தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்.! ஆம் நண்பர்களே, தாடி இல்ல, மீசை இல்ல அப்படின்னு சொல்லி உங்கள கேவல கேவலமா கலாச்சாங்களா.? கேவலம் கேவலமா பேசினார்களா.? எல்லாத்தையும் தூக்கி குப்பையில் போடுங்க. இந்த பதிவு உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டாக்கும் மேலும் சில பல விஷயங்களையும் உங்களுக்கு தெரியப்படுத்தும். அது வளருமா.?வளராதா.? வாங்க இந்த பதிவ முழுசா படிச்சிட்டு என்னாங்கிறத தெரிஞ்சிட்டு போங்க.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

இந்த பதிவ படிக்கிறதுக்கு முன்னாடி உங்க முகத்துல மீசை, தாடி இல்லாம இருந்திருக்கலாம். ஆனா இந்த பதிவை படிச்சதுக்கு அப்புறம் உங்க முகத்துலயும் மீசை, தாடி ஒரு காடு மாதிரி வளர்ந்து நிக்க போகுது. ஆமா நண்பர்களே..! இந்த பதிவு ஆண்களுக்கானது தான். முன்னாடி காலத்துல எல்லாம் அதாவது நம்ம முன்னோர்கள் காலத்துல பார்த்தீங்கன்னா மீசை, தாடி இல்லாத ஆண்களே இல்லன்னுதான் சொல்லனும். அதுமட்டுமில்லாம அவங்களுக்கு நெஞ்சு பூராமே கூட முடியாதான் இருந்திருக்கும். ஆனா இப்ப இருக்குற ஜெனரேஷன்ல பல ஆண்களுக்கு தாடியே சரியா வளர்றது இல்ல. சிலருக்கு திட்டு திட்டா அங்கங்க கொஞ்சம், கொஞ்சமாக இருக்கும்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

சிலருக்கு அது கூட இல்லாம இருக்குது. இதுக்கு காரணம் என்ன தெரியுமா. அதுதான் டெஸ்டோஸ்டிரோன். இதை ஆண்களோட செக்ஸூவல் ஹார்மோன்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தைகளை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. டெஸ்டோஸ்டிரோன், செக்ஸ் ஹார்மோன் அண்ட் பியர்ட் க்ரோத் இது எல்லாமும் ஒண்ணுத்துக்கு ஒன்னு கனெக்சன் ஆனது. பியர்ட் க்ரோத் நல்லா இருந்தா டெஸ்டோஸ்டிரோன் கரெக்டா இருக்குதுன்னு அர்த்தம். அண்ட் செக்சுவல் லைஃப் நல்லா இருக்கணும்னா அப்போ உங்க டெஸ்டோஸ்டிரோன் கரெக்டா இருக்கணும்னு அர்த்தம். அதாவது ஒரு ஸ்டடில என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா.?

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

1970-ல வாழ்ந்த ஒரு 60 வயசு தாத்தாவோட உடம்புல எந்த அளவுக்கு டெஸ்டோஸ்டிரான் லெவல் இருந்துச்சோ அந்த அளவுக்கான டெஸ்டோஸ்டிரன் லெவல் தான் இன்னைக்கு இருக்கிற 20 டு 35 வயசு ஆண்கள் கிட்ட இருக்குதாம். இதனாலதான் நீங்களே பார்த்திருப்பீங்க, உங்க பிரண்டுக்கும் உங்க ஏஜ் தான் ஆகும். ஆனா அவனுக்கு பியர்ட் எல்லாம் வளர்ந்து பெரிய ஆம்பளை மாதிரி இருப்பான். ஆனா அதே வயசுல இருக்குற உங்களுக்கு பியர்டு இன்னும் வளர்ந்திருக்காது, மீசையும் அவ்வளவு ஸ்ட்ராங்கா விசிபிலா இருக்காது. இது ஏன்.? ஏன்னா, உங்க பிரண்டோட பாடில டெஸ்டோஸ்டிரன் அளவு அதிகமா இருந்திருக்கும். உங்க பாடில கம்மியா இருந்திருக்கும். நான் உங்கள்ட்ட ஓப்பனாவே சொல்லிடுறேன் உங்க தாத்தாக்கு பியர்ட் இல்ல.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
டெஸ்டோஸ்டிரோன் பற்றாக்குறையால் முடி உதிர்வதையும் நீங்கள் உணர முடியும்.

உங்க அப்பாவுக்கு இல்ல, உங்களுக்கும் இல்ல அப்போ இது பிரச்சனை இல்லை. ஆனா அதுவே உங்க அப்பாக்கு இருந்திருக்கு ஆனா உங்களுக்கு பியர்ட் இல்லை அப்படின்னா அப்ப உண்மையிலேயே நீங்க ஒரு மோசமான கண்டிஷன்லதான் இருக்கீங்க. பட் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. இன்னைக்கான பதிவுல டெஸ்டோஸ்டிரன் லோவா இருந்துச்சுன்னா அப்ப பாடில ஏற்படக்கூடிய சிம்டம்ஸ் எல்லாம் என்னன்னு சொல்ல போறேன். சோ டெஸ்டோஸ்டிரன் உங்களுக்கு லோவா இருக்கான்னு கண்டுபிடிச்சிடலாம். அண்ட் உங்க பியர்ட் குரோத்துக்காக உங்க வீட்டு கிச்சன்ல ஆல்ரெடி இருக்கக்கூடிய அஞ்சு நேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ் எல்லாம் என்ன.? அதை எப்படி எடுத்துக்கிட்டா டெஸ்டோஸ்டிரன் உங்க பாடில இன்கிரீஸ் ஆகி பியர்ட் க்ரோத் ஏற்படும்னு சொல்ல போறேன்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
கோபம், மன உளைச்சல் மேலும் பல டிப்ரஷன் ஆன மைண்ட் செட்டுகள் உருவாகும்

அண்ட் கடைசியா உங்க பியட் குரோத் ஆகாம இருக்க நீங்க என்னெல்லாம் மிஸ்டேக்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க.?அதை எப்படி சரி செஞ்சே ஆகணும்னு சொல்லப்போறேன். மொத்தத்துல இந்த பதிவு ஒரு பாயை (Boy) மெண்ணா (Men) மாத்த போகுது. அதாவது இன்னும் தெளிவா சொல்லணும்னா ஆண்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தி தரப்போகுது. ஆகவே ஆண்கள் இந்த பதிவ கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணாம படிச்சு பாருங்க.

