12 மணியின் மர்மம்: ஹவுரா பிரிட்ஜின் அடையாளமும் ஆபத்துக்களும்

12 மணியின் மர்மம் ஹவுரா பிரிட்ஜின் அடையாளமும் ஆபத்துக்களும்

ஹலோ நண்பர்களே இந்தியாவில் இருக்கிற நாலு பெரு நகரங்கள்ல கல்கத்தாவும் ஒன்னு. நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு முன்னாடி வரைக்கும் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்தமான நகரமாகவும், 1911 வரைக்கும் ஆங்கிலேய ஆட்சியின் தலைநகரமாகவும் இந்த கல்கத்தாதான் இருந்து வந்தது. கல்கத்தாவின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தாலேயே இது மத்த நகரங்களை விடவும் சற்று வேறுபட்டு இருக்கும்.

இந்த கல்கத்தா நகரத்தை பத்தி நினைச்சாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது ஹவ்ரா பிரிட்ஜ் தான். சென்னை நகரத்துக்கு சென்ட்ரல் ரயில் நிலையம், மும்பைக்கு கேட்வே ஆஃப் இந்தியா மாதிரி கல்கத்தா நகரத்துக்கு ஹவுரா பிரிட்ஜ் ஒரு அடையாள சின்னமாக இருந்துகிட்டு வருது.

இப்படிப்பட்ட இந்த ஹவுரா பிரிட்ஜ் பத்தி நம்ம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனா குறிப்பா மதியம் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் இந்த ஹவுரா பிரிட்ஜ் மூடப்பட்டு அந்த நேரத்துல எந்த வாகனங்களும் இந்த பாலத்துக்கு உள்ள போறதுக்கு தடை விதிக்கப்பட்டிருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..?

இதை சுத்தி உள்ள மர்மம் என்ன..? அப்படி ஹவுரா பிரிட்ஜின் வரலாறு தான் என்ன..? வாங்க இன்னைக்கான பதிவுல இதை பத்தி விரிவா பார்ப்போம். இந்த பதிவு ஹவுரா பிரிட்ஜ் பத்தி பல விஷயங்களை சொல்லப்போகுது சோ இதை மறக்காம உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க.

Join Telegram

புது நண்பர்கள் நம்ம telegram சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா உடனே சப்ஸ்கிரைப் பண்ணி உங்களோட ஆதரவை தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருப்பிங்கன்னு நம்புறேன். டெலிகிராமில் இணைந்து கொள்வதற்கு விரும்பினால் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் இல் டெலிகிராம் இருக்கும், அதை கிளிக் செய்து ஜாயின் செய்து கொள்ளுங்கள். நான் உங்கள் காவியா, வாங்க நம்ம இன்னைக்கான பதிவுக்குள்ள போவோம்.

எதற்காக கட்டப்பட்டது..?

அவுரா பிரிட்ஜ் ஏன் மதியம் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் மூடப்பட்டு வருதுன்னு பார்க்கிறதுக்கு முன்னாடி, இந்த பிரிட்ஜ் எதுக்காக ஃபர்ஸ்ட் கட்டப்பட்டதுன்னு பார்ப்போம். 1800களின் பிற்பகுதியில கல்கத்தா மற்றும் ஹவ்ரா நகரங்களுக்கு இடையில ஹுக்லிங்கிற நதி இருந்தது. இந்த நதிக்கு மேல எந்த ஒரு பாலமும் அப்போ கிடையாது.

வெறும் படகு மூலமா மட்டும்தான் அந்த நதியை கடந்து போக முடியும். இதனால இந்த ஆற்றை எளிதா கடந்து போறதுக்காக அப்போ இந்தியாவை ஆட்சி செஞ்சுகிட்டு இருந்த ஆங்கிலேயர்கள், 1871 ஆம் ஆண்டு இந்த ஹூக்லி நதிக்கு நடுவுல ஒரு பாலத்தை கட்டலாம்னு முடிவு செஞ்சாங்க.

