இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்… ஆம் நண்பர்களே இயற்கை மிகவும் மோசமான அழிவை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு இடங்களில் கொடூரமாக தந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை 2004 இல் ஏற்பட்ட சம்பவம் மிகவும் மோசமான சம்பவம் என்றால் அதுபோல இப்பொழுது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் இந்த கொடூரமான சம்பவமானது இன்னும் முழுமையாக தீராமல் இருக்கிறது. சமாளிக்க முடியாமல் திணறுகின்றார்கள் ஒவ்வொரு அதிகாரிகளும், மக்களும் இதற்கு தீர்வு தான் என்ன..? வாங்க பார்க்கலாம்

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

இப்ப நீங்க பார்த்துட்டு வந்த இந்த நகரம் உலகின் பணக்கார நகரம்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா..? நம்பித்தான் ஆகணும். தீக்கிரையாகி எலும்புக்கூடா இருக்கிற இந்த நகரம்தான் கலிபோர்னியா (California) மாகாணத்தில் இருக்கிற லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரம்தான் இந்த நகரம். இந்த நகரம் இப்படி பத்தி எரியறதுக்கு காரணம் என்ன..? அது சொல்ற செய்தி என்ன அப்படிங்கறதுதான் இந்த டீகோட் (Decode) பதிவுல நம்ம பார்க்க போறோம். நான் உங்கள் காவியா வாங்க இன்னைக்கான பதிவுக்குள்ள போவோம்…

லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கர்களுடைய கனவு நகரம், சினிமா ஸ்டார்ஸ், செலிபிரிட்டிஸ், பணக்காரர்கள் அதிகமாக இருக்கிற ஒரு பகுதின்னு சொல்லலாம். இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் உலக ஃபேமஸான ஹாலிவுட் அங்கதான் இருக்கு. அந்த ஹாலிவுட் ஹில்ஸ்ன்னு சொல்லுவாங்கல அந்த ஹில்ஸ சுத்தி தான் இப்போ நெருப்பு ஏற்பட்டிருக்கு. உலகினுடைய முக்கியமான ஒரு பணக்கார நகரம் தீக்கிரையாகி மாண்டுகிட்டு இருக்கு.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

இந்த தீயினுடைய தாக்கம் எந்த அளவுக்கு இருக்கு அப்படின்னா நம்ம ஒரு ஹாலிவுட் படங்கள எல்லாம் பார்ப்போம்ல அதாங்க அதீதமான வெள்ளம், அதீதமான கடல் சீற்றம், அதீதமான புயல்கள், அதீதமான பூகம்பம் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்ல அதுல எப்படி காட்டுவாங்களோ கிட்டத்தட்ட அதே அளவுக்கான பாதிப்பை தான் இந்த லாஸ் ஏஞ்சஸ் நகரமும் சந்திச்சுக்கிட்டு இருக்கு.

சரி இந்த தீ எப்படி பரவுச்சு..? நான்கு நாட்களுக்கு முன்னாடி பெசிபிக் பாலிசேட்ஸ் அப்படிங்கிற ஒரு பகுதியிலதான் இந்த காட்டுத்தீ முதல்ல ஆரம்பிச்சது. அதோட சேர்ந்து காத்தும் பலமா வீசவே அந்த காட்டுத்தீ வேகமா பரவ ஆரம்பிச்சிருச்சு. ஒரு சில மணி நேரங்களிலேயே அது நகரத்துக்குள்ளயும் வர ஆரம்பிச்சிருச்சு குடியிருப்பு பகுதிக்குள்ள பூந்துருச்சு.

அதுமட்டும் கிடையாது இந்த காட்டுத்தீ வெவ்வேறு இடங்களிலும் பரவி மேலும் நான்கு இடங்கள்ல தீவிரமான காட்டுத்தத்தி ஏற்படுவதற்கு காரணமாக அமைஞ்சிருச்சு. அது எந்தெந்த பகுதியில்ன்னு பார்த்தோம்னா ஏட்டன், கெனத், ஹர்ஸ்ட் லிடியா, பசிபிக் பாலிசைட்ஸ் ஓட சேர்ந்து இந்த நான்கு பகுதிகளும் கொழுந்துவிட்டு எரியவே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கிட்டத்தட்ட தீக்கிரையா ஆயிருச்சு அப்படின்னு நம்ம சொல்லலாம்.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட 10000 கட்டடங்கள் எரிஞ்சு நாசமாயிருக்கு அதுல ஹாலிவுட் நடிகர்களுடைய வீடுகள் பங்களாக்கள், கேஃபேக்கள், ஹோட்டல்கள், ரெசார்ட்ட்கள் உட்பட எல்லாமே எரிஞ்சு நாசமாகி இருக்கு. நேத்து வரைக்கும் ஸ்விம்மிங் பூல்ல ஜாலியா கொண்டாடிக்கிட்டு இருந்தவங்க இன்னைக்கும் அந்த பங்களாவை இழந்துகிட்டு நடு ரோட்ல நிக்கிறாங்க.

