நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் இதைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அதாவது நீங்கள் ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் நிச்சயம் இந்த ஒரு பதிவை படித்து பாருங்கள். உங்களுக்கு பல்வேறு விதமான ஐடியாக்கள் கிடைக்கும். மற்றும் இவர்கள் செய்த தவறை நீங்கள் செய்யாமல் இருக்கலாம். பல்வேறு விதமான பாடங்களை உங்களுக்கு இந்த பதிவுக்கு விளக்கும். பாடங்கள் என்ற உடன் புத்தகங்களில் படிக்கும் பாடமா என்று பயந்து விடாதீர்கள். வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பல பாடங்களை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ஒரு இரண்டு நிமிடம் பொறுமையாக படித்து பாருங்கள்.

55 வருஷத்துக்கு முன்னாடி 24 வயது நேர்ந்த ஒரு இளைஞன், குஜராத் மாநிலத்துல தான் தயாரிச்ச வாஷிங் பவுடர ஒரு சாதாரணமான கேரிபேக்ல பேக் பண்ணி சைக்கிள்ல மூட்டையா வைத்தபடி, வேலைக்கு போறதுக்கு முன்னாடி தெருத்தெருவா வித்துட்டு போயிருந்திருக்காரு இப்படி ஆரம்பிக்கப்பட்ட அவருடைய அந்த சின்ன பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 13 வருடத்துல டிடர்ஜென்ட் மார்க்கெட் உடைய சேல்ஸ்ல நம்பர் ஒன் இடத்தை பிடிக்குது.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறங்குறது சாதாரணமான ஒரு விஷயமே கிடையாது. அதுக்கு பின்னாடி அவ்வளவு ஹார்ட் வொர்க் மற்றும் பல டெக்னிக்கலான விஷயம் எல்லாம் இருக்கு. அந்த 24 வயசு பையன் யாரு.? எப்படி அந்த கம்பெனியை நம்பர் ஒன் பிளேஸ்க்கு கொண்டு வந்தாரு.? அதன் பிறகு அந்த கம்பெனி இப்போவர நம்பர் ஒன் பிளேஸ்லதான் இருக்கா.?

நான் என்ன வாஷிங் பவுடரை பத்தி பேசப்போறேன் அப்படிங்கறது கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். குறிப்பா 80ஸ் 90ஸ்ல பிறந்தவங்களால கண்டிப்பா இந்த கம்பெனியுடைய விளம்பர பாடலை மறந்திருக்கவே முடியாது. அது என்ன கம்பெனி அவர் எப்படி நம்பர் ஒன் பொசிஷனுக்கு போனாரு அப்படிங்கறத பத்திதான் இன்னைக்கு தெள்ளத்தெளிவா பார்க்க போறோம்.

1945 மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் மாவட்டத்துல, ரூபர் அப்படின்ற ஒரு சின்ன கிராமத்துல உள்ள விவசாய குடும்பத்துல பிறந்தவர்தான் இந்த கர்சன் பாய் பட்டேல். 21 வயசுல இவர் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முடிச்சிருந்திருக்காரு. அதன் பிறகு அகமதாபாத்ல உள்ள லால்பாய் குரூப்ஸ் என்ற நிறுவனத்தினுடைய காட்டன் மில்ஸ்ல (Spinning Mills) லேப் டெக்னிசியனா வேலை பாக்குறாரு. அதன் பிறகு குஜராத் மாநிலத்துடைய ஜூவாலஜி அண்ட் மைனிங் டிபார்ட்மென்ட்ல கெமிக்கல் சைடுல ஒரு வேலை ஒன்னு கிடைக்குது. என்னதான் இவருக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சாலுமே அதுல இருந்து கிடைக்கிற வருமானம் அவருக்கு போதுமான அளவுக்கு இல்லை.

இதற்கு நடுவுல இவருக்கு திருமணமாகி பெண் குழந்தைகள் எல்லாம் பிறந்துட்டதுனால அவருடைய தேவைகளை பூர்த்தி பண்ணிக்கொள்ள முடியாம போகுது. இதன் காரணமா சின்னதா ஏதாவது பிசினஸ் பண்ணலாமா அப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிற சமயத்துலதான் ஒரு மாசான ஐடியா இவருக்கு உதிக்கிது. அதாவது இவருக்கு கெமிக்கல் சைடுல எந்தெந்த கெமிக்கல்ஸ் எப்படி ரியாக்ட் பண்ணும் அப்படின்ற நாலேஜ் நிறையவே இருந்திருக்கு. இதன் காரணமா வீட்டிலேயே ஒரு டிடர்ஜென்ட் பவுடரை தயாரிக்கலாம்ன்னு சொல்லி பிளான் பண்ணி இருக்காரு.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

அதன் அடிப்படையில சோடா ஆஷ் கூட டிடர்ஜென்ட் கெமிக்கல்ஸ் எல்லாம் சேர்த்து புதுசா ஒரு பவுடரை தயாரிக்கிறதுக்கு முயற்சி பண்றாரு. ஆரம்பத்துல அது எதுவுமே அவருக்கு சக்சஸ் கொடுக்கல. ஒரு நீண்ட போராட்டத்துக்கு பிறகுதான் தான் அவர் ஒரு மஞ்ச கலர்ல இருக்கக்கூடிய ஒரு வாஷிங் பவுடரை கண்டுபிடிக்கிறாரு. இந்த வாஷிங் பவுடருக்கு என்ன பெயர் வைக்கலாம்ன்னு சொல்லி யோசிக்கும் போதுதான் தன் மகளுடைய பெயரான ‘நிர்பாமா’ அப்படின்ற பெயரை சுருக்கி நிர்மா அப்படின்னு அந்த வாஷிங் பவுடருக்கு தன் மகளோட பேரையே வச்சிருக்காரு.