டெஸ்டோஸ்டிரோன் இது ஒரு ஹெல்த்தியா இருக்குற ஆணோட உடம்புல 300 டு 1000 நானோகிராம் பர் டெசிலிட்டர் அளவு இருக்கணும். பட் அதுவே 300க்கும் கம்மியா இருந்தா அப்போ இது நல்லதுக்கே இல்ல. சரி உங்ககிட்ட கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். உங்க உடம்புல டெஸ்டோஸ்டிரோன் லெவல் 300க்கும் மேல இருக்கா.? இல்ல கம்மியா இருக்கா.?

இங்க பாருங்க நண்பர்களே ஒரு ஆணாக பொறந்த நீங்க இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இதுக்கு நீங்க உங்க ஊர்ல இருக்குற லேப்லயே டெஸ்ட் பண்ணி தெரிஞ்சுக்கலாம். அப்படி இல்லாட்டி டெஸ்டோஸ்டிரான் ஒருத்தர் உடம்புல கம்மியா இருந்துச்சுன்னா அது வெளிப்படுத்தக்கூடிய சில சிம்டம்ஸ் எல்லாம் இருக்கு, கிட்டத்தட்ட 10 அறிகுறிகள் நான் இப்ப சொல்றேன். அதெல்லாம் உங்களுக்கு இருக்கான்னு செக் பண்ணி பார்த்துக்கோங்க.

லோ செக்சுவல் டிரைவ்

உங்களோட செக்சுவல் லைஃப் பூஸ்ட் பண்றதுல இந்த டெஸ்டோஸ்டிரன் ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ணிட்டு இருக்குனே சொல்லியாகனும். அதனால உங்களுக்கு செக்சுவல் டிரைவ் குறையற மாதிரி ஃபீல் பண்றீங்கன்னா அப்போ டெஸ்டோஸ்டிரன் உங்க உடம்புல கம்மியா இருக்குதுன்னு அர்த்தம்.

பட் நீங்க கல்யாணம் ஆகாத பையனா இருந்தீங்கன்னா அப்போ என்ன சிம்டம்ஸ் வச்சு கண்டுபிடிக்கலாம்னா உங்களுக்கு எரக்ட்டைல் டிஸ்பங்க்ஷன் இருந்துச்சுன்னா, அதாவது சரியா மூடு ஆகலைன்னா அப்போ உங்க பாடில 300 லெவல்ல விட கம்மியான டெஸ்டோஸ்டிரோன் இருக்குதுன்னு அர்த்தம்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
இது மட்டும் இன்றி ஏழு பிரச்சனைகள் இந்த பதிவிற்கு இடையிடையில் புகைப்படத்தோடு விளக்கி இருப்பேன் பொறுமையாக படித்துப் பாருங்கள். முதல் புகைப்படம் இரண்டாம் புகைப்படம் என ஒவ்வொரு புகைப்படத்தையும் குறிப்பிட்டு இருப்பேன் மறந்துவிடாதீர்கள்.

இதை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்த ஒரு ஸ்டடிஸ்ல என்ன சொல்றாங்கன்னா யாரு உடம்புல எல்லாம் டெஸ்டோஸ்டிரான் லெவல் கம்மியா இருக்கோ அவங்களோட ஸ்பெம் கவுண்டும் கம்மியா இருக்குதாம். அண்ட் ஸ்பெம் குவாலிட்டியே இல்லாம இருக்குதாம். சோ நீங்க இதுல இருந்தே புரிஞ்சுக்கலாம் டெஸ்டோஸ்டிரன் உங்க பெட் லைஃப்க்கும் அண்ட் குழந்தை பெத்துக்குறதுக்கும் எவ்வளவு இம்பார்ட்டன்ட் அப்படின்னு.

இந்தப் பிரச்சினைகள் எதனால் ஏற்படுது அப்படிங்கிறத புகைப்படத்தோட ஆங்காங்கே படம் ஒன்று, படம் இரண்டு என விளக்கி இருப்பேன். பதிவை படிக்கும் போதே அதையும் கூடவே சேர்ந்து படித்துக் கொள்ளுங்கள்.

ப்ரீமெச்சூர் ஹேர் லாஸ்

ஹேர் லாஸ் ஆகுறதுமே லோ டெஸ்டோஸ்டிரன்க்கான ஒரு அறிகுறிதான். உங்களுக்கு பியர்ட் வளரலைன்னா அல்லது வளர்ந்து இருக்கு ஆனா ஃபுல் இடத்துலயும் இல்லாம பேட்ச் பேட்சியா இருக்குதுன்னா அப்போ டெஸ்டோஸ்டிரன் உங்களுக்கு கம்மியா இருக்குன்னு தான் அர்த்தம்.

டயர்ட்னஸ்

நீங்க நல்லா தூங்கினாலுமே உங்களுக்கு டயர்டா இருக்கா.? எப்பவுமே சோம்பேரித்தனமா ஃபீல் பண்றீங்களா.? அப்போ அதுவும் லோ டெஸ்டோஸ்டிரோன் அறிகுறிதான். அடுத்து நீங்க ஜிம்முக்கு போறீங்க நல்லா ஹெல்த்தியான ஃபுட்ஸ் எல்லாம் எடுத்துக்கிறீங்க. ஆனாலும் உங்களுக்கு மசில் பில்ட் ஆகலன்னா அதுவும் லோ டெஸ்டோஸ்டிரோனோட அறிகுறிதான். ஸ்டடிஸ் என்ன சொல்லுதுன்னா யாருக்கு லோவா டெஸ்டோஸ்டிரோன் இருக்குதோ அவங்களுக்கு மசில் மாஸ் கம்மியாவும் பாடி ஃபேட் அதிகமாவும் இருக்குமாம்.