அப்படிப்பட்ட ஒரு நிலைமைதான் லாஸ் ஏஞ்சல்ஸ்ல இப்போ பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கு. இந்த காட்டுத்தீயால ஏற்பட்ட பாதிப்புங்கறது 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லி இருக்காங்க.

அதாவது இந்திய மதிப்புக்கு நம்ம கணக்கு பண்ணி பார்த்தோம்னா கிட்டத்தட்ட 6½ லட்சம் கோடிக்கான சொத்துக்கள் எரிஞ்சு நாசமாகி இருக்கு அப்படின்னு சொல்றாங்க. இந்த தீயில சிக்கி இதுவரைக்கும் 10 பேர் உயிரிழந்திருக்கிறதா தகவல் வந்திருக்கு. மேலும் இரண்டு லட்சம் மக்களை அவங்களுடைய வீட்டிலிருந்து வெளியேத்திட்டு இருக்காங்க அரசு அதிகாரிகள்.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

காரணம் காட்டுத்தீ மேலும் பரவுறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்குங்கறதுனால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவங்கள எல்லாம் வெளியேத்திட்டு இருக்காங்க. இதனால ஒட்டுமொத்தமா மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில வெளியேறிட்டு இருக்கிறதுனால அந்த பகுதியில கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுட்டு இருக்கு.

ஒரு பக்கம் மக்கள் தங்களுடைய உடைமைகள் வீடுகள் பங்களாக்கள் எல்லாமே அழிஞ்சு போயிட்டு இருக்குன்னு சொல்ற அந்த கண்ணீர் காட்சிகளை நம்மால் பல வீடியோக்களில் பார்க்க முடியுது. இன்னொரு பக்கம் நம்ம கனவுல கூட கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அந்த நகரம் எரிஞ்சு நாசமாகிட்டு இருக்கிறதையும் பார்க்க முடியுது.

நான்கு நாட்களுக்கு மேலாகவும் தீய அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுக்குள்ள கொண்டு வர்றதுக்காக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இன்ன வரைக்கும் அதை கட்டுப்படுத்த முடியல. காரணம் காத்து.., லாஸ் ஏஞ்சல்ஸ்னுடைய அந்த கிளைமேட்டிக் கண்டிஷன்ஸ நம்ம முதல்ல தெரிஞ்சுக்கிட்டோம்னா இந்த பிரச்சனையினுடைய அடிப்படை என்ன அப்படிங்கறத நம்மளால புரிஞ்சுக்க முடியும்.

லாஸ் ஏஞ்சல்ஸ்ல வைல்ட் ஃபயர் (Wild fire) அதாவது காட்டுத்தீ அப்படிங்கறது புதுசு கிடையாது. காலம் காலமா அப்பப்ப ஏற்பட்டுகிட்டே இருக்கிற விஷயம்தான். ஆனா இந்த வருஷம் அது ரொம்ப மோசமா இருக்கு. காட்டுத்தீங்கறதுதான் இந்த ஒரு மோசமான நிலைமைக்கு காரணமா அமைஞ்சிருக்கு. எப்பயுமே கோடை காலகட்டம் அதாவது சம்மர்ல தான் அங்க காட்டுத்தீ அப்படிங்கறது அடிக்கடி நிகழும்.

அங்க சம்மர் அப்படிங்கறது மே மாதத்துல இருந்து அக்டோபர் வரைக்குமான காலகட்டம். ஆனா அக்டோபர் தாண்டி மூணு மாசம் ஆனதுக்கு பிறகும் அங்க ஹீட்டும், அந்த வறட்சியும்ங்கறது நிலவுறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. கிட்டத்தட்ட 83% லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வறட்சியின் பிடியில சிக்கிகிட்டு இருக்குன்னு சொல்றாங்க.