அதன் பிறகு தான் தயாரிச்ச அந்த வாஷிங் பவுடரை சின்ன சின்ன கேரி பேக்ல, அதாவது மளிகை கடையில எப்படி ஒரு சர்க்கரை பாக்கெட்டை கட்டி கொடுப்பாங்களோ அந்த மாதிரி ஒரு பிளாஸ்டிக் கவர்லதான் இவருடைய வாஷிங் பவுடரை பேக் பண்ணி துணியில ஒரு மூட்டையா கட்டி அதை சைக்கிள்ல தெருத்தெருவா வித்துக்கிட்டு வராரு. ஒரு சில மக்களுமே அதை வாங்கி பயன்படுத்தி பார்த்திருக்காங்க.

அந்த சமயத்துல 1 kg வாஷிங் பவுடரை வெறும் ₹3.50 பைசாவுக்கு கொடுக்கிறாரு. இவர் கூட காம்படிஷன்ல இருக்கிற பெரிய பெரிய கம்பெனி எல்லாமே பெரிய பேக்கிங்கோட ₹15-க்கு வித்திருந்திருக்காங்க. இப்போ இவர் ₹3.50 பைசாவுக்கு விற்கும் போது ரொம்பவும் கம்மியான காசுல நுரை அதிகமா வருது, துணி நல்லா வெளுக்குது, கரைகள் எல்லாமே போகுது, ரொம்பவே சீப் அண்ட் பெஸ்ட்டா இருக்குன்னு சொல்லி நிறைய கிராமப்புறத்துல இருக்கிற மக்கள் இந்த நிர்மா பவுடரை வாங்க ஸ்டார்ட் பண்றாங்க. ஆனா அப்பர் கிளாஸ், அதாங்க பணக்காரங்க மட்டும் தொடர்ந்து அந்த ப்ரீமியம் (premium quality washing powder) குவாலிட்டில இருக்கிற வாஷிங் பவுடர் தான் யூஸ் பண்ணிக்கிட்டு வராங்க.

அப்படி அவங்க வாங்கிக்கிட்டு இருந்த பவுடர் வேற எதுவுமே கிடையாது அதுதான் ஹிந்துஸ்தான் லிவர் லிமிட் உடைய சர்ப் அப்படின்ற பிராண்டோட வாஷிங் பவுடரத்தான் பணம் அதிகமா இருக்குற மக்கள் வாங்கி பயன்படுத்துக்கிட்டு வந்தாங்க. அந்த சமயத்துல ஏழை எளிய மக்களும் ₹15 கொடுத்து ஒரு கிலோ வாஷிங் பவுடரா வாங்கிக்கிட்டு இருந்திருக்காங்க. நிர்மா பவுடர் வாங்குறதன் மூலியமா ₹11.50 பைசா அவங்களுக்கு மிச்சப்படுறதா நினைச்சாங்க. இதனால நிறைய லோயர் கிளாஸ் மற்றும் மிடில் கிளாஸ்ல இருக்கக்கூடிய மக்கள் இந்த நிர்மா பவுடரை தான் வாங்கி பயன்படுத்துறாங்க.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

சேல்ஸ் அதிகமாக அதிகமாக மக்கள் கிட்டயுமே இந்த புகழ் பரவ ஆரம்பிக்குது. இதனால ஒரு நாளைக்கு 200 kg பவுடரை இந்த கர்சன் பாய் தன்னந்தனியா ரெடி பண்றாரு. நாட்கள் நகர நகர இந்த நிர்மா பவுடருக்கு இருக்கிற டிமாண்ட் அதிகரிச்சுக்கிட்டே போகுது. ஒரு கட்டத்துல அவரால என்னதான் 200 kg தயாரிச்சாலுமே தேவைப்படுற எல்லா மக்களுக்குமே அவரால கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுறாரு‌.

இதன் காரணமா தன்னுடைய கவர்மெண்ட் ஜாப்பை (Government Job) விட்டுட்டு சரஸ்பூர் அப்படின்ற பகுதியில ஒரு பெரிய ஷெட் ஒன்னு ஓபன் பண்ணி அதுல மேனுவலா பல பேரை ஹையர் பண்ணி தன்னுடைய இந்த வாஷிங் பவுடரை இன்னும் கொஞ்சம் பெருசு படுத்தலான்னு சொல்லி பேக்கிங்ல மட்டும் சில சேஞ்சஸ் பண்ணி அதே ஃபார்முலாவை பயன்படுத்தி அதே ₹3.50 பைசாவுக்கு தொடர்ந்து சேல்ஸ் பண்ண ஆரம்பிக்கிறாரு. மேற்கொண்டு அகமதாபாத் முழுக்க 2000 ரீடைலர்ஸ எப்படியாவது பிடிச்சிடனும் அப்படிங்கறதுதான் அவருடைய ஃபர்ஸ்ட் டார்கெட்டா இருக்கு.

