வெயில் காலத்தில் உங்களுக்கு அரிப்பு பிரச்சனையா? இந்த பிரச்சனையானது காமனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை தான். அதுவும் குறிப்பா பல பேர் இருக்கக்கூடிய இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் சொரிய முடியாத நிலைமை வரும் பாருங்க அந்த இடத்துல அவ்வளோ கஷ்டமா இருக்கும். ஆனா சொரிஞ்சா எதமா இருக்கும்னு நினைச்சு சொரிய ட்ரை பண்ணுவோம். ஆனா நாலு பேரு பார்த்தா நம்மள அசிங்கமா நினைப்பாங்கன்னு சொல்லி சொரிய முடியாம ஒரு அசவுகரியமான பீலிங்கோட வளைந்து நெளிஞ்சுகிட்டு எதையோ பண்ணி அந்த பீலிங்கை போக்க ட்ரை பண்ணுவோம்.

இனிமேட்டுக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு வரக்கூடாதுன்னா நிச்சயம் இந்த பதிவை முழுசா படிச்சு பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தெரிஞ்சுக்கோங்க. நிச்சயம் இந்த பதிவை படிக்கறதுனால இது போன்ற அசவுகரியமான நிகழ்வுகளில் இருந்து உங்களை நீங்களே ப்ரொடெக்ட் பண்ணிக்க முடியும்.
வெய்யகாலம் வேற வர ஆரம்பிச்சிருச்சு. இனிமே சூரியன் நம்மல சுட்டெரிக்கப் போற காலம். ஆகவே நண்பர்களே இந்த சுட்டெரிக்கும் வெய்யகாலத்துல நம்ம சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான ஃப்ரூட் சாலட் மாதிரி மூன்று முக்கியமான பழங்களை நான் இன்னைக்கு சொல்ல போறேங்க. இந்த மூன்று முக்கியமான விஷயங்களை சிறுநீரக செயலிழப்பு இருக்கிறவங்களை தவிர மீதி எல்லாருமே கண்டிப்பா வாரத்துக்கு ஒரு வாட்டியோ அல்லது இரண்டு வாட்டியோ சாப்பிட்டே ஆகணும். அதை எப்படி செய்யலாம் அப்படிங்கறத இந்த பதிவுல உங்களுக்கு சொல்லீட்டு நானும் சாப்பிடத்தான் போறேன் உங்களோட சேர்ந்து.
வாங்க அந்த மூன்று பழங்கள் என்ன அப்படிங்கறத ஒன்னொன்னா பாத்துருவோம். மேலும் அத ஏன் சாப்பிடணும் அப்படிங்கறத பத்தியும் மேலும் அதுல உள்ள மருத்துவ காரணங்களையும் சொல்லப்போறேன். ஆகவே நண்பர்களே முழுசா படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காமல் கமெண்ட்ல பதிவிடுங்கள்.

முதல் விஷயம் என்னன்னா, நம்ம சூரிய குடும்பத்தோட ஓர் அங்கமா இருக்கக்கூடிய சூரியன் அண்ணாச்சியோட வெயில்னால முதல்ல பாதிக்கப்படக்கூடியது நம்ம தோல்கள் தான். நம்ம தோல்கள் ஃபுல்லா சூரிய அண்ணாச்சியோட வெப்பமான கதிர்கள் பட்டுபட்டு பயங்கரமா பாதிக்கப்பட போகுது இந்த வெய்ய காலத்துலங்குறதுல எந்த சந்தேகமே இல்ல. அப்படிப்பட்ட இந்த மோசமான அண்ணாசியோட தொல்லைகள்ல இருந்து நம்ம தோல்களை பாதுகாக்கறதுக்கு உண்டான ஒரு முக்கியமான பழம் அதுவும் முதல்ல நான் சொல்லக்கூடியது தக்காளி.
