என் அன்பான வாசகர்களே..! இந்தியாவை பொறுத்தவரைக்கும் மிகவும் மோசமான, கொடூரமான, கொலை மற்றும் கொள்ளை கும்பல் அப்படின்னா அது பாவரியா கும்பலை (Bawaria Gang) தான் நம்ம எல்லோருமே சொல்லுவோம். ஆனா அப்படிப்பட்ட பாவரியா கும்பலுக்கே சவால் விடக்கூடிய வகையில ஒரு மோசமான கொள்ளைக் கூட்டம் இந்தியாவுல இருந்திருக்கு. அவங்கதான் தக்கீஸ் (Thuggees) அப்படின்னு சொல்லப்படுற தக்கர்கள்.
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே சுமார் 600 ஆண்டுகள் இந்தியாவுல இவங்களுடைய கை மேலோங்கி இருந்திருக்கு. இவங்க இருந்த காலத்தை இந்தியாவின் இருண்ட காலம் அப்படின்னே சொல்லலாம். அந்த அளவுக்கு ஏராளமான கொலைகளையும், கொள்ளை சம்பவங்களையும் இந்தியாவில் இவங்க செஞ்சிருக்காங்க. சொல்லப்போனா இந்த தக்கர் கூட்டத்தின் தலைவனின் பெயர் உலகத்திலேயே அதிக கொலைகள் செஞ்ச ஒரு தனி ஆள் அப்படின்னு கின்னஸ் புக்குலயே இடம் பிடிச்சிருக்கு.

மேலும் இன்னைக்கு சமூக வலைத்தளங்கள்ல பிரபலமா இருக்கிற தக் லைஃப் அப்படிங்கிற வார்த்தை கூட இவங்க கிட்ட இருந்து வந்ததுதான்.! அப்படிப்பட்ட இந்த தக்கர்கள் யாரு.? இவங்களுடைய வரலாறு என்னங்குறத பத்தி இன்னைக்கான பதிவுல வாங்க விரிவா பார்ப்போம். வழக்கம்போல இந்த பதிவும் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை உங்களுக்கு சொல்லப்போகுது.!
சோ இதை மறக்காம முழுமையாக படித்துவிட்டு உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. புது வாசகர்கள் நம்ம வலைதளத்தின் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா இம்மீடியட்டா கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்பதான் நம்ம போடுற புது புது பதிவுகள் ஓட அப்டேட்ஸ் உங்களுக்கு உடனே நோட்டிஃபை ஆகும்.
தக்கர்கள் அப்படிங்கறவங்க ஒரு ரகசிய கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவங்க. மேலும் இவங்க தக்கீஸ் அப்படின்னும் அழைக்கப்பட்டாங்க. தமிழ் இலக்கியங்கள்ல இந்த தக்கர்கள் அரித்துளுக்கன் அப்படிங்கிற பெயர்ல குறிப்பிடப்பட்டிருக்காங்க. மிகவும் புத்திசாலிகளாவும், துணிச்சல் மிக்கவங்களாவும் இருந்த இந்த தக்கர்கள், இந்தியா முழுவதும் ஒரு தனித்தனி குழுக்களா பிரிஞ்சு தங்களுடைய கொள்ளைத் தொழிலை செஞ்சுகிட்டு வந்தாங்க. இவங்க இந்தியாவின் பல முக்கிய வணிக வழித்தடங்கள்ல பதுங்கி இருந்து அந்த வழியா வர மக்களை கொலை செஞ்சு, அவங்களுடைய உடைமைகளை திருடி ஒரு தடையம் கூட இல்லாம தப்பிச்சு போயிருவாங்க.