அடுத்ததா ஒரு மெண்ணோட செஸ்ட்ல ஃபேட் ஸ்டோர் ஆகுதுன்னா செஸ்ட் பார்க்க ஸ்ட்ரக்சரா இல்லாம தொழ தொழன்னு இருந்தா அப்போ டெஸ்டோஸ்டிரான் உங்க உடம்புலயும் கம்மியா இருக்குதுன்றதுக்கான அறிகுறிதான். அடுத்து உங்களுக்கு சிறியவயதாக இருந்து போன்ஸ்ல எல்லாம் பெயின் ஏற்படுதுன்னா, அதாவது சில டைம் உட்கார்ந்து எந்திரிக்கும் போது உங்க லெக் மூவ்மெண்ட் வீக்கா இருக்குற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா அப்ப அதுவும் லோ டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனை தான். அடுத்து எதுக்கு எடுத்தாலும் எரிச்சல் ஆகுறது, மூட் ஸ்விங் ஆகுறது, படிப்புல மற்றும் ஒர்க்ல போக்கஸ் பண்ண முடியாம போறது, மெமரி பவர் வீக்கா இருக்கிறது இதெல்லாமும் கூட லோ டெஸ்டோஸ்டிரோன்க்கான அறிகுறிகள்தான்.

See also  இறந்த மனிதன் உடலில் இவ்வளோ விஷயம் நடக்குமா?
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்கான நேரம்

நண்பர்களே நான் இப்போ நிறைய அறிகுறிகள் சொன்னேன்ல அதுல முக்காவாசி உங்களுக்கு ஒத்துப்போச்சுன்னா அப்போ உங்க உடம்புல 300க்கும் கீழதான் டெஸ்டோஸ்டிரோன் லெவல் இருக்குன்னு அர்த்தம். இதுதான் ஒரு ஆண் மோசமான கண்டிஷன்ல இருக்குறதுக்கான எக்ஸாக்ட் அறிகுறிகள். சோ உங்க டெஸ்டோஸ்டிரோன 500 டு 1000 வரை இன்க்ரீஸ் பண்றதுக்கான அஞ்சு நேச்சுரல் உணவுகள் பத்தி இப்போ இந்த பதிவுல சொல்றேன் அண்ட் அது கூடவே சில ஸ்டெப்ஸும் இருக்குது அதையும் சேர்த்து நீங்க ஃபாலோ பண்ணீங்கன்னா டெஸ்டோஸ்டிரோன் உங்க உடம்புல அதிகமாகி சீக்கிரமா உங்களுக்கு பியர்ட் வளர ஆரம்பிக்கும். அண்ட் இப்போ நான் சொல்லப்போற எல்லாத்தையும் இன்னையிலிருந்து 30 டேஸ்க்கு ஃபாலோ பண்ண ஆரம்பிங்க.

ஜிஞ்சர்

உங்க உடம்புல டெஸ்டோஸ்டிரான் லெவல் கம்மியா இருந்துச்சுன்னா.! அப்போ சயின்ஸ் ரெக்கமெண்ட் பண்ணுது நீங்க ஜிஞ்சர் எடுத்து எடுத்துக்கோங்கன்னு. இஞ்சி இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ப்ரொடக்ஷன பூஸ்ட் பண்ணி விடுதுன்னு பல ஸ்டடிஸ்ல கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. அண்ட் இஞ்சி உங்க டயட்ல ஆட் பண்ணிக்கிறதால சில பெனிஃபிட்டுமே கிடைக்குது.

முதல் பெனிஃபிட்ஸ்: அதாவது ஸ்டடி (studies) என்ன சொல்லுதுன்னா.? யாருக்கெல்லாம் ஹை பிளட் பிரஷர் இருக்குதோ அவங்களுக்கெல்லாம் எரக்ட்டைல் டிஸ்பெக்ஷன் ஆகுமாம். பட் நீங்க ஜிஞ்சர் எடுத்துக்கிறதால இது பிளட் ஃப்ளோவை சீரமைக்குது மற்றும் எரக்ஷனை உருவாக்குது அண்ட் அதை மெயின்டைன் பண்ணவும் ஹெல்ப் பண்ணுதுன்னு சொல்றாங்க.

இரண்டாவது பெனிஃபிட்ஸ்: இம்ப்ரூவ் பெர்டிலிட்டி.! அப்படி உங்க குடும்பத்தை விருத்தி அடைய செய்யணும்னா இப்போ உங்க சாப்பாட்டுல இஞ்சி சேர்த்துக்கோங்கன்னு சொல்லுவாங்க. ஒரு ஆராய்ச்சியில எலிய வச்சு ஒரு ஸ்டடி நடத்துனாங்க. அதுல டயாபடீஸ் நோய் உள்ள எலிக்கு இஞ்சி கொடுத்துட்டு வர்றப்போ என்ன ஆச்சுன்னா.? அந்த எலியோட ஸ்பெம் குவாலிட்டி அண்ட் ஸ்பெம் கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆச்சாம். எலிகளுக்கெல்லாம் நடக்கும் போது மனிதனுக்கு நடக்காதா என்னான்னு சொல்லி மனிதனுக்கும் சோதனை செஞ்சி பார்த்தாங்க. அதனுடைய ரிசல்ட் முடிவுல மனிதனுக்கும் இதே ரிசல்ட் தான் கிடைச்சது.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

அதாவது இஞ்சி ஒரு ஆணோட ஸ்பெம் குவாலிட்டி அண்ட் அதோட நீர்த்த தன்மையை மேம்படுத்துது. ஏன்னா, இஞ்சி டெஸ்டோஸ்டரோன் லெவல்ல அதிகப்படுத்துது. சோ நீங்க இஞ்சிய ஜிஞ்சர் ஊறுகாய், ஜிஞ்சர் சப்ளிமெண்ட்ஸ், ஜிஞ்சர் டீ, ஜிஞ்சர் ஜூஸ்ன்னு எப்படி வேணாலும் எடுத்துக்கலாம். பட் ஒரு நாளுக்கு 3 டூ 4g அளவுதான் எடுத்துக்கணும். பட் நீங்க ஜிஞ்சர் பவுடரா எடுத்துக்கிட்டீங்கன்னா. ஒன் டேபிள் ஸ்பூன் ஒன் டேக்குக்கு அதாவது ஒரு முறைக்கு ஒரு ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக்கலாம். சோ இனி வர 30 நாட்களுக்கு இந்த அளவுக்கான இஞ்சியை இனி இன்டேக் பண்ணிக்கோங்க.