See also  விறகைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் தெரியுமா?

இந்த நேரம் பார்த்து வறட்சியான காற்று வேற வீசிக்கிட்டு இருக்கு. அதாவது ஈரப்பதமே இல்லாத ஒரு காற்று அங்க அதிகமா வீசுது அப்படிங்கறதுனால இந்த காட்டுத்தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு. இது எல்லாமே சேர்ந்துதான் இந்த காட்டுத்தீ உருவாகுறதுக்கான காரணமா அமைஞ்சிருச்சுன்னு சொல்றாங்க., அங்க இருக்கிற சூழலியல் ஆய்வாளர்கள்.

சரி இந்த காட்டுத்தீ ஏற்பட்டுருச்சு இது பரவுறதுக்கு முக்கியமான காரணம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி காத்துதான் சாண்டா அனா (Santa Ana) அப்படிங்கிற ஒரு மலைப்பகுதியிலிருந்து மேல இருந்து கீழ தள்ளுற அந்த காத்துங்கறது முழு வேகத்துல வரும்போது ஈரப்பதமே இல்லாதால ஒரு வறண்ட காத்து அடிக்கும் சூழல் உருவாகிறது. அப்படி உருவான அந்த காத்து சாண்டாஅனா மலையை அடைஞ்சு அங்க இருந்து நகருக்குள்ள வருது.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

மேலும் அங்கிருந்து உருவாகின காத்தானது அந்த மலையை கடக்கும் போது ரொம்ப ட்ரை (Dry) ஆகும். அதாவது ஈரப்பதம் இல்லாமல் வீசும். இப்படி ஈரப்பதம் இல்லாமல் மழையை கடந்து வரும் காத்தானது முழு வேகத்துல நகரத்துக்குள்ள வருது. வெறும் காற்று மட்டும் வராமல் அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பையும் அதாவது காட்டுத்தீயையும் அடுத்தடுத்த இடங்களுக்கு கொண்டு போய் சேர்த்துருது.

இதுதான் இங்க பெரிய சேதரத்துக்கான காரணம். ஐந்து இடங்கள்ல காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறதுனால எவ்வளவு போராடினாலும் அந்த தீயணைப்பு வீரர்களால அவ்வளவு ஈஸியா அந்த காட்டுத்தீயை அணைக்க முடியல. இந்த காட்டுத்தீ அணைக்கிறதுக்காக ஒரே நேரத்துல நீர் உறிஞ்சப்படுறதுனால போதிய அளவு நீரும் இல்லாம பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதாகவும் தகவல் வந்துட்டு இருக்கு.

நெருப்பை அணைப்பதற்கு தேவையான அளவுக்கு நீரில்லாத மோசமான நிலைமை அங்க இருக்கு. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தணும்னா இயற்கையும் கொஞ்சம் மனசு வைக்கணும். அப்படி இயற்கை மனசு வச்சா மட்டும் தான் உடனடியாக அங்கு பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீயின் ருத்ரா தாண்டவமானது ஒரு முடிவுக்கு வரும். அதாவது அங்க வந்து ஒரு ஒரு மழையோ இல்ல கொஞ்சம் ஈரப்பதமான காத்து அந்த பக்கம் பாத்து வீசுச்சு அப்படின்னா மட்டும் தான் இந்த காட்டுத்தீ பரவுறதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

ஆனா அடுத்த ஒரு வாரத்துக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்ல மழை பெய்யுவதற்கான எந்தவித அறிகுறியும் இல்லைன்னு சொல்லிட்டு வானிலை ஆய்வு மையமும் கைய விரிச்சுட்டாங்க. அதனால இந்த தீயினுடைய பரவல் அப்படிங்கறது இன்னும் அதிகரிக்குமோ அப்படிங்கிற ஒரு அச்சம் அங்க எழுந்திருக்கு. இங்க நம்ம முக்கியமா கவனிக்க வேண்டியது கிளைமேட் சேஞ்ச் அதாவது காலநிலை மாற்றம். இதனால் தான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ்ல இருக்கிற தீயணைப்புத் துறை என்ன சொல்றாங்கன்னா. அங்க காட்டுத் தீ ஏற்படுறது வழக்கமா நடக்கிற விஷயம்தான். அது எப்போதும் போல சம்மர் காலங்கள்ல ஏற்பட்டுட்டு இருந்துச்சு ஆனா இந்த முறை வருஷம் ஃபுல்லாவே காட்டுத்தீயினுடைய நிகழ்வு அங்கங்க இருந்துகிட்டே இருக்கு. கிட்டத்தட்ட பெரிநீல் அப்படின்னு சொல்றாங்க.

