
தபேலா இசைக்கலையின் மேஸ்ட்ரோ அப்படின்னு அழைக்கப்பட்ட திரு ஜாகிர் உசேன் அவர்கள் (15-12-2024) இன்றைய தினம் காலமாயிருக்கார் 73 வயதுல. இயற்கை நோய் சம்பந்தமான ஒரு பாதிப்பினால அவருடைய மரணம்ங்கறது நிகழ்ந்திருக்கு.
இன்னைக்கு அவருடைய புகழ்ங்கிறது உலகம் முழுக்க பரவி இருக்கு. நிறைய பேருக்கு தபேலா இசைக்கலை மேல ஒரு ஆர்வம் வந்ததுக்கு மிக முக்கியமான காரணமே அவர்தான், அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை இசைத்துறையில் அவர் கொடுத்திருக்காரு ஆனா அவருடைய ஆரம்ப காலம்ங்கறது ரொம்ப ரொம்ப கண்ணீர் நிறைந்த ஒண்ணாதான் இருந்திருக்கு. அவர் எப்பேர்ப்பட்ட படிகளை எல்லாம் கடந்து இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு இருக்காருங்கறத அவர் மறைந்த இந்த நாள்ல அவரைப் பத்தி நினைவு கூறுவோம்.
இன்னைக்கு நாம பார்க்க போறது ஜாகிர் ஹுசைனின் கதை வாங்க இசைத்துறையில தனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள். அவருடைய தபேலா இசையை எவ்வளவு நேரம் ஆனாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அந்த அளவுக்கு மெய்மறக்கக்கூடிய ஒன்னு. அவருடைய நிறைய பெர்ஃபார்மன்ஸ் இப்பவும் youtubeல நிறைய இருக்கு முடிஞ்சா போய் பாருங்க.
தபேலா அப்படிங்கறது ஒரு இசை குழுவுல பக்கவாத்தியமாதான் பார்க்கப்பட்டுட்டு இருந்தது, ஆனா அதையும் உலகம்பூரா ஒரு மெயின் இன்ஸ்ட்ருமெண்ட்டா, ஒரு சோலோ பெர்ஃபார்மரா கொண்டு வந்ததுல ரொம்ப முக்கியமான பங்களிப்புங்கிறது ஜாகிர் ஹுசைனுக்கு இருக்கு. அதுக்கு முன்னாடி நிறைய சோலோ பெர்ஃபார்மர்ஸ்லாம் இருக்காங்க, ஏன் அவருடைய அப்பாவே மிகச்சிறந்த ஒரு தபேலா வித்துவான்.

ஆனா இப்ப இருக்கக்கூடிய ஜெனரேஷனுக்கு இதை கொண்டு போய் சேர்த்தது ஜாகிர் ஹுசைன் தான் ஜாகிர் ஹுசைன் அப்படின்னாலே நமக்கு அந்த டீ விளம்பரம் தான் ஞாபகம் வரும். கடகடன்னு அவர் வாசிச்சு முடிச்சிட்டு, வா தாஜ் அப்படின்னு அவர் சொல்லும்போது அந்த இசையோட சேர்ந்து டீயை சுவைக்கணும்னு அப்படிங்கிற ஆசை வந்துரும். ஜாகிர் ஹுசைன் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவ்வளவு ஈஸியா ஒன்னும் அடையல அவருடைய அப்பா ஒரு மிகப்பெரிய ஒரு இசைக் கலைஞனா இருந்திருந்தாலும், இவர் பெற்ற வெற்றி அவ்வளவு சுலபமா அவருக்கு கிடைக்கல.
அதுக்குனு நிறைய உழைப்பையும், டெடிகேஷனையும் இவர் கொடுத்திருக்காரு. ஆனா இது எல்லாத்துக்கும் முன்னாடி அவருடைய தொடக்கம் இருக்கு பார்த்தீங்களா..! அதுதான் ரொம்ப கண்ணீர் சிந்த வைக்கக்கூடிய ஒண்ணா இருக்கு. 1951 வது வருஷம் மார்ச் மாசம் ஒன்பதாம் தேதி மும்பைல இருக்கக்கூடிய மாஹீம் அப்படிங்கிற ஒரு பகுதியில் பிறந்தவர்தான் ஜாகிர் ஹுசைன்.
