தினமும் ஒரு டாபிக் எடுத்தா அந்த டாபிக்கை மட்டுமே தான் நம்ம பேசிகிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டும்னு சொல்லி இதுபோல ரேண்டமா போல சுவாரசியமான தகவல்களை உங்களுக்காக கொண்டு வந்து இருக்கேன் மறக்காம இந்த பதிவு ஃபுல்லா படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை கமெண்டில் கூறுங்கள். இதுபோல ரேண்டம் டாபிக்குகள் நம் அவ்வப்போது கொடுக்கலாமா வேண்டாமா என்பதையும் மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள் பயனுள்ளதாக இருந்தது எனில் நிச்சயம் இதனை கண்டினியூ செய்வோம். விறகைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் தெரியுமா? இது வெறும் தலைப்பு தான் இதற்குள் பல சுவாரசியம் நிறைந்த தகவல்கள் இருக்கும். படித்துப் பாருங்கள் பயன் தரும்.
பூமியின் கடைசி நாடு எது?, பெட்ரோல் எப்படி நமக்கு கிடைக்கிறது?, மனிதனுடைய எலும்பிற்கு இவ்வளவு பலமா?, நடுக்கடலில் கப்பல் பழுதாகி விட்டால் என்ன செய்வார்கள்?, மனிதன் உருவாக்கிய அதிவேகமான இயந்திரம் எது என தெரியுமா?, விறகைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் தெரியுமா? அதாவது விறகில் இருந்து நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தை எடுக்க முடியுமா?, இப்படியும் ஒரு பிறப்பு இருக்கிறதா?, அதிகளவு பண மதிப்பைக் கொண்டுள்ள நாடு எது?, பணத்தைப் பற்றின சுவாரசியமான தகவல்கள் என பல சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன்.

ஆகவே நண்பர்களே இந்த பதிவை முழுமையாக படித்து விட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள். மேலும் முழுமையாக படித்தவர்கள் லைக் ஷேர் செய்ய மறக்காதீர்கள் நண்பர்களே.. உங்கள் ஆதரவை வேண்டி 🙏… வாங்க இன்னைக்கான பதிவுக்குள்ள போவோம்.
பூமியின் கடைசி நாடு எது..?
பூமி எங்கே முடிகிறது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா..? பூமியின் கடைசி நாடு எது என்று தெரியுமா..? நாம் அனைவரும் அறிந்தது போல பூமி ஒரு உருண்டை வடிவம் உடையது. எனவே அதன் ஒவ்வொரு முனையிலும் ஒரு நாடு அமைந்திருக்கிறது. பூமியின் கடைசி நாடு அது முடியும் இடம் நார்வே ஆகும். நார்வே வட துருவம் அருகே அமைந்துள்ளது.

வட துருவம் என்பது பூமி தன் அச்சு சுற்றி சுழலும் இடமாகும். இங்கு இரவு மிகவும் குறைவாகவே இருக்கும். குறிப்பாக வட நார்வேயின் ஹாமர் பெஸ்ட் நகரத்தில் சூரியன் வெறும் 40 நிமிடங்களுக்கே மறைகிறது. இதனால் இதை கண்ட்ரி ஆஃப் மிட்நைட் சன் என்று அழைப்பர். இந்த நாட்டையே பூமியின் கடைசி நாடாகவும் சொலப்படுகிறது.
பெட்ரேல் எப்படி நமக்கு கிடைக்கிறது..?
கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா..? முதலில் நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட கச்ச எண்ணெயை சுமார் 370 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்குகிறார்கள். பின்னர் அதை பெரிய டவரில் (Tea boiler போன்றது) போடப்படுகிறது. அங்கு அந்த சூட்டினால் கச்சா எண்ணெய் ஆவியாக மாறி மேலே போகிறது. பிறகு குளிர்ந்தவுடன் இலகுவான மூலக்கூறுகள் மேல் நிலையில் தங்கிவிடும். மற்றும் கடினமான மூலக்கூறுகள் கீழே படிகின்றன.

இதன் முதல் நிலையில் 25° செல்சியஸில் பெட்ரோலிய எறிவாயு கிடைக்கிறது. இதை எல்பிஜி சிலிண்டர்களில் நிரப்பி வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்பட உதவுகிறது. அதன் கீழ் 25°-60° செல்சியஸில் பெட்ரோல் அதாவது கேஸோசோலின் கிடைக்கிறது. அதற்கு கீழே நாப்தா (Naphtha) 60°-180° செல்சியஸில் கிடைக்கிறது. இது பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுகிறது. அதற்கு கீழ் பாராஃபினானது (Paraffin) 180°-220° செல்சியஸில் கிடைக்கிறது. இது ஸ்கின் கேர் பொருட்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களிலும் பயன்படுகிறது. அடுத்ததாக 220°-250° செல்சியஸில் டீசல் கிடைக்கிறது. இதன் பயன்பாடு உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.