அதாவது வற்றாத ஜீவநதிகள் அப்படின்னு நம்ம சொல்லுவோம் இல்லையா அதே மாதிரி வற்றாம தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டுக்கிட்டே இருக்கு. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் பெரிய அளவுல ஏற்பட்டது கிடையாது அப்படின்னு சொல்லிட்டு அவங்க சொல்றாங்க. அப்போ இங்க கிளைமேட் சேஞ்ச் எவ்வளவு முக்கியமான ஒரு இம்பாக்ட் ஏற்படுத்தி இருக்குன்றதை நம்ம இங்க கவனத்தில் கொண்டுதான் ஆகணும். இந்த கிளைமேட் சேஞ்சால ஏற்படுற பேரிடர்கள் மூலமா அதிகமா ஏழை மக்கள்தான் பாதிக்கப்பட்டுட்டு இருந்தாங்க.

ஆனா முதல் முறையா உலகின் பணக்கார நகரம் ஒன்றுல பணக்காரர்களுடைய வீடுகளும், பங்களாக்களும் எரிஞ்சு நாசமாகிட்டு இருக்கு. இனிமேலாவது இந்த அரசாங்கங்கள் கண் விழிக்கணும். கிளைமேட் சேஞ்சுக்கு ஒரு முக்கியத்துவத்தை கொடுத்தே ஆகணும். பூமி ஒரு சூழலியல் சைக்கிள்ல இருக்கு. அதாவது அழிவை உருவாக்கக்கூடிய மோசமான நிலையில் உள்ளது. காரணம் நாம் ஏற்படுத்தக்கூடிய சில பல விஷயங்களை கூறலாம்.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

அந்த சூழலியல் சைக்கிள்ல ஏதோ ஒரு இடத்துல டிஸ்டர்பன்ஸ் ஏற்பட்டாலும் அது உலகம் முழுக்க ஒரு சைக்கிளா அந்த டிஸ்டர்பன்ஸ் பரவிக்கிட்டே இருக்கும். உதாரணத்திற்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவில் ஒரு மூலையில் ஏற்பட்ட நெருப்பானது தொடர்ந்து பற்றி கொண்டு மோசமாக ருத்ர தாண்டவம் ஆடிய சம்பவத்தை நினைவில் வையுங்கள். இது போல கோர விபத்துக்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்றால் நாம் முன்னதாகவே இந்த புவியின் சூழலியலை புரிஞ்சுகிட்டா மட்டும்தான் இதுக்கு நம்மளால ஒரு தீர்வை கொண்டு வர முடியும்.

அதாவது இங்க அடிச்சா அங்க வலிக்கும்னு சொல்லுவாங்க இல்லையா. அது போலதான் இந்த சூழலியல் விஷயம் செய்து கொண்டிருக்கிறது. சரி இப்ப நம்ம என்ன பண்ணனும்..? சொல்றேன்… தொடர்ந்து படியுங்கள். இதுபோல சம்பவங்களில் இருந்து நாம் தப்பிப்பதற்கு பூமியை குளுமை படுத்த வேண்டும். பூமியில ஏற்பட்டுட்டு இருக்கிற அந்த ஹீட்டை வந்து குறைக்கணும். அதாவது குளோபல் வார்மிங்னு சொல்லப்படுற புவி வெப்பமயமாதலை தடுக்கணும்.

சரி இந்த புவி வெப்பமயமாதல் எப்படி நடக்குது..? இந்த குளோபல் வார்மிங் நம்ம தடுக்க வேண்டும் என்றால் அதற்கு முதல்ல பூமி எப்படி சூடாகுது அப்படிங்கறத நம்ம புரிஞ்சுக்கணும், தெரிஞ்சிக்கணும்னு கூட சொல்லலாம். இந்த குளோபல் வார்மிங்க்கு முக்கியமான காரணம் கிரீன் ஹவுஸ் கேஸஸ் அதாவது பசுமையில்ல வாயுக்கள். கார்பன் நைட்ரஜன் போன்ற ஒரு லிஸ்ட் ஆஃப் கேஸஸ் மேலும் மீத்தேன் இதெல்லாமே கிரீன் ஹவுஸ் கேஸஸ் அப்படின்னு நம்ம சொல்லுவோம்.