1882-ல பிரிட்டிஷ் சிவில் இன்ஜினியரான சர் பிராட்போர்ட் டெஸ்லிங்கிறவர் முதன்முதலா ஒரு பாலத்தை கட்ட ஆரம்பிச்சாரு அன்றைய காலகட்டத்துல சுமார் 22 லட்சம் செலவு பண்ணி ஒரு சாதாரண பாலமாதான் இது ஆரம்பத்துல கட்டப்பட்டு 1887-ல திறக்கப்பட்டது. இதனுடைய நீளம் 1528 அடியாகவும், அகலம் 62 அடியாகவும் இருந்தது. மேலும் இந்த பாலத்துக்கு ஜூப்லி பிரிட்ஜ்னு பெயரும் வச்சாங்க.

See also  அமேசான் காடுகளில் மறைந்திருக்கும் மர்மங்கள் பகுதி 2

அதுக்கப்புறம் 1905 ஆம் ஆண்டு ஹவுரா ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. இதனால மக்களின் பயணம் மிகவும் அதிகம் இருந்ததுனால, இந்த ஜூப்லி பிரிட்ஜுக்கு பதிலா அந்த இடத்துல ஒரு மிதக்கும் பாலத்தை கட்ட ஆங்கிலேயர்கள் முடிவு செஞ்சாங்க ஆனா அந்த காலகட்டத்துல முதலாம் உலகப்போர் நடந்துகிட்டு இருந்தது இதனால இந்த வேலையை அவங்களால தொடங்க முடியல.

எதிரி என்பதால் டாடாவிடம் வந்தது

ஒரு வழியா போர் முடிஞ்சதுக்கு அப்புறம் 1922-ல நியூ ஹவுரா பிரிட்ஜ் கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த கமிட்டி ஹவுரா பிரிட்ஜ் கட்டுவதற்கான டெண்டரை அறிவிச்சாங்க., அப்ப ஒரு ஜெர்மன் கம்பெனி மிகவும் குறைவான செலவுல நாங்க அதை கட்டித்தரோம் அப்படின்னு முன்வந்தாங்க. ஆனா அந்த காலகட்டத்துல பிரிட்டிஷும் ஜெர்மனியும் எதிரிகளா இருந்தாங்க. அதனால அந்த டெண்டரை ஜெர்மனி கம்பெனிக்கு கொடுக்கிறதை அவுரா பிரிட்ஜ் கமிட்டி மறுத்துட்டாங்க. அதன் பிறகு இந்த டெண்டர் இந்தியன் பப்ளிக் செக்டார் கம்பெனியான பிரைத் வெயிட் பர்ன் அண்ட் ஜெசாப் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு தரப்பட்டது.

இதன் பிறகு கல்கத்தாவின் துறைமுக கமிஷனர்களே கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டாங்க. இந்த பாலத்தை முழுசா கட்டி முடிக்கிறதுக்கு கிட்டத்தட்ட 26500 டன் ஸ்டீல் தேவைப்பட்டது. அந்த காலகட்டத்துல இந்த அளவுக்கு அதிகமான ஸ்டீல் உற்பத்தி செய்றது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அந்த காலகட்டத்துல நம்ம நாட்டுல மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரா இருந்தது டாட்டா ஸ்டீல் மட்டும்தான். அவங்ககிட்ட தான் இந்த பாலம் கட்டுறதுக்கு தேவையான ஸ்டீல் உற்பத்தி செய்யற டெண்டர் கொடுக்கப்பட்டது.

டாடா மற்றும் இதர கம்பெனியின் பயன்பாடுகள்

அவங்களும் சுமார் 23500 டன் ஸ்டீலை உற்பத்தி செஞ்சு கொடுத்தாங்க, மீதி உள்ள ஸ்டீலை மத்த சின்ன சின்ன நிறுவனங்கள் தயாரிச்சு கொடுத்தாங்க. தேவையான ஸ்டீல் எல்லாம் தயாரிச்சு முடிச்சதுக்கு அப்புறம் ஹவுரா பிரிட்ஜ் உடைய மொத்த டிசைனையும் தயார் செஞ்சாங்க. ஆங்கிலேயர்கள் ஒரு விஷயத்துல மட்டும் ரொம்பவும் தெளிவா இருந்தாங்க, அது என்ன அப்படின்னா பிரிட்ஜ் எந்த டிசைன்ல வேணும்னாலும் இருக்கலாம் ஆனா அந்த பிரிட்ஜுக்கு நடுவுல ஒரு தூண் கூட இருக்கக்கூடாது, அப்பதான் எந்த தடையும் இல்லாம போக்குவரத்து நடக்கும் அப்படின்னு ஆங்கிலேயர்கள் நம்பினாங்க.