அதற்குப் பிறகு தொழிற்சாலைகளிலும், கப்பல்களிலும் பயன்படும் ஃபியூயல் ஆயிலானது 250°-300° செல்சியஸில் கிடைக்கிறது. அதற்கு கீழே லூப்ரிகேட்டிங் ஆயிலானது 300°-350° செல்சியஸில் கிடைக்கிறது. இதிலிருந்து என்ஜின் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது எஞ்சினின் உயவுதன்மையை குறைப்பதில் பங்கு வகிக்கிறது. கடைசியாக 350° செல்சியஸில் சாலைகளை உருவாக்க பயன்படும் பிடுமன் கிடைக்கிறது. இதை நாம் தார் என்று கூறுவோம். இதன் பயனும் உங்களுக்கு தெரிந்ததே..!
மனிதனுடைய எலும்பு
உங்களுக்கு தெரியுமா மனித உடலின் எலும்புகள் மிகவும் வலிமையானவை..! இவைகளை ஸ்டீலுடன் அதாவது இருப்பதோடு ஒப்பிடப்படுகின்றது. நம்முடைய எலும்புகள் ஸ்டீலை விட பல மடங்கு பலம் மிகுந்தவை. ஆயினும் எலும்பின் எடையானது ஸ்டீலை விட 50 மடங்கு குறைவாகவே இருக்கும். மனித எலும்பின் ஒரு கனங்குலம் பிக்கப் (Pick-up) லாரியின் எடையை தாங்கும் வலிமை கொண்டது. ஒரு பிக்கப் லாரியின் எடை 2500 kg இருக்கும்.

கான்க்ரீட் அதாவது சிமெண்ட் மற்றும் கற்கள் சேர்க்கப்பட்ட கலவை உலர்ந்த பிறகு முழுமையாக கற்களாக மாறுகிறது. இந்த கான்க்ரீட்டை மனிதன் எலும்புகளுடன் ஒப்பிடும்போது நம்முடைய எலும்புகள் நான்கு மடங்கு வலிமையானவை. இவ்வளோ ஸ்ராங்கான எலும்பையே நாம பைக்ல போயி விழுந்து ஒடச்சிகிட்டு வரோம்னா., எவ்ளோ வேகமா பயணிக்கிறோம்னு சிந்திச்சி பாருங்க..! சிந்தித்து செயல்படுவோம்..! விபத்தை தவிர்ப்போம்..! நமது உடலில் வின்னம் படாமல் அதாவது காயம் படாமல் பார்த்துக் கொள்வோம்.
நடுக்கடலில் கப்பல் பழுதானால்..?
நடுக்கடலில் கடலில் கப்பலின் என்ஜின் இயந்திரக்கோலாரு ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்கிறீர்களா..? இன்றைய காலகட்டத்தில் இப்பொழுது பயணிக்கின்ற பெரும்பாலான கப்பல்களில் பல முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அதில் முக்கியமாக இரட்டை என்ஜின் அமைப்பு. இதில் இரண்டு என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் செயலிழந்தாலும் மற்றொன்று செயல்படத் தொடங்கிவிடும்.

ஆனால் இரண்டும் செயலிழந்தால் என்ன செய்வார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம்.? இதற்கு பதிலாக ஒவ்வொரு கப்பலிலும் அனைத்தையும் அறிந்த ஒரு என்ஜினியர் ஒருவர் கட்டாயமாக இருப்பார். அவரே கப்பலின் தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்வார். இன்ஜினியரால் சிக்கல் தீர்க்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. ஏனென்றால் பல சக்தி வாய்ந்த இழுவிசை படகுகளைக்கொண்டு நடுகடலில் சிக்கித்தவித்த கப்பல்களை கரைக்கு இழுத்துக் கொண்டு சென்று பாதுகாப்பாக கரை சேர்ப்பார்கள்.
மனிதன் உருவாக்கிய அதி வேகமான இயந்திரம்
மனிதனால் உருவாக்கப்பட்ட அதிவேகமான இயந்திரங்கள் இதோ..! முதலாவதாக த்ரஸ்ட் எஸ் எஸ் ஐ (Thrust SS) பற்றி பார்க்கலாம். இது ஒரு சூப்பர் சோனிக் வாகனம். இது மணிக்கு 1200 km வேகத்தை கடந்த சாதனையைப் பெற்றுள்ளது. அடுத்து உலகின் மிக வேகமான விமானமான நார்த் அமெரிக்கா எக்ஸ் 15 (North American X-15 – Rocket-powered aircraft). இது 7300 km வேகத்தை தொற்ற சாதனை படைத்தது.

