மனிதன் கண்டுபிடித்த உலகின் மிகப்பெரிய அறிவியல் சாதனைகள்
உங்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கிற சில ஆச்சரியமான விண்வெளி சார்ந்த உண்மைகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகளை பத்திதான் இன்னைக்கு நம்ம சுட சுட அப்டேட்ஸ் வலைதளத்துல பார்க்க போறோம். அதுவும் மனிதன் கண்டுபிடித்த உலகின் மிகப்பெரிய அறிவியல் சாதனைகள்..! வழக்கம் போல இன்னைக்கான பதிவும் இன்ட்ரஸ்டிங்கான ஒண்ணாவே தான் இருக்கும். சோ இந்த பதிவ கடைசி வரைக்கும் படிச்சி முடிச்சதும் கண்டிப்பா ஒரு லைக் கொடுங்க.

அதோட இந்த வலைதளத்துக்கு இப்பதான் நீங்க முதல் தடவை வரீங்கனா கீழ இருக்கிற ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து அதில் இருக்கக்கூடிய டெலிகிராம் மற்றும் டெலிகிராம் இல்லாத நண்பர்கள் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நமது வலைதளத்தில் வெளியாக கூடிய ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு உடனடியா தெரியவரும். வாங்க இப்ப டாபிக் குள்ள போகலாம்..!
அன்பிலீவபிள் யுனிவர்ஸ் அண்ட் அவர் எக்ஸிஸ்டன்ஸ்

இதுதான் நாம வாழுற பூமி. நாம வாழற பூமியோட குடும்பம்தான் இந்த சோலார் சிஸ்டம். இதுல நம்ம பூமியை தவிர புதன், செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ்னு, ஜூபிடர்னு பல கிரகங்கள் இருந்தாலுமே பூமிக்கும் அதோட துணைக்கோளான நிலாவுக்கும் இடைப்பட்ட தூரம் மட்டுமே உங்களை பிரமிக்க வைக்கிற விதமாதான் இருக்கும்.
ஏன்னா எர்த்துக்கும் (Earth), மூணுக்கும் (Moon) இடைப்பட்ட டிஸ்டன்ஸ் மட்டுமே 252088 மைல்கள். இந்த டிஸ்டன்ஸ் உள்ள என்டையர் சோலார் சிஸ்டம்குள்ள (Entire solar system) இருக்கிற எல்லா பிளானட்ஸையுமே நுழைச்சு ஃபிட் பண்ண முடியும்னா யோசிச்சு பாருங்க இது எவ்வளவு பெருசா இருக்குன்னு..! இதுல சோலார் சிஸ்டமோட பிளானட்ஸ் பத்தின தனிப்பட்ட சிறப்புகள் பத்தி பார்த்தோம்னா..!

இந்த சிவப்பு கிரகமான ஜூபிட்டரோட ரெட் ஸ்பாட்ல மட்டுமே ரெண்டு பூமிகளை வச்சு கவர் பண்ணிட முடியும் அப்படின்னா யோசிச்சு பாருங்க இந்த மொத்த வியாழன் கிரகமும் எவ்வளவு பெருசா இருக்கும்ன்னு.

அதோட இந்த சனி கிரகத்தோட அகலத்துக்கு ஒன்பது பூமிகள் சமமானதா இருக்கும். சனி கிரகத்தோட வளையங்கள் இன்னுமே நீளமானது. அதுல சுத்திக்கிட்டு இருக்கிறதுலயே சின்ன துகல் கூட ஒரு பெரிய மலை அளவுக்கு தான் இருக்கும். ஆனா இது எதையுமே சூரியனோட கம்பேர் பண்ண முடியாது. அந்த அளவுக்கு பெரியது தான் நம்ம சூரியன். நம்ம சோலார் சிஸ்டம்ல நம்ம பூமி எந்த அளவுக்கு இருக்குன்னு பாருங்க..!

அதாவது அதோட துணைக்கோளான மூன்ல இருந்து நம்ம பூமியை பார்த்தா அது இப்படித்தான் இருக்கும்.

