
ஹலோ நண்பர்களே இதுதான் பிரான்ஸ்ல உள்ள மிலாவ் வயோடக். உலகின் மிக உயரமான பாலம், இந்த பிரிட்ஜோட மிக உயரமான டவர் 1125 அடி உயரத்தில் இருக்கு. அதாவது வானத்தில் இருக்கும் மேகங்களையும் தாண்டி போகும் அளவுக்கு உயரமான பிரிட்ஜ் இது.
ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இந்த பாலம் அவ்வளவு சுலபமா கட்டப்படல இன்ஜினியர்ஸ் அவங்க உயிரை பணையம் வச்சி, இந்த உயரமான பிரிட்ஜை கட்டுறதுக்கு பல சவால்களை எதிர்கொண்டாங்க. அதாவது இந்த பிரிட்ஜுக்கான பில்லர்ஸ வச்சதுக்கு அப்புறம் அதை ஒன்னோடு ஒன்னு இணைக்கிறதுல சிக்கல் ஏற்பட்டது. இந்த பில்லர்ஸ்க்கு இடையில ரோடு செக்சன்ஸை இவங்க வைக்கணும். ஒரு ரோடு செக்சனோட எடை சுமார் 25 ரயில் இன்ஜின்களுக்கு சமமாக இருந்தது. இது மாதிரி மொத்தம் எட்டு ரோடு செக்சன்ஸை இவங்க பில்லர்ஸ்க்கு நடுவுல அமைக்கணும்.
இதை செய்ய 5000 டன் எடையை 1125 அடி உயரத்துக்கு தூக்கும் கிரேன் இந்த உலகிலேயே இல்லை. 800 அடி உயரம் உள்ள தூண்கள் மேல பாலம் கட்டி அதுல கிரேன்களை வச்சு ரோட் செக்சன்ஸ தூக்கினா பில்லர்ஸின் உயரம் காரணமா அது எளிதா இடிஞ்சு விழுந்துரும். ஏன்னா பில்லர்ஸ் ரொம்ப உயரமா இருக்குறதுனால அதோட மேற்பகுதி பலவீனமா இருக்கும் இந்த பிரச்சனை கன்ஸ்ட்ரக்சன் டீமுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
இந்த பிரச்சனையினால இந்த பிரிட்ஜை கட்டுறதுல தாமதம் ஏற்பட்டது. இந்த கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் ஏற்படும் தாமதம்னால இவங்க ஒரு நாளைக்கு 30000 டாலர் அபராதத்தை கட்டணும். ஏன்னா இவங்க இந்த பிரிட்ஜ நாலு ஆண்டுக்குள்ள கட்டுவதாக ஒப்பந்தம் பண்ணி இருந்தாங்க இந்த சவாலை இன்ஜினியர்ஸ் எப்படி சமாளிச்சாங்க பல பிரச்சனைகளுக்கு அப்புறம் இந்த பிரிட்ஜ் எப்படி கட்டப்பட்டதுன்னு, இன்னைக்கான பதிவுல விரிவா பார்ப்போம் வாங்க.
இந்த பதிவு ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் சோ இதை கண்டிப்பா உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க.
மிலா வயோடக் பாலம் உலகின் மிக உயரமான ஸ்டாண்டிங் பிரிட்ஜ். இதை ஏன் ஸ்டாண்டிங் பிரிட்ஜ்ன்னு சொல்றாங்கன்னா, இதோட பில்லர்ஸ் தரைமட்டத்திலிருந்து தொடங்குறதுனாலதான். இந்த பிரிட்ஜ் 2004 ஆம் ஆண்டு சுமார் 394 மில்லியன் யூரோ செலவுல கட்டப்பட்டது. தரையிலிருந்து 1104 அடி உயரத்துல இந்த பிரிட்ஜ் கட்டப்பட்டிருக்கு. இது உலகப் பொறியியல் அதிசயங்கள்ல ஒண்ணாகும். இந்த பிரிட்ஜ் ஈஃபில் டவரை விட 45 அடி கூடுதல் உயரம் கொண்டது. இந்த உயரத்துல மேகங்களுக்கு மேல இந்த பிரிட்ஜ்ல போகிறது.

