ஒரே நாளில் இத்தனை லட்சம் கோடியா? ஆச்சரியத்தில் மக்கள்! ஆம் நண்பர்களே இந்த டாபிக் ஒரு வித்தியாசமான டாபிக் என்று சொல்ல வேண்டும். தினசரி நாம் எழுதக்கூடிய டாபிக்கை போல இல்லாமல் கொஞ்சம் சேஞ்சுக்காக டெக் சம்பந்தமாக இந்த ஆர்ட்டிகளை எழுதியிருப்பேன். குறிப்பாக தலைப்பையே பார்த்திருப்பீர்கள் கோடி என்று இருக்கும். அந்த கோடி யாரோட கோடி? அந்த கோடிக்கு என்ன ஆச்சு? ஏன் மக்கள் எல்லாம் ஆச்சரியத்தில் இருக்காங்க?
மேலும் இந்த பதிவுல மலரும் நினைவுகள் நம் எல்லாத்துக்கும் ஒன்னு ஒன்னு இருக்கும்ல, அது மாதிரி சில விஷயங்களை எழுதி இருக்கேன். நிச்சயம் படிச்சு பாருங்க உங்களுக்கும் சில உணர்வுகள் இந்த பதிவை படிக்கிறதுனால கண்டிப்பா வரும். அப்படி உங்களுக்கு வந்த அந்த மலரும் நினைவுகள் என்னங்கறத முழுசா படிச்சிட்டு கமெண்ட்ல சொல்லுங்க. வாங்க இந்த பதிவு குள்ள போவோம்.

நான் ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதெல்லாம் உலக பணக்காரர் யார் என்று கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஓனரான பில்கேட்ஸைதான் எல்லாரும் சொல்லுவார்கள். திடீரென பார்த்தால் பில் கேட்ஸை கீழே தள்ளிவிட்டு மஸ்க்கு மாமா எலான் மஸ்க் மேலே வந்து விட்டார். அப்படி வந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
பில்கேட்ஸ் ஐ விட எவ்வளவு சம்பாதித்து இவர் இந்த நிலைக்கு வந்தார். இப்போது இவருக்கு ஏற்பட்டிருக்கும் சரிவை பற்றியும் மேலும் இவர் இந்தியாவோடு ஒரு திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதை பற்றியும் இந்த பதிவு உங்களுக்கு தெளிவாக விளக்கும். வாருங்கள் அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2.52 லட்சம் கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. எனினும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவரே முதலிடத்தில் இருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் அந்நாட்டு அரசன் திறன்துறை தலைவராகவும் இருந்து வருகிறார்.

ட்ரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு கண்மூடித்தனமான ஆதரவு. பிற நாடுகளின் மீது வெறுப்பை உமிழழ்வது என அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை ஒரே நாளில் மஸ்க் 2.52 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை 28.77 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு திங்கட்கிழமை 26.24 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஸ்கின் சொத்து மதிப்பு 42.37 லட்சம் கோடியாக உச்சத்தை தொட்டது.
மூன்றே மாதங்களில் 11.50 லட்சம் கோடியை இழந்துள்ளார். எலான் மஸ்கின் டெஸ்லா வாகனங்களின் விற்பனை குறைந்ததே இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் திறன்துறை தலைவராக மஸ்க் பதவியற்றது முதல், ஐரோப்பிய நாடுகள் டெஸ்லா கார்களை முன்பதிவு செய்வதை கடுமையாக குறைத்துக் கொண்டன. இதில் ஜெர்மனி நாடு மட்டும் டெஸ்லா கார்களின் முன்பதிவை 70% குறைத்துக் கொண்டது.
மேலும் சீனாவில் 49% குறைந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் டெஸ்லாவின் பங்குகள் 15% சரிவை கண்டன. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு டெஸ்லா நிறுவனத்திற்கு ஏற்படும் மிகக் கடுமையான சரிவு இது. டெஸ்லா நிறுவன பங்குகளின் சரிவு குறித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் நீண்ட காலத்திற்கு இது சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.
டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்காவின் மகத்தான ஏழு நிறுவனங்கள் என அழைக்கப்படும் ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் (Microsoft), என்விடியா (Nivida), கூகுள் (Google), அல்ஃபபெட் (Alphabet), அமேசான் (Amazon) மற்றும் மெட்டா (Meta) ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்தன. மொத்தமாக அவை 65.37 லட்சம் கோடி ரூபாயை இழந்தன. இதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை மந்தநிலை நோக்கி செல்கிறதா என நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் எல்லாம் மஸ்கோட சொத்து மதிப்பு படு வேகமாக குறைந்தாலும், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தியாவில் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் கொட்டத்தை அடக்குவதற்காக எலான் மஸ்க் புதிய திட்டத்தோடு இந்தியாவுக்குள் பல கட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு கால் பதித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கு நல்லது நடக்குமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி சற்று பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை கொண்டுவர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்வது குறித்து ஏர்டெல் அறிவித்த மறுநாளே, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும் எலான் மஸ்க் நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக தகவல் தொடர்பு சந்தையில் பெரும்பான்மையை கையில் வைத்துள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறுவனங்களுமே ஸ்டார் லிங்க்கின் செயற்கைக்கோள் இணைய சேவையை கொண்டுவர இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஸ்டார் லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த பாரதி ஏர்டெல் ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டு இருந்தது. இதன் மூலம் எலான் மஸ்கின் நிறுவனம் இந்தியாவில் ஏர்டெல் உடன் இணைந்து அதிவேகம் செயற்கைக்கோள் இணையத்தள சேவையை வழங்குவது நேற்று உறுதியாக்கி இருந்தது. இது பற்றி ஏர்டெல் நிறுவனம் நேற்றைய தினம் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதன்படி ஸ்டார் லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகள் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதற்காக பாரதி ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதை நேற்றைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. எனினும் இந்த ஒப்பந்தம் நாட்டில் ஸ்டார்லிங் சேவைகளை விற்பனை செய்வதற்கான ஸ்பேஸ் எக்ஸின் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது.
ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இந்தியா முழுவதும் இணைய இணைப்பை ஒத்துழைத்து விரிவுபடுத்துவதற்கு விரிவான வழிகளை ஆராயும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏர்டெல் அதன் சில்லறை விற்பனை கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை விற்பனைக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை வணிகங்களுக்கு வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் சேவை குறைபாட்டை குறைக்க உதவும் வகையில் கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் தொலைதூர சமூகங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இணைய சேவை கொண்டுவர இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஏர்டெல் ஒப்பந்தம் வெளியான மறுநாளே முகேஷ் அம்பானியின் jio நிறுவனம் எலான் மஸ்கின் நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் ஆன்லைன் ஸ்டோர் பிராண்டுகள் மூலம் ஸ்டார்லிங் சேவைகள் கிடைக்கும் என்று இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்க ஸ்பேஸ் எக்ஸ் அதன் சொந்த அங்கீகாரங்களை பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு இந்தியா எவ்வாறு ஸ்பெக்ட்ரத்தை வழங்க வேண்டும் என்பது குறித்து இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் மற்றும் இணைய சந்தாதாரர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும் மோதிக் கொண்டிருந்த நிலையில் இரு நிறுவனங்களுமே எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. முன்னதாக செயற்கைக்கோள் இணைய சேவைக்கான ஸ்பெக்ட்ரமை விற்க ஏலம் நடத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் வலியுறுத்தியது.
ஆனால் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப நிர்வாக ரீதியாக அதை ஒதுக்க வேண்டும் என்று எலான் மஸ்கின் நிறுவனம் விரும்பியது. கடைசியில் எலான் மஸ்கின் விருப்பத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியது. அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்டார்லிங் இணையத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாரதி ஏர்டெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது இந்தியாவில் கையெழுத்திடப்பட்ட முதல் ஒப்பந்தமாகும். இப்போது ஜியோவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று வந்த நிலையில் அங்கு எலான் மஸ்கை சந்தித்து பேசினார். அதன் பிறகு அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் மற்றும் jio என இரு நிறுவனங்களுமே ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையத்தள சேவையை பொறுத்தவரை ஃபைபர் அல்லது செல்லுலார் நெட்வொர்க்குகள் இல்லாத இடத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல தொலைதூர மற்றும் இணைய சேவை குறைவாக உள்ள மலைப்பகுதிகளில் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்கின் இந்த சேவையை குறித்து உங்களது கருத்து என்ன என்பதை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க. ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவிற்கு வருவதால் இந்தியாவுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா? மேலும் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவிற்கு வருவதால் மொபைல் நெட்வொர்க்கின் ரீசார்ஜ் பிளானில் ஏதேனும் மாற்றங்கள் வருமா அதாவது விலை குறைப்பு நடக்குமா அல்லது விலை அதிகமாக ஏறுமா உங்களது கணிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்.
ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவிற்கு வருவதால் மக்கள் மற்றும் பெரிய பெரிய பிசினஸ்மேன் என அனைவரும் எலான் மஸ்கின் இந்த சேவையை பயன்படுத்தி பயனடைவார்களா? அல்லது எலான் மஸ்க் நம்மை வைத்து பயனடைவாரா? அதாவது குறைந்த விலையில் நல்ல ரீசார்ஜ் திட்டத்தை கொண்ட ஒரு பிளேனய் அறிமுகப்படுத்தி மக்களுக்கு பயன்பட உதவுவாரா? அல்லது அவர் இதுக்காக செய்த முதலீட்டை எடுப்பதற்காக நமது இந்திய மக்களை பயன்படுத்தி ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட அதிக அளவில் ரீச்சார்ஜ் திட்டத்தை வைத்து அவர் வருமானத்தை சம்பாதித்து கொண்டு பயனடைவாரா என்பதையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
ஆக மொத்தத்தில் நாம் அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொம்பு தூக்கிக்கொண்டு நின்றால் நிச்சயமாக இவர்கள் அனைவரும் வளரத்தான் செய்வார்கள். நாம் அனைவரும் ரீசார்ஜ் செய்து பழக்கப்பட்டு விட்டதால் அவர்கள் என்ன தொகை கேட்கிறார்களோ அந்த தொகைக்கு தான் நம்மால் ரீசார்ஜ் செய்ய முடியும் என்று சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன். இது எனது கருத்து.

ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் சென்று பாருங்கள். இப்போது நமது நம்பருக்கு ஏதேனும் ஆஃபர் வருமா? குறைந்த விலையில் ரேட் கட்டர் ஆஃபர் கிடைக்குமா? குறைந்த விலையில் எஸ்எம்எஸ் ஆஃபர் வருமா? புல் டாக்டைம் ஆஃபர் ஏதாவது கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டு ரீசார்ஜ் செய்த காலம் போய் இப்போது அன்லிமிடெட் ஆக இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகிறோம்.
இலவசமாக கொடுத்து அதாவது மீனுக்கு ஆசை காட்டுவது போல நிறைய தீணிகளை தூண்டில் முள்ளில் வைத்து தூக்கி போட்டார் முகேஷ் அம்பானி. அவர் போட்ட தூண்டில் முள்ளில் சிக்கிய மீன்கள் ஆகிய நாம் இப்போது அவர்களது பிடியில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் இருக்கிறோம்.
அம்பானி செய்த செயலை நினைத்து ஒரு பக்கம் பெருமைப்பட்டாலும் காலப்போக்கில் அவர் செய்த சேவைகளை பிசினஸ் ஆக மாற்றிய நிலைதான் அவரை வெறுக்க செய்தது. ஏனென்றால் 254 ரூபாய்க்கு ஒரு ஜிபி 4ஜி இன்டர்நெட்டை பத்து வருடத்திற்கு முன்னால் ரீசார்ஜ் செய்து இருப்போம். ஆனால் இப்போது ஒரு ஜிபி யின் விலை 21 ரூபாய் என்று நினைக்கிறேன். இவ்வளவு தூரம் விலை குறைந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் முகேஷ் அம்பானி தான்.

முக்கிய முகேஷ் அம்பானி கொண்டு வந்த இந்த சிறப்பான சேவையாக பயன்படுத்திக் கொண்டு பலரும் ஆன்லைனில் வெறித்தனமாக சம்பாதித்து வருகிறார்கள். எனினும் இவர் திடீர் திடீரென விலை உயர்வை கொண்டு வந்ததால் மக்கள் அனைவரும் அவ்வளவு தொகை கொடுத்து எங்களால் ரீசார்ஜ் செய்ய முடியாது என்று சமீபத்தில் கூட பல லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட்டு அரசாங்க நிறுவனமான bsnl நிறுவனத்திற்கு மாறினார்கள் அதில் நானும் ஒருத்தி.
