தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா? என்ன காவியா பல மாதங்களுக்குப் பிறகு இன்று தான் பதிவிடுகிறாய். நீ இன்று வெளியிட்ட பதிவானது ஏதோ பெரிய கலவரத்தை தூண்டும் விதத்தில் இருப்பது போல தோன்றுகிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். ஏனென்றால் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு அவ்வாறு தன் தோன்றியிருக்கும். ஆனால் சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் இதனுள் இருக்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். முழுமையாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.

வணக்கம் நண்பர்களே… சமீபத்துல நான் டைம்ஸ் ஆப் இந்தியால ஒரு நியூஸ் ஒன்ன படிச்சேன். அதுல தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபி (Gdp) பாகிஸ்தானின் மொத்த ஜிடிபிய விட அதிகம்னு சொல்லி இருந்தது. அதாவது சுமார் 329 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அடேங்கப்பா..! ஒட்டுமொத்த இந்தியாவிலயே நம்ம தமிழ்நாட்டுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பெரிய அசூர வளர்ச்சின்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்தது. இது கல்வி, கலை, வர்த்தகம், ஆட்டோமொபைல், தகவல்தொழில்நுட்பம்னு ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையா அல்லது அரசாங்கமா அல்லது ஒரு குறிப்பிட்ட நகரமான்னு ஆராயும்போது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகரம் தான் இதுக்கு முக்கிய காரணம்னு தெரிஞ்சது. ஆனா எப்படி..?

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

அமெரிக்காவில டெட்ராய்ட்ன்னு (Detroit) ஒரு நகரம் இருக்கு. இந்த நகரம் அதோட ஆட்டோமொபைல் தொழிலுக்கு உலகளவுல பிரபலமானது. மேலும் இந்த நகரம் அமெரிக்கா பொருளாதாரத்திற்கு 300 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை பங்களிப்பாக வழங்குது. அதுபோல இன்று சென்னை ஆசியாவின் டெட்ராய்ட்ன்னு பொருளாதார அமைப்பால அழைக்கப்படுது. வேற வார்த்தையில சொல்லணும்னா மகாராஷ்டிராக்கு பிறகு இந்தியாவின் அடுத்த சூப்பர் பவர் சென்னைன்னு சொல்லப்படுது. ஆனா இங்க கேள்வி என்னன்னா சென்னைக்கு இந்த பேர் எப்படி வந்தது? சென்னையுடைய வளர்ச்சி ஆங்கிலேயர்கள் காலத்துல எப்படி இருந்ததுன்னு நம்ம ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

ஆனா சுதந்திரத்துக்கு பிறகு இருந்து இப்ப வரைக்கும் எப்படி இருக்குன்னு இன்னைக்கு இந்த பதிவுல கொஞ்சம் விரிவா பார்ப்போம் வாங்க. இந்த பதிவு சென்னையுடைய வளர்ச்சியை பத்தி பேசப்போகுது. சோ இதை மறக்காம உங்க பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. புது வாசகர்கள் நம்ம வலைதளத்துக்கு புதிதாக வந்திருந்தால் நமது telegram மற்றும் வாட்ஸ் அப் சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா இம்மீடியட்டா சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்பதான் உங்களுக்கு இதுபோல பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை உடனுக்குடன் என்னால உங்களுடைய பகிர்ந்து கொள்ள முடியும். கீழே தெரியக்கூடிய ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து உடனே இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

இந்தப் பதிவை நீங்கள் முழுமையாக படிக்கும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு சந்தேகமானது நிச்சயமாக தீரும். அதாவது எனக்கும் இதுபோல பல சந்தேகங்கள் இருந்தது. அது என்னடா சந்தேகம் என்று தானே கேட்கிறீர்கள்.? அது வேற ஒன்றும் இல்லை நமக்கு சொந்தமான திருப்பதி கோவில் மற்றும் காளகஸ்திரி இதுபோல பல புண்ணிய திருத்தலங்களையும், தமிழ்நாட்டுக்கு சொந்தமான பல இடங்களையும் நாம் இழந்து இருக்கிறோம். இதனை கேள்விப்பட்டவுடன் ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை, இப்போதும் விளங்கவில்லை. இருந்தாலும் ஒரு சிறிய சந்தேகமானது நீங்கியது. தமிழ்நாட்டில் சென்னைக்காக ஆந்திரா காரர்கள் சண்டை போடும் போது இரண்டு ஆப்சன்கள் கொடுத்தார்கள்.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