இதிலிருந்து நான்கு மடங்கு வேகமாக இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் மற்றும் ஸ்பேஸ் ஷட்டில் பயணிக்கிறது. அதாவது மணிக்கு 28000 km வேகத்தில் பூமியை சுற்றுகிறது. இன்னும் இதை மிஞ்சிய வேகம் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக வேகமான இயந்திரம் பார்க்கர் சோலார் ப்ரோப் (parker solar probe) இது சூரியனைச் சுற்றி 394,736 miles per hour கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
விறகைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா நிலக்கறியை பயன்படுத்தி மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா..? இந்தியா இன்று 68% மின்சாரத்தை நிலக்கறியிலிருந்து உருவாக்குகிறது. அதேபோல சீனா போன்ற நாடுகளிலும் 53% மின்சாரம் நிலக்கரியில் இருந்தே உருவாக்கப்படுகிறது. நிலக்கறியை மின்சாரமாக மாற்றுவது எப்படி..? நிலக்கரியை மின்சாரமாக மாற்றும் இடங்களை தெர்மல் பவர் பிளான்ட் (Thermal power plant) என்று அழைக்கின்றது.

இந்த பவர் பிளான்ட்டுகள் மிகவும் பறந்த அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதாவது இவை ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவை தாண்டும் அளவுக்கு பெரியவை. இந்த பெரிய இடத்தின் பாதி பகுதியை நிலக்கறியை சேமிக்கவே பயன்படுத்துகிறார்கள். இங்கு சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் டன் நிலக்கறி சேமிக்கப்படுகிறது. இந்த நிலக்கறியை ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி அதை தூளாக அரைக்கிறார்கள். அதன் பிறகு இந்த கருப்பு தூளை அதிகளவு நெருப்பை பயன்படுத்தி எரிக்கின்றனர். இவ்வாறு எரிப்பதன் மூலம் அதிகளவில் உள்ள நீரைக் காய்ச்சி நீராவி ஆக்குகிறது.

அந்த நீராவியின் உதவியால் டர்பைன்கள் சுளற்றப்படுவதால் மின்சாரம் உற்பத்தியாகிறது. இவ்விடத்தில் நீரை கொதிக்கவைத்து தானே மின்சாரம் எடுக்கிறார்கள். அதற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை விட விறகை பயன்படுத்தலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். விறகை பயன்படுத்தினால் அதிக கொள்ளளவு உள்ள நீரை குறிப்பிட்ட நேரத்தில் ஆவியாக்குவது என்பது மிகவும் சிரமம். மேலும் அதிக விறகுகள் தேவைப்படும். அதனால் தான் நிலக்கரியை பயன்படுத்துகிறார்கள். எனவே விறகைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பது சாத்தியமற்றது.
திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம்
இந்த தலைப்பு மாதிரி தான் இப்போது நாம் பாக்கப்போகிற விஷயமும் இருக்கும். உங்களுக்கு தெரியுமா..! 17858 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பறந்துள்ள இந்த சிறிய நாடுதான் குவைத். இதன் நாணயத்தின் மதிப்பு மிகவும் வலிமையானது. அதாவது அமெரிக்க டாலர் கூட இதற்கு சமமில்லை. அது எப்படி குவைத் இவ்வளவு பெரிய பணக்கார நாடாகிவிட்டது..? மேலும் ஒரு குவைத் தினாரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

அரேபியாவில் அமைந்துள்ள இது ஒரு மிகச்சிறிய நாடு. இதன் மக்கள் தொகை சுமார் 40 லட்சம். இதில் 30% மட்டுமே குவைத் மக்கள். மீதமான 70% பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள். குவைத் உலகில் 34வது மற்றும் அரேபிய நாடுகளில் ஆறாவது மிகப்பெரிய பணக்கார நாடாகும். ஆனால் குவைத் பரம்பரை பணக்கார நாடல்ல..! இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது எண்ணெய். அதற்கு முன் அதாவது 85 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் மிகவும் ஏழ்மை நாடாக இருந்தது.
ஆனால் 1938ல் முதன்முதலாக இங்கு எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குவைத் நாட்டின் அதிர்ஷ்டம் முழுமையாக மாறியது. இப்போது இது உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகும். மற்றும் உலகின் மிகவும் வலிமையான நாணயத்தின் மதிப்பை கொண்டுள்ளது. இன்று ஒரு குவைத்தின் தினார் 3.24 அமெரிக்க டாலருக்கு சமம். அதே சமயம் இந்தியாவில் ஒரு குவைத்தி தினார் சுமார் 278 ரூபாய் மதிப்பு கொண்டது.
இப்படியும் ஒரு பிறப்பா..?