See also  இந்தியா வல்லரசாகாமல் இருப்பதற்கு காரணம் இதுதானா?

ஆரம்பத்துல கர்சன் பாய் ஃபீமேல் எம்ப்ளாயியா அதாவது பெண்களை ஹையர் பண்ணி இந்த வாஷிங் பவுடரை கொடுத்து நிறைய ரீடைலர் ஷாப்ல இந்த வாஷிங் பவுடர் எப்படி வேலை செய்யுது அப்படிங்கறத எக்ஸ்பிளைன் பண்ண வச்சிருந்திருக்காரு. பட் என்னதான் இப்படி எல்லாம் அவர் மார்க்கெட்டிங் பண்ணாலுமே ரீடைலர்ஸ் ஏற்கனவே ஒரு பெரிய பெரிய கம்பெனியோட வாஷிங் பவுடரைதான் வாங்கி ஸ்டாக் வச்சுக்கிட்டு வராங்க. மக்களுமே அதை தான் வாங்கிக்கிட்டு இருந்திருக்காங்க. இதனால நிர்மா பவுடரை எங்களால இப்போதைக்கு வாங்க முடியாதுன்னு நிறைய பேரு நிராகரிக்கிறாங்க. ஆனா மக்கள் கிட்ட இந்த நிர்மா பவுடருடைய புகழ் பரவிக்கிட்டே போனதுனால நிறைய கடைகள்ல மக்களே நிர்மா பவுடர் இருந்தா குடுங்க அப்படின்ற மாதிரி கேட்க ஆரம்பிக்கிறாங்க.

இப்போ ஆட்டோமேட்டிக்கா இந்த டிமாண்ட் கிரியேட் ஆயிட்டதுனால, எந்த ஆட்கள் நிர்மா பவுடர் வேண்டாம்னு சொன்னாங்களோ அதே பெரிய பெரிய மளிகை கடைகள் மற்றும் சின்ன சின்ன மளிகை கடைகள்ல இந்த நிர்மா பவுடரை வாங்கி ஸ்டாக் பண்ணி விக்கிற அளவுக்கான ஒரு சூழ்நிலைக்கு மக்கள் அந்த சிச்சுவேஷனுக்கு அவங்களை தள்ளி இருந்திருக்காங்க. இதனால குஜராத் மாநிலம் முழுக்க விளம்பரம் எதுவுமே பண்ணாம இந்த நிர்மா பவுடருடைய புகழ் பரவிக்கிட்டே போகுது. அடுத்ததா கர்சன் பாயுமே குஜராத் முழுக்க இந்த பவுடரை எப்படியாவது சேல் பண்ணனும், நம்ம எப்படியாச்சும் பெரிய இடத்துக்கு போகணும்ன்னு நினைக்கிறாரு.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

ஆனா அந்த சமயத்துல நம்பர் ஒன் இடத்துல இருந்தது சர்ப் அப்படின்ற ஒரு பிராண்ட் தான். இதை உடைச்சிட்டு சேல்ஸ புடிக்கிறதுங்கறது சாதாரணமான ஒரு விஷயம் கிடையாது. ஆனா அதையும் தாண்டி உடைச்சு நம்ம பண்ணிட்டோம்னா நம்ம ஜெயிச்சிடலாம் அப்படின்றது மட்டும்தான் கர்சன் பாய் உடைய மனதுல ஓடுது. இதனால தைரியமா குஜராத் மாநிலம் முழுக்க அதே பேக்கிங்ல மட்டும் சில சேஞ்சஸ் பண்ணி சேம் ஃபார்முலால ₹3.50 பைசாக்கு தன்னுடைய வாஷிங் பவுடரை டிஸ்ட்ரிபியூட் பண்ண ஆரம்பிக்கிறாரு.

இப்படி ஸ்பீடா அவர் டிஸ்ட்ரிபியூட் பண்றதுனாலயுமே அந்த சேல்ஸ் எல்லாமே மின்னல் வேகத்துல நடக்குது. இதனால பிரைஸ்மே ஒரே கண்ட்ரோல்ல தான் இருந்திருக்கு. அதாவது எப்போதுமே தனது வாஷிங் பவுடருடைய விலையை மூன்று ரூபாய் 50 பைசாவுக்கு மட்டுமே விற்று வந்து இருக்கிறார். நிர்மா பவுடரை பொறுத்தவரைக்கும் அவங்களுடைய வாஷிங் பவுடர்ல 60% கிட்ட சோடா ஆஷ் தான் யூஸ் பண்ணிருக்காங்க. மீதம் இருக்கிற 40%ல தான் ஆக்டிவ் டிடர்ஜென்ட், வைட்னிங் பெர்ஃபியூம்ஸ் எல்லாமே யூஸ் பண்றாங்க.