அதாவது என்னவென்றால் நம் தமிழ்நாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டுக்கான எல்லை பிரிப்பு நடக்கும் போது சென்னையும், திருப்பதியும் வேண்டுமென்று போராடிக் கொண்டிருந்தார்கள். அதே போல தான் ஆந்திரா காரர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு சென்னை தமிழ்நாட்டிற்கும் திருப்பதி ஆந்திராவிற்கும் சென்றது. திருப்பதியை விட்டு விட்டோமே என்று தமிழ்நாட்டு மக்கள் ஏங்க.! அதே போல சென்னையை நாம் இழந்து விட்டோம் என்று அவர்களும் ஏங்கி நிற்க இருவரின் போராட்டமும் இன்னும் அதிகமாக இருந்தது.

அச்சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திருப்பதியை மீட்க பல போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனைக் கண்ட ஆந்திராவானது, உனக்கு திருப்பதி வேண்டுமென்றால் என்னிடம் சென்னையை கொடு என்று கேட்டது. அதற்கு தமிழ்நாடு ஆனது திட்டவட்டமாக முடிவு செய்து சென்னையை உங்களுக்கு கொடுக்க முடியாது திருப்பதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று திருப்பதியை ஆந்திராவிடம் ஒப்படைத்துவிட்டது. இதனை கேள்விப்பட்டவுடன் இப்பவும் மனதிற்குள் பயங்கரமாக கோபம் வருகிறது. தமிழ் நாட்டிற்குச் சேர்ந்த பல நிலங்களை நாம் இழந்திருக்கிறோம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே ஒரு பதிவை எழுதி இருக்கின்றோம். அதை படிப்பதற்கு கீழே லிங்க் தருகிறேன் கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.

தமிழ்நாடு இழந்த பகுதிகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இந்த பதிவில் இப்போது சென்னை இல்லை என்றால் இந்தியா இல்லையா என்பதை பற்றி நாம் தெளிவாக பார்க்கப் போகிறோம். உங்களுடைய பொன்னான நேரத்தில் ஒரு ஐந்து நிமிடத்தை இந்த பதிவை படிப்பதற்கு நீங்கள் ஒதுக்கினீர்கள் என்றால் பல சுவாரசியம் நிறைந்த தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நான் உங்கள் காவியா 📝… நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சுட சுட அப்டேட்ஸ்.காம் (sudasudaupdates.com).

See also  டைட்டானிக் கப்பல் விளக்கும் ஆழ்கடலின் மர்மங்கள்

இந்தியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுல இருந்த போதும் சரி, 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிட்ட இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் சரி, தொடர்ந்து சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாகதான் இருந்து வந்தது. நமது மாநிலத்தின் முக்கிய அரசு அலுவலகங்கள், சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் என அனைத்தும் சென்னையிலேயே அமைந்திருந்தன. இதனால இயற்கையாகவே சென்னை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது. இந்த சமயத்துல சென்னையோட மக்கள் தொகை 14 லட்சமாக இருந்தது. இதன் பிறகு சென்னை தொழில் துறையிலயும் மிகப்பெரிய வளர்ச்சி அடைய தொடங்கியது.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

அதாவது 1960லிருந்து 1970ஆம் ஆண்டு வரை அன்றைய மாநில அரசு தொழில் வளர்ச்சியை ஊக்கிவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக தொடங்கியது. குறிப்பா சொல்லணும்னா TVS குரூப் அசோக் லேலண்ட் (Ashok layland), சிப்காட் (sipcot), BHEL போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த சமயத்துல தான் உருவானது. ஆனா இந்த காலகட்டத்துல பெருசா எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் சென்னைக்குள்ள வரல. ஏன்னா இந்த சமயத்துல இந்தியா வேற எந்த நாட்டையும் சார்ந்திருக்காத கொள்கையை பின்பற்றியது. இதனாலதான் இந்தியாக்குள்ளேயே எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீடுகளும் பெரிய அளவுல வரல.

