உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

சுனாமி என்னும் பேரழிவு

2004 டிசம்பர் 26 தேதி இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் யாராலயும் மறக்க முடியாது. அதுக்கு காரணம் அன்னைக்கு ஏற்பட்ட கடல் சீற்றம். சுனாமினா என்னனே தெரியாத நமக்கு அன்னைக்கு நடந்த சம்பவம் பேரதிர்ச்சியா தான் இருந்துச்சு..! இப்படி பெரிய பாதிப்பை ஏற்படுத்துற இந்த சுனாமி எங்க உருவாகுது? எப்படி உருவாகுது? இதனால என்னென்ன ஆபத்துக்கள் எல்லாம் ஏற்படுதுங்கிறத பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்.

சுனாமியோட உண்மையான ஆபத்து என்னன்னா அதோட சடன்ஸ் தான் அதாவது திடீர்னு வந்து சுத்தி இருக்கிற அத்தனையையும் சூரையாடிட்டு போயிரும். சுனாமி என்கிற வார்த்தை ஜப்பானிய மொழியில் இருந்து உருவானது என்பது நமக்குத் தெரியும். ஜப்பான்ல சுனாமிங்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னா வேவ்ஸ் இன் தி ஹார்பர்.

அதாவது முன்னொரு காலத்துல சுனாமி மக்களுக்கு புதுசா இருந்தப்போ ஜப்பான்ல இருக்கிற ஒரு ஹார்பர்ல மக்கள் மீன் பிடிச்சிட்டு இருந்திருக்காங்க. அந்த நேரத்துல சுனாமி வந்து அந்த இடத்தையே அழிச்சிட்டு போனதுனால சுனாமிக்கு இப்படி ஒரு பெயர் வந்துச்சு. சுனாமி உருவாகுற ஆரம்ப அலையோட ஹைட் மூணு அடி இருக்கும். அதே மாதிரி ஒவ்வொரு அலைக்கும் இடையில இருக்கிற தூரம் 100 லிருந்து 200 km இருக்கும்.

சாதாரண அலையை கம்பேர் பண்ணும்போது 1000 மடங்கு சுனாமியோட அலைகள் பெருசா இருக்கும். இந்த சுனாமியோட ஸ்பீடு ஒரு ஜெட்டோட ஸ்பீடுக்கு (அதிவேக விமானம்) ஈக்குவலா இருக்கும். கரையை தொடுற வரைக்கும் மீடியம் ஸ்பீட்ல வர்ற இந்த அலைகள் கரையை தொட்டதுக்கு அப்புறம் ஒரு பேரலையா உருமாறும். இந்த அலை அடிக்கிறதுக்கு காத்தோ, அட்மாஸ்பியரோ காரணம் கிடையாது.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?
உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

கடலுக்கு அடியில நடக்கிற விஷயங்கள் தான் சுனாமியை உருவாக்குது. பொதுவா சுனாமி உருவாகுறதுக்கு காரணம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சறிவு, பாம் பிளாஸ்ட் மற்றும் பனிப்பாறை உருகுவது போன்ற இன்னும் சில அரிய காரணகளால அதாவது ஆஸ்ட்ராய்டு (எரி கற்கள்) வந்து மோதுறதுனால கூட சுனாமி உருவாகுது. ஆனா 88% சுனாமி ஏற்பட காரணம் என்னன்னா, நிலநடுக்கம் தான் கடலுக்கு அடியில எர்த் குவேக் நடக்குறதுனால உருவாகுற ஒரு பெரிய ரியாக்ஷன் தான் சுனாமியை உருவாக்குது.

ஆகவே சுனாமிங்கிற ஒரு விஷயம் 95% கடலுக்குள்ளேயே நடந்து முடிஞ்சுரும், நாம வெளிய பார்க்கிறது வெறும் 5% தான். பொதுவா சுனாமி உருவாகுறதுக்கு காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா பூமிக்கு அடியில இருக்கிற டெக்டானிக் பிளேட்ஸ் எப்பவுமே மூவ் (இடம் பெயர்வு) ஆகிக்கிட்டே இருக்கும். அதோட எட்ஜஸ் எந்த நேரத்துல ரொம்ப அதிகமான வைப்ரேஷனை சந்திக்குதோ, அப்பதான் மினிமம் எட்டு புள்ளி அளவிலான வைப்ரேஷன் தண்ணில பாஸ் ஆகும்.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