உண்மையிலேயே பறக்குறதை போல ஒரு உணர்வை கொடுக்கும்னு சொல்லப்படுது. இந்த உணர்வு ஒன்னும் ஈசியா கிடைக்கவில்லை, ஆமாங்க இந்த பாலம் கற்றதுக்காக இன்ஜினியர்ஸ் அந்த இடத்தில் ஏற்படும் நிலச்சறிவுகள், மணிக்கு 130 km வேகத்தில் வீசும் காற்று மற்றும் பெரிய புயல்கள் போன்றதுல இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி உண்மையிலேயே இந்த ப்ராஜெக்ட்ல சிக்கி தவிச்சாங்க. ஏன்னா நாலு லைன் ஹைவேயை கொண்ட உயரமான பாலம் இதுக்கு முன்னாடி பிரான்ஸ்ல கட்டப்படவே இல்லை. மற்றும் யாரும் இவ்வளவு கஷ்டமான ப்ராஜெக்ட்ட தைரியமா எடுத்து பண்ணதும் கிடையாது.
இதனால மிலா வயோடெக் பிரிட்ஜின் ப்ராஜெக்ட் இன்ஜினியரிங் எல்லையை தாண்டியது மட்டுமில்ல, இன்ஜினியரிங் உலகையே கதிகழங்க வச்சது. இந்த ப்ராஜெக்ட்ல இவ்வளவு சிரமம் இருந்துச்சுன்னா அப்புறம் எதுக்காக இந்த பிரிட்ஜ கட்டினாங்கன்னு நீங்க யோசிக்கலாம் 1980-களில் பிரான்ஸ் ஒரு நேஷனல் ஹைவேயை உருவாக்கியது இந்த ஹைவே பிரான்ஸ்ல இருந்து நேரா ஸ்பெயினுக்கு போனது. இந்த பெரிய ஹைவே தெற்கே பிரெஞ்சு கிராமங்கள் வழியா போனது. அதே மாதிரி ஸ்பெயின்ல இருந்து வந்த ஹைவே வடக்கு நோக்கி போனது. ஆனா இந்த ரெண்டு ஹைவேயும் இணைக்கப்பட முடியாம ஒரு பெரிய மலையில போய் நின்றது, அதுதான் மிலாவுங்கிற ஒரு சின்ன ஊரு.

மிலாவ் நகரம் 1500 அடி உயரத்துல மலைகளுக்கு நடுவுல அமைஞ்சிருக்கு மற்றும் இந்த ஹைவேயை இணைக்கும் இடத்துல நதி போயிட்டு இருந்தது. இதனால இந்த பகுதியை கடக்கும் போக்குவரத்து மிலாப் நகரம் வழியாதான் போகணும். வடக்கு பிரான்ஸ்ல இருந்து வரும் போக்குவரத்து முதல்ல இங்கே இருக்கும், ஜிக்ஜாக் ரோடு வழியா போயி மிலாப் நகரத்துக்கு போகணும். இது இந்த இடத்துல கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியது. எந்த அளவுக்குன்னு கேட்டா மிலாவு நகரத்தை கடக்க குறைந்தபட்சம் அஞ்சு மணி நேரம் எடுக்கும். அதுவும் லீவு நாட்கள்ல சொல்லவே வேண்டாம்..! இது பிரெஞ்சு அரசாங்கத்தை ரொம்ப கஷ்டப்படுத்தியது.