என்னாது தக்காளியானு சாக்காகிறாதீங்க. இது வெரும் சாதாரண தக்காளி தாங்க. ஆனா இந்த சூரியப்பய பிரச்சனைகள்ல இருந்து நம்மல பக்காவா காப்பாத்துவாப்புடி. அப்படி என்னடா இந்த தக்காளில இருக்குனுதானே கேக்குறீங்க.? சொல்லுறேன் கேளுங்க. இந்த தக்காளியில் இருக்கக்கூடிய லைகோபின் அப்படிங்கறது நம்ம தோல்களை பாதுக்காக்க தேவையான ஆன்டி ஆக்சிடென்டா செயல்பட்டு அதாவது இந்த ஆன்டி ஆக்சிடென்ட் நம்ம தோல்களை பாதுக்காக்குதுனு சொன்னா ஆச்சர்யமா இருக்குல. ஆனா நீங்க நம்பிதான் ஆகனும். நாம்ம சாதாரணமானதுன்னு நினைக்கக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கு பின்னாடியும் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்லது தான் இந்த தக்காளியிலும் இருக்கு.

தக்காளி சில சமயம் கோச்சிகிட்டு மலை உச்சில போய் ஒக்காந்துக்கும். ஆனா சம்மர் சமயத்துல அப்படி கோச்சிகிட்டு போகாது. ஆகவே நண்பர்களே மறக்காம தக்காளியை வாங்கி நிறைய வச்சுக்கோங்க வீட்டில. என்ன சொல்லுறேனு புரியாம அங்க இங்கனு வேடிக்க பாக்கேறீங்கலா..? சாரி காய்ஸ்.! இந்த தகவல் உங்களுக்கு சொல்லணும்னு ஆசைப்படும்போதே விளையாட்டுத்தனமா சொன்னா எப்படி இருக்கும்னு, அதாவது பேச்சு நடையில் ஜாலியா ஒருத்தவங்க கிட்ட பேசினா எப்படி பேசுவோமோ அது மாதிரி எழுதலாம்னு டைப் பண்ணேன்.
மலையேறீரும்னா ஒன்னும் இல்லைங்க, தக்காளி அப்பப்போ ரொம்ப காஸ்ட்லியாவும், வாங்குறதுக்கே ரொம்பவே கஷ்டமா மாறிடும். சம் டைம்ஸ் தக்காளியே இல்லாம கூட குழம்பு வைக்கலாம்ங்குற நிலைமைக்கு நம்ம போயிருவோம். ஏன்னா, அந்த அளவுக்கு தக்காளி வந்து விலை உயர்வ சந்திக்கும். ஆனா வெயில் காலத்துல அப்படி கிடையாது, மேலும் சீக்கிரம் கெட்டும் போகாது. அதாவது தக்காளி நம்மளுக்கு வெப்பமண்டல காய்கறி வகையை சேர்ந்ததுங்கறதுனால, தக்காளிய பொறுத்தவரைக்கும் அவ்வளவு சீக்கிரம் வெயில் காலத்துல கெட்டுப்போனது கிடைக்காது. இன்ஃபேக்ட் நல்ல மணமும், சுவையும் கொண்டதாகவும் இருக்கும். நல்ல குவாலிட்டியாவும் கிடைக்கும்.
அதனால வெயில் காலத்துல எளிமையா நம்மளோட டிஷ்ல சேர்த்துக்க வேண்டிய ஒரு விஷயம். மேலும் தக்காளில அதிகமான நீர்ச்சத்து இருக்கு. இப்ப உங்களுக்கு ஒரு டவுட் வரலாம் இப்போ நிறைய பேர் சொல்றாங்களே.! இந்த தக்காளி வந்து கிட்னி ஸ்டோன் அதாவது சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அப்படி இப்படின்னு பலரும் சொல்லிட்டு இருக்காங்களே.

நீங்க என்னடான்னா முதல்ல இந்த தக்காளிய ரெக்கமெண்ட் பண்றீங்களே இது கரெக்டா அப்படின்னு சொல்லிட்டு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. இது ஒரு கற்பிதம் மட்டுமே. அதாவது தவறான கருத்து மற்றும் மூடநம்பிக்கை அப்படிங்கறத சொல்லிடுறேன். ஏன்னா தக்காளில ஆக்சிலேட் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கிறதுனாலதான் இந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லப்பட்டது.