இந்த வைப்ரேஷன் போதாதுன்னு கடலின் அடித்தளம் மொத்தமாவே மேல ஏறுறதுனால மேலேயும், கீழேயும் ஆக்சிலேஷன் மாதிரியான எஃபெக்ட் உருவாகும். இந்த சம்பவம் நடக்கிற மையப்பகுதியில கப்பல் இருந்தாலும் அதை ஃபீல் பண்ண முடியாது. ஏன்னா, இந்த இடத்துல உருவாகுற அலையானது வெறும் ஒன்றரை அடி ஹைட் தான் இருக்கும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த சர்பேஸ் (டெக்கானிக் பிளேட்ஸ்) மேலேயும் கீழேயும் மூவ் ஆகி, மூவ் ஆகி, இந்த அலை அப்படியே கடல்ல டிராவல் ஆகி வரும்போதுதான் ராட்சச அலையா உருமாறுது.

இதோட பின்விளைவா கடலோரத்தை வந்து சேர்ற அந்த அலையோட ஸ்பீடு 400 லிருந்து 800 km வரை இருக்கும். ஒரு சில சமயங்களில் இதோட ஸ்பீடு 1000 km கூட தாண்டுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இப்படி ஒருவேளை 1000 km தாண்டுச்சுன்னா கடலோர பகுதிகள் இந்த மாதிரி அலைகிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை நீங்க பீச்ல (Beach) நின்னுட்டு இருந்தீங்கன்னா, இந்த மாதிரி சம்பவம் நடக்கும்போது கடல்ல இருக்கிற தண்ணி கொஞ்சம் கொஞ்சமா உள்வாங்குறதை நீங்க கவனிக்க முடியும்.

See also  கிறுக்குத்தனத்தில் ஒரு முன்னேற்றம் அதுவும் துபாயால மட்டும் தான் முடியும்
உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

அந்த நேரத்துல நீங்க போய் மீன் பிடிக்கிறது, முத்து எடுக்கிறது, மாதிரியான வேலை எல்லாம் பார்க்கக்கூடாது. அந்த இடத்தை விட்டு ஓடுறதை தவிர உங்களுக்கு வேற எந்த ஆப்ஷனும் இல்லை. முதல்ல கடல் நீர் உள்வாங்கும், அப்புறம் ஃபர்ஸ்ட் வர்ற அலையோட ஸ்பீடு 50 km/h இருக்கும். அதுக்கப்புறம் இரண்டாவது, மூணாவதுன்னு அலைகள் வர வர கொஞ்சம் கொஞ்சமா ஸ்பீட் அதிகரிக்கும். ஒருவேளை கடலோட ஆழம் அதிகமா இருந்துச்சுன்னா அதுக்கு ஏத்த மாதிரி வேவ்ஸ் (அலைகள்) அதிகமா இருக்கும்.

அதுக்கப்புறம் கடல் தண்ணி ஸ்பீடா ஊருக்குள்ள வர ஆரம்பிக்கும், இதைத்தான் சுனாமின்னு சொல்றோம். நீங்க ஒருவேளை இந்த மாதிரி ஒரு சுச்சுவேஷன்ல பீச்ல நின்னுட்டு இருந்தீங்கன்னா கடல் உள்வாங்குனதுக்கு அப்புறம், உங்களுக்கு ஒரு 20 மினிட்ஸ் டைம் இருக்கும். அந்த 20 மினிட்ஸ்குள்ள நீங்க வேகமா ரியாக்ட் பண்ணி 10 km தொலைவை தாண்டிட்டீங்கன்னா உங்களால தப்பிக்க முடியும். அப்படி இல்லன்னா நீங்க பக்கத்துல இருக்கிற உயரமான பில்டிங்ல ஏறினா தப்பிக்க வாய்ப்பு இருக்கு அதுவும் அலைகளின் வேகத்தை பொறுத்துதான்.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

ஒருவேளை அலையின் வேகமானது 2000 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கிறது என்றால், எவ்வளவு உயரமான பில்டிங்கா இருந்தாலும் சுக்கு நூறு ஆகி கீழே விழுந்து விடும் அபாயம் இருக்கும். எனவே முடிந்த அளவுக்கு கடலை விட்டு பத்து டு பதினைந்து கிலோமீட்டர் தாண்டி இருப்பதே பாதுகாப்பாக இருக்க முடியும்.