இதுவே மார்ஸ்ல இருந்து பார்த்தா புள்ளி அளவுக்கு மட்டுமே தெரியுற பூமி, சனி கிரகத்தோட வளையத்துக்கிட்ட இருந்து பார்த்தா எந்த அளவுக்கு தெரியுதுன்னு பாருங்க.

இதுவே நெப்டியூன்ல இருந்து பார்த்தா பூமி இந்த அளவுக்கான தோற்றத்துலதான் இருக்கும்.

அதாவது நெப்டியூன்ல இருந்து பூமிக்கான தொலைவுங்கிறது நாலு பில்லியன் மைல்ஸ்னா யோசிச்சு பாருங்க..! உங்க தலையே சுத்த ஆரம்பிச்சுரும். பில்லியன்ங்கிறது பெரிய நம்பர். இதுல இந்த டிஸ்டன்ஸ நாம கவர் பண்ணனும்னா ஒரு மில்லியன் செகண்ட்ஸ்க்கு ஈக்குவல் 11.5 நாட்கள். ஒரு பில்லியன் செகண்ட்ஸ்க்கு ஈக்குவல் 31.7 வருடங்கள்னா யோசிச்சு பாருங்க..!

சூரிய குடும்பத்தோட எல்லையை இன்னைக்கு நிலைமைக்கு ராக்கெட்ல பயணம் பண்ணி தொட்டாலுமே கூட ஒரு மனிதன் தன் சராசரி வாழ்நாள்ல பாதியை செலவு பண்ண வேண்டி இருக்கும். சூரியன் கூட நம்ம பூமியோட சைஸ கம்பேர் பண்ணா..? அது இந்த அளவுக்கு தான் இருக்கும்.

ஆனா இவ்வளவு பெரிய சூரியனை செவ்வாய் கிரகத்தோட சர்பேஸ்ல இருந்து பார்த்தா அது இப்படித்தான் தெரியும்.

உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொரு நட்சத்திரமுமே ஒரு சூரியன்தான்னு. அதுல நம்ம சோலார் சிஸ்டம்க்கு தலைவனான சூரியன் இருக்கு. ஆனா சூரியனை விடவும் பெரிய பெரிய சூரியன்கள் எல்லாம் மத்த கேலக்ஸிலயும் பிரபஞ்சம் மொத்தத்துலயுமே இருக்கு. அதுல இதுவரைக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சதுலயே ஒரு பெரிய சூரியன் எதுன்னு கேட்டா..?

அதுதான் இந்த விஒய் கேனிஸ் மெஜாரிஸ்ங்கிற சூரியன் (VY Canis Majoris). இது நம்ம சூரியனை விடவும் 2000 மடங்கு பெரியது. இப்படி சூரியன் சோலார் சிஸ்டம்னு இதையெல்லாம் தாண்டின அடுத்த பெரிய விஷயம்தான் இந்த கேலக்ஸி. பல கோடி சூரிய குடும்பங்களை உள்ளடக்கின ஒரு அமைப்புதான் கேலக்ஸிங்கிற இந்த விண்மீன் மண்டலம்.
உதாரணத்துக்கு யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஓட மொத்த நிலப்பரப்பையும் கேலக்ஸின்னு சொல்லி எடுத்துக்கிட்டா., அதுல ஒரு சின்ன காயின் அளவுக்கானதுதான் இந்த சோலார் சிஸ்டமா இருக்கும். அப்ப யோசிச்சு பாருங்க ஒரு கேலக்ஸிக்குள்ளார எவ்வளவு சோலார் சிஸ்டம் இருக்கும்ன்னு..! ஒரு கேலக்ஸியோட ஒரு எட்ஜ்ல இருந்து இன்னொரு எட்ஜுக்கான விட்டத்த அளந்தா அது ஒரு லட்சம் ஒளியாண்டுகள் தொலைவுக்கு இருக்கும்.