ஆனா ஆக்சிலேட் அப்படிங்கறது மிக மிகக் குறைவுங்க. அதாவது நீங்க 100 g தக்காளிய எடுத்துக்கிட்டீங்கன்னா அதுல வெறும் 5 mg அளவுக்குதான் ஆக்சிலேட் இருக்கும். இந்த அளவுக்கு ஆக்சிலேட் வந்து நம்மளுக்கு கால்சியம் ஆக்சிலேட் கற்கள் அதாவது சிறுநீரக இடத்துல உருவாகுற அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. பொதுவாகவே வெயில் காலத்துல சிறுநீரக கற்கள் உருவாகுறதுக்கான வாய்ப்பு அதிகம்தான். ஏன்னா, அதிகமா நம்ம தண்ணீர் குடிக்காத போது, சரியான அளவு நீர்ச்சத்து இல்லாதபோது கண்டிப்பா நம்ம சிறுநீரகத்துக்கு பாதிப்பு இருக்கும். அதனாலதான் வந்து நான் இன்னைக்கு இந்த மூன்று பழங்களோட ரெசிபியை சொல்லிக்கிட்டு இருக்கேன்.
அப்போ எனக்கான இந்த ரெசிபில வந்து நான் இந்த தக்காளியை சேர்த்துறேன்னா யோசிச்சு பாருங்க.! அப்ப தக்காளி எந்த அளவுக்கு இந்த ரெசிபில முக்கியத்துவம் வாய்ந்த இருக்கும் அப்படிங்கறத புரிஞ்சுக்கோங்க. தக்காளியால நமக்கு எந்த பிரச்சனையும் வராது. இன்ஃபேக்ட் (Infact) அது நம்ம சிறுநீரகத்தை பாதுகாக்க தான் செய்யும். தக்காளியில் இருக்கக்கூடிய பொட்டாசியம்ங்கறது சிறுநீரகம் மற்றும் இதயம் ரெண்டுக்குமே நல்லது.

மேலும் தக்காளியில இருக்கக்கூடிய பாஸ்பரஸ் நம்மளோட சிறுநீரகத்துல சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படாம தடுக்கக்கூடியது. ரொம்ப சென்சிடிவ்வான உறுப்புங்க நம்ம சிறுநீரகம். அதை வந்து கரெக்டா பாதுகாத்துக்கணும்ன்னா, நம்ம கரெக்டான நீர்ச்சத்து மற்ற ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் எல்லாம் கொடுத்து அதை நல்லா சேஃப்பா வச்சுக்கணும். அதுக்கு தக்காளி கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்.
தக்காளியோட சேர்ந்து ரெண்டாவதா நம்ம சேர்த்த போற பழம்ங்கறது தர்பூசணிங்க. அதாங்க நம்ம வாட்டர் மெலன். வாட்டர் மெலன் நல்லா ஃப்ரீயா இப்ப கிடைக்க ஆரம்பிச்சிருச்சு சோ பயந்துக்காதீங்க. கிலோ 10 ரூபாய்னு எங்க ஏரியால விக்க ஆரமிச்சிடாங்க. தர்பூசணின்னு சொன்னதும் இப்ப ஒரு கூட்டம் கண்டிப்பா வரும். அது வேற யாரும் இல்ல நம்மல்ல பலபேரு சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பீங்க. அந்த மாதிரியான ஆளுங்களுக்கு ஒரு பயம் இருக்கும் அது என்னன்னா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நான் தர்பூசணியை எடுத்துக் கொண்டால் என் உடலில் மிக அதிகமான சர்க்கரையை ஏத்திருமோனு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. அப்படி இப்படின்னு சொல்லிட்டெல்லாம் பயந்துக்காதீங்க.