வெங்காயம்

வெங்காயம் இதுவுமே டெஸ்டோஸ்டிரோனை இன்கிரீஸ் பண்ண உதவி பண்ணுது. இது ரிச் ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது அண்ட் இதுல இருக்கக்கூடிய நியூட்ரிஷனல் கன்டென்ட் ஹார்மோன்ஸ பேலன்ஸ் பண்ண ஹெல்ப் பண்ணுது. அதுமட்டுமில்லாம ஸ்பெர்ம் கவுண்ட்ட இன்க்ரீஸ் பண்ணவும் ஹெல்ப் பண்ணுது. அண்ட் டைரக்டா ஹேர் குரோத்துக்கும் இது ஹெல்ப் பண்ணுது. அதுலயும் குறிப்பா சின்ன நாட்டு வெங்காயம் இருக்குல்ல இதுலதான் எக்கச்சக்க பெனிஃபிட் இருக்குது. இந்த வெங்காயத்தை நீங்க ராவாவும் எடுத்துக்கலாம். லைக் பழைய சோறு கூட வெங்காயம் கடிச்சுக்கிட்டு சாப்பிடலாம். வெங்காய கச்சிமீர், ஆனியன் சாலட் இல்லாட்டி நீங்க ஆனியன் ஜூஸாவும் ரெடி பண்ணி குடிக்கலாம்.

வெந்தயம்

இந்த வெந்தயம் இருக்குது இல்ல இது வயதான ஆண்களோட உடம்புலயும் கூட டெஸ்டோஸ்டிரான் லெவல்ல இன்கிரீஸ் பண்ற அளவுக்கு சக்தி வாய்ந்தது. இந்த வெந்தயத்தை வச்சு ஒரு ஸ்டடி ஒன்னு கண்டக்ட் பண்ணாங்க. அதாவது மக்களை ரெண்டு குரூப்பா பிரிச்சு ஒரு குரூப்ப ரெசிஸ்டன்ஸ் ட்ரைனிங் அதாவது எக்சர்சைஸ் பண்ண சொல்லியும், இன்னொரு குரூப்பை எட்டு வாரத்துக்கு டெய்லி இருமுறை 300 mg வெந்தயத்தையும் எடுத்துக்க சொன்னாங்க.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

8 வீக்ஸ் லேட்டர் ரிசல்ட் தெரிய வந்துச்சு. அதுல என்ன தெரிய வந்துச்சுன்னா, எக்சர்சைஸ் பண்ணவங்க உடம்புல இருந்த டெஸ்டோஸ்டிரோன் லெவலை விட வெந்தயம் எடுத்துக்கிட்டவங்க உடம்புல டெஸ்டோஸ்டிரோன் அதிகரிச்சு இருந்துச்சாம். சோ அதனால உங்க டயட்ல வெந்தயத்தை சேர்க்க மறந்துடாதீங்க. இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டுறது மட்டுமில்லாம கூடவே மசில் ஸ்ட்ரென்த், பாடி ஃபேட் லெவல் கண்ட்ரோல் அண்ட் செக்சுவல் டிரைவுக்கும் ஹெல்ப் பண்ணுது. இதை நீங்க டீயாவும் மேக் பண்ணி குடிக்கலாம்.

கார்லிக்

உங்களோட கிச்சன்லயும், பெட்ரூம்லயும் எப்பயும் உங்க கூட ஒரு நண்பன வச்சுக்கணும்னா அப்போ பூண்டை வச்சுக்கோங்கன்னு சொல்லுவாங்க. நான் ஏண்டா பெட்ரூமுக்கு என் நண்பன கொண்டு வந்து நிறுத்தப் போறேன்.? அப்படின்னு நீங்க எல்லாம் திட்டறது எனக்கு புரியுது. பட் இருந்தாலும் பெட் லைஃப்ல உதவியா இருக்கறதுக்காக இந்த நண்பன் நிச்சயம் உதவுவான். ஏன்னா கிச்சன்ல சமையலுக்கும் இது ஹெல்ப் பண்ணுது, பெட்ரூம்ல உங்க பெட் லைஃப் பெர்ஃபார்மன்ஸ் இன்க்ரீஸ் பண்ணவும் ஹெல்ப் பண்ணுது.

இந்த பூண்டு இருக்குல்ல இது ஒரு நாளுக்கு த்ரீ டூ ஃபோர் பீசஸ் டெய்லி எடுத்துக்கோங்க. ஏன்னா, இது டெஸ்டோஸ்டரோன் ப்ரொடக்ஷன தூண்டி விடுற வேலையை ரொம்ப சிறப்பா பண்ணுது. இதை நீங்க ராவா அப்படியே வாயில போட்டு மெல்லலாம். பட் அது உங்களுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா பூண்டு ஊறுகாயை எடுத்துக்கலாம். சமைக்கிற ஃபுட்ல ஆட் பண்ணி எடுத்துக்கலாம். இல்லாட்டி கார்லிக் சப்ளிமெண்ட்ஸா கூட நீங்க எடுத்துக்கலாம். முக்கியமா உங்க சாப்பாட்டுல சிக்குற பூண்டை இனி ஒதுக்கி வைக்காம இருங்க.

அஸ்வகந்தா

ஒரு ஸ்டடிஸ்ல என்ன சொல்றாங்கன்னா.? அஸ்வகந்தாவை உங்க டயட்ல ஆட் பண்ணிக்கிட்டீங்கன்னா இது டெஸ்டோஸ்டிரான் லெவல்ல 15% இன்கிரீஸ் பண்ணுமாம். அதுமட்டுமல்லாம ஸ்பேம் கவுண்ட்ட 167% இன்க்ரீஸ் பண்ணுமா, அண்ட் கார்டிசோலை 25% குறைக்குமாம். கார்டிசோல்னா ஒன்னும் இல்லைங்க, இதை ஸ்ட்ரெஸ் ஹார்மோன்னு சொல்லுவாங்க. இந்த கார்டிசோல் ஹார்மோன் எந்த அளவுக்கு பாடில கம்மியா இருக்கோ அந்த அளவுக்கு டெஸ்டோஸ்டிரன் உடம்புல அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதுக்கு அஸ்வகந்தா செம்மையா ஹெல்ப் பண்ணும்.