குறிப்பா இவங்க அன்றைய காலகட்டத்துல கல்கத்தாவையும், பாகிஸ்தானையும் இணைக்கிற விதமா அமைஞ்சிருந்த சாலையான கிரேண்ட் ட்ரங்க் ரோடு (Grand trunk road) மற்றும் மும்பையையும், சென்னையையும் இணைக்கிற டெக்கன் பிளாட்டோ ட்ரேட் ரூட் (Deccan plateau trade road), மேலும் மும்பையையும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் இணைக்கிற இண்டஸ் ரிவர் ட்ரேட் ரூட் (Indus river trade route) போன்ற வணிக வழித்தடங்கள்லதான் இவங்க அதிக அளவுல இருந்தாங்க.

இந்த தக்கர்களால பயணிகள், வியாபாரிகள், படைவீரர்கள் அப்படின்னு சுமார் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்காங்க. அதாவது சுமாரா ஒரு வருஷத்துக்கு மட்டும் இந்த தக்கர்களால கிட்டத்தட்ட 90000 மக்கள் கொல்லப்பட்டிருக்காங்க. இந்த தக்கீஸ் கூட்டத்துல எல்லா மதத்தையும் சேர்ந்தவங்களும் இருந்தாங்க. என்னதான் வேற வேற மதத்தை சேர்ந்தவங்க இந்த கூட்டத்துல இருந்தாலும், இவங்க வணங்கக்கூடிய ஒரே கடவுள் காளிதான். இவங்க காளியோட பிள்ளைகள் அப்படின்னு தங்களை சொன்னாங்க. அதே மாதிரி புராணங்கள்ல மனிதர்கள் பிறந்ததுக்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுவது போல இவங்களும் ஒரு கதையை நம்புனாங்க. அது என்னன்னா.? இவங்க காளியோட வேர்வையில இருந்து பிறந்ததா நம்பினாங்க.
இந்த தக்கர்கள் கிட்ட இருந்து தான் தக் அப்படிங்கிற வார்த்தை உருவானது. இந்த வார்த்தையை தான் ஆங்கிலேயர்கள் அவங்க டிக்ஷனரில (Dictionary) சேர்த்து பின் நாட்கள்ல அது தக் லைஃப் அப்படின்னு பிரபலமானது. அதன் பிறகுதான் இந்த வார்த்தை இந்தியாவிலேயும் பிரபலமானது. தக்ஸ் அப்படின்னா வன்முறை மற்றும் சட்ட விரோதமான செயல்கள்ல ஈடுபடுபவர்களையும், ஏமாற்றுபவர்களையும் குறிக்கிற ஒரு வார்த்தை. சரி இப்போ இந்த தக்கர்களுடைய வரலாறை பத்தி பார்ப்போம்.
தக்கர்களுடைய வரலாறு பெர்சியால இருந்து தான் ஆரம்பிச்சது. பெர்ஷியா அப்படின்னா இன்னைக்கு இருக்கக்கூடிய ஈரான். பத்தாம் நூற்றாண்டுல பெர்சியாவின் அரசரா இருந்தவர்தான் மாலிக் ஷா (Malik shah). இந்த மாலிக் ஷாவின் அரசவையில ஹசன் அப்படின்னு ஒரு அமைச்சர் இருந்தாரு. ஒருமுறை இந்த ஹசன் செஞ்ச ஒரு குற்றத்துக்காக மாலிக் ஷா ஹசனுக்கு ஒரு தண்டனையை கொடுத்தாரு. அந்த தண்டனைக்கு பயந்த ஹசன் ஒரு மலையின் மேல தலைமறைவானாரு. தலைமறைவா இருந்துகிட்டே இவருக்குன்னு ஒரு தனி கூட்டத்தை உருவாக்கினார். அந்த ரகசிய கூட்டம் அசாசின்ஸ் (Assassin’s) அப்படிங்கிற ஒரு மிகப்பெரிய கொள்ளை கும்பலாக உருவெடுத்தது. இந்த அசாசின்ஸ் கும்பல் நிறைய மக்களை கொன்று அவங்ககிட்ட இருந்த பொருட்களை கொள்ளை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