ஒரு துண்டு சாப்பிடுறதுனால தப்பு கிடையாது. இப்ப ஒரு துண்டு தர்பூசணி, ஒரு துண்டு தக்காளி. அடுத்து நான் சொல்லக்கூடிய இன்னொரு ஒரு துண்டு பழம் அப்படிங்கறத இந்த ரெசிபில நம்ம சேர்த்துக்கும் போது நம்மளுக்கு பல நன்மைகள் தான் கிடைக்குங்க. சர்க்கரை நோயாளிகள் தங்களோட சிறுநீரகத்தை பாதுகாக்குறதுங்குறது மத்தவங்கள விட ரொம்ப முக்கியம், அப்படிங்கறதுனாலயே இதை நான் ரெக்கமெண்ட் பண்றேன். ஆனா சில பேருக்கு வந்து சிறுநீரக செயலிழப்பு இருக்கு அப்படின்னா அவங்கதான் இப்ப நான் சொல்றதை சாப்பிடக்கூடாது. இத திருப்பி ரெண்டாவது வாட்டி சொல்லிட்டேன். இந்த விஷயத்த மறந்தும் கூட தப்பு பண்ணீராதீங்க தெய்வங்களா.

இப்போ தர்பூசணி பொறுத்தவரைக்கும் 92% வாட்டர் நீர்தான் இருக்கு. தர்பூசனில நிறைய வைட்டமின் மினரல் சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் இருக்கு. இது நம்ம அண்ணாச்சிகிட்ட இருந்து தோல்களை பாதுகாக்கக் கூடியது போன்ற பல நல்ல விஷயங்கள் இருக்குங்குறனாலயும், மேலும் தர்பூசனிக்கினு முக்கியமா ஒரு சத்து இருக்கு. அது என்னன்னா நம்மள சோர்ந்து போக செய்யாம நம்மளோட எனர்ஜி அளவுகளை அதாவது நம்ம உடலுக்கு தேவையான சக்தியை கொஞ்சம் அதிகமாவே வச்சிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணக்கூடியது. இதுல இருக்கக்கூடிய சில சத்துக்களால மசில் சோர்னஸ்ன்னு சொல்லிட்டு வரக்கூடிய பிரச்சனைகள்ல இருந்து நம்மல பாதுகாக்குது.
மசில் சோர்னஸ்னா என்னானு கேக்குறீங்களா..? அதாவது நாம ரொம்ப தூரம் வெயில்ல போய்ட்டு வந்தா, நம்ம உடம்புல உள்ள தசைகள் எல்லாம் வலுவு இழுந்த மாதிரி ஒரு ஃபீல் வரும்ல அதுதான் இந்த மசில் சோர்னஸ். இந்தமாதிரியான சமயத்துலதான் நம்ம உடம்பு ரொம்ப டயர்டாக்கி, அசதில நாம்ம அப்படியே மெய்மறந்து உஸ்அப்பப்பானு படுத்துருவோம். இப்பேர்பட்ட பிரச்சனைகள் தடுக்கக்கூடியதுங்க இந்த தர்பூசணி. அதாவது நீங்க வெயில்ல போயிட்டு வந்ததுக்கு அப்புறம், இந்த தர்பூசனி சாப்பிடுறதுங்கறது உங்களுக்கு உள்ள அந்த மசில் சோர்னஸ், அதாவது அந்த தசைகள் வலுவிழந்து போறதை குறைக்கக்கூடியதா இருக்கு.