இதே இந்த லைட் இயர்ஸ மைல்ஸ்க்கு கன்வெர்ட் பண்ணா..! அது 621 குவாட்ரில்லியன் 371 டிரில்லியன் 192 பில்லியன் 237 மில்லியன் 333890 மைல்ங்கிற அளவுக்கு அதோட தூரம் இருக்கும். அதாவது கற்பனை பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப பெருசா இருக்கும்.
அப்படின்னா இவ்வளவு பெரிய கேலக்ஸிக்குள்ளார நீங்க ஒரு சின்ன துகல் கூட இல்லைங்கிற அளவுக்கு யோசிச்சு பாருங்க..! உங்களுக்கே பிரமிப்பானதா இருக்கும். அப்படிப்பட்ட நாம வாழற அந்த மில்கிவே கேலக்ஸியை விடவும் பெரிய பெரிய கேலக்ஸி எல்லாம் கூட இருக்கு.

அதுதான் ngc 6744ன்னு (NGC 6744 Galaxy) பெயர் வைக்கப்பட்ட ஒரு ஸ்பைரல் கேலக்ஸி. நம்ம மில்கிவே கேலக்ஸியை விடவும் ரெண்டு மடங்கு பெரியதான இதோட அகலம் மட்டுமே 2 லட்சம் ஒளியாண்டுகள் இருக்கும்.
என்னதான் பெருசா இருந்தாலுமே இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா..? ஒன்ன விட ஒன்னு பெருசா..! அதாவது இதை விட அது பெருசு, அதைவிட அது இன்னும் பெருசுனு நாம இதுவரைக்கும் பார்த்த எல்லா விஷயங்களுமே இப்போ நீங்க பாக்குற இந்த பிக்சர்ல ஒரு புள்ளி மட்டும்தான்.

இன்னும் சொல்லப்போனா ஹப்பள் டெலஸ்கோப்ல (Hubble telescope) எடுக்கப்பட்ட இந்த போட்டோவுல இருக்கிற ஒவ்வொரு விஷயமுமே அதாவது கோடிக்கணக்கான கேலக்ஸிகளும், அதுல ஒவ்வொன்லயும் உள்ள பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், அதுல ஒவ்வொன்லயும் உள்ள தனித்தனியான கிரகங்களை கொண்ட சோலார் சிஸ்டமும் இன்னைக்கு தேதியிலிருந்து 11 பில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி இருந்த தோற்றத்தை கொண்டது.

பிக் பேங் என்கிற பெருவெடிப்பு உருவாகி மூணு பில்லியன் வருஷங்களுக்கு அப்புறமா உருவான ஒவ்வொரு கேலக்ஸியும் அதுல இருந்த காலத்துல இருந்து 11 பில்லியன் வருஷங்கள் தாண்டித்தான்..! அதாவது 11 பில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி அது என்ன தோற்றத்தில் இருந்ததோ அந்த காட்சியை தான் இப்ப நம்ம பார்த்துக்கிட்டு இருக்கோம்.
அப்படின்னா இப்போ அது என்ன நிலைமையில இருக்குங்கறத அதோட தோற்றம் நாம பாக்குறதுக்கு கிடைக்க இன்னுமே பல பில்லியன் வருஷங்கள் தேவைப்படும். இன்னும் சொல்லப்போனா இதுவரைக்குமே நாம பார்த்த இந்த மொத்த விஷயமுமே பிரபஞ்சத்தோட அதாவது இந்த மொத்த யுனிவர்ஸோட ஒரு பகுதிதானாம். யோசிச்சு பாருங்க நாமெல்லாம் இந்த பிரபஞ்சத்துல எவ்வளவு அற்பமான பொருள்னு.