ஆயுர்வேதால என்ன சொல்லி இருக்காங்கன்னா.? நீங்க அஸ்வகந்தா கூட சத்தவரியும் சேர்த்து எடுத்துக்கிட்டீங்கன்னா இன்னும் அதிகமான பெனிஃபிட் கிடைக்குமாம். அதனால நீங்க ஹாஃப் டேபிள் ஸ்பூன் அஸ்வகந்தா கூடவே இந்த சத்தவரியை 30 நாட்களுக்கு தொடர்ந்து தூங்க போறதுக்கு முன்னாடி பால்ல கலந்து குடிங்க 31 வது நாள் நீங்க லேப்ல போயிட்டு உங்க பிளட்டை டெஸ்ட் பண்ணி பாருங்க.! டெஸ்டோஸ்டிரோன் இன்கிரீஸ் ஆகி இருக்கிறதா உங்களால பார்க்க முடியும். அது கூடவே சிலாஜித். இதுவும் ஒரு நேச்சுரல் டெஸ்டோஸ்டிரோன் சப்ளிமெண்ட் தான். சயின்ஸ் என்ன சொல்லுதுனா இந்த சிலாஜித் 20% உங்க டெஸ்டோஸ்டிரோனை இன்கிரீஸ் பண்ணிடுமாம்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

சரி ஓகே இப்ப வரை சொன்ன அஞ்சு ஃபுட்ஸையும் நீங்க நோட் பண்ணிக்கிட்டீங்களா..? இல்லன்னா டக்குனு நோட் பண்ணிக்கோங்க.! இதை உங்க டயட்ல இனி 30 நாட்களுக்கு தொடர்ந்து ஆட் பண்ணிக்கோங்க. அண்ட் அது கூடவே நீங்க பண்ண வேண்டிய ரெண்டு இம்பார்ட்டண்டான விஷயங்கள் இருக்குது. அதுல ஃபர்ஸ்ட் ஒன்

See also  ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்

எக்சர்சைஸ்

சயின்ஸ் என்ன சொல்லுதுன்னா நீங்க உங்க பாடிய ஆக்டிவா வச்சுக்க எந்தவித எக்சர்சைஸ் பண்ணாலும் சரி, இல்ல ஸ்போர்ட்ஸ் மாதிரியான விஷயங்களை பண்ணாலும் சரி, அது உங்க பாடில டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி ஆகுற வேகத்தை அதிகப்படுத்துமாம். 2015-ல ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஸ்டடி ஒன்னு கண்டக்ட் பண்ணாங்க. அதுல மக்களை ரெண்டு குரூப்பா பிரிச்சிக்கிட்டாங்க.

ஒரு குரூப் கிட்ட டயட்ட ஃபாலோ பண்ண சொன்னாங்க. இன்னொரு குரூப் கிட்ட ஃபுல்லா வொர்க் அவுட் மட்டும் பண்ண சொன்னாங்க. கடைசியா ரிசல்ட்ல என்ன வந்துச்சு தெரியுமா.? யாரெல்லாம் வொர்க் அவுட் பண்ணாங்களோ அவங்களோட வெயிட் குறைஞ்சதோட மட்டுமில்லாம அவங்களுக்கு டெஸ்ட்ல, டெஸ்டோஸ்டிரான் லெவல் இன்கிரீஸ் ஆகி இருந்துச்சாம். ஆனா அதுவே எந்த குரூப் வெறும் டயட் மட்டும் ஃபாலோ பண்ணாங்களோ அவங்களுக்கு கொஞ்சமா வெயிட் மட்டும் குறைஞ்சிருக்கு. ஆனா டெஸ்டோஸ்டிரான் லெவல் இன்கிரீஸ் ஆகாம அப்படியே தான் இருந்திருக்கு.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

இப்போ உங்களுக்கே புரிஞ்சிருக்கும் டெஸ்டோஸ்டிரான பூஸ்ட் பண்ண எக்சர்சைஸ் எப்படி ஹெல்ப் பண்ணுதுன்னு. அதுலயும் குறிப்பா நீங்க வெயிட் ட்ரைனிங் எக்சர்சைஸ் பண்ணீங்கன்னா இன்னும் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். பட் அப்படி உங்களால ஜிம்முக்கு போயிட்டு வெயிட் ட்ரைனிங் எல்லாம் பண்ண முடியலன்னா நீங்க பாஸ்ட் ரன்னிங் அண்ட் ஸ்பிரிண்டிங் மாதிரியான ஏரோபிக் எக்சர்சைஸ் பண்ண சொல்லி சொல்றாங்க. இது டெஸ்டோஸ்டிரான வேகமா ரைஸ் பண்ண ஹெல்ப் பண்ணுது. செகண்ட் ஒன் ஸ்லீப்.

ஸ்லீப் – தூக்கம்

நீங்க ஹெல்த்தியான ஃபுட்ஸ் எல்லாம் சாப்பிடுறீங்க அப்பரம் வொர்க் அவுட் எல்லாம் பண்றீங்க. பட் உங்ககிட்ட செவன் ஹவர்ஸ் தூக்கம் இல்லைன்னா டெய்லி அஞ்சு மணி நேரம் அல்லது அதைவிட கம்மியாதான் தூங்குறீங்கன்னா.! அப்போ, உங்க உடம்புல டெஸ்டோஸ்டிரான் ஒரு துளி கூட அதிகரிக்காது. ஏன்னா, டெஸ்டோஸ்டிரான் லெவல் இன்கிரீஸ் ஆகுற உச்ச பட்ச நேரமே நீங்க நல்லா தூங்குறப்போ தான் ஏற்படும். இத ஒரு ஸ்டடிலயே ப்ரூவ் பண்ணிருக்காங்க. மேலும் யாரெல்லாம் லேட் நைட் வர ப்ளூ ஸ்கிரீன் பார்த்துட்டு ஸ்லீப் சைக்கிள டிஸ்டர்ப் பண்றாங்களோ அவங்களுக்கெல்லாம் டெஸ்டோஸ்டரோன் லெவல் டிக்ரீஸ் ஆகுறத கண்டுபிடிச்சிருக்காங்க.

ஆகவே நண்பர்களே.! உங்களுக்கே தெரியும் நீங்க ஸ்கூல் படிக்கும்போது உங்க சயின்ஸ் புக்ல சொல்லி இருப்பாங்க. நம்ம எப்போ வளருவோம்னா, அது நம்ம தூங்கும்போதுதான். அதாவது வளர்ச்சிதை மாற்றம்ன்றது நம்ம தூங்கும்போது தான் நடக்கும். சோ அதனால இன்னிமேல் 8 ஹவர்ஸ் தூக்கத்தை உங்க பாடிக்கு கொடுங்க. இது பலரால முடியாம இருக்கலாம். பட் ட்ரை பண்ணுங்க அட்லீஸ்ட் 7 மணி நேரமாச்சும் நீங்க தூங்கணும்.