இந்த பிரச்சனையை தீர்க்க பிரெஞ்சு அரசாங்கம் பாரிஸ்ல இருந்து ட்ரெயினுக்கு ஒரு ஹைவே பிரிட்ஜை கட்ட முடிவு பண்ணாங்க. இங்க பாலம் கட்டுறது சுலபமாக தெரிஞ்சாலும் இங்க இருக்கும் கரடு முரடான சூழ்நிலையினால இங்க பாலம் கட்டுவது சாத்தியமற்ற விஷயமாக இருந்தது. ஏன்னா பல நிபுணர்கள் மிலாவுல பாலம் கட்ட முடியாதுன்னும், அப்படியே ஒரு உயரமான பாலத்தை கட்டினாலும் அது மிகப்பெரிய பேரழிவை அழைப்பது போல இருக்கும்னு சொன்னாங்க. இருந்தாலும் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு இந்த இடத்துல பாலம் கட்டுறது ஒரு கனவாக இருந்தது. ஆனா இங்க போக்குவரத்து நெரிசல் வரம்பை மீறி போனதுனால இவங்களுக்கு இங்க பாலம் கட்டுறதை தவிர வேற வழியே இல்லை.

இந்த பாலத்தோட டிசைன்ல இருந்து கட்டுறது வரைக்கும் இன்ஜினியரிங் டீமுக்கு மூணு கடினமான சவால்கள் இருந்தது. முதலாவதா இந்த மலை சரிவிலிருந்து உலகின் மிக உயரமான பிரிட்ஜ் பில்லர்ஸ அமைக்கிறது. இரண்டாவது 36000 டன் எடையுள்ள நாலு லேன் ஹைவே ரோடு செக்சன்ஸ பில்லர்ஸ்க்கு மேல வைக்கிறது. மூணாவதா பாலத்துக்கு மேல ஸ்டீல் பைலான்ஸ வைக்கிறது ஒவ்வொரு ஸ்டீல் பைலானும் ஏர்பஸ் a380 வை விட ரெண்டு மடங்கு அதிக எடையை கொண்டது. (A380 இது ஒரு விமானம்) இது எல்லாத்துக்கும் மேல இந்த எல்லா வேலைகளையும் இவங்க தரையிலிருந்து 1125 அடி உயரத்துல இதை செய்ய வேண்டி இருந்தது.
இந்த வேலைக்காக உலகின் சிறந்த ஆர்க்கிடெக்ட், லார்ட் நார்மன் பாஸ்டர் பணி அமர்த்தப்பட்டார். இந்த பாலத்தை அமைக்க மொத்தம் ஏழு தூண்கள் வடிவமைக்கப்பட்டது, அதுக்கு மேல உள்ள ரோடு கொஞ்சம் கர்வ் (Curve) ஷேப்பா இருக்கும் மாதிரி வடிவமைக்கப்பட்டது. ஆனா இதுல சிக்கல் என்னன்னா பில்லர் ரெண்டு மிக உயர்ந்த உயரத்தில் இருந்தது. மீதி உள்ள ஆறு பில்லர்ஸும் மலையின் சரிவுல இருந்தது. இன்னொரு சிக்கல், இதுல என்னன்னா இந்த பாலத்தை கட்ட துணிந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி இந்த ப்ராஜெக்ட்ட நாலு வருஷத்துக்குள்ள கட்டி முடிக்கணும் இல்லைன்னா இவங்களுக்கு ஒவ்வொரு தாமதமாகும் நாளும் 30000 டாலர் அதாவது 25 லட்சம் அபராதம் கட்டணும்னு ஒப்பந்தம் பண்ணப்பட்டிருந்தது.