இதை கேள்விப்பட்ட மாலிக் ஷா இந்த அசாசின்ஸ் கொள்ளைக் கூட்டத்தை முற்றிலமா அழிக்க உத்தரவிட்டாரு. ஆனா அவரு அப்படி உத்தரவிட்ட அதே நாள் ராத்திரியே மர்மமான முறையில இறந்தும் போனாரு. இதுக்கு அப்புறம் இந்த அசாசின்ஸ் கூட்டத்தை பார்த்த மன்னர்களும், மக்களும் பெரிய அளவுல பயப்பட ஆரம்பிச்சாங்க. மாலிக் ஷா இறந்த பிறகு தன்னை பெர்சியாவின் மன்னனா அறிவிச்சுக்கிட்ட ஹசன், தொடர்ந்து 34 ஆண்டுகள் அந்த நாட்டை ஆட்சி செஞ்சாரு. இதுக்கு அப்புறம் ஹசன் வயது முதிர்ச்சியின் காரணமா தன்னுடைய 90 வது வயசுல இறந்தும் போனாரு. இதுக்கு அப்புறம் தலைமையை இழந்த அசாசின்ஸ் கூட்டம் ஏழு குழுக்களா பிரிஞ்சு மலேசியா, இந்தியா, ஈஸ்ட் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு போனாங்க.

அந்த மாதிரி இந்தியாவுக்குள்ள வந்த ஒரு கூட்டம்தான் தக்கீஸ். இவங்க இங்க வந்ததும் காளி வழிபாடு பலி கொடுக்கிறது அப்படின்னு இந்தியாவுக்கு தகுந்த மாதிரி அவங்களை மாத்திக்கிட்டாங்க. இந்த தக்கீஸ் இந்தியாவில் இருந்ததுக்கான முதல் ஆதாரம் 1353ல தான் கிடைச்சது. அதாவது வரலாற்று ஆய்வாளர் வின்ஸ்டன் ஸ்மித்தின் (Vincent smith) வரலாற்று குறிப்புகளின் படி 1356-ல டெல்லியை பிரோஷ்ஷா துக்லக் (Firoza tughlaq) அப்படிங்கிற முகலாய மன்னர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு. இவருடைய ஆட்சிக்காலத்துல சுமார் ஆயிரம் தக்கர்கள் கொலை மற்றும் கொள்ளை செஞ்சதுக்காக நாடு கடத்தப்பட்டாங்க. இதுதான் இந்தியாவில் தக்கர்கள் செயல்பட்டதற்கான முதல் சான்று. அதுக்கப்புறம் அக்பர் மற்றும் ஷாஜகான் ஆட்சி காலத்திலயும் இந்த தக்கர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கு.
தக்கர்களின் தோற்றம் குறித்து வின்ஸ்டன் ஸ்மித் இப்படி குறிப்பிட்டிருக்கிற நிலையில, 18 ஆம் நூற்றாண்டுல ஆங்கிலேயர்களிடம் பிடிப்பட்ட குலாம் அப்படிங்கிற ஒரு தக்கர், அலெக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து வந்த காலத்திலிருந்தே நாங்க செயல்பட்டுகிட்டு இருக்கோம் அப்படின்னு வாக்குமூலம் கொடுத்ததா சொல்லப்படுது. ஆக இதையெல்லாம் வச்சு பார்க்க பார்க்கும்போது தக்கர்களின் பூர்வீகம் இந்தியா இல்லை என்பதும், இவங்க நெடுநீண்ட காலமாவே செயல்பட்டுகிட்டு வந்தாங்க அப்படின்னும் நம்மளால புரிஞ்சுக்க முடியுது.