முகேஷ் அம்பானி இது போல ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை என்றால் நாம் இன்னுமும் பழைய காலத்தில் தான் இருந்திருப்போம். அதாவது நமது நம்பருக்கு மட்டும் வரக்கூடிய சிறந்த ஆபர்கள் எது? அது எப்போது கிடைக்கும்? எப்போது ரீசார்ஜ் செய்தால் புல் டாக்டைம் கிடைக்கும்? ஒரு காலுக்கு ஒரு பைசா என்று ரேட் கட்டர் எப்போது வரும்? அது எப்போது நாம் போட்டால் நமக்கு பயனளிக்கும். என்று பழைய காலத்திலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்போம். ஜியோ வந்ததால் தான் நாம் அனைவரும் இப்போது youtube பார்க்கிறோம், இன்ஸ்டாகிராம் நோண்டுகிறோம் facebook, whatsapp என அனைத்தையும் தட்டி எறிகிறோம்.
ஒரு பக்கம் எவ்வளவு தான் நல்லது இருந்தாலும் இவர்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுவது என்னவோ நாம் தான் இருக்கிறோம். இவர் இந்த சேவையை கொண்டு வராமல் இருந்திருந்தால் நமக்கு இன்டர்நெட் என்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும் பழைய காலத்திலேயே இருந்திருக்கலாம் எப்போது யாரிடம் பேச வேண்டும் என நினைக்கிறோமோ அப்போது மட்டும் டாக்டைம் போட்டு பேசிவிட்டு கம்முனு இருந்திருக்கலாம்.
நம்மை இப்போது இன்டர்நெட் உலகத்திற்கு அடிமையாக்கி விட்டு அவர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சாளியாக சம்பாதித்து வருகிறார்கள். கடைசியில் இப்படி நம்மளை புலம்ப வைத்து விட்டார்களே என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் இன்டர்நெட்டுக்காக ஐந்து ரூபாய் கொடுத்தால் பாக்கெட் இன்டர்நெட் கார்டு என்று ஏர்சலில் ஒரு இன்டர்நெட் கார்டை வாங்கி ரீசார்ஜ் செய்து குட்டிவெப்பில் பத்து பாடல்களை டவுன்லோட் போட்டமா, பாட்டை கேட்டோமா ஜாவா மொபைலை பயன்படுத்தி பேஸ்புக்கை நோண்டினோமா என்று காலத்தை கடத்திக் கொண்டு இருந்த நான் இப்போது ஏன்டா இன்டர்நெட் உலகத்தில் மூழ்கினோம் என்று நினைத்து வருத்தத்தில் இருக்கிறேன்.
என்னைப்போல் உங்களுக்கும் இது போன்ற உணர்வு தோன்றியுள்ளதா இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது நிச்சயம் உங்களுக்கு தோன்றி இருக்கும் என்று நான் நினைக்கிறேன் உங்களது மனக்குமுறல்களையும் புலம்பல்களையும் மறக்காமல் கமெண்டில் தட்டி விட்டு செல்லுங்கள். அனைவரும் தெரிந்து கொள்வோம் அல்லவா நான் மட்டும்தான் இப்படி புலம்புகிறேனா இல்லை என்னைப் போல அனைவரும் இதை பீல் பண்ணி இருக்கீங்களா என்பதை தெரிந்து கொள்வோம்.
எனது ஃபீலிங் என்னவென்றால் அந்த காலத்தில் அதாவது பத்து வருடத்திற்கு முன்னால் ஏர்செல் நிறுவனத்தின் பாக்கெட் இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தி ஜாலியாக இருந்து வந்தேன். இப்போது அன்லிமிடெட் என்னும் குழியில் விழுந்து ரீசார்ஜ் செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். அஞ்சு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது கூட நிறைய சந்தோஷம் கிடைத்தது. இப்போது 850 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தும் சந்தோசம் என்பதே இல்லை சொல்லப்போனால் நிம்மதியாக தூக்கம் கூட வர மாட்டேன் என்கிறது.