ஆனா 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை உலகின் மிகவும் முக்கியமான ஆட்டோமொபைல் (Automobile) மையங்களில் ஒன்றாக மாறியது. அந்த சமயத்துல தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா சென்னையை ஒரு ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியின் மையமாக மாற்ற நிறைய முயற்சிகளை மேற்கொண்டாங்க. உலக அளவிலான ஆட்டோமொபைல் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்குள் வரவழைக்க அந்த நிறுவனங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து நிறைய சலுகைகளையும் அளிப்பதாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு உறுதி அளிச்சாங்க. அதன்படி ஸ்ரீபெருமதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அமைக்க மிகப்பெரிய அளவிலான நிலங்கள் கொடுக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு வரிவிதிப்பிலியும் நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

அதுமட்டுமில்லாமல் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் தடையின்றி இயங்க தடையில்லா மின்சாரமும் வழங்கப்படும்னு அன்றைய ஜெயலலித தலைமையிலான மாநில அரசு உறுதி அளிச்சது. அரசின் இந்த ஆதரவாளும் சலுகைகள்னாலும் போர்ட் (Ford), ஹூண்டாய் (Hyundai), BMW, நிசான் கார் கம்பெனிகள் (Nissan) போன்ற உலகளாவிய மற்றும் உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்னையில தங்களுடைய தொழிற்சாலைகளை நிறுவியது. இதனாலதான் சென்னைக்கு டெட்ராய்ட் ஆப் ஏசியாங்கிற (Detroit of Asia) பெயர் வந்தது. இந்த நிறுவனங்களின் வருகை காரணமா ஸ்பேர் பார்ட்ஸ், மேனுபேக்சரிங், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், சேல்ஸ் அண்ட் சர்வீஸ் போன்ற லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் சென்னையில உருவானது.

இதனால அந்த சமயத்துல சுமார் 6 லட்சம் பேருக்கு வேலையும் கிடைச்சது. இது சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது மட்டுமில்லாம, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய அளவுல உதவியது. குறிப்பா சென்னையில ஏற்பட்ட இந்த ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியின் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதாரமும் 10%ல இருந்து 15%ஆக உயர்ந்தது. மேலும் சென்னையில வாகனங்கள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டு தேவைக்கு மட்டுமில்லாம உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவில இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள்ல 35% வாகனங்கள் சென்னையில தயாரிக்கப்பட்டதுதான்.

இதனாலதான் சென்னை வாகன உற்பத்தியில இந்தியாவிலயே முதல் இடத்தில இருக்கு. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோமொபைல் துறையில வளர்ச்சி அடைந்த சென்னை 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐடி துறையிலயும் (Information Technology) மிகப்பெரிய வளர்ச்சியை அடைய தொடங்கியது. இந்த சமயத்துல பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஐடி நிறுவனங்கள் சென்னையில தங்களுடைய அலுவலகங்களை திறந்தது. இதனால சாப்ட்வேர் டெவலப்மெண்ட் (software development), பிபிஓ (BPO) போன்ற ஐடி மற்றும் ஐடிஇஎஸ் (ITES) சேவைகளின் மையமாக சென்னை மாறியது. இதன் காரணமாக சென்னையில டைடல் பார்க், ஓஎம்ஆர் (OMR), சிப்கார்ட் போன்ற முக்கிய ஐடி பகுதிகள் உருவாகியது.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

இது சம்பந்தமாக படித்த இளைஞிகள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி மக்களின் வாழ்வாதாரமும், சென்னையின் பொருளாதாரமும் பல மடங்கு வளர்ச்சி அடைய தொடங்கியது. இன்று ஐடினாலே பெங்களூர் என்ற நிலைமை மாறி இப்போ சென்னை இந்தியாவின் முக்கிய ஐடி மையமாக இருந்து வருது. அதுமட்டுமில்லாம சென்னைக்கு வேலை தேடி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நிறைய பேர் வராங்க. கடந்த ஐந்து ஆண்டுகள்ல மட்டும் சுமார் 1.2 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் சென்னையில தங்கி வேலை செய்றாங்க. இதுல பெரும்பாலான தொழிலாளர்கள் பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவங்க.