இதுமட்டுமின்றி இன்னொரு முக்கியமான பிரச்சினைக்கு இந்த பழம் யூஸ் ஆகுதுங்க. அது என்னன்னு கேட்டா நிச்சயமா நீங்க மனசுக்குள்ள ஒரு செகண்ட் புன்முறுவலோட சிரிக்கலாம்னு நெனைக்கிறேன். ரொம்ப முக்கியமான விஷயம், அதுவும் இந்த சம்மர்ல நீங்க ஞாபகம் வச்சுக்க வேண்டிய விஷயம். அது என்னன்னா, தர்பூசனி வந்து இன்ஃபிலிமேஷனையும் குறைக்குங்க, அதாவது அலர்ஜி. நம்ம உடம்புல மர்ம ஆசாமிங்க இருக்குற இடத்துல வரக்கு வரக்குன்னு பிரஸ் (Brush) போட்டு இழுக்குற அளவுக்கு நகத்தை போட்டு பப்ளிக்லையே சொரிய வைக்கிற மோசமான அரிப்பு பிரச்சனைகள தடுக்கும் பணியையும் செய்துங்க. இந்த மாதிரி சம்மர்ல இருக்கும்போது நம்ம தோல் வந்து பலவிதமான தாக்குதல்களுக்கு உள்ளாகும்.

சூரிய அண்ணாச்சியோட வெப்ப தாக்குதல் மட்டும் இல்லாம நம்ம உடலோட உள்ளாரையும் பல தாக்குதல்கள் ஏற்ப்படும். அதாவது நம்மல்ல நிறைய பேரு எண்ணெய்ல சுட்ட பஜ்ஜி, போண்டா, வடை, சில்லி சிக்கன், ஃபிஷ் அப்படின்னு சொல்லிட்டு சம்மர்ல வந்து அதிகமா சாப்பிடுறதுங்கறது கண்டிப்பா நம்ம உள்ளுறுப்புகள்ல ஒரு விதமான இன்பிலமேஷன் உருவாகுறதுக்கு காரணமா இருக்கு. அந்த மாதிரி நமக்கு நாமே உருவாக்கக் கூடிய இன்பிலமேஷன் மற்றும் நார்மலா இயற்கையாக இருக்கக்கூடிய அந்த அலர்ஜி இன்பிலமேஷனை கூட நம்ம வந்து குறைக்கிறதுக்கு இந்த தர்பூசினி பழம் சாப்பிடுறது அப்படிங்கறதால அந்த அலர்ச்சியை குறைக்குங்க.
அதுமட்டுமில்லாம, இப்போ நான்வெஜ் எல்லாம் சாப்பிடும் போது அந்த யூரிக் ஆசிட் அதிகமாகிறது இது நிறைய பேருக்கு கொடுக்கக்கூடிய காமன் ப்ராப்ளம். இந்த யூரிக் ஆசிட் அளவுகளை குறைக்கக்கூடியது தர்பூசினி. ஆக தர்பூசினில் இருக்கக்கூடிய லைகோபின், சிட்ருலின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதெல்லாம் ஓவர் ஆலா சேந்து நம்ம உடம்புக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது.
மேலும் தர்பூசணியை நம்ம எடுத்துக்க வேண்டிய நேரங்கறது, சம்மர்ல நம்ம சாய்ந்தர நேரத்துல வாக்கிங் போயிட்டு வரோம்னு வைங்க, அதிலும் குறிப்பா அசதியப்ப அந்த வாக்கிங் நடைபயிற்சி செஞ்சு வந்ததுக்கு அப்புறம் ஏற்படும் இல்லையா அந்த நேரத்துல தர்பூசணி சாப்பிடுற பழக்கத்தை வச்சுக்கிறது அப்படிங்கறது சம்மர் காலத்துல உண்மையிலேயே பல நன்மைகளை நம்மளுக்கு தரக்கூடியது. இது ஒரு நல்ல மெயின்டெனன்ஸ் உணவு சரிங்களா. அடுத்ததா மூணாவது பழத்துக்குள்ள போவோம்.