இந்த பூச்சியின் பெயர் எமரால்ட் காக்ரோச் வாஸ்ப் (Emerald cockroach wasp) இது பார்க்க மிகவும் அழகாக தோன்றலாம். ஆனால் காக்ரோச்கள் இதை பார்த்தால் பயத்தில் சிதறிப்போகின்றன. இதற்கு காரணம் இந்த வாஸ்ப் தனது முட்டைகளை இடுவதற்கு ஒரு காக்ரோச்சின் உடலே பயன்படுத்தும். இதற்காக முதலில் ஒரு நல்ல காக்ரோசை தேடி பிடிக்க முயற்சிக்கிறது.
ஆனால் காக்ரோச் அந்த வாஸ்பிடமிருந்து தன் உயிரை காப்பாத்திக்க அதோடு போராடி சண்டை போடுகிறது. இருந்தாலும் வாஸ்ப் முயற்சி செய்து தன் விஷத்தை கரப்பான்பூச்சியின் உடலில் செலுத்திவிடும். இதனால் உடனே காக்ரோச்சின் கால்கள் சோர்ந்துவிடும். பிறகு வாஸ்ப் காக்ரோச்சின் மூளையில் ஒரு சிறப்பு ஹார்மோனை ஊற்றுகிறது.

இது அதன் மெடபாலிசத்தை குறைத்து சில நாட்களுக்கு காக்ரோச்சை உயிருடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. பிறகு அதன் முட்டையை கரப்பான் பூச்சியின் உடலில் செழித்து விடுகிறது. சில நாட்களுக்குப் பிறகு அந்த பூச்சி கரப்பான் பூச்சியின் உடலை கிழித்து வெளிவந்து விடுகிறது. இதுபோல ஒரு பிறப்பை நீங்கள் கேள்விபட்டதுண்டா..? உங்களது பதிலை மறக்காம கமெண்ட்ல பதிவிடுங்கள் நண்பர்களே…
சின்னதா ஒரு கருத்தூசி
பணத்திற்கு வாய் இருந்தால் இப்படி தான் நமக்கு அட்வைஸ் பண்ணும். அதாவது பணத்தைப் பற்றிய இந்த முக்கியமான ஆலோசனைகள் உங்களை உயர்த்திக் கொள்வதில் பயன்படும். ஒன்று சம்பாதிக்க ஒரு வழி இருந்தால் அதை மட்டுமே கடைசிவரை நம்பாதீர்கள் மற்றொரு வழியை உருவாக்குங்கள். இரண்டாவது நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவழிக்காதீர்கள். காரணம் வாரி வழங்கும் வள்ளல் பிச்சைக்காரனாக இருக்கிறான் ஆனால் கஞ்சனாக இருப்பவர்கள் தான் ஊரின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

மூன்றாவது உங்கள் பணத்தை சரியான இடங்களில் முதலீடு செய்யுங்கள். தங்கத்தில் முதலீடு செய்வதை விட இந்த இடத்தில் முதலீடு செய்வதே சாலச் சிறந்தது. நான்காவது உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக சில அனாதை குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தரலாம் புண்ணியமாவது சேரும். ஐந்தாவது மற்றவர்களுக்கு காட்சிப்படுத்தவே பணத்தை செலவழிக்காதீர்கள். அதாவது ஆடம்பரத்தைக் காட்டி சீன் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். இதனால் அவர்களுக்கு ஒன்றுமில்லை உங்களது பணம்தான் தீரும்.
ஆறாவது ஒரே இடத்திலிருந்து நூறு ரூபாய் வருவதை விட 100 இடங்களில் இருந்து ஒரு ரூபாய் வருவது சிறந்தது என்பதை நினைத்து கொள்ளுங்கள். இதனால் என்ன சொல்ல வர 100 இடத்தில் போய் பிச்சை வாங்கலாமான்னு கேக்குறீங்களா..? கிடையாதுங்க வாழ்நாள் முழுவதும் ஒரு வேலையில் இருந்து 100 ரூபாய் சம்பாதிப்பதை விட சம்பாதித்த காசை வைத்து பல பிசினஸ்களை செய்தால் அது உங்களை பல மடங்கு வளர செய்யும் என்பதை இங்கு கூற வந்துள்ளேன்.

இப்படி ஒரு நல்ல கருத்தோடு இந்த பதிவை இன்று முடித்துக் கொள்கிறேன். இந்த பதிவு உங்களுக்கு நிச்சயமாக பிடிச்சிருக்கும்னு நம்புறேன். தினமும் இதுபோல பல சுவாரசியமான தகவல்களை விரைவில் பெற வேண்டும் என நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து நமது டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து உங்களது பொன்னான ஆதரவை கொடுங்கள்.
telegram மற்றும் whatsapp சேனல்களில் இணைய விரும்பும் நண்பர்கள் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள். நமது வலைதளத்தில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு பதிவின் உடனடி அப்டேட்களும், தகவல்களும் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க உதவும். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