இது தவிர வெளிநாட்டவர்கள் 10%, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் 12% மக்களும், சென்னையில வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. இது மட்டுமில்லாமல் சென்னை இந்தியாவிலேயே சிறந்த கல்வி மற்றும் சுகாதார மையமாகவும் திகழ்ந்து வருது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும், உயர் கல்விக்காகவும் சென்னைக்கு வராங்க. இன்னும் குறிப்பா சொல்லணும்னா மருத்துவ சிகிச்சை பெறுவதற்க்காக மட்டுமே வெளிநாடுகளல இருந்து 40% பேர் சென்னைக்கு தான் வராங்க.

See also  மனிதன் கண்டுபிடித்த உலகின் மிகப்பெரிய அறிவியல் சாதனைகள்

இப்படி கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் இத்தனை பேர் சென்னையை நோக்கி வருவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், இந்தியாவின் மற்ற பெரும் நகரங்களான நியூ டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத்ன்னு ஒப்பிடும்போது, இங்க கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் ஆகக்கூடிய செலவு என்பது குறைவு. இதை தவிர சென்னையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது அதன் உள்கட்டமைப்பு. அதாவது மெட்ரோ ரயில், ரிங் ரோட்ஸ், நவீன மேம்பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவை சென்னையின் போக்குவரத்தை மேம்படுத்தி மக்களின் பயணத்தை எளிதாக்குது. இதுமட்டுமில்லாமல் சென்னை மிகச் சிறந்த சுற்றலா மையமாகவும் இருந்து வருது.

இங்கே இருக்கிற பிரபலமான கோயில்கள், உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை அங்குள்ள முக்கிய தலைவர்களின் நினைவிடங்கள், பழங்கால சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவற்றை பராமரித்து வைத்திருக்கும் அரசு அருங்காட்சியங்கள், ஆங்கிலேயர்கள் காலத்தில கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற பல்வேறு சுற்றலா தளங்கள் சென்னையில இருப்பதால ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலா பயணிகள் சென்னைக்கு வராங்க. இதனால சென்னை சுற்றலா துறையிலயும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. முக்கியமா சென்னையை நோக்கி அதிக சுற்றலா பயணிகள் வருவதற்கு மகாபலிபுரம் ஒரு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுது.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த மாமலபுரம் பகுதியில கிபி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகள்ல் செதுக்கப்பட்ட பாறை கோவில்கள், ரதங்கள், ஒற்றைக்கல் சிற்பங்கள் போன்றவை எல்லாம் குறிப்பா இங்க இருக்கிற கடற்கரை கோவில், ஐந்து இரதங்கள் போன்ற சிற்பங்கள் எல்லாம் தென்னிந்தியா கட்டிட கலைக்கு ஒரு மிகச் சிறந்த சான்றாக அமையுது. மேலும் அதிக அளவிலான வெளிநாட்டு சுற்றலா பயணிகள் சென்னைக்கு வருவதற்கு இந்த மகாபலிபுரம் தான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுது.

இதோட சேர்த்து சென்னையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமா இருப்பது தமிழ் சினிமானு சொன்னா ஆச்சரியமாக இருக்குதுல்ல. அதாவது சென்னையின் கோலிவுட் என்று அழைக்கப்படும் தமிழ் திரைப்படத்துறையின் மையமாக பல ஆண்டுகளா இருந்து வருவது மயிலாப்பூர், சாலிகிராமம், வடபழனி போன்ற பகுதிகளில் ஏராளமான ஸ்டுடியோஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்ஸ் இருக்கு. ஏவிஎம், சன் பிக்சர்ஸ், ரெட்ஜைன்ட்ஸ் மூவிஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் சென்னையில இருக்கு. இப்படி சென்னை தமிழ் திரைப்படத்ததுறையின் மையமாக இருப்பதனால இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான திறமைமிக்க கலைஞர்கள் சென்னையை நோக்கி வராங்க.

இப்படி சென்னையானது வளர்ச்சி அடைய அடைய அதை சுற்றியுள்ள நகரங்களும் வளர்ச்சி அடைய தொடங்கியது. இதனாலதான் இங்க வணிக வளாகங்கள் புதிய குடியிருப்பு பகுதிகள், மால்ஸ், சினிமா தியேட்டர்ஸ் ஆகியவை உருவாகி இங்கே நிறைய வேலைவாய்ப்புகள் உருவானது. சமீப காலமா சென்னையை இன்னும் சிறப்பான நகரமாக மாற்றுவதற்காக முகா ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிக தீவிரமாக செயல்பட்டுகிட்டு வருதுன்னு நாம பல செய்திகளை அன்றாடம் கேட்டுக்கிட்டு தான் இருக்கோம். அதன்படி இன்றைய முதலமைச்சர் பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செஞ்சு நிறைய உலக புகழ் பெற்ற நிறுவனங்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தையை நடத்தி நிறைய ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கு.