அதுமட்டுமின்றி இந்த தக்கர்கள் கொள்ளை அடிக்கிற விதமே ரொம்ப தனித்துவமா இருக்கும். இவங்க தங்களுடைய கிராமத்துல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தங்க குடும்பத்தோட அமைதியா வாழ்வாங்க. மேலும் இவங்க தங்கியிருந்த கிராமங்கள் அப்படின்னு பார்த்தோம்னா உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருக்கிற சிண்டோஸ் அப்படிங்கிற கிராமம். மத்திய பிரதேசத்தின் ஜபால்பூர் மாவட்டத்தில் இருக்கிற மங்கா அப்படிங்கிற கிராமம். மேலும் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் இருக்கிற தூமா அப்படிங்கிற கிராமம் போன்ற கிராமங்கள்லதான் அதிகப்படியான தக்கர்கள் அவங்க குடும்பத்தோட வாழ்ந்து வந்தாங்க. இப்படி குடும்பத்தோடு வாழ்ந்துகிட்டு இருக்கும்போது இவங்க கையில இருக்கிற பணமெல்லாம் தீர்ந்த பிறகு தன்னை போலவே இருக்கிற சக தக்கர்களுக்கு செய்தி அனுப்புவாங்க.
பிறகு எல்லா தக்கர்களும் ஒன்னு சேர்ந்து பேசி முடிவெடுத்து தங்களுடைய குலதெய்வமான காளியை வணங்கிட்டு குறி கேட்டு சகுனம் பார்ப்பாங்க. சரியான சகுனம் கிடைச்சாதான் இவங்க கொள்ளை அடிக்கவே கிளம்புவாங்க. அப்படி கிளம்பும் போது கிட்டத்தட்ட இந்த அணியில குறைஞ்சது 50 லிருந்து 100 தக்கர்கள் இருப்பாங்க. அதாவது இவங்க ஒரு கூட்டத்துல கொள்ளையடிக்க போறாங்க அப்படின்னா, அந்த கூட்டத்துல இருக்கிறவங்களை விட இந்த தக்கர்களுடைய எண்ணிக்கை அதிகமா இருக்கும். அதே மாதிரி இவங்க மாலை நேரத்துல கொள்ளையடிக்கிறதை தான் தங்களுடைய வழக்கமா வச்சிருந்தாங்க. அதுமட்டுமின்றி சமையல்காரர்கள், பாடகர்கள், ஒற்றர்கள் என இப்படி பெரிய கூட்டமாகத்தான் தக்கர்கள் கொள்ளையடிக்க கிளம்புவாங்க.

இவங்க பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், யாத்திரை செல்பவர்கள் போன்றவர்களை தான் குறி வைப்பாங்க. இவங்க தங்களை ஒரு சிப்பாய் போல மாத்திக்கிட்டு இவங்களுடைய நடை, உடை, பாவனை போன்ற எல்லாத்தையும் மிகவும் மதிப்புக்குரிய மனிதர்களைப் போல மாத்திப்பாங்க. அன்றைய காலகட்டத்தில் இருந்த பாதுகாப்பற்ற ஆழ்நடமாட்டமே இல்லாத இந்திய சாலைகள் தக்கர்கள் கொள்ளையடிப்பதற்கு மிகவும் சாதகமாக அமைஞ்சது. கூட்டமா பயணிக்கிற தக்கர்கள் அவங்க கொள்ளையடிக்க திட்டமிட்டு இருக்கிற நகரத்துக்கு வெளியில ஒரு கூடாரம் அமைச்சு தங்குவாங்க. அதுல அஞ்சு பேர் மட்டும்தான் நகரத்துக்குள்ள உளவு பார்க்க போவாங்க. அதுமட்டுமின்றி உள்ளே வரக்கூடிய தக்கர்களுக்கு நகரத்துக்குள்ள அவங்களுக்கு உளவு சொல்ல வேறு சில தாக்கங்களும் இருப்பாங்க.