இவர் உஸ்தாத் அல்லா ரக்கா அப்படிங்கிற ஒரு மிகப்பெரிய தபேலா மியூசிசியனுக்கு மகனா பிறந்தவர். இவருக்கு முன்னாடி மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாங்க. அதுக்கப்புறம் மகனா இவரு பிறந்திருக்காரு, நல்லா யோசிச்சு பாருங்க மூன்று பெண் குழந்தைகள் அதுக்கப்புறம் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கு அந்த ஃபேமிலி அவரை எவ்வளவு தூரம் கொண்டாடி இருப்பாங்க. ஆஹா நமக்கும் ஒரு பையன் பிறந்துட்டான் அப்படின்னு எல்லாம் யோசிச்சிருப்பாங்க அந்த பீரியட் ஆஃப் டைம்ல.

ஆனா அவர் பிறந்தப்போ அவரை ஒரு சாபக்கேடா தான் அவங்களுடைய அப்பா, அம்மா பார்த்தாங்க. ஜாகிர் ஹுசைன் பிறந்த சமயத்துல அவருடைய அப்பா உஸ்தாத் அல்லா ரக்கா அவருக்கு உடல்நிலை ரொம்பவே மோசமா இருந்துச்சு, படுத்த படுக்கை ஆயிட்டாரு. எந்த அளவுக்கு நிலைமை மோசமா இருந்ததுன்னா, இதுக்கு மேல அவர் பொழைக்க மாட்டாரு அப்படின்னு சொல்ற அளவுக்கு நிலைமை மோசமாயிருச்சு. அவருக்கு தெரிந்த நண்பர்கள் எல்லாருமே கடைசியா அவரை போய் பார்த்து வந்துருவோம் அப்படின்னு சொல்லி அவரை வந்து பார்க்கக்கூடிய அளவுக்கு அவருடைய நிலைமை மோசமா இருந்துச்சு.
அப்படி ராஜ் கபூர், நர்கிஸ், அசோக் குமார்னு மிகப்பெரிய பிரபலங்கள் எல்லாம் கூட அவருடைய வீட்டுக்கு வந்து கடைசியா அவரை பார்த்துட்டு போயிரலாம், அப்படின்னு ஆறுதல் சொல்ற அளவுக்கு வந்துட்டாங்க. இது வந்து இவர் பிறந்தப்போ நடந்ததால இவரால தான் இது நடந்திருக்கு இவர் வந்து குடும்பத்துக்கு ஒரு சாபமா வந்திருக்காரு அப்படின்னு சொல்லி அவருடைய அம்மா அவருக்கு தாய்ப்பால் கொடுக்குறதுக்கு கூட மறுத்து அவரை ஒதுக்கி வச்சுட்டாங்க.
கைக்குழந்தையா பசியில துடிச்சுக்கிட்டு இருந்த ஜாகிர் ஹுசைனுக்கு உதவிங்கிறது, அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தர்கால இருந்தான் கிடைச்சது. அந்த தர்காவுக்கு பக்கத்துல ஒரு பெண்மணி இருந்திருக்காங்க அவங்கதான் ஜாகிர் ஹுசைனுடைய நிலைமையை பார்த்து கவலைப்பட்டு அவங்க தாய்ப்பாலை கொடுத்து அவரை காப்பாத்தி இருக்காங்க. கொஞ்ச காலத்துக்கு ஜாகிர் ஹுசைனுக்கு தாயா இருந்தது அந்த பெண்மணிதான். அவங்களுடைய பெயர் பேர் என்னங்கிறது கூட ஜாகிர் ஹுசேனுக்கு அதுக்கப்புறமா தெரியாது.