அதாவது இந்த பிரிட்ஜ்ல ரெண்டு மூளைகள்ல மட்டும்தான் தூண்கள் இருக்கும், நடுவுல எந்த தூண்களும் இருக்காது. இந்த பிரிட்ஜின் மொத்த எடையையும் இந்த பிரிட்ஜின் இரு முனைகள்ல இருக்கிற தூண்கள்தான் தாங்கி நிக்கும். இந்த ஹவுரா பிரிட்ஜ் உடைய நீளம் 2313 அடியும், அகலம் 71 அடியும் உயரம் 269 அடியும் இருந்தது. மேலும் ஒரு தூண்ல இருந்து இன்னொரு தூணுக்கு இடைப்பட்ட தூரம் 1500 அடியாக இருந்தது. இந்த ஹவுரா பிரிட்ஜ் ஒரு விசித்திரமான பிரிட்ஜ் அப்படின்னுதான் சொல்லணும்.

See also  அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு

ஏன்னா..? ஹவுரா பிரிட்ஜ் கட்டும்போது பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் பிளேட்ஸ இணைக்கிறதுக்கு நட்டு மற்றும் போல்ட் பயன்படுத்தாம ரிவிட்டை பயன்படுத்தினாங்க. அந்த ரிவிட் ஒரு மெட்டல் பின் மாதிரி இருக்கும். இப்படி 1936-ல கட்டத்தொடங்கிய ஹவ்ரா பிரிட்ஜ் 1942 தான் முழுமையா கட்டி முடிக்கப்பட்டது. இதுக்கு நியூ ஹவுரா பிரிட்ஜ்னும் பெயர் வச்சு 1943 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலத்துக்கு ரவீந்திர சேது என்கிற இன்னொரு பெயரும் இருக்கு.

இந்த பெயர் சிறந்த பெங்காலிய கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்தமா ஜூன் 14 1965 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. ஆனா பொதுவா எல்லாருக்கும் இது ஹவ்ரா பிரிட்ஜ்ன்னு சொன்னாதான் தெரியும். இன்னைக்கு இந்த பிரிட்ஜை ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் வாகனங்களும், ஒன்றரை லட்சம் மக்களும் பயன்படுத்துறாங்க. இதுல வேடிக்கையான விஷயம் என்னன்னா உலகின் ஆறாவது மிக நீளமான கேண்டிலிவர் பிரிட்ஜ்ன்னு சொல்லப்படுற இந்த ஹவுரா பிரிட்ஜுக்கு இன்னைக்கு வரைக்கும் இனாகரேஷன் ஃபங்க்ஷன் பண்ணதே இல்லைன்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா…!

அழிக்க நினைத்த ஜப்பான்

அதுக்கு காரணம் பாலம் கட்டி முடிக்கிற சமயத்துல அதாவது 1942ல இரண்டாம் உலகப்போர் நடந்துகிட்டு இருந்தது. உலகமே துன்பத்துல இருக்கும்போது நம்ம மட்டும் இனாகரேஷன் செலிப்ரேட் செஞ்சா நல்லா இருக்காதுன்னு இதுக்கு இனாகரேஷன் ஃபங்க்ஷன் செய்யவே இல்லைன்னு சொல்லப்படுது. அதே சமயம் இரண்டாம் உலக போர் காலகட்டத்துல ஜப்பான் இந்த பிரிட்ஜை அழிக்கிறதுக்கு ரொம்ப முயற்சி செஞ்சாங்களாம். ஆனா அவங்களுடைய முயற்சி எல்லாமே தோல்வியிலதான் முடிஞ்சது..!