See also  கல்பனா சாவ்லாவை நாசா வேண்டுமென்றே கொன்றது

இது நம்ம சூழல்ல வந்து தீவிரமா பரவிக்கிட்டு இருக்கு. காரணம் மோசமான விஷவாயுக்கள் பல இண்டஸ்ட்ரியலைசேஷன் அதாவது தொழிற்சாலைகள்ல இருந்து வருது. மேலும் நம்மளுடைய வீட்டு வாகனங்கள்ல இருந்து வருது. அது மட்டும் இல்லாம வீட்டு ஏசிகள்ல இருந்து வருது. இன்னும் மோசமா கோல் மைன்ஸ் அதாவது நிலக்கரி சுரங்கங்கள் மூலமா வருது இன்னும் பல்வேறு செயல்கள் மூலமா மனிதர்கள் இந்த கிரீன் ஹவுஸ் கேஸ நம்மளுடைய அட்மாஸ்பியர்ல ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்கும்.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

பொதுவா பூமிக்கு சூரியன் கிட்ட இருந்து வரக்கூடிய ஒளியில் ஒருவிதமான வெளிச்சமும், வெப்பமும் சேர்ந்து வரும். அதுல ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் மட்டும்தான் நம்மளுடைய வளிமண்டலத்தை ஊடுருவி பூமிக்குள்ள வரும். அதை மட்டும்தான் பூமி வந்து கிரகிச்சுக்குது அதாவது ஏத்துக்கிறது. சூரியனிலிருந்து வரக்கூடிய அந்த வெப்பத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வெப்பத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமிருக்கக்கூடிய வெப்பத்தை அதாவது ஹீட்டை பூமியில பட்டவுடன் ரேடியேட் ப்ராசஸ் மூலம் வெளியே அனுப்பி விடுகிறது.

அப்படி ரேடியேட் ஆக வேண்டிய அந்த ஹீட்டை இந்த கிரீன் ஹவுஸ் கேஸஸ் பிடிச்சு பூமியினுடைய வளிமண்டலத்துக்குள்ளேயே வச்சிக்குது. இதுதான் இந்த பூமியினுடைய வெப்பம் அதிகரிக்கிறதுக்கு முக்கியமான காரணமா அமைஞ்சிருக்கு. பூமி வெப்பமயமாதலுக்கு பின்னாடி இருக்கிற மெக்கானிசம் இதுதான். சரி இந்த ஹீட் அதிகமாகுறதுனால என்ன ஆகும்..?

பல்வேறு பேரிடர்கள் ஏற்படுறதுக்கு இந்த ஹீட் ரொம்ப முக்கியமான வாய்ப்பா அமையும். உதாரணத்துக்கு கடலினுடைய மேற்பரப்புல இந்த ஹீட் அதிகமாகிட்டே இருந்துச்சுனா அந்த நீர் ஆவியாகி மழைப்பொழிவு அதிகமாகுறதுக்கான வாய்ப்பு இருக்கு. சோ இந்த ஹீட் அப்படிங்கறது புயலை உருவாக்குறதுக்கான வாய்ப்பும் அதிகமா இருக்கு. ஹீட் அதிகமாச்சுன்னா பனிப்பாறைகள் உருகும்.

சமீபத்துல கூட லண்டன் மாநகரத்தினுடைய அளவுக்கு ஒரு பெரிய பனிப்பாறை லைட்டா உருகி நகர்ந்துகிட்டு இருக்கு அப்படின்னு ஆராய்ச்சி செய்து பார்த்த வல்லுநர்கள் சொல்றாங்க. இந்த பனிப்பாறைகள் உருகுறதுனால கடல் நீர் மட்டம் உயர்ந்து சென்னை மாதிரியான கடலோரத்துல இருக்கிற நகரங்களுக்குள்ள தண்ணீர் உள்ள புக ஆரம்பிக்கும்.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

இப்படி தண்ணீர் உள்ளே போக ஆரம்பித்தால் அந்த இடமானது வாழ்றதுக்கு தகுதியற்ற நகரங்களாக அவை மாறுறதுக்கான வாய்ப்பு ரொம்பவே அதிகம். உதாரணத்திற்கு குமரிக்கண்டத்தை எடுத்துக் கொள்ளலாமே அந்த இடமானது இப்போது வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி உள்ளதல்லவா.! அதுபோல கடற்கரை ஓரமாக இருக்கக்கூடிய பல நகரங்கள் உலகெங்கிலும் அழியக்கூடும்.

