கிடைத்த சந்தோஷத்தில் அந்த ஈ யானது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இறந்த நபரின் உடலிலேயே முட்டையையும் விட்டு உண்ட களைப்பை போக்கிவிட்டு செல்லும். பிறகு அந்த முட்டையிலிருந்து சில புழுக்கள் வெளியே வரும் இவ்வாறுதான் இறந்த உடலில் புழுக்கள் உருவாக ஆரம்பிக்கிறது. இந்த புழுக்கள் மேலும் ஈ விட்டுட்டு சென்ற மற்ற உடலை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும். பிறகு அந்த புழுவானது ஈயாக மாறி பறந்து சென்று விடும்.

இப்போது இந்த நிலையில் மனித உடல் ஆனது 50 சதவீதம் முற்றிலுமாக அரிக்கப்பட்டு இருக்கும் அதாவது மக்கியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து மனித உடலானது மக்கிக் கொண்டிருக்கும்போது ஈயை விட பெரிய பெரிய பூச்சிகள் மனித உடலை உண்பதற்காக அந்தக் கெட்ட வாடையை முகர்ந்து கொண்டு வர ஆரம்பிக்கும். அப்படி வரக்கூடிய அந்த பெரிய பூச்சியும் மனித உடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே இதுவும் ஈயை போன்று முட்டையிட்டு பெரிய பெரிய புழுக்களை உருவாக்கும்.
ஈக்கள் உருவாக்கிய புழுக்களை விட இது இரண்டு மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். ஒரு மனிதன் இறந்த பிறகு உருவாகின்ற இந்த கெட்ட வாடையை பயன்படுத்தி முதலில் ஈர்க்கப்பட்டு வருவது ஈக்கள் தான். ஈக்கள் சென்ற பிறகு வரக்கூடியவைகள் தான் இந்த பெரிய பெரிய பூச்சிகள். முதலில் ஈக்கள் இட்ட முட்டையிலிருந்து வந்த புழுக்களின் அளவையும் பெரிய பூச்சியின் புழுக்களின் அளவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது அளவில் வித்தியாசம் தெரியும். மேலும் பெரிய பூச்சிகள் ஈக்கள் சென்ற சில நாட்களில் தான் வர ஆரம்பிக்கும்.

இதை வைத்தே ஒரு நபர் இறந்து கிடக்கும் இடத்தில் யாரும் அந்த உடலை அடக்கம் செய்ய வில்லை எனில், அந்த உடலில் உள்ள புழுக்களை வைத்து இந்த நபர் எத்தனை நாளுக்குள் இறந்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க கூடிய மருத்துவரோ அல்லது போலீஸ் அதிகாரிகளோ ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள். இப்படி இறந்த நபரின் உடலில் இருக்கக்கூடிய புழுக்களை வைத்து அவர்கள் எத்தனை நாளுக்குள் இறந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் இந்த நிகழ்வுக்கு பாரன்சிக் எண்டுமாலாஜினு (Forensic Entomology) சொல்லுவாங்க.
அவர்கள் மட்டுமல்ல இனிமேல் நீங்களும் கண்டுபிடிக்கலாம் அதற்கான வழிகளை தான் இப்போது நான் சொல்லிவிட்டேன் அல்லவா.! இதுவரை நாம் பார்த்தது எல்லாமுமே இரண்டாவது நிலையான புளோட்டின் ஸ்டேஜ்ல நடக்கக் கூடியவை மூன்றாவது முறையை பார்க்கலாம் வாருங்கள்.
Active Decay
இந்த மூன்றாவது நிலையானது ஒரு மனிதன் இறந்த 24 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்துக்குள் நடக்க ஆரம்பிக்கும். இந்த மூன்றாவது நிலையில மனித உடலில் உள்ள பாக்டீரியாக்களும் புழுக்களும் மனித உடலை உள்ளிருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது உருவாகக்கூடிய கெட்ட வாயுக்கள் இயற்கை துவாரங்கள் வழியாக முழுவதுமாக வெளியேற ஆரம்பிக்கும். சில சமயங்களில் இரண்டாவது நிலையான ப்லோட்டிங் ஸ்டேஜில் அதிக அளவுலான கெட்ட வாயுக்கள் வயிற்றுக்குள் நிரம்பி மனித உடலை வெடிக்க வைத்து இந்த கெட்ட வாயுக்கள் வெளியேறும் நிலையும் நடந்திருக்கிறது.