அவங்க சொல்ற பயணிகளை குறி வச்சு அவங்களோட போய் பழகுவாங்க. ஆடல், பாடல் அப்படின்னு அவங்களை சந்தோஷப்படுத்தி சரியான நேரம் வந்ததும், அந்த தக்கர்கள் கூட்டத்தின் தலைவன் தம்போக்கா லாவ் அதாவது புகையிலேயே எடுங்க அப்படின்னு சொன்ன மறுநொடியே, அவங்க கையில இருக்கிற மஞ்சள் நிற பட்டுத் துணியை வச்சு கழுத்தை இறுக்கி கொன்னுடுவாங்க. எந்தவிதமான கொடிய ஆயுதங்களும் இல்லாம வெறும் மஞ்சள் நிற பட்டுத் துணியை வச்சு இவங்க செய்யுற இந்த கொலையினாலதான் மத்த கொள்ளைக் கூட்டத்தை விடவும் இவங்க தனித்துவமா தெரிஞ்சாங்க. இப்படி கொல்லப்பட்ட அனைத்து பயணிகளையும் அவங்க ஏற்கனவே தோண்டி வச்சிருந்த குழியில போட்டு புதைச்சிருவாங்க. பொதுவா தக்கர்கள் கொலை செய்வதை ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ நினைக்க மாட்டாங்க.
ஏன்னா கொலை செய்யறது காளிக்கு செய்யற காணிக்கை அப்படின்னு அவங்க நம்பினாங்க. இவங்க செய்யற கொள்ளை சம்பவங்கள் எல்லாம் இவங்களுடைய சொந்த கிராமத்திலிருந்து ரொம்ப தொலைவுலதான் செய்வாங்க. குறிப்பா இவங்க ஒரு தக்கர்கள் அப்படின்னு இவங்க குடும்பத்துக்கே தெரியாது. தக்கர்கள் பெண்கள் கிட்ட கொள்ளை அடிக்கிறதோ, இல்ல அவங்ககிட்ட தவறா நடந்துக்கிறதோ கிடையாது. ஏன்னா தக்கர்கள் பெண்களை காளியுடைய அம்சமா நம்பினாங்க. மேலும் இவங்க குழந்தைகளையும் கொல்றது கிடையாது. பெண் குழந்தையா இருந்தா அந்த பெண் குழந்தையை மிகவும் மதிப்போடும், மரியாதையோடும் வளர்த்து அவங்களையே திருமணமும் செஞ்சுக்குவாங்க. அதுவே ஆண் குழந்தையா இருந்தா அவங்க பரம்பரை தொழிலான கொள்ளை அடிக்கிறதையே அவங்களுக்கும் கத்துக்கொடுத்து, அவங்களையும் ஒரு தக்கியா மாத்திருவாங்க.
இது மட்டுமல்ல இவங்க குஷ்ட வியாதி வந்தவங்க, இசைக்கலைஞர்கள், மாற்றுத் திறநாளிகள் போன்றவர்களை எல்லாம் கொலை செய்ய மாட்டாங்க. என்னதான் இவங்க ஒரு கொடூரமான கொள்ளை கும்பலா இருந்தாலும், இந்த மாதிரியான சில கொள்கைகளையும் கடைபிடிச்சுக்கிட்டு வந்தாங்க. இந்த தக்கர்கள் கொள்ளையடிப்பது யாருக்கும் தெரியக்கூடாது. மேலும் எந்த ஒரு சந்தேகமும் வரக்கூடாதுன்னு இவங்களுக்குன்னு ஒரு தனி மொழியையே உருவாக்கினாங்க. அதுக்கு பேர்தான் ரமோஷி. மேலும் ஒரு காட்டுக்குள்ள வணிகர் கூட்டம் வருதுன்னு தெரிஞ்சா அந்த செய்தியை தக்கர்கள் சக தக்கர்களுக்கு குள்ளநரியை போல சத்தம் எழுப்பி தெரிவுபடுத்துவாங்க. மேலும் இவங்க கொள்ளை அடிச்சு முடிஞ்ச பிறகு காளியை வணங்கிட்டு எல்லோரும் சேர்ந்து சாப்பிடுறத ஒரு வழக்கமா வச்சிருந்தாங்க. இந்த தக்கர்கள் ஒரு பயங்கரமான கொள்ளைக் கூட்டமா இருந்தாலும், அப்ப இருந்த மன்னர்கள் இவங்களை முழுமையா ஒழிக்க முன்வரல.