ஆனா அந்த சமயத்துல அவரை முழுசா காப்பாத்துனது அந்த அம்மாதான், ஆனா தாய்ப்பால் கொடுத்து அவரை பார்த்துக்கிட்டாலும், அவருடைய நிலைமைங்கிறது ரொம்ப மோசமாக ஆரம்பிச்சிருக்கு. அவருடைய உடல்நிலை இங்க மோசமாக மோசமாக அவருடைய அப்பாவுக்கு உடல்நிலைங்கிறது அங்க தேற ஆரம்பிச்சிருக்கு. அதனால அவங்க அம்மா முடிவே பண்ணிட்டாங்க இவன் ஏதாவது ஆனாதான் என் புருஷன் பொழைப்பான் அப்படிங்கிற ரேஞ்சுக்கு அவங்க யோசிச்சுட்டாங்க.
இந்த சமயத்துல அவங்களுடைய வீட்டுக்கு ஒரு துறவி வந்திருக்கான், துறவிகிட்ட இந்த நிலைமையெல்லாம் எடுத்துச் சொன்னப்போ, அவர் வந்து இல்லை இல்லை இந்த மகனை நீ பத்திரமா பார்த்துக்கோ. இவனுக்கு ஜாகிர் உசைன் என்கிற பெயரை நீ வை, இவனால உன் குடும்பத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பெருமை வரப்போகுது, உன்னுடைய கணவனுக்கும் மிகப்பெரிய அளவுக்கு பெருமை வரப்போகுது, அப்படின்னு சொல்லி இருக்காரு அவருடைய பேர் என்ன அவர் எந்த மத சாமியார் அப்படிங்கறதெல்லாம் கூட யாருக்கும் தெரியல ஆனா அவர் வந்து சொன்னதுக்கு அப்புறமாதான் ஜாகிர் ஹுசைனுக்கு ஜாகிர் ஹுசைன் என்கிற பேரே வந்திருக்கு.
அதே மாதிரி அவங்களுடைய அம்மா அதுக்கப்புறம் ஆறுதல் அடைஞ்சு அவரை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. சின்ன வயசுல இருந்தே ரொம்ப கட்டுப்பாடான ஒரு சூழல்லதான் ஜாகிர் ஹுசைன் வளர்ந்திருக்காரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களாம் அவங்க அம்மா. டிசிப்ளின்ங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியமா கடைபிடிக்கப்பட்டிருக்கு அவருடைய குடும்பத்துல. எந்த அளவுக்கு அந்த டிசிப்ளின் இருந்திருக்குன்னா..?
எவ்வளவுதான் நீ வசதியோட இருந்தாலும் சரி மொகரம் பண்டிகையையொட்டி ஒரு பையை எடுத்துக்கிட்டு போய், ஏழு பேர் கிட்ட பிச்சை வாங்கி அதை உன்னை விட ஏழ்மையில இருக்கிறவங்களுக்கு பிரிச்சு கொடுக்கணும் அப்படின்னு, ஸ்ட்ரிக்ட்டா அவங்க அம்மா சொல்லி இருக்காங்க. இந்த பழக்கத்தை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆகுற வரைக்கும் ஜாகிர் ஹுசைன் ஃபாலோ பண்ணியிருக்காரு. அமெரிக்காவுக்கு போனதுக்கு அப்புறமா அவருக்கு பதிலா அவருடைய அம்மா அவருக்காக செஞ்சிருக்காங்க.

அவ்வளவு காலத்துக்கும் இதை தொடர்ந்து ஜாகிர் ஹுசைன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணிருக்காரு. ஜாகிர் ஹுசைனுக்கு அவருடைய ஏழு வயதிலிருந்து இசைப்பயிற்சிங்கறது கொடுக்கப்பட்டுச்சு. அதுவும் அவருடைய அப்பாதான் அவருக்கான குருவா இருந்து வழிகாட்டி இருக்காரு. ஏழு வயதிலிருந்து வாசிக்க ஆரம்பிச்சவர் 13 வயசுல ஸ்டேஜ் ஏற ஆரம்பிச்சுட்டார். ஆனா அந்த சமயத்துல அவர் தனியா ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்றதுக்கு அனுமதிக்கப்படல.