அக்டோபர் 2001ல மிலாவ் வேடக்ட் பிரிட்ஜுக்கான கட்டுமானம் தொடங்கியது. இந்த பிரிட்ஜ் 120 ஆண்டுகள் வலுவா நிக்கும்னு உறுதி கொடுக்கப்பட்டது. இந்த பில்லர்ஸ்க்கான அஸ்திவாரம் அமைக்கிறது மூலம் கட்டுமானம் தொடங்கியது. ஆனா இன்ஜினியரிங் டீமுக்கு ஜியோலாஜிஸ்ட் ஒரு கெட்ட செய்தியை கொடுத்தாங்க. அதாவது இந்த பகுதியில இருக்கும் நிலத்துக்கு அடியில நிறைய உடைஞ்சு போன சுண்ணாம்புக் கற்கள் அதாவது லைம்ஸ்டோன்ஸ் இருப்பதாக சொன்னாங்க. இதன் காரணமா இந்த லைம்ஸ்டோன்ஸ்க்கு இடையில ஏராளமான இடைவேலிகள் இருப்பதாகவும் சொன்னாங்க. இவங்க இந்த இடத்துல ட்ரில் பண்ணும் போதோ இல்ல அகழ்வாராய்ச்சியின் போதோ நிலச்சறிவு ஏற்படும் வாய்ப்பு இருக்குன்னு எச்சரிக்கை பண்ணாங்க.
ஆனா எல்லா எச்சரிக்கையும் மீறி இங்க அடித்தளம் அமைக்கும் பணி நடந்தது. இவங்க அடித்தளத்தை போட்டு பில்லர்ஸ்களை எழுப்பும் ஸ்டேஜ் வந்தப்போ இவங்க எதிர்பார்த்தது போலவே, ஒரு பயங்கரமான புயல் வந்து இங்க நிலச்சறிவை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் 4000 கன மீட்டர் பாறைகள் இவங்க அமைச்ச முதல் பில்லர்ஸின் அடித்தளத்தை மூடியது. ஆனா அதிர்ஷ்டவசமா இங்கே விழுந்த பாறைகள் எதுவும் இந்த பில்லர்ஸை சேதப்படுத்தல கன்ஸ்ட்ரக்ஷன் டீம் இந்த சரிவுல இறங்கி பாறைகளை அகற்றி சிமெண்ட்னால இந்த இடத்தை இன்னும் வலுவாக்கி இவங்க ப்ராஜெக்ட்ட தொடர்ந்தாங்க.
இந்த பாலத்தோட ஏழு பெரிய பில்லர்களை உருவாக்க சுமார் 2 லட்சம் டன் எடையுள்ள கான்க்ரீட் தேவைப்பட்டது இதுக்காக இந்த இடத்துல ஒரு தற்காலிக கான்க்ரீட் ஃபேக்டரியை உருவாக்கினாங்க. இந்த ரீஇன்போர்ஸ்டு (வலுவூட்டப்பட்ட) கான்க்ரீட்ல சுமார் 16000 டன் ஸ்டீல் கம்பிகள் பயன்படுத்தப்பட்டது. அதாவது மிலா வயோடக்ட்ல பயன்படுத்தப்படும் இந்த ஸ்டீல் கம்பிகளை வரிசைப்படுத்தினா அது 4000 km அதாவது பிரான்ஸ்ல இருந்து சென்ட்ரல் ஆப்பிரிக்கா வரைக்கும் போகும். ஆனா ஆர்க்கிடெக்ஸ் கொடுத்த இந்த டிசைன் கன்ஸ்ட்ரக்சன் டீமுக்கு பெரிய தலைவலியை உருவாக்கியது. இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ப்ராஜெக்ட்ட நம்ம செய்யணுமான்னு கூட இவங்க யோசிச்சாங்க ஏன்னா ஒவ்வொரு பில்லரின் டிசைனும் ஒண்ணுக்கொன்னு வித்தியாசமா இருந்தது.