பொதுவா தக்கர்களை காளியுடைய பிள்ளைகளாகவும், வழி தோன்றல்களாகவும் தான் அன்றைய காலகட்டத்துல எல்லோரும் பார்த்தாங்க. அதனால அவங்களை கொன்னா காளியுடைய கோபத்துக்கு ஆளாயிடுவோம் அப்படின்னு மன்னர்களும், மக்களும் இவங்களை பெருசா கண்டுக்காம அமைதியா இருந்துட்டாங்க. இதனாலதான் தக்கர்கள் 600 வருடங்களா இந்தியாவுல எந்தவிதமான இடையூறும் இல்லாம சுதந்திரமா கொள்ளை செயல்கள்ல ஈடுபட்டுகிட்டு வந்தாங்க. இந்த நிலையிலதான் தக் பேரம் அப்படிங்கிறவரு தக்கர்களின் தலைவனாக ஆனாரு. இவரு தக்கர்களின் தலைவனான பிறகுதான் தக்கர்களின் அழிவு காலமும் ஆரம்பமானது. இவனைப் பத்தி சொல்லணும்னா.! இப்ப வரைக்கும் இவன்தான் உலகத்திலேயே அதிக கொலைகள் செஞ்ச சீரியல் கில்லர் அப்படின்னு இவனுடைய பெயர் கின்னஸ் புத்தகத்திலேயே இடம் பிடிச்சிருக்கு.
மொத்தம் 931 பேரை இவன் கொலை செஞ்சிருக்கான். இந்த தக்பேரம் மத்திய பிரதேசத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமமான ஜபால்பூர்ல 1765 ஆம் ஆண்டுதான் பிறந்தான். தன்னுடைய இளம் வயசுல மிகவும் சாதுவான குணமுடைய பையனா இருந்த தக்பேரம்க்கு சையத் அமீர் அலி அப்படிங்கிற தக்கி கூட நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு மெல்ல மெல்ல இவனும் அந்த தக்கர்கள் கூட்டத்தோடு சேர்ந்துகிட்டான். படிப்படியா அதிகமான கொள்ளைகளையும், கொலைகளையும் செஞ்சு மிகவும் குறுகிய காலத்திலேயே தக்கர்களின் தலைவனாகவும் ஆனான். 1790-ல இவனுக்குன்னு ஒரு தனி குழுவை அமைச்சுக்கிட்டான். ஆரம்பத்துல இந்த தக்பேரம் டாலி (Dolly) அப்படிங்கிற ஒரு ஆங்கிலேய விலைமாது உடைய உதவியோடு எல்லா கொள்ளை சம்பவங்களையும் செய்ய ஆரம்பிச்சான்.
இந்த டாலி ஒரு ஆங்கிலேய படைவீரரோட பொண்ணு. இவளை பார்க்க வர ஆண்கள் கிட்ட இருக்கிற பொருட்களை எல்லாம் தக்பேரம் கொள்ளையடிச்சான். 1800களுடைய ஆரம்பத்துல தக்பேரம் தலைமையிலான தக்கர் கும்பலின் அட்டகாசம் ரொம்பவே அதிகமாகி உச்சத்தை தொட்டது. அதன் காரணமாக ஊரில் நிறைய மக்களும் காணாம போனாங்க. அதுமட்டுமின்றி நிறைய எலும்புக்கூடுகளும் கிடைக்க ஆரம்பிச்சது. இதை பார்த்த அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் இந்த கேஸ பத்தி விசாரிக்க அஞ்சு டிடெக்டிவ்ஸ நியமனம் செஞ்சாரு. ஆனா அந்த அஞ்சு பேரையும் தக்பேரம் தலைமையிலான தக்கர் கும்பல் கொலை செஞ்சுட்டாங்க. அதன் பிறகு இந்த விஷயத்தோட சீரியஸ்னஸ் புரிஞ்சுகிட்ட பிரிட்டிஷ் கவர்மெண்ட் 1809ல வில்லியம் ஹென்ரி ஸ்லீமேன் (William Henry sleeman) அப்படிங்கிற ஆங்கிலேய அதிகாரியை இந்தியாவுக்கு வர வச்சாங்க.