அதுக்கப்புறம் நீங்க ஆட்டோமேட்டிக்காவே ஹெல்த்தியா மாறிடுவீங்க. அவ்வளவுதான் நண்பர்களே இன்னைக்கான பதிவு உங்க எல்லாருக்கும் செம யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்னு நம்புறேன். நீங்க நான் சொன்ன எல்லாத்தையும் 30 நாட்களுக்கு தொடர்ந்து ஃபாலோ பண்ணும்போது உங்களுக்கு இது ரொம்ப யூஸ்ஃபுல் அப்படின்றது புரிய வரும். ஏன்னா, டெஸ்டோஸ்டிரான் இன்கிரீஸ் ஆகும் உங்களோட பெட் லைஃப்ல பயங்கர ஹெல்ப்புல்லா உங்கள மாத்தும்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்

நீ வச்சிருக்க தலைப்புக்கும் இந்த பதிவுக்கு என்ன சம்பந்தம் இருக்கு.? ஏன் எங்களை ஏமாத்துற அப்படின்னு ஒரு செகண்ட் எல்லாரும் யோசிப்பீங்க.! இல்லன்னா என்னை கழுவி, கழுவி ஊத்துவீங்க. ஆனா ஒண்ணுங்க ஆன்லைன்ல கண்ட கண்ட ஆயில் எல்லாம் விக்கிறாங்கன்னு சொல்லி பலரும் பல யோசனைகள் சொல்றாங்கன்னு சொல்லி ஒரு மருத்துவரோட அறிவுரை எதுவும் இல்லாமல் யாரும் எந்த ஒரு விஷயத்தையும் முயற்சி செய்யாதீங்க. ஒரு சிலருக்கு அவங்க சொல்ற விஷயங்கள் சாதகமாக அமையலாம் ஒரு சிலருக்கு பாதகமாக கூட அமையலாம்.

இது வெறும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே அதாவது தகவலை தெரியப்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட பதிவு. அது நான் கூறக்கூடிய பதிவாக இருந்தாலும் சரி, நீங்கள் மற்றவர்களுடைய பதிவுகளை பார்த்தாலும் சரி தகவலை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை மருத்துவரை சந்திக்கும் போது இதுபோல நான் ஒரு கட்டுரையை படித்தேன் அல்லது வீடியோவை பார்த்தேன் இதன்படி செய்யலாமா செய்யக்கூடாதா என்பதை மருத்துவரோடு வினவி உங்களது சந்தேகங்களை போக்கிக் கொள்ளுங்கள்.

மேலும் நான் சொன்ன உணவுகளை சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரானோட அளவுகள் அதிகமாகுமே தவிர தாடி மற்றும் மீசை கட்டாயம் முளைக்கும் என்று சொல்ல முடியாது. முன்பே சொன்னது போல தான், ஒரு சிலருக்கு சாதகமாகவும் ஒரு சிலருக்கு பாதகமாகவும் அமையலாம். நீங்கள் ஆண் என நிரூபிப்பதற்கு தாடி மீசை அவசியம் இல்லை. நிச்சயம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஏனென்றால் எனது தாத்தாவிற்கும் தாடி, மீசை கிடையாது.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
முதலாவது படம்: காம உணர்ச்சி குறைவால் (Low Sexual Drive) ஏற்பட்ட மனநிலை மாற்றம் – தம்பதியினர்களுக்கு இடையே உணர்ச்சி இடைவெளி.

ஆனால் அவர் வாழ்ந்து இறந்து போய்விட்டார். அவருக்குப் பிறகு என் தந்தை என் தந்தைக்குப் பிறகு எனக்கு ஒரு சகோதரன் மேலும் நான் என பல ஜெனரேஷன்கள் வந்துவிட்டது. அவர் ஆணில்லாமலா நாங்கள் அனைவரும் வந்தோம். ஒரு விதை தான் முழு மரமா மாறும். உன்னிடம் அந்த விதை இருந்தால் மட்டுமே போதுமானது. மற்றவைகள் எல்லாம் தேவையே கிடையாது. அவைகள் அனைத்தும் இலைகள் போல என்றோ ஒரு நாள் நரைத்து, உதிர்ந்து போவதற்கு ஏன் கண்ட கண்ட செலவுகளை செய்ய வேண்டும்.

உடனே ஒரு சில கூட்டம் வரும். இலைகள் கூட உதிர்ந்தால் திரும்பவும் வந்து விடுதே, ஆனால் இது வளரவே இல்லையே என்ன செய்வது அப்படின்னு கேட்டுகிட்டு வருவீங்க. ஓப்பனா ஒன்னு சொல்லணும்னா youtubeல நிறைய இன்புளுயன்சர்ஸ் பொண்ணுங்க முன்னாடி மைக்க தூக்கிட்டு போயி தாடி வைத்த பையன பிடிக்குமா தாடி இல்லாத பையன புடிக்குமான்னு சொல்லி நிறைய வீடியோஸ் பண்றதுனால தான் பசங்க இந்த மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாகிறீங்க.

என்னதான் மூஞ்சி நிறைய கொச கொசன்னு முடி வளர்த்தி வச்சிருந்தாலும். சில நேரங்கள்ல முடி இல்லாம மொழு மொழுன்னு இருக்குறத தான் நிறைய பேர் விரும்புவாங்க. அதாவது முடி இருந்து அந்த முடியை சேவ் செய்த முகத்தை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அது குத்தும். காரணம் அந்த முடி கட்டையாக இருப்பதால் முல்லைப் போன்று குத்திக் கொண்டே இருக்கும். ஆனால் முடியே இல்லாமல் மொழு மொழுன்னு இருப்பார்கள் அல்லவா அது சில இடங்களில் நிச்சயமாக பெண்களுக்கு பயனை கொடுக்கும். அது எப்போது என்பது, உங்களுக்கு திருமணமாகும் போது புரியும்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
இரண்டாவது படம்: ஹார்மோன் மாற்றத்தால் (Testosterone/Estrogen Imbalance) ஏற்படும் பிரச்சனை.