இது தவிர மனித இனம் கண்டுபிடிச்ச வேற சில பிரமிக்க வைக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகளுமே இருக்கு அது என்னங்கிறத பத்தியும் இப்ப பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இப்ப நம்ம பார்த்த ஒவ்வொரு விஷயத்தையும் தெள்ளத் தெளிவாக ஏற்கனவே ஒரு பதிவில் நான் கூறியிருக்கிறேன்.
இதில் சுருக்கமாக சொல்லிவிட்டேன் அதில் இன்னும் விரிவாக எக்கச்சக்கமான விஷயங்களை கூறியிருப்பேன். இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு அந்த பதிவையும் படித்துப் பாருங்கள் நிச்சயம் நீங்கள் விண்வெளியில் பறந்து கொண்டிருப்பீர்கள்.
குறைந்த விலையில் விண்வெளி பயணம்
ஹீலியோசென்ட்ரிக் (Heliocentric)
இன்னைக்கு நம்ம எல்லாருக்குமே தெரியும் பூமி உட்பட மற்ற எல்லா கோள்களுமே சூரியனை சுத்தி வந்துட்டு இருக்குன்னு. அதைத்தான் ஹீலியோசென்ட்ரிசம்னு சொல்லுவாங்க. ஆனா சில நூறு வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் பூமியை சுத்திதான் மற்ற கிரகங்களும் சூரியனுமே சுத்தி வரதா நம்பிக்கிட்டு இருந்தாங்க மனிதர்கள். புவி மையக் கொள்கைன்னு குறிப்பிடுற இதை ஜியோசென்ட்ரிக் தியரினு (Geocentric theory) சொல்லுவாங்க.
ஆனா இதுல ஆச்சரியமான ஒரு விஷயம் என்னன்னா..? முதல் ஹீலியோசென்ட்ரிக் தியரி மாடலை கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்திலேயே அப்ப வாழ்ந்த மனிதர்கள் ஃபாலோ பண்ணி இருந்திருக்காங்க. இருந்தாலுமே ஜியோசென்ட்ரிக் தான் பல காலங்களாவே டாமினேட் பண்ணிருக்கு. அரிஸ்டாட்டில் உள்ளிட்ட சில வானவியல் அறிஞர்கள் சூரியனை சுத்திதான் பூமி உட்பட மற்ற கோல் எல்லாமே சுத்தி வருதுன்னு பல காலங்களுக்கு முன்னாடியே சொல்லி இருந்தாலும்., அது மத நம்பிக்கைகளுக்கு எதிரானதுன்னு, இது தவறான கருத்து மேலும் முரணான விஷயம்னு சொல்லி யாருமே அந்த காலத்துல இதை ஏத்துக்குல. குறிப்பா ஐரோப்பாவுல வாழ்ந்தவங்க ஏத்துக்கவே இல்லை.

15-ஆம் நூற்றாண்டு இறுதி வரைக்குமே இந்த ஹீலியோசென்ட்ரிக் மேத்தமேட்டிக்கல் தியரியானது மாடல்ல மட்டும்தான் இருந்தது. ஆனா 16 ஆம் நூற்றாண்டோட தொடக்கத்துல நிக்கோலஸ் கோப்பர்னிகஸ்ங்கிற (Nicolaus Copernicus Polymath) வானியல் மற்றும் கணித ஆராய்ச்சியாளர் வந்து சொன்னதுக்கு அப்புறம்தான் சூரியனை சுத்தி தான் பூமி உட்பட மற்ற கிரகங்களும் சுத்தி வருதுங்கிறதையும் மனிதர்கள் நம்பவே ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அறிவியல் ஆராய்ச்சிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. விண்வெளி அறிவியல் வளர்ந்ததுக்கு அப்புறம்தான் இந்த ஹீலியோசென்ட்ரிக் தியரிய முழுவதும் எல்லாராலயுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமா மாறியது.
தி ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட் (Human Genome Project)
1869 ஆம் வருஷம் ஸ்விஸ் நாட்டு விஞ்ஞானியான ஃபிரெட்ரிக் மீஷர்ங்கிறவர்தான் (Friedrich Miescher) முதன் முதலா உயிருள்ள திசுக்கள்ல இருந்து DNA விஷயத்தை தனிமைப்படுத்தி, நம்ம உடம்புல DNA ன்னு ஒரு விஷயம் இருக்குங்கிறதையும்., இது புரோட்டீன்ல இருந்து வேறுபட்டு இருந்ததுனால அதுக்கு ஆரம்பத்துல நியூக்ளின் அப்படின்னு பெயரை வச்சிருந்தாரு.

அப்படி அவர் அன்னைக்கு கண்டுபிடிச்ச அந்த விஷயம்தான், அதற்கடுத்த நூற்றாண்டுல அசுர வேகத்துல வளர்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களோட உதவியோட 1990-ல ஆரம்பிக்கப்பட்டு 2003-ல முடிக்கப்பட்ட ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட் (Human Genome Project) வரைக்கும் மிக முக்கியமான காரணம்.