ஆரம்பத்துல இந்த கும்பலை பிடிக்கிறதுக்கு நிறைய சிக்கல்களை வில்லியம் ஹென்ரி ஸ்லீமேன் சந்திச்சாரு. பலமுறை இவரை கொலை செய்றதுக்கு தக்கர்கள் முயற்சி செஞ்சிருக்காங்க. அது எல்லாத்துலயும் இருந்து நூல் இலையில உயிர் தப்பினாரு வில்லியம் ஸ்லீமன். எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கனகச்சிதமா திட்டம் போட்டு தக்கர்கள் குரூப்பை சேர்ந்தவங்க ஒவ்வொருத்தரா கைது செய்ய ஆரம்பிச்சாரு. இப்படி கைது செய்யப்பட்ட பலபேர் அப்ரூவராகவும் மாறினாங்க. அப்படி அப்ரூவர் ஆனவங்களில் ஒருத்தர்தான் ரம்ஜான் அப்படிங்கிற தக்கி. இவர் சொன்ன க்ளூவ வச்சு 11 வருட போராட்டத்துக்கு பிறகு 1839ல தக்பேரமை அவனுடைய 75 வது வயசுல வில்லியம் ஹென்ட்ரி ஸ்லீமேன் கைது செஞ்சாரு. அப்படி அவனை விசாரணை செய்யும்போதுதான் அவன் 931 கொலைகள் செஞ்சது தெரிய வந்தது.

மேலும் பல விசாரணைகளை தொடர்ந்து இந்த தக்பேரம் மூலமா பல பயனுள்ள தகவல்களை சேகரிச்சு சுமார் 1400 தக்கர்களை கைது செஞ்சாங்க. பிறகு தக்பேரனுடன் சேர்ந்து அந்த 1400 தக்கர்களையும் தூக்குல போடப்பட்டாங்க. இதன் பிறகு தக்கர்களே இருக்கக்கூடாதுன்னு 1866-ல தக்கி அண்ட் டைகாட்டி சப்ரேஷன் ஆக்ட் (Thuggees and dacoty suppersion act) அப்படிங்கிற சட்டத்தை கொண்டு வந்து தக்கர்களை முற்றிலுமா ஒழிச்சாங்க. இதுக்கு அப்புறம் வில்லியம் ஸ்லீமேன் தக்கர்கள் முற்றிலுமா அழிக்கப்பட்டாங்க அப்படின்னு இங்கிலாந்துக்கு கடிதம் அனுப்பி வச்சாரு. என்னதான் தக்கர்கள் முழுமையா ஒழிக்கப்பட்டாலும் இன்றைக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்ல மரபணு மாறிய தோற்றத்துல தக்கர்களோட தைரியத்தோடும், துணிச்சலோடும் இளைஞர்கள் இருக்காங்க அப்படின்னு 1884ல முல்லை பெரியார் அணை கட்டுமான பணிக்காக மேஜர் ஜான் பென்னி குயிக் (Major John Pennycuick) தன்னுடைய குறிப்புகளில் சொல்லி இருந்தாரு.