அவருடைய அப்பா மூலமா, எந்தெந்த கச்சேரிக்கு எல்லாம் அவர் போனாரோ அந்த ஸ்டேஜ்ல எல்லாம் இவரையும் அழைச்சுக்கிட்டு போயி கூடவே இருந்து எல்லாத்தையுமே சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு அவருடைய அப்பா. சித்தார் இசை மேதையான ரவிசங்கர் அவர்களுடைய ஆஸ்தான தபேலா வித்வானா இருந்தாரு. அதனால எல்லா முக்கியமான கச்சேரிக்கும் இவரையும் அழைச்சிட்டு போயிருக்காங்க.
ரவிசங்கர் அவர்களுக்கும் அவருடைய அப்பாவுக்கும் இருந்த அந்த அன்யோன்யமான உறவுங்கிறது, இவருக்கு ரொம்பவே இன்ஸ்பையர் ஆயிருக்கு நாமளும் இதே மாதிரி ஒரு பெரிய தபேலா ஆர்டிஸ்ட்டா மாறனும் அப்படின்னு சொல்லி கனவு காண ஆரம்பிச்சாரு ஜாகிர் ஹுசைன். அதை தன்னுடைய இளம் வயதிலேயே நிரூபிச்சும் காமிச்சாரு. தன்னுடைய இளம் வயதுல தன்னுடைய அப்பாவோட சேர்ந்து பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சாரு ஜாகிர் ஹுசைன்.

இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண கச்சேரிகளுடைய விஷுவல்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா வேற லெவல்ல இருக்கும் ரெண்டு பேரும் ஜுகல் பந்தியில வந்து போட்டி போட்டு வாசிப்பாங்க அது பாக்குறதுக்கும், கேக்குறதுக்கும் மெஸ்மரைசிங்கா இருக்கும் மிஸ் பண்ணாதீங்க. அதுக்கப்புறம் தனியா இவரே பெர்ஃபார்மன்ஸ் பண்ண ஆரம்பிக்கிறாரு, தபேலா இசையில தனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க ஆரம்பிக்கிறார். இவருடைய தபேலா இசைக்கு ஈடு இணை யாருமே கிடையாது அப்படின்னு சொல்ற அளவுக்கு இவருடைய இசைக்கச்சேரிக்காக மட்டுமே கூட்டம் அலைமோத ஆரம்பிச்சது.
ஜாகிர் ஹுசைன் அதுக்கப்புறமா மிகப்பெரிய வளர்ச்சி அடைய ஆரம்பிச்சார். ஒரு வருஷத்துக்கு 150 கச்சேரிகளுக்கு மேல செய்யக்கூடிய அளவுக்கு கன்டினியூஸா அவருடைய கச்சேரிங்கிறது இருந்துகிட்டே இருந்துச்சு. அது மட்டும் இல்லாம பல முக்கியமான படைப்புகள்லயுமே அவருடைய பங்களிப்பு அப்படிங்கறது இருந்தது குறிப்பா திரைத்துறையில மிகச் சிறந்த பாடல்களுக்கெல்லாம் அவருடைய தபேலாங்கிறது மேஜிக் பண்ணியிருக்கு.
இப்படி இசையில மட்டும் பங்களிப்பு செய்யாம நடிக்க கூட செஞ்சிருக்காரு ஜாகிர் ஹுசைன். அவர் நடிச்ச ரெண்டு மூணு திரைப்படங்கள் கூட வந்திருக்கு, அதுல ஒரு படத்துடைய பெயர் வந்து சாஸ். இது சினிமா இசைத்துறையை பேஸ் பண்ணி உருவாக்கப்பட்ட படம் அதுல ஜாகிர் ஹுசேனாவா அவர் நடிச்சிருப்பாரு.

ஜாகிர் ஹுசேனை தனித்துவமா காட்டக்கூடியது ரெண்டு விஷயம் ஒன்னு அவர் கர்நாடிக் இசைக்கலையில, இல்ல ஹிந்துஸ்தானி இசையில மட்டுமே தபேலா வாத்தியம் இருக்கணும் அப்படின்னு யோசிச்சா அந்த துறையில மட்டுமே அவர் கான்சென்ட்ரேட் பண்ணல தபேலா அப்படிங்கறது உலகம் முழுக்க பயணிக்கணும் உலக இசையோட அது போட்டி போடணும் உலக இசையில அது ஒரு அங்கமா இருக்கணும், அப்படின்னு ஒரு மிகப்பெரிய கனவோடு இருந்தாரு ஜாகர் ஹுசைன்.