அழகு என்னங்க அழகு அது இன்னைக்கு இருக்கும் நாளைக்கு காணாமல் போய்விடும். சொல்லப்போனால் மண்ணு திங்கிற உடம்புங்க இது. வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பது போல சந்தோசமா புடிச்சத செஞ்சிட்டு, சாப்பிட்டு, நல்லா தூங்கிட்டு லைப் பயங்கரமா என்ஜாய் பண்ணிட்டு வீட்டை விட்டு காட்டுக்கு டாட்டா காமிச்சிட்டு போயிட்டே இருங்க. கண்டதை நினைத்து மனச போட்டு குழப்பிக்காதீங்க.

அடுத்தவன பார்த்து அவன மாதிரி எனக்கு இல்லையே, அவனுக்கு இப்படி இருக்கே.! எனக்கு ஏன் இல்லை.? அப்படி இப்படின்னு மனச நீங்க அலைய விட்டிங்கனா பயங்கரமான டிப்ரஷனுக்கு போயிருவீங்க. அப்படி டிப்ரசனுக்கு போயிட்டீங்கன்னா உங்க உடம்புல தெம்புங்கறது இருக்காது. சொல்லப்போனால் டெஸ்டோஸ்டிரோன் குறைஞ்சு போயிரும். இது குறைஞ்சு போனா நீ நிறைய விஷயங்களால பாதிக்கப்படுவ. குறிப்பா அன்சாடிஸ்ஃபைடு பிரச்சினைகள் வரும் உனக்கும் உன் மனைவிக்கும் இடையில்.

See also  மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
மூன்றாவது படம்: மன அழுத்தம் மற்றும் டிப்ரஷன் காரணமாக ஏற்பட்ட Low Sexual Drive..

முடி கொட்டும் பிரச்சினைகள் ஆரம்பிக்கும் மேலும் பல சுவாரசியமான தகவல்களை இந்த பதிவின் துவக்கத்திலிருந்து இப்ப வரைக்கும் சொல்லி இருக்கேன். இந்த பதிவு தாடி இல்லாத பசங்கள கேவலப்படுத்துவதற்காக உருவாக்கின பதிவு கிடையாது. தாடி இல்லாம வருத்தத்தோடு இருக்கிற பசங்களுக்கு நானும் ஒரு ஆம்பள தான்னு சொல்ல வைக்கக்கூடிய ஒரு மோட்டிவேஷனல் பதிவாக தான் இந்த பதிவை நான் எழுதி இருக்கேன்.

இந்த பதிவை யாராவது பொண்ணுங்க படிச்சிட்டு இருந்தா தயவு செய்து எந்த ஒரு பசங்களோட மனசையும் காயப்படுத்தற மாதிரி பொதுவெளிகள்ல சொல்லாதீங்க அதனால பாதிக்கப்பட்ட போறது அந்தப் பையனும், எதிர்காலத்தில் மனைவியா வரக் கூடிய பொன்னும் தான். தாடி இருக்கோ, இல்லையோ எனக்கு அவன் பையனா இருந்தாலே போதும் அவன எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்லிப்பழகுங்க..!

நம்ம பசங்கள இந்த மாதிரி பிரிச்சு பார்க்கிறதுனால தான் அவங்களும் நம்மள கசகசன்னு பிரிச்சு பாக்குறாங்க. அத பத்தி நான் இந்த பதிவுல மென்ஷன் பண்ணா அது 18 வயதுக்கு மேல போயிரும். எந்த ஒரு வேறுபாடு இல்லாமல் எந்த ஒரு பாகுபாடும் இல்லாம எல்லாரும் ஆண் பெண் அப்படின்னு வாழ்ந்துட்டு போயிடுவோமே. குறிப்பா யார் மனசையும் கஷ்டப்படுத்தற மாதிரி எந்த ஒரு சம்பவத்தையும் செய்யாமல் சைலன்ட்டா வாழ்ந்துட்டு டாட்டான்னு சொல்லிட்டு குழியில போய் படுத்தாலும் சரி, சம்பளா மாறி ஆத்துல, கடல்ல போனாலும் சரி. இருக்கிற ஒரு லைஃபை சந்தோசமா என்ஜாய் பண்ணிட்டு போலாம்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
நான்காவது படம்: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளால் Low Sexual Drive ஏற்படுவது.

ஒரு மனுஷன் சாகறதுக்குள்ள அது வேணும், இது வேணும், அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு சொல்லி கண்டதையும் சாமிகிட்ட கேக்குறோமே.! என்னைக்காச்சும் சாகுற வரைக்கும் நோய் நொடி இல்லாம, கடன் பிரச்சனை இல்லாம சந்தோசமா எப்பவுமே சிரிச்ச முகத்தோட நான் இருக்கணும். குழந்தை குடும்பம்னு, குடும்பத்தோட சந்தோஷத்தோடு வாழனும்னு சொல்லி எதையாவது வேண்டுறோமா..?

கொஞ்சம் யோசிச்சு பாருங்க நோயில்லாமல் கடன் இல்லாமல் இருந்துட்டா அந்த வாழ்க்கை எப்பேர்பட்ட வாழ்க்கைன்னு நம்மள பெத்தவங்க கிட்ட கேட்டு பாருங்க சொல்லுவாங்க. அதே மாதிரி நோயில்லாமல் நம்ம வாழ்ந்தால் எப்படி இருப்போம் என்பதை இப்போது நோயாளியா இருந்து கஷ்டப்பட்டு இருக்காங்களே, அவங்கள பாத்திங்கனா அவங்க கிட்ட கேட்டு பாருங்க. அவங்க அதற்கான பதில் சொல்லுவாங்க. வாழ்க்கையில எப்பவுமே ஒன்ன விட ஒன்னு பெட்டரா தான் இருக்கும்.

அதாவது ஏதோ படத்துல காமெடிக்காக வருமே., ஒரு பொண்ணு பார்த்து அந்த பொண்ணுக்கு மனவரைல உட்கார்ந்து தாலி கட்டும் போது தான் கண்ணு முன்னாடி நமக்கு பார்த்த பொண்ணா விட ரொம்ப அழகான பொண்ணுங்க கண்ணு முன்னாடி போவாங்கன்னு.! அந்த மாதிரி தான் ஒன்னும் பண்ண முடியாது. இயற்கை நமக்கு என்ன கொடுத்திருக்கோ அத வச்சு சந்தோஷமா வாழ்ந்துட்டு ஜாலி பண்ணுவோம். Take it easy guys..! 💪..😉

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
ஐந்தாவது படம்: மருந்துகள் (Certain Medications) காரணமாக ஏற்படும் Low Sexual Drive..