(குமரிக்கண்டம்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. நம்ம வெப்சைட்லகூட அதைப்பற்றி ஒரு சீரியஸா ஸ்டார்ட் பண்ணி இருக்கோம். இப்பதான் முதல் பதிவை போட்டு இருக்கோம். கூடிய சீக்கிரத்துல அடுத்தடுத்த பதிவுகளை அப்டேட் செய்யறோம் அதையும் படிச்சு பாருங்க.)

சரி வாங்க இன்னைக்கான பதிவு குள்ள திரும்ப போகலாம் சோ இது மட்டுமில்லாம அந்த காட்டுத் தீ ஏற்படலாம், நிலநடுக்கங்கள் ஏற்படலாம். இப்படி இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இந்த புவி வெப்பமயமாதலால ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு. இது எந்த அளவுக்கு ஏற்படும்னா..?

முன்னாடி எல்லாம் ஒரு தடவை ரெண்டு தடவை வந்துகிட்டு இருந்த வெள்ளம் இப்ப வந்து ஒவ்வொரு வருஷமும் வந்துகிட்டு இருக்கு. ஒரு வருஷம் ஃபுல்லா பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்கள்ல பெஞ்சு முடிச்சிட்டு போயிருது. அதுபோல இப்ப லாஸ் ஏன்ஸ்ல ஏற்பட்டிருக்கிற இந்த காட்டுத்தீ நம்ம கண்ணு முன்னாடி இருக்கிற ஒரு லைவ் எக்ஸாம்பிள் அப்படின்னு சொல்லலாம்.

சரி இப்ப என்னதான் பண்ணனும்னும் கேக்குறீங்களா..? ஒரு பால் எடுத்து பாத்திரத்துல ஊத்தி நம்ம ஸ்டவ்ல வைக்கிறோம். அந்த ஹீட்டை நம்ம கண்டுக்காம விட்டுட்டு இருந்தோம்னா ஒரு கட்டத்துல அந்த பால் பொங்கி வழிஞ்சிரும். அதே மாதிரிதான் இப்ப பூமிக்கும் ஏற்பட்டுட்டு இருக்கு. இந்த ஹீட்டை நம்ம கட்டுப்படுத்தாம விட்டுக்கிட்டே இருக்கிற அளவுல பூமி பொங்கி வழிஞ்சு நம்ம மேல பல பேரிடர்களா கொட்டிக்கிட்டு இருக்கு.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்

சரி இப்ப அந்த பால் பொங்குறதை நம்ம எப்படி தடுத்து நிறுத்தலாம்..? ஒன்னு அந்த ஃபிளேமை குறைச்சு அடுப்ப சிம்ல வைப்போம். இல்லனா ஆஃப் பண்ணி வைப்போம். ஆனா இங்க பூமிக்கு இருக்கிற ஒரே ஒரு வாய்ப்பு சிம்ல வைக்கிறது மட்டும்தான். அதாவது அந்த புவி வெப்பமயமாதல குறைக்கிறது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கும்.

அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 15°c குள்ள இந்த பூமியினுடைய வெப்பத்தை நம்ம கட்டுப்படுத்தி வச்சிட்டோம்ம்னா இந்த பேரிடர்கள் பாதிப்புகள் தொடர்ந்து நடக்கிறதையோ இல்ல பெரிய அளவிலான பேரிடர்கள் ஏற்படுறதையோ நம்மளால கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ வாய்ப்பு இருக்கு. உடனே நீங்க என்கிட்ட இன்னொரு கேள்வி கேட்க நெனச்சிருப்பீங்க..! அதுக்கான பதிலை நானே சொல்றேன். அந்த கேள்வி வேற எதுவும் இல்ல..!