எப்போது பார்த்தாலும் போனும் கையுமாகவே இருந்து பழகி விட்டதால் இரவு நேரத்தில் தூக்கம் என்பதை நான் தொலைத்து விட்டேன். மேலும் அதிகமாக செல்போன்களை நோண்டிக்கொண்டே இருப்பதால் குடும்பத்தினரோடு கூட்டமாக அமர்ந்து சாப்பிடும் பழக்கமும் என்னை விட்டுப் போனது. மேலும் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த அந்த சந்தோஷமான நாட்களும் இப்போது காணாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் நான் பயன்படுத்தி வந்த நெட்வொர்க்கல் என்னவென்று கேட்டால் அனைத்து நெட்வொர்க்கங்களையும் பயன்படுத்தி விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அதில் விரும்பி பயன்படுத்தி நெட்வொர்க் என்றால் டாடா டொகோமோ, ஏர்செல், ஐடியா இந்த மூன்று நெட்வொர்க்குக்குகளை மட்டும் தான் நான் விரும்பி பயன்படுத்தினேன். ஏனென்றால் இந்த நம்பருக்கு மட்டும் தான் எனக்கு எப்போதும் சிறந்த ஆஃபர்கள் வரும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 150 முழுமையாக ஏறும். மேலும் 98 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஆறு ஜிபி 2ஜி இன்டர்நெட் ஒரு மாதத்திற்கு கிடைக்கும்.
குறிப்பாக ஏர்சலில் அற்புதமான ஒரு சேவை அப்போது இருந்தது. அதாவது என்னவென்றால் நமது சிம்மில் சுத்தமாக காசு இல்லை என்றாலும், நமது நண்பர்களும், உறவினர்களும் அதிகமாக எப்படி ஏனும் காசு போட்டு வைத்திருப்பார்கள். அதுவும் குறிப்பாக aircel நம்பராக இருந்தால் அதிலிருந்து டாக் டைம்களை திருடலாம். ஐந்து, பத்து, இருபது என நான் எனது நண்பர்களின் மொபைல்களில் இருந்தும் எனது உறவினர்களின் மொபைல்களில் இருந்தும் திருடி இருக்கிறேன்.
இப்படி திருடி இருப்பதை ஏன் இந்த இடத்தில் பெருமையாக சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? அப்போது நான் சிறுபிள்ளை ரீசார்ஜ் செய்வதற்கு கூட காசு தர மாட்டார்கள். இப்படி எல்லாம் செய்துதான் எனது பள்ளி பருவத்தையும், காலேஜ் பருவத்தையும் கடந்து வந்தேன். ஆனால் எடுத்ததை பின்னால் சொல்லி விடுவேன். சொல்லாமல் இருக்க மாட்டேன். எப்படியெல்லாம் பயன்படுத்தி இருந்திருக்கிறேன் என்று பாருங்கள். இதுபோல நீங்களும் யாருடைய மொபைலில் இருந்து டாக்டைம்ங்களை திருடி இருக்கிறீர்களா?

இதுபோல உங்களுக்கும் ஒரு நெட்வொர்க் மிகவும் உதவி இருக்கும் அப்படி எந்த நெட்வொர்க் உங்களுக்கு உதவியாக இருந்தது அதில் எந்த டாக் டைம்ங்களை அதிகமாக நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தினீர்கள் என்பதைப் பற்றியும் மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள் இவை அனைத்தும் மலரும் நினைவுகளாகவே இருக்கட்டும் இந்த பதிவை படிப்பதன் மூலம் உங்களுக்கும் ஒரு சிறிது நேரம் பழைய நினைவுகள் வந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி அந்த பழைய நினைவுகளில் பல்வேறு ஆனந்தங்கள் இருக்கின்றன. இப்போது இருப்பதை விட அப்போது நிறைய இருந்தது என்பதை ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.
இவ்வளவு நேரம் பொறுமையாக இந்த பதிவை நீங்கள் படித்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது மட்டுமின்றி நமது வலைதளத்தில் பல்வேறு விதமான சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் உங்களுக்காக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் இடத்தில் இருக்கும் என்பதையும் நான் கூறிக் கொள்கிறேன்.
இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை உடனுக்குடன் படிக்க மற்றும் தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள telegram மற்றும் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் இணைந்து கொள்வதன் மூலம் நாம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க இது உதவும்.
அதாவது நான் ஏதேனும் நல்ல தகவலை எனது வலைதளத்தில் எழுதினால் அவைகளை உங்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும் உங்களோடு எப்போதும் இணைந்திருக்கவும் நமது டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனல் உதவும். ஆகவே நண்பர்களே மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள். உங்களது ஆதரவை வேண்டி. மீண்டும் ஒரு சுவாரசியம் நிறைந்த பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝
உங்களுக்கு நேரம் இருந்தால் நிச்சயம் இதயம் படித்து பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்..👇
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