மூன்றாவதா இந்த காம்பினேஷன்ல நம்ம சேர்த்து வேண்டிய முக்கியமான விஷயம் குக்கும்பர். அதாங்க வெள்ளரி அதாவது வெள்ளரிய பொறுத்தவரைக்கும் இப்போ இது வந்து பழம்னு சொல்ல முடியாது. வெள்ளரி வந்து காய்கறி வகையை சேர்ந்தது. காயோ, பழமோ மொத்தத்துல இதுல நிறையவே தண்ணீர் கண்டெண்ட் இருக்கு. மெயினா வெள்ளரில 95% நீரும், தர்பூசணில 92% நீரும் இருக்கு. ஏற்கனவே தர்பூசம் இல்ல 92% தண்ணீர் இருக்குன்னு சொல்லி எடுத்து வச்சுட்டோம் மீண்டும் தண்ணிய வெள்ளரிக்காய் மூலமாக இந்த சேலட்ல ஆட் பண்ணனும்ன்னு சொல்லி உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.
ஏன் இந்த இடத்தில் திரும்பவும் வெள்ளரிய ஆட் பண்றோம்னா.? நம்ம உடம்புல உள்ள ஜீரண மண்டலங்கிறது சிறப்பா செயல்படனுங்கறதுக்காக மட்டுமே இந்த வெள்ளரிக்காயை நம்ம இந்த லிஸ்ட்ல ஆட் பண்றோம். நம்ம செவத்த அண்ணாச்சி சுட்டெரிக்கக் கூடிய காலத்துல ஜீரண மண்டலம்ங்கறது கொஞ்சம் மந்தமாதான் இயங்கும். ஏன்னா நம்ம உடம்புல ஓடக்கூடிய ரத்த ஓட்டம் ஃபுல்லா நம்ம தோல் மற்றும் மற்ற உறுப்புகளை பாதுகாக்க போயிடும். அப்போ இந்த ஜீரணம் மண்டலத்துக்கு தேவையான அளவு அதிகமான ரத்த ஓட்டம் கிடைக்காது. அந்த நேரத்துல கொஞ்சம் கம்மியா இருக்கும். அப்போ அதை சரி செய்யறதுக்கும், நம்ம ஜீரணம் நல்லபடியா இருக்கறதுக்கும் இந்த வெள்ளரில இருக்கக்கூடிய நார்ச்சத்து அதாவது பைபர் ஹெல்ப் பண்ணும்.
மத்த இரண்டு அதாங்க மேல சொன்ன பழங்களை விட இந்த வெள்ளரில நார்ச்சத்து அதிகமா இருக்கும். அதுவும் கரையக்கூடிய நார்ச்சத்து சால்யுபிள் ஃபைபர் அதிகமா இருக்கும். அதனாலயே வந்து இந்த வெள்ளறியை இந்த நேரத்துல இந்த காம்பினேஷன்ல சேர்த்துக்கிறதுங்குறது ரொம்ப முக்கியமான ஒண்ணா பாக்கப்படுது. மேலும் தக்காளி, தர்பூசணி, வெள்ளரியை சேர்த்து ஒரு ஃப்ரூட் சாலட் செஞ்சி சாப்டுறதுங்கறது ரொம்ப எபெக்டிவ்வான காம்பினேஷன். மேலும் வெள்ளரில இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்துக்கள் நம்ம தோல்களுக்கு ரொம்பவும் நல்லது. இதுவும் தக்காளி மாதிரியே உடல்ல சேரக்கூடிய நச்சுத்தன்மைங்கறத குறைக்க உதவுதுங்க. அதாவது வெயில் காலத்துல அதிகமா ஏற்ப்டக்கூடிய டீடாக்ஸிபிகேஷனுக்கு தேவைப்படக்கூடிய ஒரு முக்கியமான விஷயம்னு சொல்லலாம்.

வெள்ளரிக்காயை அப்படியே இந்த காம்பினேஷன்ல சேர்த்தும்போது, ஒரு ரெண்டு துண்டை தனியா ஒதுக்கி வச்சு ஒரு பத்து நிமிஷம் உங்க கண் இமைகள் மேல இந்த வெள்ளரி துண்டுகளை வைங்க கண்கள் வறண்டு போகாமலும், வெயில் காலத்துல கண்களுக்கு கீழ கருவளையம் வராமலும் இருக்க இந்த ஹாபிட் உங்களுக்கு உதவிகரமா இருக்கும். வாங்க இப்ப இந்த காம்பினேஷன ட்ரை பண்ணுவோம்.