இன்னொரு பக்கம் ஆஃப் அப்படிங்கிற ஒரு வாய்ப்பு இருக்குல்ல. அடுப்ப ஆஃப்பனாலும் பால் பொங்காதுல அப்படின்னு நீங்க கேட்கலாம்..! இந்த கேள்விக்கான பதில் ரொம்பவும் சிம்பிளானது. அதாவது இதுவரை நாம் பல அசம்பாவிதங்களை பண்ணி விட்டோம் அதனால் அடுப்பை ஆப் செய்து பொங்குவதை தடுத்து நிறுத்த முடியாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் பாதிப்புகளை ரிவர்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு அப்படிங்கறது நமக்கு முடிஞ்சிருச்சு.

See also  மெகலடோனின் ஆட்சி மற்றும் வீழ்ச்சி-முதல் அத்தியாயம்

அதனால நம்மளுடைய அடுத்த இலக்கு என்னவா இருக்கணும்னா 15 டிகிரி செல்சியஸ்குள்ள பூமியினுடைய வெப்பத்தை கட்டுப்படுத்தி வைக்கிறது மட்டும்தான் ஒரே தீர்வாக இருக்கும். ஆல்ரெடி சமீபத்துல வந்த ஒரு அறிக்கையில 2024லயே பூமி 1 டிகிரி செல்சியஸ் அப்படிங்கிற அந்த வெப்பநிலையை எட்டிரும் அப்படின்னு சொல்லி இருந்தாங்க. 2030க்குள்ள 2 டிகிரி செல்சியஸை தொட்டுவிடும் அப்படின்னு சொல்றாங்க.

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
குளோபல் வார்மிங் 15 டிகிரிக்கு மேல் புவியின் வெப்பநிலை அதிகரித்தால் ஏற்படும் நிலை இதோ

அப்படி மட்டும் தொட்டுடுச்சுன்னா இன்னைக்கு லாஸ் ஏன்ஸ்ல நடந்த நெருப்பின் ருத்ர தாண்டவ சம்பவம் உலகம் முழுக்க பல்வேறு நகரங்கள்ல நடக்கும். நம்ம கனவுல மட்டுமே அதாவது படங்கள்ல மட்டுமே பார்த்துட்டு இருந்த விஷயங்கள் எல்லாமே நேர்ல நம்ம கண்ணு முன்னாடி நடக்குறதுக்கான வாய்ப்பு ரொம்பவே அதிகம். இந்த ஹீட்டை குறைக்கிறதுக்கு என்னெல்லாம் பண்ணனும்..? தொழிற்சாலைகள்ல இருந்து வெளியாகுற இந்த கார்பன் எமிஷன் அப்படிங்கறத கட் பண்ணனும்.

தொழிற்சாலைகள் மட்டும் கிடையாது.! நம்ம வீட்டு வாகனங்கள்ல இருந்து நம்ம உபயோகப்படுத்துற பொருள் இருந்து வெளியாகிற இந்த பசுமையில்லா வாயுக்களை நம்ம கட்டுப்படுத்தணும். அதெல்லாம் நம்ம வீட்ல எங்கடா இருக்கு அப்படின்னு நீங்க கேக்குறீங்களா..? நீங்க பயன்படுத்துற குளிர்சாதன பெட்டியிலும் இருக்கு. ஏசி பொட்டியிலும் இருக்கு மேலும் கார் பைக்குனு சொல்லிக் கொண்டே போகலாம்.

இது போன்ற விஷயங்களில் இருந்து நாம் கொஞ்சம் தள்ளி நின்று பூமியை செழுமையாக்கினால் அது நம்மளை தாக்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதனால் இன்னும் பல தலைமுறைகள் பூமியில் வாழும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தலாம். குறிப்பா ரெனியூவபில் எனர்ஜி அதாவது சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில மின்சாரம் போன்ற எரிபொருட்களை வந்து நம்ம உருவாக்கணும்.

மின்சாரத்தை உருவாக்கணும்னா நிலக்கரியும் தேவைப்படுமே.! அப்போ ஏற்கனவே நீ சொன்னது மாதிரி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கூட கார்பன் எமிஷன் என்பது அதிகமாகும். அதனால் பூமி வெப்பமடையும்ல அப்ப என்ன பண்றது அப்படின்னு உங்களுக்குள்ள ஒரு கேள்வி வரலாம்… இந்த கேள்விக்கு சிம்பிளான பதில் இதோ..