என்னடா எப்பவுமே பயங்கரமான தகவலை கொடுத்துக்கிட்டு இருக்க கூடிய நம்ம வலைதளத்தில இன்னைக்கு பூமர் ஆண்டி மாதிரி வளவள கொல கொலன்னு எதையோ உளறிக்கிட்டு இருக்கேன்னுதான பாக்குறீங்க. வேற ஒன்னும் இல்லைங்க நேத்து ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தேன். அந்த இடத்துல ஒரு பையன் எனக்கு தாடி இல்ல தாடி இல்லைன்னு சொல்லி கண்ணாடி முன்னாடி போய் நின்னுகிட்டு அங்கிருந்த ஒரு சின்ன வெங்காயத்தை உறிஞ்சி மூஞ்சி பூரம் வரக்கு வரக்குனு தேச்சி, மஞ்ச கொழச்சாப்புள இருந்த அவன் மூஞ்சி ரத்தக்கிளறியாக மாறி, ஒரு மாதிரி அவன் முகத்துக்கு இன்ஃபெக்ஷன் ஆகி பல தடிப்புகள் வந்துவிட்டது.

அதாவது தடிப்புகள் என்றால் ஏதோ சிறிய கொப்பளம் போல அல்ல அது பார்ப்பதற்கே கொடூரமாக இருந்தது மற்றும் விகாரமாக இருந்தது. எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அது வெங்காயத்தை தேய்த்ததால் வந்ததா அல்லது ஏதேனும் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பையன் அந்த வெங்காயத்தை தேய்த்த பிறகுதான் இது போல ஆனது என்று முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு வெளியே சென்றான். அப்போது நான் பில் கவுண்டரில் பில் போட்டுக் கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் இதை அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் பில் கவுண்டர் பக்கத்தில் தான் காய்கறிகள் இருக்கின்றது. அதன் பக்கத்தில் வெங்காயத்தை எடுத்துக் கொண்டு கண்ணாடியில் போய் உரசி கொண்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் வந்த பின் விளைவு இப்போது அவருக்கு எவ்வளவு செலவாயிருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் ஒரு முறை தோல் மருத்துவரிடம் சென்றாலும், பல் மருத்துவரிடம் சென்றாலோ பல பல ஆயிரங்களை கத்தையாக உருவி விடுகிறார்கள். உங்களுக்கும் இதுபோல மருத்துவர்களிடம் அதிகம் பணம் கொடுத்து சரியாகாத பிரச்சினைகள் ஏதேனும் இருக்கிறதா இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
ஆறாவது படம்: தூக்கமின்மை, மோசமான உணவு பழக்கம், புகை, மதுபானம் போன்ற தவறான வாழ்க்கை முறையால் Low Sexual Drive ஏற்படுவது.

அப்புறம் தாடி மீசை இல்லைன்னு சொல்லி வருத்தப்படுற பசங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு என் வாழ்க்கையில லைவா கண் முன்னாடி நடந்த ஒரு பிரச்சனையை முன் வைத்து, இதுபோன்று எந்த பசங்களும் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்று அவர்களை மோட்டிவேட் செய்யும் விதமாக உருவாக்கிய இந்த பதிவிற்கு உங்களது கருத்துக்கள் என்ன என்பதை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள். மேலும் இந்த பதிவைப் பற்றி ஏதேனும் சொல்ல விரும்பினாலும் மறக்காமல் தெரிவியுங்கள்.

இந்த பதிவ நீங்க பேஸ்புக் மூலமா வந்து படிச்சிட்டு இருக்கீங்கனா மறக்காம பேஸ்புக்ல அந்த போஸ்டுக்கு கீழே ஒரு லைக் போட்டு ஒரு சேர பண்ணி விடுங்க. கண்டிப்பா இது போல வேற யாராவது பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு, அந்த மாதிரி எந்த ஒரு பசங்களும் எந்த ஒரு தப்பும் பண்ணக்கூடாதென்று நான் நினைச்சு இந்த பதிவு உருவாக்கி இருக்கேன். தயவு செஞ்சு எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க.

ஆரம்பத்தில் இருந்து இப்போ வரைக்கும் இந்த பதிவு கொஞ்சம் கூட மிஸ் பண்ணாம படிச்சு இருக்கீங்கனா நிச்சயம் உங்களுக்கு பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது மட்டுமின்றி நமது வலைதளத்தில் பல்வேறு விதமான சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தாடி இல்லாத பசங்களா இது முக்கியமா உங்களுக்கான நேரம்
ஏழாவது படம்: நீண்ட உறவுச் சங்கடம் (Relationship Issues) காரணமாக Low Sexual Drive பற்றிய புகைப்படத்தை உருவாக்க முயற்சித்தேன், ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக உருவாக்க முடியவில்லை.!

அந்தத் தகவல்கள் அனைத்தும் முறையாக எந்த நபர்களுக்கும் சென்று அடைவதில்லை. அதனால்தான் நமது வலைதளத்திற்காக பிரத்தியேகமாக ஒரு whatsapp சேனலும் டெலிகிராம் சேனலும் உருவாக்கி இருக்கிறேன். மறக்காமல் கீழே இருக்கக்கூடிய ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து நமது சேனலில் இணைந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் சேனலில் இணைந்து கொள்வதன் மூலம் நமது வலைதளத்தின் உடனடி அப்டேட்டுகளை பெறுவீர்கள் மேலும் நாம் எப்போதும் இணைந்திருப்பது போல ஒரு உணர்வு நமக்குள் எப்போதும் இருக்கும்.

இதனால் நான் உங்களிடம் ஏதேனும் முக்கியமான தகவலை கூற வேண்டும் என நினைத்தால் உடனே உங்களிடம் கூற முடியும். ஆகவே நண்பர்களே மறக்காமல் நமது டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உங்களுடைய பொன்னான ஆதரவை கொடுத்து வாருங்கள். மேலும் எனது சேவையைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝

உங்களுக்கு நேரம் இருந்தால் இதையும் படித்து பாருங்கள்…👇

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