இந்த நிலையில் உடலில் உள்ள மொத்த கெட்ட வகைகளும் வெளியேறி வீங்கி இருந்த உடலின் தோற்றத்தை சுருங்கச் செய்யும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் எலும்புகளோடு எலும்பாக தசையின்றி உடம்பானது ஒட்டி காணப்படும். அதாவது உடலில் இருந்த மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறும் இந்த நிகழ்வுக்கு ஆக்டீவ் டிகைனு (Active decay) சொல்லுவாங்க.
Skeletonization
உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் குறைந்து எலும்போடு ஒட்டி நிலை காணப்படக்கூடிய இந்த அமைப்பிற்கு ஸ்கெலிட்டோனிசேஷனு (Skeletonization) சொல்லுவாங்க. அதாவது முதல் மூன்று நிலைகளில் மனித உடலில் இருக்கக்கூடிய தசைகள் அனைத்தும் மக்கிவிட்ட காரணத்தினால் மீதமிருக்கக் கூடியது வெறும் எலும்புக்கூடு மட்டும்தான். இந்த எலும்புக்கூடுகள் அதாவது மனிதனுடைய எலும்பு ஆனது கால்சியம் (Calcium and Collagen) மற்றும் கொலோஜனால் ஆனது.
முதலில் பார்த்த மூன்று நிலைகளும் ஒரு மனிதன் இறந்த பிறகு அதாவது இறந்ததிலிருந்து 72 மணி நேரத்துக்குள் அனைத்து நிகழ்வுகளும் நடந்து முடிந்து விடும். தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் மேற் சொன்ன மூன்று நிகழ்வுகளும் நடந்து முடிந்திருக்கும். ஆனால் இந்த நான்காவது நிலையானது இயற்கையாக முற்றிலும் நடந்து முடிவதற்கு சில வருடங்களில் இருந்து பல வருடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

ஏனென்றால் ஏனென்றால் மனித எலும்புகளில் கனிம மூலக்கூறுகள் மற்றும் கரிம மூலக்கூறுகள் அதிக அளவில் அடங்கி இருக்கும். அதாவது மனித எலும்புகளில் கார்பனால் நிறைந்த மூலக்கூறுகள் அதிக அளவில் இருப்பதால்தான் மேற் சொன்ன நிகழ்வுகள் படி உடனடியாக மக்கி போகாது. இப்போது பார்த்த இந்த நான்கு நிகழ்வுகள் தான் ஒரு மனிதன் இறந்த பிறகு இயற்கையாகவே மக்கிப்போவதற்கான வழிமுறைகள். அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகு நாம் எந்த ஒரு தலையிடும் செய்யாமல் இருந்தால் இவ்வாறு தான் மக்கி குப்பையாக போகும்.
மேற் சொன்ன அனைத்து நிகழ்வுகளும் காலநிலையை பொறுத்து இடத்துக்கு இடம் சிறிது நேரங்கள் மட்டும் வித்தியாசத்தோடு இச்செயலானது நடக்கும். எப்படி பார்த்தாலும் ஒரு மனிதன் இறந்த பிறகு ஒரு வாரத்தில் எலும்பு கூடாக மாறி வெறும் எலும்பாக தோற்றமளிப்பான். சில பல நிகழ்வுகளை நாம் செய்வதால் இந்த நேரங்களை சற்று மாற்றியமைக்கலாம். உதாரணத்திற்கு இப்போது ஒரு ஊரில் ஒரு முதியவர் இறந்து கிடக்கிறார். அவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

இறந்தவரின் ஆசை அவரது மகன் தான் வந்து எனக்கு கொல்லி போட வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்து விட்டார் என்றால், அவரது மகன் வருவதற்குள் இவரது உடலானது முதல் இரண்டு நிலைகளைக் கடந்திருக்கும். முதல் இரண்டு நிலை என்பது இப்போது நீங்கள் படித்திருப்பீர்கள் அதனால் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்போது என்னவாகும் என்று உங்களுக்கே தெரியும்..! இதுபோல இந்த இரண்டு நிகழ்வுகள் நடப்பதை தாமதப்படுத்துவதற்காக தான் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாப்பார்கள்.
இப்படி நாம் செய்வதால் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளில் சில நிகழ்வுகளின் நேரங்களை மட்டும் நம்மால் மிச்சப்படுத்த முடியும் ஆனால் போன உயிரானது திரும்ப வராது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்னொரு விஷயத்தை உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன் அதாவது இறந்து போன ஒரு நபர் குளிரான பகுதியில் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அச்சமயத்தில் யாரும் எந்த ஒரு சடங்கும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால்,
இறந்தவரின் உடலுக்கு தேவையான போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், இறந்தவரின் உடலில் உள்ள நீர் சத்துக்களும், கொழுப்புகளும் வேதிவினை புரிந்து ஒரு மெழுகு படலத்தை உருவாக்கும். இவ்வாறு உருவான இந்த மெழுகு படலம் இறந்தவரின் உடலை சில மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாத்திருக்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைக்கு எகிப்தில் இருந்து சுட்டுக் கொண்டு வந்த பெயரை இதற்கு வைத்துள்ளார்கள். அது என்னவென்றால் மம்மிஃபிகேஷன்னு (Mummification) சொல்லுவாங்க.

