ஹலோ நண்பர்களே ஆஸ்திரேலியா உலகின் ஆறாவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட ஒரு நாடு. உலகப் பணக்கார நாடுகள்ல ஆஸ்திரேலியாவும் ஒரு நாடாக இருந்து வருது. ஏன்னா இங்க மக்களின் சம்பாத்தியம் மற்றும் வாழ்க்கை தரம் மத்த டெவலப்டு நாடுகளை விட நல்லாவே இருக்கு. இது மட்டுமில்ல ஆஸ்திரேலியா உலக அளவுல தன்னோட இயற்கை அழகுக்கும், பீச்சுகளுக்கும், வனவிலங்குகளுக்கும் கூட ரொம்ப பிரபலமான ஒரு நாடு.

அட இவ்வளவு ஏங்க ஆஸ்திரேலியன் கிரிக்கெட் டீமை பத்தி நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், கிளென் மெக்ரத், ஆண்ட்ரூவ் சைமன்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர்னு எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்ச கிரிக்கெட் வீரர்கள். இது தவிர ஆஸ்திரேலியா இன்னொரு விஷயத்துக்கும் ரொம்பவே பிரபலமான ஒரு நாடு.
அதுதான் அதோட விசித்திரமான ஜியாகிரபி. அத பத்தி தான் இந்த பதிவு தெளிவா விளக்கப் போவது சோ கைஸ் மறக்காம கடைசீ வரைக்கும் படிங்க, நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கும்னு நான் நம்புறேன். நான் உங்கள் காவியா, வாங்க இன்னைக்கான பதிவுக்குள்ள போலாம்…
இந்திய பெருங்கடலின் தெற்குல ஆரம்பிச்சு உலகின் மத்த பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒரே நாடு ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியாவோட மேப்பை பார்த்தா அதுல ஒன்னு மட்டும் நல்லா தெளிவா தெரியும். அது 90% ஆஸ்திரேலியா காலியாக இருக்கிறதுதான். ஆஸ்திரேலியால 85% மக்கள் கடற்கரை ஓரங்கள்ல மட்டுமே வாழ்றாங்க ஆஸ்திரேலியாவுல இவ்வளவு நிலப்பரப்பு இருந்தும் மக்கள் இங்க வாழாம ஏன் காலியாக இருக்குன்னு நீங்க எப்பயாவது யோசிச்சது உண்டா..?

ஏன்னு தெரிஞ்சுக்க ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலிருந்து நம்ம ஆரம்பிப்போம். இந்த பதிவு ஆஸ்திரேலியாவை பத்தி நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயத்தை பத்தி சொல்லப்போகுது. ஆகவே, இதை மறக்காம உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. புது வாசகர்கள் நம்ம வாட்சப் அல்லது டெலிகிராம் சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணலைன்னா இம்மீடியட்டா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம போடுற புது புது பதிவுகள் உங்களுக்கு உடனே வந்துசேரும்.
1606 ஆம் ஆண்டு “வில்லியம் ஜான்சூன்” என்கிற டட்ச் நேவிகேட்டர் இந்தோனேசியால இருந்து தன்னோட வர்த்தகப் பொருட்களோடு திரும்பி கடல் வழியா பயணம் செஞ்சுகிட்டு இருந்தாரு. திரும்பும் வழியில புயல் காரணமா அவருடைய கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக பாதமாறுச்சு. அப்போ கொஞ்ச தொலைவுல அவர் ஒரு தீவை பார்த்தாரு. அதுதான் இன்றைய ஆஸ்திரேலியா. வில்லியம் அவர் நாட்டுக்கு திரும்பிப் போய் இந்த தீவை பத்தி எல்லோருக்கும் சொன்னாரு. ஆனா யாரும் இதைப்பத்தி பெருசா முக்கியத்துவம் கொடுக்கல.