இந்த ப்ராஜெக்ட்டோட நோக்கமே மனிதர்களோட எல்லா வகையான DNAக்களையும் சீக்குவன்ஸ் பண்ணி மனிதர்கள்ல உருவாகுற நோய் குறைபாடு உள்ளிட்ட விஷயங்களுக்கு எந்த மரபணு எந்த DNA காரணம்னு கண்டுபிடிச்சு ஹியூமன் பயாலஜிலயும், மெடிக்கல் சயின்ஸ்லயும் எதிர்காலத்துல ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி நோய்களே இல்லாத மனித இனத்தை உருவாக்குறதுதான் முக்கியமான குறிக்கோள்.
இந்த ஜீன் எடிட்டிங் ப்ராசஸ்ல கிரிஸ்பர் (CRISPR-Cas9 is a genome editing tool) மாதிரியான டூல்ஸ பயன்படுத்தி ரிசர்ச் பண்ணிக்கிட்டு வராங்க ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட இது பிரம்மன் எழுதின தலையெழுத்தை மனிதன் மாத்தி எழுதுறதுக்கு சமம்னே சொல்லலாம்.
தி பிக் பேங் (The Big Bang)
இந்த பிரபஞ்சம் எப்படி உருவானதுங்கிறதை ஆஸ்ட்ரோனாமர்ஸ் விளக்குற விதத்துக்கு பேர்தான் இந்த பிக் பேங். அதாவது இயற்பியல் விஞ்ஞானிகளோட கருத்துப்படி பெருவெடிப்புங்கிற சம்பவம் 13.7 பில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஏற்பட்டு, ஒரு புள்ளி அளவிலிருந்து பல மடங்கு விரிவடைஞ்சு.,
பல பில்லியன், மில்லியன் வருஷங்களை கடந்துதான் இன்னைக்கு இந்த பிரபஞ்சமும், அண்டமும், பால்வெளி மண்டலமும், சூரிய குடும்பங்களும், அந்த குடும்பத்துல 9 கோள்களும், அந்த 9 கோள்கள்ல நம்ம பூமியும் அதுல உயிர்களும் உருவானதுங்கிற விஷயத்தை விளக்கக்கூடிய ஒரு அம்சம்தான் இந்த பிக் பேங் தியரி (The Big bang theory).

அதாவது இந்த தியரி படி பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லா பொருட்களுமே ஒரே ஒரு பெருவிடிப்பிலிருந்து உருவானதுதான். அதனால இந்த பூமியில இருக்கிற உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லா விஷயங்களுக்குமே ஒரு தொடர்பு உண்டுன்னு சொல்லுது இந்த பிக் பேங் தியரி. அறிவியல் நம்புற எல்லாராலயும் பரவலா ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக இந்த பிக் பேங் தியரி இருந்துட்டு வருது.
எவல்யூஷன் (Evaluation)
எவல்யூஷன்ங்கிற இந்த கான்செப்ட் இன்னைக்கு நேத்து இல்ல, பண்டைய கிரேகர்கள் மத்தியில கிமு 500 ஆம் வருஷத்துல அனாக்சிமேண்ட்டர் (Anaximander) என்கிற பிலாசபரால (Philosopher) சொல்லப்பட்டிருக்கு. மனிதர்கள் எல்லாருமே கண்டிப்பா ஒரு விலங்குகிட்ட இருந்துதான் பரிணாம வளர்ச்சி அடைஞ்சு வந்திருக்கணும்ங்கிற விஷயத்தை அவர் 2500 வருஷங்களுக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்காரு.

ஆனா இந்த எவல்யூஷனரி ஐடியாவை பொறுத்தவரைக்கும், அதை யாருமே அறிவியல் பூர்வமா உறுதிப்படுத்தி எழுத்து வடிவமா பல காலங்களாவே மாத்தவே இல்லை. கடவுள்தான் மனிதனை படைச்சதா சொல்லித்தான் எல்லா மதங்களுமே நம்பிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா 1859 ஆம் வருஷம் சார்லஸ் டார்வினோட (Charles Darwin) ஆன் தி ஆர்ஜின் ஆப் ஸ்பீசிஸ்ங்கிற (On the Origin of Species – Book by Charles Darwin) புத்தகம் வெளிவந்ததுக்கு அப்புறம்தான் சர்வைவலுக்காகவும், சுற்றுச்சூழலை பொறுத்தும் பூமியில வாழக்கூடிய உயிரினங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடை பரிணாம வளர்ச்சி அடைஞ்சதுங்கிற விஷயத்தையே மனிதர்கள் தெரிஞ்சுக்கவும் புரிஞ்சுக்கவும் ஆரம்பிச்சாங்க.