அப்படி தபேலாவை உலக இசையோட ஒன்றிணைச்சு ரொம்ப சூப்பரான ஆல்பம்ஸ் எல்லாம் கூட ரிலீஸ் பண்ணிருக்காரு. அந்த பியூஷன் (மற்றவரோடு இணைந்து) ஒவ்வொன்னுமே ஒவ்வொரு விதத்துல இருக்கும். ஜாஸ் இசையோட அவர் தபேலாவை வந்து பியூஷன் பண்ணி ரிலீஸ் பண்ண இசை ஆகட்டும், இல்ல ராக் மியூசிக்கோட தபேலாவை இணைச்சதாகட்டும், இது எல்லாமே தனித்துவமா இருந்துச்சு அது மட்டும் இல்லாம இது ஒரு தனி ஜானராவே உருவாச்சு.
இப்படி அவர் பண்ண பல முயற்சிகள் தான் உலக அளவுல அவரை கொண்டு போய் சேர்த்துச்சு, உலக அளவுல அங்கீகாரமும் அவருக்கு கிடைச்சது. நான்கு முறை கிராமிய விருது வாங்கின இசைக்கலைஞர். இதுல சிறப்பு என்னன்னா, இவர் வாங்குன இந்த நாலு கிராமிய விருதுகள்ள, மூணு கிராமிய விருதுகள் ஒரே நைட்ல வாங்கி இருந்தார், அப்பேற்பட்ட கலைஞர்தான் ஜாகிர் ஹுசைன்.
இப்படி இன்டர்நேஷனல் லெவலுக்கான அங்கீகாரம் மட்டும் இல்லாம இந்திய அளவிலேயே மிகச் சிறந்த விருதுகளான பத்மஸ்ரீ பத்மபூஷன், பத்ம விபூஷன் மாதிரியான விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர் ஜாகிர் ஹுசைன். இப்படி தன்னுடைய திறமையால தபேலா இசைக்கலையை மிகப்பெரிய அளவுக்கு கொண்டு போய் சேர்த்தாருன்னா, அவருடைய இன்னொரு குணம்ங்கிறது அதை இன்னும் முழுமையாக்கிச்சு.
அது என்னன்னா..? அது எந்த விதமான ஃபங்க்ஷனா இருந்தாலும் சரி, கல்யாணம், காது குத்துன்னு எந்த ஃபங்க்ஷனா இருந்தாலும் சரி, இல்ல பார்ட்டிஸா இருந்தாலும் சரி, எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி நான் அதுல தபேலா வாசிக்க மாட்டேன் என்கிற கொள்கையை வச்சிருந்தாரு ஜாகிர் ஹுசைன். ஏன்னா அங்க வர்றவங்க பார்ட்டி பண்றதுக்காக என்ஜாய் பண்றதுக்காக வராங்க இசையை கேட்கணும் இசையை ரசிக்கணும்னு அவங்க வர்றது இல்லை, இசை அங்க ஒரு சைடா தான் இருக்கும். இசையை ரசிச்சு இசையை நேசிச்சு வர்றவங்க மத்தியிலதான் நான் இசையை வாசிப்பேன் அப்படிங்கறதுல இறுதி வரைக்கும் உறுதியோடு இருந்தவர் ஜாகிர் ஹுசைன்.

இப்படி தபலா மியூசிக்கு மிகப்பெரிய மரியாதையை பெற்றுத் தந்த ஜாகிர் ஹுசைன் அது அடுத்த ஜெனரேஷனுக்கு போய் சேரணும் அப்படிங்கறதுக்காக, பல எங்கர் ஜெனரேஷனுக்கு தன்னுடைய சொந்த முயற்சியில ட்ரைனிங் கொடுத்திருக்காரு ஜாகிர் ஹுசைன். அது மூலமா இன்னும் பல கலைஞர்கள் வந்து இந்தியாவிலிருந்து உருவாகிட்டு இருந்தாங்க. அதே மாதிரி மத நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருந்தவர் ஜாகிர் ஹோசீன்.