12 மணியின் மர்மம்: ஹவுரா பிரிட்ஜின் அடையாளமும் ஆபத்துக்களும்

12 மணி மர்மம்

சரி இப்போ இந்த ஹவுரா பிரிட்ஜ் ஏன் மதியம் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் மூடப்படுதுன்னு சொல்றேன் கேளுங்க. இதுக்கு காரணம் இந்த பிரிட்ஜை கட்டின இன்ஜினியர்ஸ் என்ன சொல்றாங்கன்னா, எதிர்காலத்துல ஒருவேளை இந்த பிரிட்ஜ் இடிஞ்சு போச்சுன்னா அது சரியா 12 மணிக்கு தான் இடிஞ்சு போகும்னு சொல்லி இருக்காங்க ஆனா அது மதியமா ராத்திரியான்னு அவங்க சொல்லல அதனாலதான் இந்த ரெண்டு சமயத்துல மட்டும் அவுரா பிரிட்ஜ் மூடப்படுது.

இது வெறும் கட்டுக்கதையா இல்ல உண்மையா அப்படிங்கிற விஷயத்தை யாராலயும் சரியா சொல்ல முடியல, ஆனா இப்ப வரைக்கும் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருது. அதே மாதிரி இந்த பிரிட்ஜை பத்தி இன்னொரு கதையும் சொல்லப்பட்டு வருது அதாவது இந்த பிரிட்ஜுக்கு ஒரு சாவி இருக்கிறதாகவும் அந்த சாவியை இதுவரைக்கும் பிரிட்டிஷ் இந்தியா கிட்ட கொடுக்கல அப்படின்னும் சொல்றாங்க.

இன்னும் நிறைய மக்கள் என்ன சொல்றாங்கன்னா அவுரா பிரிட்ஜ் உடைய ஒரு முக்கியமான சாவியே அந்த சாவிதான் அப்படின்னும், அவுரா பிரிட்ஜை கப்பல் போக்குவரத்துக்காக திறக்குறதுக்காக பயன்படுற சாவியும் அந்த சாவிதான் அப்படின்னும் சொல்றாங்க. ஆனா இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்ட உண்மை அப்படின்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல. இன்னைக்கு இந்த ஹவுரா பிரிட்ஜ் கொஞ்சம் கொஞ்சமா துருப்பிடிச்சு சேதமடையறதாக இன்ஜினியர் சொல்றாங்க.

See also  2025-ல இது மட்டும் நடந்தால் அடுத்த உலக அழிவு நிச்சயம்

ஒருநிமிடம் நண்பர்களே, இந்த இடத்தில் பகல் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் சிறிது நிமிடங்கள் மூடி வைப்பதாக கூறி இன்டர்நெட்டிலும், ஆன்லைனிலும் பல வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். அது அனைத்தும் பொய்யானவை என்று உங்களுக்கு விளக்குவதற்காகவே இந்த ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு பணி புரிந்தவர்களையும் மேலும் அங்கு வாழ்ந்த தமிழர்களிடம் கேட்டும், அதை கன்பார்ம் செய்த பிறகு தான் இந்த பதிவை நாங்கள் வெளியிட்டுள்ளோம். எனவே இன்டர்நெட்டில் வெளியான பதிவுகளையும் போலியான வீடியோக்களையும் பார்த்து ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் பான் பராக்கு வடக்கன்ஸ்

அதுக்கான சில காரணத்தையும் அவங்க சொல்றாங்க பறவைகளுடைய கழிவுகள்ல யூரிக் ஆசிட் இருக்கிறதுனால அது இந்த பிரிட்ஜின் ஸ்டீல் மேல படும்போது அந்த ஸ்டீல்ல துரு பிடிக்கிறதாக சொல்றாங்க. இந்த ஹவுரா பிரிட்ஜ்ல ஒவ்வொரு வருடமும் பறவைகளால சேதமடைஞ்ச பாகங்களை சரி செய்றதுக்காக அந்த அரசாங்கம் கிட்டத்தட்ட அஞ்சு லட்சம் ரூபாய் செலவு செய்றாங்க.