இவற்றின் மொத்த மதிப்பு 42000 கோடிக்கும் அதிகம். இதனால வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் சென்னையில வந்து முதலீடு செய்ய ஆரம்பிச்சாங்க. அதுல குறிப்பிட்டு சொல்லணும்னா உலகின் மிகப்பெரிய வங்கியான பி என் ஒய் மெலோன் (BNY MELLON) கடந்த 2022 ஏப்ரல் மாதம் தன்னுடைய சர்வதேச பயிற்சி மையத்தை சென்னையில தொடங்கியது. இதுல ஏஐ (artificial intelligence) மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் (software development) போன்ற பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டுகிட்டு வருது. இதை தவிர செங்கல்பட்டில இயங்கி வரும் ரெனால்ட் (Renolt), நிசான் (Nissan) நிறுவனம் புதிய வாகனங்களை தயாரிப்பதற்காக சுமார் 5300 கோடி முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

இதன் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கு. மேலும் சிங்கப்பூரின் IGSS VENTURES நிறுவனம் சுமார் 25000 கோடி முதலீடு செஞ்சு சென்னையில செமிகண்டக்டர் ஃபேப் (Semi conductor fab) மற்றும் ஹை-டெக் பார்க்க (Hi-tech park) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர லூலு குரூப், Samsung போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில முதலீடு செய்துள்ளன. அதாவது இந்த நாலு ஆண்டுகள்ல மட்டும் சென்னைய மையமாக கொண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த முதலீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 68773 கோடி ஆகும். இதன் மூலம் 2,05,000 புதிய வேலைவாய்ப்புகள் சென்னையில உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையின் இன்றைய வளர்ச்சிக்கு அன்றையே அடித்தளம் போட்டது ஆங்கிலேயர்கள் (British government) தான்.

See also  கிறுக்குத்தனத்தில் ஒரு முன்னேற்றம் அதுவும் துபாயால மட்டும் தான் முடியும்

ஏன்னா, அவங்கதான் ஒரு சாதாரணமான மீன்பிடி கிராமமாக இருந்த மதராசப்பட்டினத்தை விலைக்கு வாங்கி அதை ஒரு வர்த்தக மையமாக மாற்றி, ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், துறைமுக வசதி போன்றவை எல்லாம் செய்து கொடுத்து மதராசபட்டினமாக இருந்த ஒரு குக் கிராமத்தை சென்னை என்ற பெருநகரமாக மாற்றியதுமட்டுமின்றி இன்று இந்தியாவிலேயே ஒரு தலைசிறந்த நகரமாக மாறியதற்கு அடித்தளம் போட்டதே அவங்கதான். இப்போது சென்னை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நகரமாக இருந்து வருது.

இந்தியாவின் மொத்த ஜிடிபில சுமார் 3.4% வரை சென்னை பங்களிக்குது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில சென்னை 14%க்கும் அதிகமான பங்கை அளிக்குது. அதுமட்டுமில்லாம சென்னையில கடைசி அஞ்சு ஆண்டுகள்ல ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர பகுதிகளுக்கு வந்திருக்கு.

இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற மற்ற நகரங்களை விடவும் மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரமாக சென்னை இருந்து வருது. ஏன்னா இந்த நகரங்களை எல்லாம் ஒப்பிடும்போது சென்னையில தான் குறைந்த விலையில் வாடகைக்கு வீடு, குறைந்த விலையில உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை எல்லாம் மிக குறைந்த பணத்தை வைத்து பூர்த்தி செஞ்சுக்க முடியும்.