அவருடைய ஃபேமிலிலேயே பல மதப்பழக்கங்கள் இயல்பாவே இருந்துச்சு அவருடைய மனைவி ஒரு கிறிஸ்தவரா இருந்தாங்க. அதே மாதிரி அவர் பர்சனலா ஒரு இஸ்லாமியனா இருந்தாலும், தன்னுடைய கலை மூலமா சரஸ்வதியையும், கணேசனையும் தான் நான் போற்றி பாடுறேன் அப்படிங்கறத வெளிப்படையா சொன்னவர் ஜாகிர் ஹுசைன். இப்படி பல விஷயங்களுக்கு எடுத்துக்காட்டா இருந்த திரு ஜாகிர் ஹுசைன் அவர்கள் தன்னுடைய 73 வயதுல இருதய நோய் பிரச்சனை காரணமா சான் பிரான்சிஸ்கோல இருந்த ஒரு ஹாஸ்பிடல்ல வந்து அட்மிட் ஆயிருந்தாரு.
ஆனா சிகிச்சை பலன் அளிக்காம டிசம்பர் மாசம் 15 ஆம் தேதி 2024 அப்போ காலமானார் ஜாகிர் உசைன். அவருடைய உயிர் வேணா பிரிஞ்சிருக்கலாம், ஆனா அவருடைய புகழ் அப்படிங்கறது அவருடைய இசை மூலமா என்னைக்குமே நிரந்தரமா இருக்குங்கிறதுல மாற்றுக் கருத்து இல்ல. அதனாலதான் ரெஸ்ட் இன் பீஸ் அப்படின்னு சொல்றதை விட ரெஸ்ட் இன் பீட்ஸ் ஜாகி ஹுசைன் அப்படின்னு ட்ரெண்ட் ஆகிட்டு இருக்காங்க நெட்டிசன்ஸ்.
இவ்வளவு நேரம் நீங்க இவரோட சுவாரசியமான இன்ட்ரஸ்டிங்கான அண்டோல்ட் ஸ்டோரியை தெரிஞ்சுக்கணும்னு படிச்சிருந்தா நிச்சயமா இவர் மேல மதிப்பும், மரியாதையும் வச்சுதான் அவரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு படிச்சிருப்பீங்க. அவரோட ஆத்மா சாந்தி அடைய உங்க சார்பா நீங்களும் இறைவனை வேண்டிக்கோங்க.
இந்த ஒரு கட்டுரையை உருவாக்குவதற்கு அவர் இறந்த தேதியிலிருந்து எனக்கு பத்து நாட்களுக்கு பக்கமாக எடுத்துக் கொண்டது. ஏனென்றால் நம் கூறக்கூடிய தகவல் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு இந்த பதிவை உருவாக்கி இருக்கிறேன். ஆகவே நீங்கள் ஒரு புத்தகப் படிப்பாக இருந்தாலும் அல்லது பல சுவாரசியமான தகவல்களை நான் படித்து தெரிந்து கொள்வேன் அப்படிங்கிற ஆர்வம் இருக்கிறவங்களா இருந்தாலும் சரி மறக்காம நம்மளோட டெலிகிராமில் ஜாயின் பண்ணிக்கோங்க.
பல சுவாரசியமான தகவல்கள் அங்க நான் உங்களுக்காக கொண்டு வருவேன் வேகமாக, அதாவது உடனடியாக உங்களுக்கு அப்டேட் கிடைச்சிரும். மேலும் நான் கொடுத்த இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பேஸ்புக்கில் ஒரு லைக் பண்ணி விட்டு அந்த பதிவை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிந்திட உதவுங்கள் நண்பர்களே.
நான் உங்கள் காவியா மீண்டும் ஒரு சுவாரசியமான இன்ட்ரஸ்டிங்கான தகவலோடு உங்களை வந்து சந்திக்கிறேன், நன்றி வணக்கம்…📝