அதேபோல இந்த ஹவுரா பிரிட்ஜ்ல ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் நடந்து போறாங்க, அதுல நிறைய பேர் புகை இலையையும், பான் பராக்குகளையும் மென்னு அந்த பிரிட்ஜ்லயே துப்பிட்டு போறாங்க. இப்படியே வருஷக்கணக்கா நடக்கும்போது அந்த பிரிட்ஜ் உடைய ஸ்டீல்ல எச்சில் பட்டு துரு பிடிக்கிறதாக சொல்றாங்க. பொதுமக்கள் பண்ற ஒரு சின்ன தவறுனால 81 வருடங்களுக்கும் மேலாகியும் கம்பீரமாக இருக்கும் இந்த ஹவுரா பிரிட்ஜ் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வருது.

2005 ஆம் ஆண்டு எம்வி மணி அப்படிங்கிற ஒரு மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த பிரிட்ஜுக்கு அடியில போயிட்டு இருக்கும்போது அந்த கப்பல் பிரிட்ஜுக்கு அடியில மாட்டிக்கிச்சு இதனால ஹவ்ரா பிரிட்ஜுக்கு மிகப்பெரிய அளவுல சேதம் ஏற்பட்டது. மேலும் இந்த மொத்த ஹவ்ரா பிரிட்ஜுக்கும் பெயிண்ட் அடிக்கவே மொத்தம் 26,500 லிட்டர் பெயிண்ட் தேவைப்படுது. அதுக்கு மொத்தமா 65 லட்சம் செலவாகும் அப்படின்னும் சொல்லப்படுது.

2005 ஆம் ஆண்டு இந்த பிரிட்ஜ்ல சில சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டது, அப்போ சுமார் எட்டு டன் ஸ்டீல் பயன்படுத்தினாங்க. அதுக்கு மொத்தமா 50 லட்சம் செலவு ஆனது. இன்று ஹவ்ரா பிரிட்ஜ் கல்கத்தாவுக்கு மட்டுமில்ல இந்தியாவுக்கே ஒரு மிகச் சிறந்த அடையாளமா இருந்துகிட்டு வருது. இதை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு மட்டுமில்ல அந்த பிரிட்ஜை அன்றாட வாழ்க்கையில பயன்படுத்தும் மக்கள் கிட்டயும் தான் இருக்கு.

ஓகே இன்னைக்காண பதிவு அவ்வளவுதான் அவுரா பிரிட்ஜ் ஏன் தினமும் 12 மணிக்கு மூடப்படுதுங்கிறதுக்கு வேற என்ன காரணம் இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க. உங்க பதிலை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா பேஸ்புக்ல லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. மீண்டும் ஒரு இன்ட்ரஸ்டிங்கான பதிவுல சந்திப்போம், அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா…📝

மறக்காம நம்ம telegram சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி உங்க ஆதரவு கொடுங்க… மிக்க நன்றி மக்களே உங்கள் ஆதரவை தேடி…🙏🙏🙏

டெலிகிராமில் இணைய விரும்பும் நண்பர்கள் கீழே இருக்கும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து அதில் இருக்கும் டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்…

More on this topic

Comments

  1. இந்த தகவல் நல்ல ஹவ்ரா பாலத்தை பற்றி முழு தகவல் தந்தமைக்கு நன்றி
    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் இது போன்ற இடங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்

  2. நானும் போய் இருக்கேன் அப்படி சொல்லல எங்க கிட்ட.. இங்கு வேலைசெய்யும் செக்கிரிட்டி மற்றும் போலிஸ் 12மணிநேரம் சிப்ட் சேஞ்ச் பண்ராங்க.அப்போ பத்து நிமிடம் மூடி திரப்பாங்க.அதான்..ஆறுமாதம் இருந்தேன் அங்க

  3. நான் இந்த இடத்திற்கு போய் பார்த்திருக்கிறேன். அற்புதமான இடம் பழைய ஞாபகங்கள் கண் முன் வந்து செல்லும். இங்கே பல சாதாரண நிகழ்வுகளை இப்போதும் காணலாம். எ. கா. கை ரிக்க்ஷா. மண் குவளை தேனீர்.

    • எனது பதிவின் மூலம் உங்களுக்கு ஒரு நிமிடம் பழைய நினைவுகள் வந்து சென்றதா..! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது…🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