இந்த பர்சன்டேஜ்ல அவங்க பண்றதுனாலதான் ரொம்பவே கம்மியான பிரைஸ்க்கு அந்த சமயத்துல அவங்களால விற்க முடிஞ்சுச்சு. அதே சமயம் குஜராத் மாநிலத்துல அந்த சமயத்துல சோடா ஆஷ் அப்படிங்கறது ரொம்பவே சீப் அண்ட் பெஸ்ட்டா கிடைச்சிட்டு இருந்தது. இதை தனக்கு சாதகமா பயன்படுத்தி தான் இந்த வாஷிங் பவுடரே கிரியேட் பண்ணி ஒரு பெரிய மார்க்கெட்டையே புடிச்சிருந்திருக்காரு. என்னதான் இவருக்கு சேல்ஸ் பெருசா போனாலுமே அதே செட்லதான் இவருடைய கம்பெனி நீண்ட நாட்களா நீடிச்சுக்கிட்டே போகுது.

பெரிய பெரிய கம்பெனி எல்லாம் ஃபேக்டரி வச்சு அதுக்கு ஏஜென்ட் எல்லாம் வச்சு டிஸ்ட்ரிபியூட்டர், கஸ்டமர் அப்படின்னு சொல்லி நிறைய ப்ராசஸ் எல்லாம் இருந்திருக்கு. ஆனா நிர்மா கம்பெனிக்கு அது எதுவுமே இல்லை. அது கூடவே இனிஷியலான காஸ்ட்டுமே அந்த பெரிய கம்பெனிக்கு அதிகமாதான் இருந்திருக்கு. மிஷின்ஸா இருக்கட்டும், அங்க வேலை பார்க்கிற ஆட்கள், அவங்களுக்கு மேல சூப்பர்வைசர், இன்ஜினியர் அப்படின்னு சொல்லிட்டு நிறைய விஷயங்கள் பெரிய பெரிய கம்பெனில இருந்ததுனால அந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

ஆனால் நிர்மா பவுடருக்கு அதெல்லாம் இல்லாததுனால ரொம்பவே குறைவான காசுல அவங்களால இந்த பவுடரை நீண்ட நாட்களுக்கு கொடுக்க முடிஞ்சுச்சு. ஒரு கட்டத்துல நிர்மா மார்க்கெட்டை நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இருந்திருக்காங்க. பர்ஃபெக்ட் பிரைஸ்ல (perfect price) விக்கிறாங்க. மேலும் டிஸ்ட்ரிபியூஷன் எல்லாமே பக்காவா பண்றதுனால இவங்களுடைய சேல்ஸ் குறையாம ஏறிக்கிட்டேதான் போகுது. ஃபைனலா இந்த கர்சன் பாயுடைய சேல்ஸ்மே குஜராத் மாநிலத்துல அதிகமா ஆகிக்கிட்டே போகுது.

இதனால இந்தியா முழுக்க நம்முடைய பவுடரை அடுத்தபடியா கொண்டு போகணும்ன்னு ஆசைப்பட்டிருக்காரு. அதன் அடிப்படையில அந்த பவுடரை வெளியிடுறதுக்கு முன்னாடியே 1975ல ஆல் இந்தியா ரேடியோல (All India radio) ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்காரு அந்த விளம்பரத்துல இடம் பெற்ற பாடல் கண்டிப்பா யாராலுமே மறந்திருக்க முடியாது. அவங்க பண்ண அந்த விளம்பரமுமே மக்களுக்கு ஈஸியா புடிச்சு போகுது. அந்த பாடலுமே ஈஸியா கவர்ற மாதிரி இருந்துச்சு. இதனால மெல்ல மெல்லமா ஃபேக்டரிஸ் எல்லாம் ஆரம்பிச்சு இந்தியா முழுக்க அவங்களுடைய சேல்ஸ அதிகப்படுத்திக்கிட்டே போறாங்க.

இறுதியா 1982-ல ஃபர்ஸ்ட் டைமா டிவில விளம்பரம் கொடுக்குறாங்க. அதுல ஒரு சின்ன பாப்பா ஹாஃப் ஸ்கர்ட் (Half skirt) அணிந்த நிலையில ஒரு ஒயிட் கலர் டிரஸ் போட்டு “நிர்மா, நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா, வாஷிங் பவுடர் நிர்மா” அப்படின்ற அந்த பாடல் எல்லாருமே ஈர்க்கக்கூடிய வகையில இருந்ததுனால அந்த விளம்பரமுமே எல்லாருக்குமே பிடிச்சு போகுது. இதனால நிர்மா பிராண்ட் எல்லாருக்குமே தெரியக்கூடிய வகையில போய் சேருது. 1977-ல வெறும் மார்க்கெட் ஷேர் 12% வச்சிருந்த இந்த நிர்மா கம்பெனி, 1982-ல 60% புடிச்சு இந்தியாவுடைய டிடர்ஜென்ட் மார்க்கெட்ல நம்பர் ஒன் பிளேஸ்க்கு போயிருந்திருக்காங்க.