அதுமட்டுமில்ல இந்தியாவின் மற்ற பெரு நகரங்களை ஒப்பிடும் போது இங்க போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவு. குறிப்பா பெங்களூரை போல சென்னையில போக்குவரத்து நெரிசல் இருக்காது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக போக முடியும். ஏன்னா அந்த அளவுக்கு நவீன சாலைகள் கடந்த அஞ்சு ஆண்டுகள்ல போடப்பட்டிருக்கு. அதே மாதிரி டெல்லியை போல அதிகப்படியான காற்று மாசுப்பாடு சென்னையில கிடையாது.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

மும்பை நகரத்தை போல நெருக்கமான மற்றும் அசௌகரியமான குடியிருப்புகள் மற்றும் குறுகிய சாலைகள் சென்னையில கிடையாது. இப்படி கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், போக்குவரத்து, சுற்றலா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் போன்ற எல்லா துறைகளிலும் சென்னை சிறந்த நகரமாக இருப்பதினாலதான் சென்னை என்று உலகளவில்ல எல்லாருமே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு நகரமாகவும் இந்தியாவின் சூப்பர் பவராக கருதப்படுது.

இப்ப சொல்லுங்க நண்பர்களே திருப்பதி மற்றும் காளகஸ்திரியை இழந்து சென்னையை நம்ம கைக்குள்ள வச்சிருந்ததால இவ்வளவு தூரம் நம்மளால உயர்ந்திருக்க முடியுதுனா, தமிழ்நாட்டுக்கு சென்னை அவசியமா தேவைப்படுதா.? இல்ல திருப்பதியா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வளவு தூரம் நீ தெளிவாக பேசினால் உனது கருத்து என்னவென்று என்னிடம் யாரேனும் கேட்கவரலாம்.

எனது பதில் திருப்பதி இல்லாமல் சென்னையை வைத்து நாம் இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறோம் என்றால் திருப்பதியும் நமது கையில் இருந்தால் நம் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது அசூரத்தனமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றொரு பக்கம் திருப்பதி ஆந்திரா கையில் இருப்பது என்று நினைக்கும் போது சற்று சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நமது தமிழ்நாட்டில் கோவில்களை வைத்து சில பித்தலாட்டங்களை செய்து இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பழனியில் இருக்கும் முருகனின் நவ பாசன சிலையை சுரண்டி சுரண்டி பணத்திற்காக விற்ற தகவலும் வந்ததல்லவா..! அதனால் அந்த கோவிலை வைத்து ஆந்திராவானது வளர்ந்து விட்டு போகட்டும். ஆனால் அங்குள்ள தமிழ் கல்வெட்டுகளை மறைக்காமல் மற்றும் அங்குள்ள கல்வெட்டுகளின் மீது தெலுங்கில் கல்வெட்டு பொறிப்பதையும் அந்த அரசாங்கம் தவிர்த்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பதே எனது கருத்து. உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே.

தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?
தமிழ்நாட்டிற்கு தேவையானது எது? சென்னையா அல்லது திருப்பதியா?

அவ்வளவுதான் நண்பர்களே இன்னைக்கான பதிவு அவ்வளவுதான். இந்தியாவின் அடுத்த சூப்பர் பவராக வளரும் சென்னைய பத்தி உங்களோட கருத்து என்ன என்பதை மறக்காமல் கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. இந்த பதிவு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. மீண்டும் இன்னொரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝.

இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது நமது வலைதளத்தின் மூலம் மக்களிடையே கொண்டு வந்து சேர்க்கிறேன். ஆகவே நண்பர்களே பல சுவாரசியம் நிறைந்த இன்ட்ரஸ்டிங்கான தகவல்களின் உடனடி அப்டேட்டுகளை தவறாமல் மக்களிடையே கொண்டு வந்து சேர்ப்பதற்காக நமது வலைதளத்திற்கென பிரத்தியேகமான whatsapp மற்றும் telegram குரூப்பை உருவாக்கி இருக்கிறேன். விருப்பம் இருக்கும் நண்பர்கள் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் உள்ள சேனல்களில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏.

உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால் இந்தப் பதிவையும் படித்துப் பாருங்கள் நிச்சயம் பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்..👇

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
இங்கே கொடுக்கப்பட்ட படமானது மார்புச் சளி மற்றும் அது நுரையீரல் மற்றும் இதயத்தை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குவதற்கான ஒரு மருத்துவ விளக்கப்படமாக உள்ளது. தவறான கண்ணோட்டத்தில் யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