ஏறக்குறைய 163 ஆண்டுகள் கழிச்சு 1709 ஆம் ஆண்டுல சூரியனுக்கும், பூமிக்கும் இடையில வீனஸ் கிரகம் சூரியன் சுற்றிவர இருந்தது. இது மிகவும் அசாதாரணமான நிகழ்வு மற்றும் இந்த நிகழ்வு தெற்கு அதாவது சௌத்தர்ன் ஹெம்ஸ்பியர்ல (Southern Hemisphere) இருந்து மட்டும்தான் தெரியும். இதை பத்தி கேள்விப்பட்ட பிரிட்டிஷ் அரசு கேப்டன் ஜேம்ஸ் குக்கிங் தலைமையில ஒரு பயணத்தை அனுப்பி சௌத்தர்ன் ஹெம்ஸ்பியர்ல ஒரு இடத்தை கண்டுபிடிக்க சொன்னாங்க.
1770 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எக்ஸ்ப்ளோரரான (explorer) கேப்டன் ஜேம்ஸ் குக் தன்னோட க்ரூவோடு இந்த பயணத்தை தொடங்கி பாட்டனி பே (botany bay) -ன்னு அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில கப்பல நிறுத்தினாரு. இவருடைய க்ரூ இங்க தரைய இறங்கி இந்த இடத்தை கைப்பற்ற நினைச்சபோது, உள்ளூர் பழங்குடி மக்களான அபோர்ஜினல் ஆஸ்திரேலியன்ஸோடு கடுமையான சண்டை நடந்தது. இந்த சண்டையில தோத்துப் போய் தன்னோட உயிரை காப்பாற்ற அங்க இருந்து கேப்டன் ஓடினாரு.










கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழிச்சு 1783 ஆம் ஆண்டு கேப்டன் ஆர்த்தர் பிலிப்பின் தலைமையில 11 கப்பல்கள்ல 300 பேர் இங்க வந்து ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளை கைப்பற்றினாங்க. மேலும் அந்த பகுதியை அவங்க பிரிட்டிஷின் கட்டுப்பாட்டுக்கு கீழ கொண்டு வந்தாங்க. இதுக்கு அப்புறம் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை கைப்பற்ற முயற்சி செஞ்சாங்க. ஆனா அங்க இருந்த பாலைவனத்தின் வெப்பமான காலநிலை மற்றும் வெயிலால் ஏற்ப்பட்ட தாகத்தின் தீவிரம் காரணமா கேப்டன் பிலிப்பின் க்ரூல நிறைய பேர் இறந்தாங்க.
இதனால பிலிப் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனா அந்த காலகட்டத்துல பெரும்பாலான ஆரம்பகால ஐரோப்பிய குடியேற்றவாசிகள் எல்லாம் குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் ஆஸ்திரேலியா தீவுக்கு கொண்டுவரப்பட்டாங்க. ஐரோப்பிய குடியேற்றம் தொடர்ந்து அதிகரித்து அடுத்த 60 ஆண்டுகள்ல ஆஸ்திரேலியாவின் உள்ளூர் பழங்குடி மக்களின் மக்கள்தொகை குறைய ஆரம்பிச்சது. ஏன்னா ஐரோப்பியர்கள் கொண்டு வந்த தொற்றுநோய் காரணம்னால 1851 ஆம் ஆண்டுல ஆஸ்திரேலியா பிரபலமாக ஆரம்பிச்சது.
ஏன்னா சிட்னில இருந்து சுமார் 200 km தொலைவில் இருக்கும் பாத்தர்ஸ்ட் (Bathurst) என்கிற கிராமத்துல தங்கத்தின் பெரும் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து 20 ஆண்டுகள்ல அது உலகின் தங்க உற்பத்தியில 40% உற்பத்தியை கொடுத்தது. இந்த தங்கம் அனைத்தும் இங்கே இருந்து பிரிட்டனுக்கு கொண்டு போகப்பட்டது. இதனால பிரிட்டிஷ் அரசாங்கம் 20 ஆண்டுகளுக்கு உலக சந்தையில பவுண்டின் விகிதத்தை பராமரிக்க இந்த தங்கத்தை பயன்படுத்தினாங்க. இந்த காலத்தை தான் வரலாறுல தி இயர் ஆஃப் கோல்ட் ரஷ்ன்னு கூப்பிடுறாங்க.
இந்த 20 ஆண்டுகள்ல யுரோப் மற்றும் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறினாங்க. 1851ல இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டப்போ ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 4.5 லட்சமாக இருந்தது. அடுத்த 20 ஆண்டுகள்ல மக்கள் தொகை 17 லட்சமாக உயர்ந்தது. 1871ல இருந்து 1900 வரைக்கும் ஆஸ்திரேலியா ஆறு காலனிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 1901க்கு அப்புறம் இந்த காலனிகள் எல்லாம் ஒண்ணா இணைஞ்சு காமன்வெல்த் ஆஸ்திரேலியாங்கிற பேரை ஒரு உருவாக்கியது.