ஆனா ஒன்னு, எந்த காரணத்தினாலயும் காருக்குள்ள அடைப்பட்டுற கூடாது, ஏன்னா தண்ணி வந்ததுக்கு அப்புறம் கார்ல மாட்டிட்டு இருக்கிறதை விட மோசமான விஷயம் எதுவுமே இருக்க முடியாது. அதே மாதிரி சுனாமில மிதந்துட்டு வர்ற குப்பையிலிருந்தும் நீங்க பாதுகாப்பா இருக்கணும். பாதுகாப்பாக இருக்கவில்லை எனில் தசாவதாரம் படத்தில் ஒரு கருப்பு கமலுக்கு நடந்த கதி தான் நமக்கும் நடக்கும். அந்த கமலின் பெயரை நான் மறந்து விட்டேன் அதனால் நிறத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

மோசமான சுனாமி

மேற்சொன்னதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணாலே போதும் நீங்க தப்பிக்கிறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. முதல் வேவ் வந்ததுக்கு அப்புறம் சுனாமியோட வேகம் கம்மி ஆயிருச்சுன்னு நினைச்சுட்டு மறுபடியும் டேஞ்சர் பாயிண்ட்ல போய் நிக்கக்கூடாது. ஏன்னா இது மிகவும் மோசமானது. உதாரணத்திற்கு இதே மாதிரி ஒரு சம்பவம் செவேரோ குரில்ஸ்ங்கிற ஒரு தீவுல 1952-ல நடந்திருக்கு.

முதல் அலை வந்துட்டு போனதுக்கு அப்புறம் மக்கள் எல்லாரும் பீச்சுக்கு திரும்ப வர ஆரம்பிச்சுட்டாங்க. கரெக்டா 30 நிமிஷம் கழிச்சு முதல்ல வந்த அலையைவிட ரெண்டு மடங்கு ஹைட்ல 60 அடி உயரத்திற்கு அலை வந்திருக்கு. அந்த அலைகள்ல சிக்குன அங்கிருந்த யாராலயும் உயிர் தப்பிக்க முடியல.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

சுனாமியை பொறுத்தவரைக்கும் நம்ம ஞாபகத்துக்கு இருக்க வேண்டியது, ஒரே ஒரு விஷயம்தான் அதாவது முதல் அலை வந்ததுக்கு அப்புறம் ரெண்டுல இருந்து மூணு மணி நேரத்துக்குள்ள அடுத்தடுத்த அலைகள் வரும். எப்பவுமே முதல் அலை மீடியமான ஸ்பீட்ல வந்து, சுத்தி இருக்கிற மரம், செடி, கொடி, கார், இதெல்லாம் சூரையாடிரும். இரண்டாவது அலையும், மூணாவது அலையும் தான் பில்டிங்ஸையே அடிச்சி உடைக்கிற அளவுக்கு பயங்கர பவர்ஃபுல்லா வரும்.

See also  எறும்புகள் இடையே உலகப் போர், இது இருக்கும் இடத்தில் மரணம் நிச்சயம்

நான் சொன்ன மாதிரியே செவேரோ ஐலாண்ட்ல, இதே மாதிரிதான் விடிய காலையில நாலு மணிக்கு சுனாமி வந்திருக்கு. மூணுல இருந்து நான்கு மணி நேரத்துக்குள்ளேயே நிறைய அலைகள் உண்டாகி, கிராமம் மொத்தத்தையும் அழிச்சிருச்சு. இப்படி திடீர்னு சுனாமி வர்றத உடனே தெரிஞ்சுக்க, உலகம் ஃபுல்லா நிறைய சுனாமி வார்னிங் சென்டர் இருக்கு. பொதுவா இந்த சுனாமி வார்னிங் சென்டர்ஸ் எல்லாம் 24*7 ரன் ஆகிக்கிட்டே இருக்கும். இந்த சென்டரோட வேலை என்னன்னு பார்த்தீங்கன்னா சுனாமி எந்த இடத்துல உருவாகுது, எவ்வளவு நேரத்துல கரையை வந்து தாக்கும்னு துல்லியமா சொல்றதுதான்.