1863 ஆம் வருஷம் தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லே (Thomas Henry Huxley) பயாலஜிஸ்ட் ஒரு புக்கை பப்ளிஷ் பண்ணி இருந்தாரு. அதுல மனிதர்களும் ஏப்ஸ்ங்கிற குரங்கினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்க தான் விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டார்வினோட பரிணாமவியல் தத்துவமும், மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் இடையே பல ஒற்றுமை உண்டுங்கிற விஷயமும் அந்த டைம்ல மதம் சார்ந்த குழுக்களுக்கு மத்தியில நிறைய எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் உருவாக்கி இருந்தது.

ஆனால் போதுமான அளவுக்கான அறிவியல் ஆதாரங்கள் அடுத்தடுத்து கிடைச்சதுனாலயும், அறிவியல் வேகமா வளர்ந்ததுனாலயும், பெரும்பாலான மனிதர்களினால இந்த பரிணாம வளர்ச்சி கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜேம்ஸ் (Germs)
ஒரு 100, 150 வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் காற்று மூலமாதான் எல்லா வகையான வியாதிகளுமே மனிதர்களுக்கு இடையில பரவுறதா பலரும் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா 1847 ஆம் வருஷம் ஹங்கேரில மகப்பேறு மருத்துவரா இருந்த இக்னா செமல்ஸ்ங்கிறவர் (Ignaz Semmelweis) கண்டுபிடிச்ச ஒரு விஷயம் ஜேம்ஸ்ங்கிற நோய்க்கிருமிகள் பத்தின உண்மைய உலகத்துக்கு அறிமுகப்படுத்தி இருந்தது.

அதாவது அந்த டைம்ல கைகளை நல்லா கழுவிட்டு மருத்துவர்கள் நோயாளிகளை ட்ரீட் பண்ணும்போது, அவங்களோட இறப்பு எண்ணிக்கை குறையறதையும் அடிக்கடி கைகளை சுத்தம் பண்ணிக்கிற மருத்துவர்கள் தொற்றுநோய் தாக்காம இருக்கிறதையும் கவனிச்சிருக்காரு. அதுதான் நம்ம உடல்ல ஜேம்ஸ் அதாவது நோய்க்கு காரணமான கிருமிகள் ஒட்டி வாழுதுங்கிற ஒரு விஷயத்தை அவர் கண்டுபிடிக்க காரணமாகவும் இருந்தது.
இதனால அடுத்த சில வருஷங்களுக்குள்ளாவே லூயிஸ் பாஸ்டியர், ராபர்ட் மாதிரியான சில மைக்ரோபயாலஜிஸ்ட் ஜேம்ஸ்ல பாக்டீரியா, வைரஸ் மாதிரியான வெவ்வேறு வகையான நோய்க்கிருமிகள் இருக்குங்கிற விவரத்தையும் கண்டுபிடிச்சு அறிவிச்சாங்க. அதனால மனிதர்களுக்குள்ளார பரவர நோய்க்கான காரணம் காற்று மட்டுமல்ல..!