இவங்களுக்கு காம்படிஷனா இருந்தவங்க எல்லாருமே வெறும் 40% சேர்ஸோட அடுத்தடுத்து பிளேஸ்ல வராங்க. சாதாரணமா சைக்கிள்ல ஆரம்பிக்கப்பட்ட அந்த கம்பெனி 13 வருஷம் கழிச்சு நம்பர் ஒன் பிளேஸ்க்கு வருது அப்படின்னா, அதுவும் பெரிய பெரிய பிராண்ட் எல்லாம் சம்பாதித்து வைத்திருந்த பெயரை உடைச்சு நம்பர் ஒன் பிளேஸ்க்கு வருதுன்னா சாதாரணமான விஷயம் கிடையாது. அந்த அளவுக்கு அவங்களுடைய ஹார்ட் வொர்க்கும், அவங்களுடைய பிரைஸா இருக்கட்டும் அவங்களுடைய டிஸ்ட்ரிபியூஷனா இருக்கட்டும் எல்லாமே பக்கா பர்ஃபெக்ட்டா இருந்ததுனாலதான் அது எல்லாமே அவங்களுக்கு வொர்க் அவுட் ஆயிருந்திருக்கு.

See also  இந்தியா வல்லரசாகாமல் இருப்பதற்கு காரணம் இதுதானா?

நிர்மா வாஷிங் பவுடர் எந்த வேகத்துல ஃபர்ஸ்ட் பிளேஸ்க்கு போனுச்சோ அதே வேகத்துல ஆபத்துமே அவங்கள பின்தொடர்ந்துகிட்டு தான் வந்திருக்கு. இவங்களுக்கு காம்படிஷனா இருக்கக்கூடிய பல நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக ஹிந்துஸ்தான் லிவர் லிமிடெட் உடைய சர்ஃப் கம்பெனி ஒரு சீக்ரெட்டான மீட்டிங்க ஒன்னு அரேஞ்மென்ட் பண்ணி இந்த நிர்மா கம்பெனி என்னென்ன ஃபார்முலா யூஸ் பண்றாங்க, மக்கள் கிட்ட அவங்களுடைய ப்ராடக்ட்ட எப்படி விக்கிறாங்க, எந்த விஷயம் மக்களை வாங்க வைக்குது, ஒருமுறை மக்கள் வாங்குனதுக்கு பிறகு ஏன் மறுபடியும் மறுபடியுமே அவங்களுடைய பவுடரையே வாங்குறாங்க, அதுக்கு என்ன காரணமா இருக்கும்னு இப்படி எல்லா விஷயத்தையுமே சீக்ரெட்டா அனலைஸ் பண்ணனுங்கறதுக்காக ஒரு ரிசர்ச் டீமை ஃபார்ம் பண்ணி A-Z அந்த கம்பெனி பத்தி அலசி ஆராயுறாங்க.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

அப்படி ஒரு பெரிய டீம் வொர்க் அவுட் பண்ணதுல இந்த நிர்மா கம்பெனி அவங்களுடைய வாஷிங் பவுடரை ரொம்பவே சீப் அண்ட் பெஸ்ட்டா கொடுக்குறாங்க. மக்களுக்குமே அபோர்டபிள் பிரைஸ்ல, எஃபெக்டிவா (affordable price and effective) இருக்குறதுனால அதை வாங்கிக்கிட்டு இருக்காங்க. ஆனா அப்பர் கிளாஸ் மக்கள் மட்டும் இது ஒரு லோ குவாலிட்டி, மட்டமான பிராண்ட் அப்படின்னு சொல்லி அவர்கள் யாருமே இதை வாங்குறது கிடையாது. இது கூடவே நெகட்டிவா அந்த டீம் நாலு பாயிண்ட்ஸ கண்டு கண்டுபிடிச்சிருக்கு. அது என்னென்னன்னா முதலாவதா இந்த நிர்மா வாஷிங் பவுடர் முழுவதுமா தண்ணில கரையறது கிடையாது.

இது ஒரு ட்ராபேக்கா இருந்திருக்கு. இரண்டாவது ரீசன் இந்த நிர்மா வாஷிங் பவுடர்ல ஒரு இண்டஸ்ட்ரியல் ஸ்மெல்லே கிடையாது. அதாவது துணி துவைச்சதுக்கு பிறகு ஒரு நல்ல வாசனையை தரக்கூடிய எந்த ஒரு விஷயமுமே இந்த நிர்மா வாஷிங் பவுடர்ல கிடையாது. மூன்றாவது விஷயம் இந்த பவுடரை போட்டதுக்கு பிறகு துணியை துவைக்கும் போது நிறைய பெண்களுக்கு கை எரிச்சலும் கையில சில கொப்பளங்களும் வருவதா சொல்லப்படுது. நான்காவதா நிர்மா வாஷிங் பவுடர் போட்டு துணியை துவைச்சதுக்கு பிறகு அந்த துணி எல்லாமே ரஃப்பா (rough and tough) மாறி இருந்திருக்கு. இது எல்லாமே மக்களுக்கு நிர்மா பவுடருக்கு மேல இருக்கிற அதிருப்தி.

இந்த விஷயத்தை நம்ம ரெக்டிஃபை (rectify) பண்ணி அதாவது நிர்மா வாஷிங் பவுடர் நிறுவனம் செய்த தவறுகளை சரி செய்து நம்ம தயாரிக்க போற புதிய பவுடர்ல இது எல்லாத்தையுமே பாசிட்டிவா மாத்தி ஒரு பெஸ்ட்டான குவாலிட்டில கொடுத்தா கண்டிப்பா இந்த நிர்மா மார்க்கெட்டை உடைச்சிடலாங்கறதுதான் இந்த சர்ப் கம்பெனியோட பிளானா இருந்திருக்கு. ஆனா இவங்க அந்த சமயத்துல சர்ப் அப்படின்ற பிராண்ட்ல ஒரு ப்ரீமியம் குவாலிட்டில ₹15-க்கு வித்துக்கிட்டு வராங்க. இப்போ நிர்மா பவுடர் அளவுக்கு கீழ இறங்கி வந்தா கண்டிப்பா நம்ம பிராண்டுடைய பேரு மொத்தமா க்ளோஸ் ஆகிடும்.