அதாவது ஒவ்வொரு பில்லர்ஸும் ஒரே மாதிரியான சைஸ்ல இல்லாம, கீழ தடியாகவும் மேல மெல்லியதாகவும் இருந்தது. இதனால இந்த பில்லர்ல ஒவ்வொரு நாலு மீட்டர்ல மட்டுமே ஒரு நேரத்துக்கு வேலை நடந்தது. இந்த பில்லரை உருவாக்க ஒரு கனமான ஸ்டீல் பிரேம் மோல்ட் செய்யப்பட்டது. இதுக்கு அப்புறம் இதுல கான்க்ரீட் ஊற்றப்பட்டது, அடுத்து நாலு மீட்டருக்கு இந்த மோல்ட உயர்த்தி அந்த வடிவத்துக்கு ஏத்த மாதிரி வச்சு திரும்பியும் கான்க்ரீட் ஊற்றப்பட்டது. 15 டன் எடையுள்ள இந்த ஸ்டீல் மோல்டுகளை ஏத்தியும் இறக்குறதுக்கே நாட்கள் எடுத்தது, ஆனா இவங்களுடைய போட்டி காலத்தை எதிர்த்து நடந்தது.
அதாவது இவங்களுடைய பிளான் படி மூணு மாசத்துல பில்லர்களின் வேலையை இவங்க முடிக்கணும், ஆனா இந்த வேலை முடிய ஆறு மாசம் எடுத்தது. இது மட்டும் இங்க பிரச்சனை இல்ல இந்த பில்லர்களின் லொகேஷன் துல்லியமாக இல்லாம போனா இதுக்கு மேல வைக்கப்படும் ரோட் செக்சன்ஸ் நேரா இருக்காது. அதாவது பில்லரோட அடிப்பகுதியில வெறும் 10 cm வித்தியாசம் இருந்தா கூட பில்லரோட உச்சியில அது 6m வித்தியாசத்தை உருவாக்கும். இந்த பின் பாயிண்ட் அக்யூரசியை கொண்டுவர ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
விண்வெளியில இருக்கும் பல சேட்டிலைட்டுகளின் உதவியோடு பில்லர்களின் பின் பாயிண்ட் அக்யூரசி தீர்மானிக்கப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதனால பில்லர்களின் மேல் பகுதி கரெக்டா இருந்தது. நாட்கள் மாதங்கள் ஆனது, மாதங்கள் வருடங்கள் ஆனது, நவம்பர் 2003 ஆம் ஆண்டு இந்த பிரிட்ஜுக்கான ஏழு பில்லர்களும் கட்டி முடிக்கப்பட்டது. இதில் இருக்கும் இரண்டாவது பில்லர் சுமார் 245 m அளவு உயரம். இதை உலகின் மிக உயரமான பில்லராக ஆக்கியது. ஆனால் இந்த வெற்றிக்கு அப்புறமும் இவங்க ஓய்வெடுக்கல, ஏன்னா இந்த பாலத்தின் அடுத்த கட்டம் ரொம்பவே சவாலாக இருந்தது. ரெண்டரை கிலோமீட்டர் நீளமுள்ள நாலு லேன் ரோடு செக்சன்ஸ இவங்க இவ்வளவு உயரத்துக்கு தூக்கி வைக்கிறதுங்கறது சாதாரண விஷயம் இல்லை.
இந்த முழு ரோடு செக்சன்ஸோட எடை 36000 டன் இதை தூக்கும்போது ஒரு சின்ன தவறு நடந்தா கூட மனித உயிர்களையும், மில்லியன் கணக்கான டாலர்களையும் இழக்க நேரிடும். வரலாற்றுல இது மாதிரி மெகா ஸ்ட்ரக்சர்ஸ கட்டும்போது பல உயிரிழப்புகள் நடந்திருக்கு. இந்த இழப்புகளை மனசுல வச்சு மிலா வயோடக் பாலத்துல கான்க்ரீட் ரோடுகளை வைக்கிறதுக்கு பதிலா ஸ்டீல்னால தயாரிக்கப்பட்ட ரோடுகளை வைக்க முடிவு பண்ணாங்க. இந்த வேலைக்காக சுமார் 100km தூரத்தில் உள்ள ஈஃபில் ஸ்டீல் வொர்க்ஸ் நிறுவனத்துகிட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏன்னா இந்த நிறுவனம்தான் ஈஃபில் டவர் மற்றும் லிபர்ட்டி ஸ்டாச்சுக்கான ஸ்டீல் வொர்க்ஸ பண்ணியது.