அவங்களோட ஹெல்ப் மூலமா நமக்கு ரெண்டு நிமிஷமோ, மூணு நிமிஷமோ பிரசியஸ் டைம் கிடைக்கும். இன்னும் சில ரேர் கேசஸ்ல (rare cases) மூணுல இருந்து நான்கு மணி நேரம் கூட கிடைக்க சான்ஸ் இருக்கு. சுனாமியோட ஹைட் எவ்வளவுன்னு மெஷர் பண்ணா மட்டும்தான் சுனாமி எந்த அளவுக்கு ஆபத்தானதுன்னு அக்யூரேட்டா சொல்ல முடியும். அவங்க அனுப்புற அலார்ட் நோட்டிபிகேஷன், சுனாமி வர்றதுக்கு முன்னாடியே மக்களை வந்து சேர்ந்தாதான், மக்கள் அதுக்கு ஏத்த மாதிரி ரியாக்ட் பண்ண முடியும்.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

இதுவரைக்கும் இந்த உலகத்துல உருவான சுனாமியிலேயே மிகப்பெரிய சுனாமி அலாஸ்காவில் தான் நடந்திருக்கு. அலாஸ்காவுல 90 மில்லியன் டன் அளவிலான பணிக்கட்டி கடல்ல கலந்திருக்கு. இதனால 1700 அடிக்கும் அதிகமான பெரிய சுனாமி ஏற்பட்டிருக்கு. இதனால 10 km ரேடியஸ் சுத்தி இருந்த எல்லாத்தையும் சின்னாபின்னமாக்கி இருக்கு. கிராக்கடோவாங்கிற ஒரு தீவுல 19-ஆம் நூற்றாண்டுல நடந்த ஒரு எரிமலை வெடிப்பால அந்த தீவுல வாழ்ந்த 10000 மக்களும் சுத்தி இருந்த 1000 கப்பல்களும் அழிஞ்சு போயிருக்கு. இந்த மாதிரி எரிமலை வெடிப்பால கூட சுனாமி உருவாகும்.

ஆனா அது ரொம்ப ரொம்ப ரேரா 5% தான் நடக்கும். இப்படி நேச்சரை தவிர்த்து மனுஷனாலயும் சுனாமியை உருவாக்க முடியும். இந்த மாதிரி ஒரு சம்பவம் 20வது நூற்றாண்டுல நடந்திருக்கு. கடலுக்கு அடியில டெஸ்ட் பண்ணப்பட்ட ஒரு பாமால 984 அடி உயரத்துக்கு கடல் அலைகள் உருவாகி இருக்கு. அதுக்கப்புறம் அது கரையை ரீச் பண்றதுக்கு முன்னாடியே அலைகள் நார்மல் ஆயிருச்சு. சுனாமி உருவாகுறதுக்கு வேறு சில காரணங்களும் இருக்கு.

அதுல ஒன்னுதான் ஆஸ்ட்ராய்டு. 1 km டயாமீட்டர் இருக்கிற ஆஸ்ட்ராய்டு பூமியில விழுந்தா ஒரு மாபெரும் சுனாமியை உருவாக்க முடியும். சீக்சுலப்புங்கிற (Chicxulub – இது விண்கலின் பெயர்) ஒரு ஆஸ்ட்ராய்டோட டயாமீட்டர் 11 லிருந்து 81 km இருந்திருக்கு. இந்த ஆஸ்ட்ராய்டு விழுற இடத்துல இருந்து சுத்தி 20 km-க்கு எல்லாத்தையும் சாம்பலாக்கிரும். இந்த மாதிரி ஒரு சம்பவம்தான் டைனோசர் வாழ்ந்த காலத்துல நடந்திருக்கிறதா கண்டுபிடிச்சிருக்காங்க.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

டைனோசர் வாழ்ந்த காலத்துல இந்த மாதிரி ஒரு பெரிய ஆஸ்ட்ராய்டு பூமியில விழுந்து, அட்மாஸ்பியர் ஃபுல்லா டஸ்ட்டா அதாவது தூசிகள் நிறைந்த உலகமாக மாறிருச்சுன்னு சயின்டிஸ்ட் சொல்றாங்க. இவ்வளவு பெரிய ஆஸ்ட்ராய்டு கடல்ல விழுந்துச்சுன்னா 1½ km உயரத்துக்கு சுனாமி அலையை உருவாக்க முடியும். இந்த சுனாமி மொத்த உலகத்தையுமே தண்ணில மூழ்கடிக்க போதுமானதா இருக்கும்.