நம்ம உடல்ல ஒட்டி வாழற கண்ணுக்கே தெரியாத சுட்றுச்சூழல்ல இருந்து உருவாகுற நோய்க்கிருமிகள் தான் காரணம்ங்கிற விஷயம் உறுதியானதும். அதை எதிர்க்கிற அழிக்கக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க ஆரம்பிச்சாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
பெனிசிலின் (Penicillin)
மனிதர்கள் கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமான ஒண்ணு எதுன்னு கேட்டா அது இந்த பெனிசிலின் தான். அப்படிப்பட்ட இது 1928 ஆம் வருஷம் ஸ்காட்லாந்தை சேர்ந்த அலெக்சாண்டர் பிளமிங் (Alexander Fleming) அப்படிங்கிற மருத்துவரால எதிர்பாராத விதமாக கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு தடவை அலெக்சாண்டர் பிளமிங் ஹாலிடேவை (Holiday) முடிச்சிட்டு அவரோட கிளினிக்கல் லேபுக்கு (clinical lab) திரும்பி வந்து பார்த்தப்போ பேக்டீரியாவ (Bacteria) வச்சிருந்த வட்டமான கண்ணாடி பொருள்ல பூஞ்சை மாதிரியான ஒரு விஷயம் வளர்ந்திருந்ததையும் அதனால அதை சுத்தி இருந்த பாக்டீரியாக்கள் இறந்து போயிருந்ததையும் கவனிச்சிருக்காரு.
ரொட்டியில வளர்ற பூஞ்சை மாதிரியே இன்னொரு வகையான பூஞ்சையா வளரக்கூடியது பாக்டீரியாக்களை கொல்லுதுன்னு கண்டுபிடிச்சவர் அதுக்கு பெனிசிலியம் நொட்டேட்டம்னு (Penicillium chrysogenum) பெயர் வச்சு மனிதர்கள்ல பரவுற பாக்டீரியா தொற்றுகளை அழிக்கிறதுக்கான மருந்தா அதை அறிமுகப்படுத்தி இருந்தாரு.

இரண்டாம் உலகப்போர் சமயங்கள்ல இந்த பெனிசிலியம் தான் போர்ல காயம் அடைஞ்சவங்களுக்கு முக்கியமான ஆன்டிபயாடிக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த பெனிசிலியம் மருந்து அப்படி பர்டிகுலரா (particular) என்ன பண்ணும்னா..? பாக்டீரியாவோட செல் சுவர்களை உடைக்கிறது மூலமா அது பாக்டீரியாவை பலவீனப்படுத்துது.
அதனால அது நம்ம உடம்போட இம்மியூன் சிஸ்டமை தூண்டிவிட்டு அது தொற்று நோயை எதிர்த்து போராட உதவியும் செய்யுது. அதனால அப்படிப்பட்ட இந்த பெனிசிலினை உண்மையிலேயே அற்புதமான மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புன்னு தான் சொல்லணும்.
தி காட் பார்டிகிள் (The God Particle theory)
சில அறிவியல் கண்டுபிடிப்புகள் முழுமை அடைய அதிகமான காலங்கள் எடுத்துக்கும். அப்படியான ஒரு விஷயம்தான் இந்த காட் பார்டிகள். இந்த பூமி உருவாக காரணமான கல்மண், மழை தண்ணீர் அதுல வாழற உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்கள்னு எதை எடுத்துக்கிட்டாலும் அது எல்லாமே அணுக்களால கட்டமைக்கப்பட்ட ஒன்னு. அந்த அணுக்கள் எல்லாம் அடிப்படை துகள்களான புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் உள்ளிட்ட விஷயங்கள்னால கட்டமைக்கப்பட்டிருக்கணும் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். ஸ்கூல்லயே படிச்சிருப்பீங்க..!

ஆனா அந்த அடிப்படை துகள்களுக்குமே கூட ஒரு மாஸ், அதாவது நிறை இருக்கும். அப்படிப்பட்ட அது எங்கிருந்து கிடைக்குது..? மேலும் அதுக்கு அடிப்படை காரணம் என்னங்கிற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க தெளிவா சொல்லப்பட்ட ஒரு ஆதாரம்தான் இந்த ஹிக் போசான் துகல் (Higgs boson). அப்படிப்பட்ட இதை காட் பார்டிகள் அதாவது கடவுள் துகல் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. மொத்த பிரபஞ்சத்தையும் கட்டமைச்ச எல்லா அடிப்படை துகள்களுக்கும் இதுதான் மாஸ் அதாவது எடையை கொடுக்குதுன்னு.,
1964 ஆம் வருஷம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஹிக்ஸ் துகளை (Higgs boson) 2012 ஆம் வருஷம் சன்ல இருக்கிற ஹேட்ரான் கொலைடர்ங்கிற (Hadron Collider) 17 மைல் நீளத்துக்கான சூப்பர் கண்டக்டிங் மேக்னெட்டிக் ரிங்க (magnetic ring) வச்சு அடிப்படை துகள்களை அதிவேகமா மோதவிட்டு எனர்ஜியை பூஸ்ட் பண்ணி அந்த காட் பார்டிக்களை உருவாக்குற முயற்சியிலயும் ஈடுபட்டாங்க ஆராய்ச்சியாளர்கள்.

ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் (Angeles and demons) ஹாலிவுட் படத்துல கூட நீங்க இதை பார்த்திருக்கலாம். இன்னும் இதை பத்தி டீடைல்டா தெரிஞ்சுக்கணும்னா youtubeல நிறைய வீடியோஸ் இருக்கு காட் பார்டிகள்னு சர்ச் பண்ணி பாருங்க கிடைக்கும்.
தி தியரி ஆப் ரிலேட்டிவிட்டி
நிஜத்துல சாத்தியமான எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுமே ஒரு விஞ்ஞானியோட தொடர் கற்பனையினால உண்மையா மாறின விஷயங்கள்தான். அப்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னோட 16 வது வயசுல லைட்டோட வேகத்தை துரத்துறதா நினைச்சு செஞ்ச கற்பனைதான், ரெண்டு பகுதிகளை கொண்ட சார்பியல் கோட்பாட்டை அதாவது தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டிங்கிற விஷயத்தை கண்டுபிடிக்க முக்கிய காரணமா இருந்தது.

ஒன்னோட ஒன்னு தொடர்பு கொண்ட நிலையான வேகம் மற்றும் ஒளியுடைய வேகம் மாறாதுங்கிறத விளக்குறதுதான் இவரோட ஃபேமஸான ஈக்குவேஷனான e = mc² ஓட விளக்கம். இதோட அடிப்படையிலதான் விண்வெளில பயணம் செய்யற ஒளியோட வேகம், கோள்களோட இயக்கம்னு சொல்லி பல விஷயங்களுக்கு காரணமும், விடையும் கிடைச்சிருந்தது.
அறிவியல் உலகத்துக்கு இதை பத்தி நிறைய பேர் தமிழ்லயும் மற்ற மொழிகள்லயும் தெளிவா விளக்குன வீடியோஸ் நிறைய இருக்கு youtubeல சர்ச் பண்ணி பாருங்க.
குவான்டம் மெக்கானிக்ஸ் (Quandam mechanicals)
ஐன்ஸ்டீனோட ஜெனரல் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டிங்கிற கோட்பாடு பெரிய அளவுல இருக்கிற பொருட்களை ஆய்வு செய்ய பெரும் உதவியாவும், சிறந்த கோட்பாடாகவும் இருந்தது. அதே சமயம் சிறிய அளவுல அதாவது அணு அளவுக்கான பொருட்களோட ஆற்றலையும் அதோட இயக்கத்தையும் விளக்க இயற்பியல் மற்றும் வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் குவான்டம் மெக்கானிக்ஸ்தான் இன்னைக்கும் பெருசா நம்பி இருக்காங்க.
மருத்துவத் துறைகள்ல எம்ஆர்ஐ மெஷின்களையும், அட்டாமிக் கிளாக் கிளாஸ் டிரான்சிஸ்டர், கம்ப்யூட்டர்ஸ், குவான்டம் கம்ப்யூட்டிங் லேசர் டெக்னாலஜி மாதிரியான விஷயங்கள்ல குவான்டம் மெக்கானிக்ஸ் தான் இன்னைக்கும் பயன்படுத்தப்படுது. இன்னும் ஆராய்ச்சி வடிவத்துலயும் இருக்கு.

ஃபைனலி இந்த பதிவு உங்களுக்கு பல பயனுள்ள தகவல்களை சொல்லி இருக்கும்னு நான் நம்புறேன். பிடிச்சிருந்ததுன்னா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க அதோட இந்த பதிவு உங்களுக்கு இன்ட்ரஸ்டிங்கான ஒண்ணாவும் இன்ஃபர்மேட்டிவ்வான ஒண்ணாவும் இருந்ததுன்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா நம்ம telegram மற்றும் whatsapp சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி உங்க ஆதரவ தாங்க நண்பர்களே…
நாளை மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