இதனால நமக்கு லாஸ்மே பின்னாடி ஹெவியா இருக்கும் அப்படின்ற மாதிரி யோசிக்கிறாங்க.! ஆனா அன்னைக்கு அவங்க எடுத்த அந்த ஒரு முடிவு பெரிய பாசிட்டிவா அமைஞ்சிருந்திருக்கு. இதனால என்ன பண்ணலாம் அப்படின்னு சொல்லி யோசிக்கும் போதுதான் கோக்ககோலா கம்பெனி எப்படி ஸ்ப்ரைட், ஃபேண்டா, லிம்கா (sprite, fanta, limca) அப்படின்ற பெயர்ல வெவ்வேறு வெரைட்டில வெவ்வேறு பேர்ல தங்களுடைய ப்ராடக்ட்ட விக்கிறாங்களோ அதே மாதிரி நம்ம புதுசா தயாரிக்கக்கூடிய பிரைஸ் கம்மியா இருக்க போற அந்த வாஷிங் பவுடரை வேற ஒரு பெயர்ல ஏன் விற்கக்கூடாதுன்ற ஒரு யோசனையும் தோணுது.

அதன் அடிப்படையில நிர்மா பவுடரை விட பெஸ்ட்டான குவாலிட்டில அந்த பிரைஸ்க்கு எப்படி கொடுக்கலான்ற மாதிரியான ஒரு வாஷிங் பவுடரை ரெடி பண்ணுவதற்காக ஒரு பெரிய ரிசர்ச் டீமே ஃபார்ம் பண்ணி அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் எல்லாமே ஃபாஸ்ட்டா 90ஸ்ல நடக்க ஆரம்பிக்குது. அப்படி நடக்கும்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்றாங்க. துணி துவைக்கிறதுக்கு எப்படியுமே சால்ட் வந்து ஒரு பெரிய பங்கு வகிக்குது. ஒரு சால்ட் பிளான்ட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன ஃபேக்டரியை நிறுவி புதுசா அவங்களுடைய வாஷிங் பவுடரை தயாரிச்சிருந்திருக்காங்க.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

மேலும் அந்த வாஷிங் பவுடர் பெஸ்ட்டான குவாலிட்டில நல்ல வாசனையோட நிர்மா பவுடருக்கு எதிரா இருந்த அந்த நாலு காரணங்கள் எதுவுமே இல்லாத அளவுக்கு அளவுக்கு பர்பெக்ட்டா பெஸ்ட்டான குவாலிட்டில இருந்திருக்கு. பிரைஸ்மே அபோர்டபிள் பிரைஸ்ல இருந்திருக்கு. அவங்க தயாரிச்ச அந்த புதிய பவுடருக்கு வீல் (Wheel) அப்படின்ற ஒரு பெயரை வைக்கிறாங்க இந்த பவுடர் வெளியாகுறதுக்கு முன்னாடியே புதுசா ஒரு விளம்பரத்தையுமே வெளியிடுறாங்க.

அந்த விளம்பரத்துல கடைகள்ல வாங்கக்கூடிய மஞ்சள் கலர் பவுடர்ல எந்த அளவுக்கு ஆபத்து இருக்குன்னு பாருங்க.! இதுல நிறைய சோடா ஆஸ்தான் கலக்கப்பட்டிருக்கு. இதனால கை எரிச்சல், கொப்பளங்கள் எல்லாம் ஏற்படும் துணியுமே ரஃப்பா இருக்கும். அந்த துணியில எந்த ஒரு வாசனையுமே இருக்காது. ஆனா நம்முடைய வீல் பவுடர்ல அப்படி எந்தவித பிரச்சனையுமே இல்லை. நல்ல வாசனையோட கையெரிச்சல் எதுவுமே இல்லாம அதே பிரைஸ்ல உங்களுடைய வீடுகளுக்கு வரப்போகுது அப்படின்ற மாதிரி டைரக்டா அந்த நிர்மா கம்பெனியை அட்டாக் பண்ற மாதிரியான ஒரு விளம்பரத்தை இந்த சர்ப் கம்பெனி கொடுத்திருந்திருக்கு.