ரோடுகளுக்காக 2200 தனித்தனி ஸ்டீல் செக்சன்ஸ் உருவாக்கப்பட்டது. அதுவும் வேற வேற டிசைன்ல ஒவ்வொரு செக்சனின் எடையும் 90 டன் இருந்தது. மற்றும் இதுல ஒரு சின்ன வித்தியாசம் இல்லாத அளவுக்கு துல்லியமா செய்யப்பட்டது. கட்டிங், வெல்டிங்னு கடினமான வேலைக்கு அப்புறம் இவ்வளவு பெரிய ஸ்டீல் சாலைகளை கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுக்கு எடுத்துக்கிட்டு போறதுங்கறது அடுத்த சவாலாக இருந்தது. இதுக்காக போகிற வழி திட்டமிடப்பட்டு பிரெஞ்சு போலீஸின் உதவியோடு இந்த ஸ்டீல் சாலைகள் சைட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு ஸ்டீல் சாலைக்கும் ஒவ்வொரு தனித்தனி, அதாவது 2000 ட்ரைலர் லாரிகளை பயன்படுத்தினாங்க.
இந்த ஸ்டீல் ரோடு செக்சன்ஸ் எல்லாத்தையும் ஒன்னா வெல்டிங் செஞ்சதுக்கு அப்புறம் அது பில்லருக்கு மேல வச்சு முன்னோக்கி தள்ளப்படும். இப்படி பாலத்தின் ரெண்டு சைடுல இருந்தும் பண்ண முடிவு பண்ணாங்க. இது சாதாரண பாலங்கள் கட்டும்போதும் செய்யப்படும் ப்ராசஸ், ஆனா மிலா வயோடக்ட் சாதாரண பாலமே கிடையாது. இதுல இருக்கும் 250 மீட்டர் உயரமுள்ள ரெண்டு பில்லர்ஸ்க்கு நடுவுல 342 மீட்டர் தூரம் இருந்தது. அஞ்சு டன் எடையுள்ள ஒரு ஸ்டீல் ரோடு செக்ஷனை இதுல தள்ளினா அது ஒரு பில்லர்ல இருந்து இன்னொரு பில்லருக்கு போகறதுக்குள்ள எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாம முழு பகுதியும் கீழ விழும்னு பயந்தாங்க.
அப்படி இது கீழ விழுகலைனாலும், இவ்வளவு உயரமான பில்லர்களை வச்சு தள்ளுறது ஒவ்வொரு பில்லரையும் விழுக வைக்கும்னு யோசிச்சாங்க. இதுக்காக புதுசா ஒரு திட்டத்தை செய்ய வேண்டிய அவசியம் வந்தது. கன்ஸ்ட்ரக்ஷன் டீம்ல இருந்து ஒரு சீஃப் இன்ஜினியருக்கு ஒரு யோசனை கிடைச்சது. அவரின் யோசனையின் படி ஒரு டேபிள் மேல ஒரு கனமான பெட்டியை வச்சு தள்ளினா அந்த டேபிளோட கால்கள் வலுவிழந்து டேபிளும் சேர்ந்து நகரும் அதுவே டேபிளுக்கு மேல வெயிட்ட வச்சு அந்த கனமான பெட்டியை தள்ளினா டேபிளுக்கும் எதுவும் ஆகாது.