இந்த கொடூரமான அழிவை தடுக்க முடியாமல் கதறும் மக்கள்
குளோபல் வார்மிங் இல்லாமல் மின்சாரம் தயாரிக்கும் முறைகள்

சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை எடுக்கலாம் மேலும் காற்று கடல் அலைகள் நீர் தேக்கி வைத்திருக்கும் டாமில் இருந்து கூட நம்மால் கரண்ட் எடுக்க முடியும் நிலக்கரியை மட்டுமே நம்பி நாம் கிடையாது என்று சொல்லலாம். நிலக்கரியை வைத்து நம்மால் பத்து பங்கு உருவாக்க முடியுது என்றால் இயற்கைக்கு பாதுகாப்பு தரக்கூடிய வழியில் நாம் மின்சாரத்தை உருவாக்கினால் அதில் பாதி அளவு உருவாக்கினாலே போதும் நாமும் நலமா இருக்கலாம், பூமியும் நலமாக இருக்கும் அல்லவா சற்று சிந்தியுங்கள்.

இது எல்லாமே முக்கியமான விஷயம். அதாங்க மாற்று வழியில் பூமிக்கு எந்த பிரச்சினையும் இல்லாதது போல நாம் செய்து வந்தால் இந்த ஹீட்டை கட்டுப்படுத்துறதுக்கான வழிபிறக்கும். மெயினா கார்பன் நெட் நியூட்ராலிட்டி அதாவது கார்பன் எமிஷன் கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வரமுடியும்.

இங்க கார்பன் எமிசன் என்கிறது இங்க ரொம்பவே முக்கியமா கவனிக்கப்பட வேண்டிய ஒரு இலக்கா நம்ம வச்சுக்க வேண்டிய தேவை இருக்கு. இன்னைக்கு ட்ரம்ப் கனடாவை கைப்பற்ற நினைக்கலாம். கிரீன்லாண்ட வாங்க நினைக்கலாம். ரஷ்யா உக்ரைன் இடையில போர் நடக்கலாம். இஸ்ரேல் பக்கத்து நாட்டுமேல தாக்குதல் நடத்தலாம் இந்த உரிமைச் சண்டை இந்த நிலத்துக்கான பிரச்சனை இது எல்லாமே ஒரு நாள் பயனில்லாம போறதுக்கான வாய்ப்பு இருக்கு.

15 டிகிரி செல்சியஸ்குள்ள பூமியினுடைய வெப்பத்தை கொண்டு வந்து நம்ம நம்ம பூமியோட வெப்பத்தை கட்டுப்படுத்தலனா இந்த உரிமைச் சண்டை இந்த நிலங்கள் எல்லாம் ஒரு நாள் யாருக்குமே கிடைக்காம போறதுக்கான வாய்ப்பு ரொம்பவே அதிகம். அதுக்குள்ள நம்ம சுதாரிச்சு பூமியை காப்பாத்துறதுக்கான செயல்ல இன்னைக்கே இறங்கலன்னா..! எதிர்காலம் அப்படிங்கறது நமக்கு இருட்டாகத்தான் இருக்கும். இது போன்ற பல்வேறு தகவல்களோட வேறொரு பதிவுல உங்களை மீண்டும் சந்திக்கிறேன், அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝. நன்றி வணக்கம்.

இந்த தகவல் நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆமாம் பூமியை காப்பாற்றுவது தனி ஒருவனின் கடமை மட்டும் கிடையாது அனைவரும் சேர்ந்து போராடுவோம்.. இயற்கையை காப்போம்… எனவே இந்த பதிவை முடிந்தளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களும் அவர்களது பங்குக்கு எதையாவது செய்யட்டும். அதாவது ஒரு மரக்கன்றாவது நடலாம் அல்லவா எனது பதிவை படித்துவிட்டு. அதுவும் இந்த பூமியை காப்பதற்கு உதவும் அல்லவா..! தயவுசெய்து இந்த பதிவிற்கு லைக் ஷேர் கமெண்ட் செய்யுங்கள்…🙏🙏🙏

மேலும் இது போல பல சுவாரசியமான தகவல்களை தினம் தினம் உங்களுக்காக நான் தந்து கொண்டிருக்கிறேன் உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டும் என நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள் telegram இல்லாட்டி வாட்ஸ் அப்பிலும் இணைந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் கீழே தெரியும் ரோஸ் கலர் பாக்ஸை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்…🙏🙏🙏

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