இந்த விஷயத்தினால மக்களுமே யோசிக்க ஆரம்பிக்கிறாங்க. நிர்மா பவுடர்னாலதான நம்முடைய கையெல்லாம் எரியுது, துணியுமே ரஃப்பா தான இருக்கு, அப்படின்ற மாதிரி யோசிக்கிறாங்க. புதுசா ஒரு சேஞ்சஸ்காக இந்த வீல் பவுடரை வாங்கி யூஸ் பண்றாங்க. அவங்க யூஸ் பண்ணி பார்க்கும்போது அது பெஸ்ட்டா இருந்ததுனால தொடர்ந்து நிர்மா பவுடரை விட்டுட்டு வீல் பவுடரையே வாங்க ஆரம்பிக்கிறாங்க. அதே சமயம் 90ஸ்ல லோயர் கிளாஸ் மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு பொருளாதார வசதி நல்லா அதிகமாகிட்டே போயிருந்திருக்கு இதனால காசு அதிகமா இருந்தாலும் பரவாயில்லை குவாலிட்டியான பொருள்தான் யூஸ் பண்ணனும் அப்படின்ற ஒரு மனப்பான்மை மக்கள் கிட்ட அதிகமா பரவ ஆரம்பிக்குது.

See also  இந்தியா வல்லரசாகாமல் இருப்பதற்கு காரணம் இதுதானா?

இதன் காரணமா நிர்மா பிராண்ட் ஒரு லோ குவாலிட்டி, மட்டமான பிராண்ட் அப்படின்ற ஒரு மனப்பான்மை எல்லா மக்கள் கிட்டயுமே மெல்ல மெல்லமா பரவ ஆரம்பிக்கும் போது அவங்களுடைய சேல்ஸுமே அதே மாதிரி மெல்ல மெல்லமா குறைஞ்சுகிட்டே வருது. இறுதியா 60% மார்க்கெட் ஷேர் வச்சிருந்த இந்த நிர்மா கம்பெனி 10% கிட்ட குறைஞ்சு 1990-கள்ல 50 % மார்க்கெட் ஷேர ஹோல்ட் பண்றாங்க. புதுசா ஆரம்பிக்கப்பட்ட இந்த வீல் வாஷிங் பவுடர் 24% ஓட செகண்ட் பிளேஸ்க்கு வந்திருக்கு இப்போ நிர்மா கம்பெனியை பொறுத்தவரைக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருக்காங்க.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

ஏதாவது சேஞ்சஸ் பண்ணி மக்கள் கிட்ட ஆஃபர் மாதிரி போட்டா மட்டும்தான் அவங்களால அடுத்ததா சஸ்டைன் பண்ணவே முடியும்னு நெனச்ச நிர்மா நிறுவனம். அதுக்காக சர்ப்ல எப்படி ஒரு ப்ளூ கலர் இன்கிரிடியன்ட்லாம் ஆட் பண்ணி புதுசா ஒரு ப்ரீமியம் குவாலிட்டில கொடுக்குறாங்களோ அதே மாதிரி நம்மளும் கொடுக்கலாம்ன்ற மாதிரி நிர்மா கம்பெனி அந்த ப்ளூ கலர் வாஷிங் பவுடரை தயாரிச்சிருந்திருக்காங்க. ஆனா அப்படி தயாரிக்கப்பட்ட அந்த வாஷிங் பவுடர்ல எந்தவித பெயரையுமே சேஞ்ச் பண்ணாம சூப்பர் நிர்மா அப்படின்ற பெயர்ல அவங்களுடைய வாஷிங் பவுடரை வெளியிடுறாங்க. ஆனா அது எல்லாமே மக்கள் கிட்ட ஒரு ஃபெயிலியரை தான் கொடுக்குது.

அதே சமயம் உத்திரபிரதேச மாநிலத்திலயுமே ‘கார்டி’ அப்படின்ற பெயர்ல ஒரு வாஷிங் பவுடர் வெளியாக ஆரம்பிக்குது. அந்த வாஷிங் பவுடர் இந்த வீல் மற்றும் நிர்மா வாஷிங் பவுடரை விட 10% வந்து பிரைஸ் அதிகமாதான் இருந்திருக்கு. குவாலிட்டி அதிகமாவும், குவான்டிட்டி கம்மியாவும் தான் இருந்திருக்கு. ஆனா அந்த பிராண்ட் ரொம்பவே நல்லா இருக்கு அப்படிங்கறதுனால மக்கள் எல்லாருமே அந்த கார்டி அப்படின்ற பிராண்டுக்கு மாறுறாங்க. இதனால இந்த நிர்மா கம்பெனி மறுபடியுமே டவுன்ஃபாலுக்கு தான் போய்கிட்டே இருக்காங்க.

தொடர்ந்து நிர்மா சோப்பு, நிர்மா ஷாம்பு, நிர்மா ஹேர் ஆயில் அப்படின்னு சொல்லிட்டு நிறைய விஷயங்கள் பண்றாங்க. ஆனா அந்த பெயரை மாத்தாததுனால மக்கள் கிட்ட அது லோ குவாலிட்டி, மட்டமான பிராண்ட் அப்படின்ற ஒரு மனப்பான்மை இருந்ததுனால அதை யாருமே வாங்குறதுக்கு முன்வராமலே போறாங்க. ஒரு கட்டத்துல டிடர்ஜென்ட் மார்க்கெட்ல நிர்மாவுடைய சேல்ஸ் எல்லாமே டவுன் ஆயிடுது. அதன் பிறகு ஏரியல், சர்ப், டைடு அப்படின்னு சொல்லிட்டு பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் காம்படிஷன்ல மேல வந்துடுறாங்க.