இந்த லா ஆஃப் பிசிக்ஸ்ஸ (Law of physics) வச்சு பில்லர்களுக்கு மேல ஒரு சிஸ்டமை நிறுவி இந்த சாலைகளை அதுக்கு மேல வச்சு தள்ள முடிவு செஞ்சாங்க இதனால இந்த ஸ்டீல் சாலைகளின் வெயிட்டு அந்த பில்லர்களுக்கு மேல நேரடியா விழுகாதுன்னு இதுக்காக ஒவ்வொரு பில்லர்ஸ்க்கு நடுவுலயும் 558 அடி உயரம் கொண்ட தற்காலிக இரும்பு கட்டமைப்புகளை அமைச்சாங்க. இந்த புது சிஸ்டம் ஒரு புரோட்டோடைப் மற்றும் இதை சோதிக்க இவங்களுக்கு நேரமும் இல்லை. உலகின் மிக உயரமான பாலத்தின் எதிர்காலம் ஒரே ஒரு சோதிக்கப்படாத புரோட்டோடைப்பை நம்பி இருந்தது. 26 பிப்ரவரி 2003 ஆம் அன்று கன்ஸ்ட்ரக்ஷன் டீமுக்கு ரொம்ப முக்கியமான நாள். அவங்களோட பல வருட உழைப்பு இந்த ஒரு நாள்ல சோதிக்கப்படும்.

பில்லர்களின் வலிமை, ஸ்டீல் ரோடு செக்ஷன்ஸ் மற்றும் இந்த பில்லர்களுக்கு மேல பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் ரேம்ப்ஸ் சிஸ்டமை சோதிக்கும் நேரம் வந்தது. இந்த புது சிஸ்டமின் எல்லா ரேம்புகளும் ஒரே நேரத்துல ஒரே வேகத்துல ரோட் செக்ஷன்ஸ தூக்கி முன்னோக்கி தள்ளணும். இதுல சின்ன தவறு நடந்தா கூட இந்த மொத்த பாலமும் இடிஞ்சு விழுந்துரும். அதிர்ஷ்டவசமா ஹைட்ராலிக் ரேம்ப் சிஸ்டம் வேலை செஞ்சது மற்றும் 200m ரோடு செக்ஷன் பில்லர் நம்பர் ஒன்ன அடைய ரெண்டு நாட்கள் எடுத்தது. இந்த வேலைகள் எல்லாமே இங்க இருக்கும் வானிலையை மனசுல வச்சு நடந்தது. அதாவது என்னைக்கு அதிக காத்து வீசாம இருக்கோ அன்னைக்கு மட்டும் இந்த ரோட் செக்ஷன் தள்ளப்பட்டது.
ஏன்னா பலத்த காத்து அடிக்கும் போது பாலங்கள் இடிஞ்சு விழுகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதுவும் ரோடு செக்ஷன்ஸ் ஒரு பக்கம் ஆதரவின்றி காத்துல தொங்கிக்கிட்டு இருக்கும்போது பெரிய விபத்துக்கள் நடக்கும் அபாயம் இருக்கும், அதாவது ரோடு செக்சன்கள் கீழே விழுவதற்கான அபாயமும் மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பில்லர்களும் கான்கிரீட் பில்லர்களும் சர்வா நாசமாக வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகளைத் தாண்டி ஒரு உண்மைச் சம்பவமும் உள்ளது. 1940களில் அமெரிக்கா வாஷிங்டன்ல உள்ள டக்கோமா நார்க்கோஸ் சஸ்பென்ஷன் பிரிட்ஜுக்கு அப்படி ஒரு நிலைமைதான் ஏற்பட்டது.
மிலா வயோடெக் பில்லர்கள்ல ரோட் செக்ஷன்ஸ அமைக்கும் பணி மும்முரமா நடந்து வந்தது மே 2004 போல இந்த பாலத்தோட ரெண்டு பக்கத்துலயும் ரோட் செக்ஷன்ஸ் அமைக்கப்பட்டது. இப்போ டான் நதிக்கு மேல இருந்த பகுதி மட்டும்தான் மிச்சம் இருந்தது. இந்த கடைசி பகுதி சரியா பொருந்தலைன்னா இவங்களுடைய எல்லா உழைப்பும் வீணா போயிரும். இந்த குறிப்பிட்ட பகுதியிலதான் இந்த பாலத்தின் வளைவும் இருக்கு, அதனால துல்லியமான பாயிண்ட்ல இது உட்காருறது ரொம்ப முக்கியம். முழு பிரான்ஸும் இந்த தருணத்தை நேரடி ஒளிபரப்புல பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அதே நேரத்துல பிரெஞ்சு பிரதமரும் இந்த இடத்துல இருந்தாரு.