இறுதியில் எகிப்தில் இருந்து திருடிக் கொண்டு வந்தார்கள் என்று சொல்லி இருப்பேன் அதை சற்று காமெடியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த நிலைக்கு மம்மிஃபிகேஷன் என்று பெயர் வைத்துள்ளார்கள் என்பது மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். மம்மி என்றவுடன் எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது எகிப்தில் அடக்கம் செய்யக்கூடிய முறையை தான். அதனால் தான் சற்று காமெடியாக இருக்கட்டும் என்று அந்த இடத்தில் சுட்டி காட்டினேன்.
நண்பர்களே இன்னைக்கான பதிவுல நம்ம உசுரோடு இருக்கும்போது நம்ம உடலின் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதில் எந்த அளவுக்கு நாம் ஆர்வம் காட்டுகிறோமோ அதே போல இறந்தவுடன் எப்படி எல்லாம் நமது உடல் நடந்து கொள்ளும் என்பதை தெரிந்து கொள்வதற்காக உருவாக்கிய இந்த பதிவு இத்தோட முடியுது.
இந்த நான்கு நிலைகள் மட்டும் தான் நமது உடலானது மக்கி போவதற்கு காரணமாக இருக்கிறதா என்று கேட்டால் கிடையவே கிடையாது இந்த நான்கு நிகழ்வுகளுக்குள் பல நிகழ்வுகள் ஒளிந்து இருக்கின்றன நிமிஷத்துக்கு நிமிஷம் பல நிகழ்வுகள் நடப்பதால் நமக்கு அனைத்து நிகழ்வுகளும் தேவைப்படாது. முக்கியமான நிகழ்வுகளை மட்டும் தான் இதில் உங்களுக்கு நான் கூறியிருப்பேன்.
மீதம் இருக்கக்கூடிய நிகழ்வுகள் யாருக்கு பயன்படும் என்றால் மருத்துவர்களுக்கு அல்லது யாரையோ கொலை செய்து விட்டு அந்த சம்பவத்தை விசாரிக்க கூடிய உயர் அதிகாரிகளுக்கு மீதம் இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் தெரிந்து வைத்துக் கொண்டால் ஒரு உயிரானது எப்பொழுது போனது.? இறந்து எவ்வளவு நேரம் ஆயிருக்கும் என்றும் மேலும் இறந்தவர் தூக்கத்தில் செத்தாரா, இல்லை கொலை செய்யப்பட்டாரா, இல்லை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுமேவழிய நமக்கு பெருசாக எந்த ஒரு பலனும் இல்லை.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நிகழ்வுகளை மட்டும் இந்த பதிவு உங்களுக்காக தெளிவாக சொல்லியிருப்பேன். உங்களுக்கு இந்த பதிவானது நிச்சயம் பிடித்து இரக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் இதுபோல பல சுவாரசியமான தகவல்களை நமது வலைதளத்தில் அடிக்கடி உங்களுக்காக உருவாக்கிக் கொண்டே இருப்பேன். நீங்கள் தவறாமல் படிப்பதற்கு விரும்பினால் கீழே இருக்கக்கூடிய ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள telegram-ல் இணைந்து கொள்ளுங்கள்.
நிறைய நண்பர்களிடம் telegram இல்லாமல் இருக்கலாம் அவர்களுக்காக வாட்ஸ் அப்பிலும் நமது வலைதளத்திற்கான சேனலை உருவாக்கி இருக்கிறேன். மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள். இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை உங்களுக்காக உருவாக்கி விட்டதை உடனுக்குடன் தெரிவிப்பேன். ஆகவே நண்பர்களே நீங்கள் இல்லாமல் நான் இல்லை அதாவது எனது பணி ஆனது கிடையாது. நீங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதால் தான் நான் இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை உங்களுக்காக எழுதுகிறேன்.
நான் இதுபோல ஒவ்வொரு பதிவை உருவாக்குவது உங்களுக்குக்காகவே..! ஆகவே உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு லைக், ஒரு சேர், ஒரு கமெண்ட் அவ்வளவுதான் நண்பர்களே.! நீங்கள் செய்யக்கூடிய இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தும். பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை வேகமாக உருவாக்க வேண்டும் என்ற சிந்தையை என்னுள் ஏற்படுத்தும். நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் சொல்லாமலேயே நீங்கள் அனைத்தையும் செய்யத் துணிந்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

எத்தனையோ கசமுசா பதிவுகளுக்கு மத்தியில் இதுபோல நல்ல பதிவை உருவாக்கி உங்களுக்காக பல சுவாரசியமான தகவல்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். கசமுசா பதிவுகளை ஆதரிக்கும் நண்பர்கள் இருக்கும் பொழுது நல்ல பதிவுகளையும் ஆதரிக்க சில நண்பர்கள் இருப்பீர்கள். நிச்சயம் நீங்கள் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பியே இதை நான் செய்து வருகிறேன். செய்வீர்கள் என்று நம்புகிறேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா பாசையில் சொல்ல வேண்டுமென்றால் செய்வீர்களா..! செய்வீர்களா..!
இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவலோடு நாளை வந்து உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝
உங்களுக்கு இன்னும் நேரம் இருந்தால் இதையும் படியுங்கள் 👇
நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்