இப்ப நான் சொன்ன அனைத்து விஷயங்களும் ரொம்ப ரொம்ப நல்ல விஷயங்கள் அதுவும் இந்த வெய்ய காலத்துக்கு ரொம்பவும் பயன் அளிக்கக்கூடிய ஒரு சிறப்பான செயல்னு சொல்லலாம். என்னதான் நல்ல விஷயமா இருந்தாலும் அளவுக்கு அதிகமாக போகும் போது நல்ல விஷயமும் கூட வெசமா மாறும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது மாதிரி இதுலயும் ஒரு ஒரு நபர்களுக்கு தகுந்தார் போல அளவுகள் மாறப்படலாம். அதாவது சிறுவயதினர்களுக்கு இவ்வளவு தான் தர வேண்டும், வயதானவர்களுக்கு இவ்வளவு தான் தர வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வளவுதான் தரவேண்டும் என்ற சில கட்டாய விதிமுறைகள் இருக்கும். அந்த விதிமுறைகள் எனக்கு தெரியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.
ஆகவே நல்ல நியூட்ரிசன் அவர்களை பார்த்து, உங்களுக்கு தேவையான சில ஐடியாக்களை தெரிந்து கொண்டு முறையாக உங்கள் உடலை சோதனை செய்து பிறகு உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொண்டு ஜாலியாக சாப்பிடுங்கள். பழங்களை சாப்பிடுவதற்கு அளவுகள் தேவைப்படாது தான். இருந்தாலும் இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என் கடமை. மேலும் சிறுநீரக செயல்பாடுகளில் குறை இருப்பவர்களுக்கு இந்த இடத்தில் மூன்றாவது முறையாகவும் சொல்லிக் கொள்கிறேன் இந்த ஐடியாவை நினைத்து கூட பார்க்காதீர்கள்.

நம்ம உடம்ப நம்மதாங்க பாத்துக்கணும் அதனால நூறு ரூபா செலவு செய்ய சங்கட்டப்பட்டுகிட்டு ஆயிரம் ரூபாய கொண்டு போயி ஹாஸ்பிடல்ல கொடுக்க ரெடியா இருக்காதிங்க. தயவு செஞ்சு வாரம் ஒரு முறையோ அதாவது மாதத்திற்கு மூன்று முறையாவது இதுபோல சாப்பிட்டு வாருங்கள் நிச்சயமா உங்களுக்கு பல பயன்களை கொடுக்கும்.
அவ்வளவுதான் நண்பர்களே இன்னைக்கான பதிவு இதோடு முடிஞ்சிடுச்சி மீண்டும் நாளைக்கு ஒரு வித்தியாசமான பதிவுள்ள உங்களுக்கு சந்திக்கிறேன் அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் இவ்வளவு நேரம் பொறுமையா ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்டு வரைக்கும் படிச்சிருக்கீங்களா நிச்சயமா உங்களுக்கு பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
இன்னைக்கு மட்டும் இல்லைங்க தினமும் நம்ம வலைதளத்தில் பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை எழுதிக்கிட்டு தான் இருக்கேன் அதோட உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்காக மற்றும் நமது வலைதளத்தின் வாசகர்களோடு நான் எப்போதும் இணைந்து இருப்பதற்காக நமது வலைதளத்திற்காகவே பிரத்தியேகமாக ஒரு whatsapp சேனலும் மற்றும் telegram சேனலும் உருவாக்கி இருக்கிறேன் மறக்காமல் அனைவரும் இணைந்து உங்களது பொன்னான ஆதரவை கொடுத்து வாருங்கள்.

நமது சேனலில் இணைய விரும்பினால் கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள சேனலில் மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள். நாளைக்கு மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝
உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால் இந்தப் பதிவையும் படித்து பாருங்கள்…👇
நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