இந்த மோசமான தக்கர்கள் கூட்டத்தை பத்தி இன்னும் விரிவா நிறைய ஆராய்ச்சிகளை செஞ்சு வில்லியம் ஸ்லீமேன் நாலு புத்தகங்களை எழுதி இருந்தாரு. அது என்னன்னா.? ராமசேனா ஆர் எ வொக்காபுலரி ஆப் தி பெக்குலியர் லாங்குவேஜ் யூஸ்டு பை தி தக்ஸ் (Ramaseena or a vocabulary of the peculiar language used by the thugs), இரண்டாவதா தி தக்ஸ் ஆப் பான் சிகர்ஸ் ஆப் இந்தியா (The Thugs or phansigars of India), மூணாவதா ரிப்போர்ட் ஆன் தி டெப்ரேட் கமிட்டட் பை தி தக் கேங்ஸ் ஆப் அப்பர் அண்ட் சென்ட்ரல் இந்தியா (Report on the depredations committed by the Thuggees gangs of upper and central India), நாலாவதா அன் அக்கவுண்ட் ஆப் தி ஆர்ஜின் ப்ரொசீடிங்ஸ் அண்ட் ரிசல்ட்ஸ் ஆப் தி தக் போலீஸ் (An account of the origin proceedings and research of the Thug police), போன்ற புத்தகங்களை வில்லியம் ஸ்லீமன் எழுதியிருந்தாரு.
மேலும் ஆங்கிலேய அதிகாரியும், நாவல் ஆசிரியருமான பிலிப் மெடோஸ் டெய்லர் (Philip meadows taylor) கன்பஷன்ஸ் ஆப் தி தக் (Confessions of a thug) அப்படிங்கிற புத்தகத்தையும் எழுதி இருக்காரு. இந்த புத்தகம் தான் வழிப்பறி கொள்ளையின் ஒப்புதல் வாக்குமூலம் அப்படின்னு தமிழ்ல மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மேலும் ஆர் வரதராஜன் என்பவரும் தக்கர்களைப் பத்தி தக்கர் கொள்ளையர்கள் அப்படிங்கிற புத்தகத்தை எழுதி இருக்காரு. சோ கைஸ் இனி சோசியல் மீடியால (Social media) தக் லைஃப் அப்படின்ற வார்த்தையை நீங்க பார்த்தீங்கன்னா அதோட வரலாறு என்னன்னு இனி உங்களுக்கு புரியும்.

அவ்ளோ தான் நண்பர்களே இன்னைக்கான பதிவு இதோட முடிஞ்சிருச்சு இன்னைக்கு வீடியோ அவ்வளவுதான், தக் லைஃப் அதாவது இந்த தக்கர்களின் வாழ்க்கை வரலாறை பற்றி உங்க கருத்து என்ன.? உங்க பதிலை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க..! நீங்க ஃபேஸ்புக் முல்லா இந்த பதிவ படிக்கிறீங்கனா, இந்த பதிவு பிடிச்சிருந்தா மறக்காமல் நம்ம ஃபேஸ்புக் பதிவுக்கு மறக்காம லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
நீங்கள் நேரடியாக நமது வலைதளத்தை பார்வையிட வந்திருந்தால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அது மட்டும் இன்றி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இந்த பதிவை முழுமையாக படித்திருக்கிறீர்கள் என்றால், பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டு புரிந்து கொள்கிறேன். நிச்சயம் இதுபோல பல சுவாரஸ்யம் நிறைந்த பதிவுகளை உங்களுக்காக தினந்தோறும் நமது வலைதளத்தில் நான் எழுதிக் கொண்டே இருப்பேன். நமது வலைதளத்தின் உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்கு கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேனலில் மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள்.

மேலும் பேஸ்புக் மூலமாக நமது பதிவுகளை படிக்க வந்திருக்கும் நண்பர்களே நீங்களும் மறக்காமல் நமது சேனலில் இணைந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சுவாரசியம் நிறைந்த பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝
உங்களுக்கு நேரமிருந்தால் இந்த பதிவையும் படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பயன் தரும் பதிவுகளாக மட்டுமே இருக்கும்…👇
நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