See also  ஆச்சரியத்தில் உறைய வைக்கும் அதீத பாதுகாப்பு கொண்ட இடங்கள்

2004-ல சுமத்ரா ஐலாண்டுக்கு பக்கத்துல நடந்த பெரிய நிலநடுக்கத்தால சுத்தி இருந்த 14 கண்ட்ரிஸையும் சுனாமி தாக்குச்சு. இந்த சம்பவத்தினால ரெண்டு லட்சம் மக்கள் இறந்து போயிருக்காங்க. தமிழ்நாட்டுல பல கடலோர பகுதிகள், முக்கியமா நாகப்பட்டினம் எல்லாம் ரொம்பவே பாதிக்கப்பட்டுச்சு. இந்த சுனாமியோட பவர் எவ்வளவு இருந்துச்சுன்னா..?

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

ஜப்பான்ல ஹிரோஷிமால போடப்பட்ட பாம்ல எந்த அளவுக்கு பவர் இருந்ததோ, அதைவிட 20000 மடங்கு அதிகமான பவர்ல இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கு. 2004-ல ஏற்பட்ட இந்த சுனாமில உயிரிழந்தவங்களை நினைவு கூறும் விதமா, ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 26 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு போறதில்லைனு நம்ம தமிழ்நாட்ட சுத்தி இருக்கக்கூடிய சில மீனவர்கள் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா இல்லையா என்பதை மீனவர்கள் யாரேனும் படித்துக் கொண்டிருந்தால் கமெண்ட்ல தெரிவியுங்கள். இப்படி ஒரு கோர சம்பவம் நடந்து 20 வருஷம் ஆனாலும் இந்த சம்பவம் மக்கள் மனசுல ஆறாத வடுவாதான் இருக்கு.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

இந்த பதிவை படித்து முடித்த பிறகு உங்களது கருத்துக்களை மறக்காமல் பேஸ்புக்கில் பதிவிடுங்கள். இதைப் பற்றி உங்களது நண்பர்களுக்கும் கடலோர மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினால் ஒரு லைக் செய்துவிட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள் அனைவருக்கும் பயன்படட்டும்.

அவ்வளவுதான் நண்பர்களே இன்னைக்கான பதிவுல சுனாமி எப்படி எல்லாம் உருவாகுதுங்கிறத பத்தி நம்ம தெளிவா பார்த்திருப்போம். நம்ம இந்த பதிவுல பார்த்தது போல நீங்க கடற்கரை ஓரமா இருக்கும்போது, சுனாமி உருவாவதற்கு முன் உங்களுக்கான வார்னிங் நிச்சயமாக கிடைக்கும் அதை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிக்க பாருங்க.

ஒருநிமிடம் நண்பர்களே, இந்தப் பதிவில் எரிக்கல் விழுந்தாலும் சுனாமி வரும் அப்படின்னு ஒரு பேரகிராஃப்ல சொல்லி இருப்பேன். அந்த எரிக்கல் விழுந்ததால் டைனோசர் இனமே அழிந்து இருக்கு. அது பற்றி ஒரு சுவாரசியமான பதிவை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறோம்.

உலகையே உலுக்கிய சுனாமி இதுபோல் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியுமா?

அதை இன்னும் படிக்காதவர்கள் கீழே ரோஸ் கலரில் இருக்கும் மெசேஜ் பாக்ஸ்சை கிளிக் செய்து, டெலிகிராமில் இருக்கும் லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். மறக்காமல் டெலிகிராமில் இணைந்தே இருங்கள். உங்களுக்கான அப்டேட்டுகள் பேஸ்புக்கில் வருவதற்கு முன் உடனுக்குடன் டெலிகிராமில் கிடைக்கும்.

இவ்வளவு தூரம் நீங்கள் இந்த பதிவை படித்திருக்கிறீர்கள் என்றால் ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆகையால் புதிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து டெலிகிராமில் மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள்.

மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா…📝

நீங்கள் ஒரு சில ஐடியாக்களை கொடுத்தால் அது பற்றி அலசி ஆராய்ந்து கட்டுரையாக தொகுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். எதைப் பற்றி எழுதலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதையும் மறக்காமல் பேஸ்புக்கில், கமெண்டில் கூறுங்கள். நிச்சயமாக அதை அலசி ஆராய்ந்து நல்ல கட்டுரையாக உங்களுக்கு கொடுப்பேன் இது என்னுடைய வாக்கு…🙏

உங்கள் ஆதரவை வேண்டி…🙏

                                         என்றும் அன்புடன் 
                                                  காவியா 📝

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