இந்த நிர்மா பவுடருடைய சேல்ஸ் மெல்ல மெல்லமா கொறஞ்சி மொத்தமா கீழ போயிருந்திருக்கு. அதன் பிறகு இஜிகேஷன் சிமெண்ட், சோடா ஆஸ் விக்கிறது போன்ற விஷயங்கள்ல இவங்க தற்போதைக்கு ஈடுபட்டுகிட்டு வராங்க. 2017-ல கூட புதுசா மறுபடியுமே வந்து ஒரு வாஷிங் பவுடரை லான்ச் பண்ணாங்க. சோப்பு கூட லான்ச் பண்ணாங்க. ரித்திக் ரோஷனை கூட அட்வெர்டைஸ்மெண்ட்க்கு எல்லாம் கூட்டிட்டு வந்தாங்க. ஆனா அது எல்லாமே அவங்களுக்கு ஃபெயிலியர்லதான் போய் முடிஞ்சிருந்திருக்கு.

நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்
நிர்மா பவுடர்-அசுர வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியின் சோகம்

சாதாரணமா ஒரு ஆபீஸ்ல மாத சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கிட்டு இருந்த கர்சன் பாய் பட்டேல் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நம்பர் ஒன் இடத்துக்கு எல்லாம் போயிட்டு பல கோடிகளை சம்பாரிச்சு, மார்க்கெட்ல அவர் தோத்து போயிருந்தாலுமே என்னைய பொறுத்தவரைக்கும் அவர் பெரிய ஹீரோ தான். ஆனா இந்த நிர்மா பவுடர் கதை மூலியமா நமக்கு என்ன தெரிய வருதுன்னா..? ஒரு இக்கட்டான சூழ்நிலை அதாவது நீங்க சக்சஸ்ஃபுல்லான ஒரு பிரைம் டைம்ல இருப்பீங்க.! அந்த சமயத்துல சில சேஞ்சஸ் எல்லாம் நீங்க மார்க்கெட்டுக்கு ஏத்த மாதிரி பண்ணி தான் ஆகணும். அது பண்ணலன்னா கண்டிப்பா மக்கள் கிட்ட அது வொர்க் அவுட்டே ஆகாது தான்.

இந்த விஷயம் கிரிக்கெட் பிளேயர்ஸ், யூடியூபர்ஸ், நம்முடைய பிசினஸ், நம்முடைய ஸ்டடிஸ் எதுல வேணாலும் நடக்கலாம். நம்ம எல்லாருக்குமே ஒரு கட்டத்துல ஒரு பிரைம் டைம் வரும். ஆனா அந்த பிரைம் டைம்ம நீண்ட நாட்களா நம்மளால ஹோல்ட் பண்ணவே முடியாது. அதாவது அந்த உச்ச பட்ச டைமை நம்மால் பிடித்து வைத்திருக்க முடியாது. சொல்லப்போனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ஒரு நாள் சறுக்கி விழத்தான் செய்யும். இன்னொரு பழமொழியிலும் சொல்லலாம். யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் இன்னொரு காலம் வரும் என்பது போலவும் அமையும். அப்படி சருக்கி விழாம இறுக்கிப்பிடித்து வைக்கணும்னா சில சில சேஞ்சஸ் எல்லாமே பண்ணிக்கிட்டே தான் வரணும்.

அப்படி எந்த சேஞ்சஸ்மே பண்ணலனா கண்டிப்பா நம்ம டவுன் ஃபால்லதான் போய் விழுவோம். கண்டிப்பா இந்த கதை உங்களை இன்ஸ்பையர் பண்ணி இருக்கும்னு நான் நினைக்கிறேன். நீங்க இந்த கதையை பத்தி என்ன நினைக்கிறீங்க.? உங்களுடைய கருத்துக்கள் என்ன அப்படிங்கறதையும் மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க. இதை பத்தி உங்களுடைய நண்பர்கள், குடும்பத்தார்களுக்கு எல்லாம் ஷேர் பண்ணி விடுங்க. வேற ஒரு சம்பவத்தோட வேற ஒரு பதிவுல உங்களை வந்து பார்க்கிறேன். அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது நான் உங்கள் காவியா 📝

இவ்வளவு நேரம் பொறுமையா நீங்க இந்த ஒரு பதிவை படிச்சு இருக்கீங்கனா நிச்சயமா உங்களுக்கு பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை தினந்தோறும் தெரிஞ்சு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மேலும் இதுபோல பல சுவாரசியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் ஆகி கிளிக் செய்து நமது telegram மற்றும் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நேரம் இருந்தால் இதையும் படித்து பாருங்கள்…👇

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
இங்கே கொடுக்கப்பட்ட படமானது மார்புச் சளி மற்றும் அது நுரையீரல் மற்றும் இதயத்தை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குவதற்கான ஒரு மருத்துவ விளக்கப்படமாக உள்ளது. தவறான கண்ணோட்டத்தில் யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

நமது வலைதளத்தில் தினந்தோறும் பார்வையிட்டுக் கொண்டே இருங்கள் உங்களுக்கு தினசரி பல சுவாரசியம் நிறைந்த தகவல்கள் வந்து கொண்டே இருக்கும் உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்காக மறக்காமல் நமது telegramல் இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே டெலிகிராம் கணக்கு இல்லாத நண்பர்கள் வாட்ஸ் அப்பில் இணைந்து கொள்ளலாம்.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