ஹைட்ராலிக் ராம்பின் பட்டன் கடைசி தடவையா அழுத்தப்பட்டது நாலு வருடங்கள்ல முதல் தடவையா வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் ரோடு ஒன்றோடு ஒன்று வானத்துல வச்சு இணைக்கப்பட்டது. அதுவும் 99% அக்யூரசியோடு இதுல வேலை செஞ்ச இன்ஜினியர்ஸ் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைச்சது. இந்த பாலத்துக்கு மேல உள்ள சாலைகள் இணைக்கப்பட்டதுக்கு அப்புறம் எக்ஸ்ட்ரா சப்போர்ட்டுக்காக 90 m உயரமுள்ள ஸ்டீல் பைலான்ஸ் பொருத்தப்பட்டது. ஒரு பைலானோட எடை 700 டன், மொத்தம் ஏழு பைலான்கள் பொருத்தப்பட்டது. இவ்வளவு உயரத்துல இவ்வளவு கனமான பைலான்கள் வைக்கப்பட்டது உலகிலேயே முதல் தடவையாகும்.
இதுக்கு அப்புறம் இந்த ஸ்டீல் ரோடுகளுக்கு மேல தார் ரோடு போடப்பட்டது இந்த மொத்த பாலத்தோட வெயிட் 50000 டன் எடை இந்த பாலத்தோட ஸ்ட்ரென்த்தை செக் பண்ண 28 லாரிகள் ஒரே நேரத்துல இந்த பிரிட்ஜுக்கு மேல அனுப்பப்பட்டது. போக்குவரத்து போகும்போது அதிகபட்சம் 50 cm ஊசலாடும் வகையில வடிவமைக்கப்பட்டது. இந்த பாலம் ஆச்சரியப்படும் வகையா வெறும் 25 cm மட்டுமே இது ஊசலாடியது. 16 டிசம்பர் 2004-ல மிலா பயோடெக் பிரிட்ஜ் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
உலகத்திலேயே மிக உயரமான பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடிச்சது மட்டுமில்ல இந்த ப்ராஜெக்ட் நேரத்துக்கு முன்னாடியே முடிச்சு ஒரு சாதனையை படைச்ச இன்ஜினியரிங் டீமின் உழைப்புக்கான பலன் இது. ஓகே நண்பர்களே இன்னைக்கான பதிவு அவ்வளவுதான், இதே மாதிரி கடலுக்கு மேல கட்டப்பட்ட இந்த துபாய் தீவை பத்தின பதிவும் நம்ம வெப்சைட்ல இருக்கு அதையும் பாருங்க இந்த பதிவு பிடிச்சிருந்தா ஃபேஸ்புக் ல லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. இன்னும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான பதிவுல சந்திப்போம் மறக்காம நம்ம பேஸ்புக் பேஜை பாலோ பண்ணி உங்க ஆதரவு கொடுங்க அன்டில் தென் ஸ்டே சேஃப் சைனிங் ஆப் நன்றி…🔥
மறக்காம நம்மளோட டெலிகிராம் சேனல்ல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க இதுபோல சுவாரசியமான பதிவு வந்தவுடன் அங்கு உடனே உங்களுக்கு நான் தெரிவிப்பேன். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவோடு உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து கை பெறுவது நான் உங்கள் காவியா…💐
தங்கள் கட்டுரை அருமையாக உள்ளது இன்று வேற லெவல் இன்ட்ரஸ்டிங்கான கட்டுமான பணி பாலம் பிரான்ஸ் மிக்க நன்றி
மிக்க நன்றி தோழரே 🙏