அந்த காலகட்டத்துல இருந்துதான் ஆஸ்திரேலியா வேர்ல்ட் மேப்லயும் தோன்றத் தொடங்கியது. மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னேற்றப் பயணமும் தொடங்கியது. இந்த காலகட்டத்துல ஆஸ்திரேலியாவுல வெள்ளைக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டாங்க. இவங்களைத் தவிர வேற யாருக்கும் குடியேற்றம் வழங்கப்படல. மேலும் இந்த பாலிசி அடுத்து 60 ஆண்டுகளுக்கு அப்படியே இருந்தது. இறுதியா 1957-ல வெள்ளையர் இல்லாத குடியேற்றம் பாலிசி நீக்கப்பட்டு, குடியேற்றத்துக்கான பாலிசி தோல் நிறத்திலிருந்து திறமைக்கு மாத்தப்பட்டது.
இதுக்கு அப்புறம் ஆயிரக்கணக்கானவங்க ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேற தொடங்கினாங்க. இன்னைக்கு வரைக்கும் பல கலாச்சார பின்னணியில உள்ளவங்க ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறுனாங்க. ஆனா இன்னைக்கும் ஆஸ்திரேலியாவின் பரப்பளவை ஒப்பிடும்போது அதன் மக்கள் தொகை ரொம்பவே குறைவாதான் இருக்கு. இதுக்கு என்ன காரணம் ஆஸ்திரேலியாவின் நிலத்தின் 1 km-க்கு மூணு பேர் மட்டுமே வாழ்றாங்க. 2024 ரிப்போர்ட்டின் படி ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை 2.6 கோடியாக இருக்கு. இது இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் மக்கள் தொகையை விட குறைவு.
அதே சமயம் ஆஸ்திரேலியா டெல்லியை விட 5183 மடங்கு அதிக பரப்பளவை கொண்டது. ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில 85% மக்கள் அதன் பரப்பளவுல வெறும் 0.23% மட்டுமே வாழ்றாங்க. இதுல அஞ்சு முக்கிய நகரங்களான கேன்ரா, சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பெயின் மற்றும் ஆடிலைட் அடங்கும். இந்த அஞ்சு நகரங்களுமே ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையில அமைஞ்சிருக்குன்னு சொன்னா ஆச்சரியமா இருக்கும். எதுனால 90% ஆஸ்திரேலியா காலியாக இருக்கு. இதுக்கு என்ன காரணம்னு விரிவா சொல்றேன் கேளுங்க.

ஆஸ்திரேலியா கண்டம் அதோட யூனிக் வெஜிடேஷன் (Vegetation -தாவரங்கள்), விலங்கினங்கள், பாலைவனம், ட்ராபிக்கல் ரெயின்ஃபாரெஸ்ட் மற்றும் பனி மலைகள் நிறைந்த பகுதிகளை உள்ளடக்கிய பல்வேறு நிலபரப்புக்கு பெயர் பெற்றது. இங்க இருக்கிற கடினமான புவியியல் நிலைமைகள் காரணமா மனிதர்கள் இங்க வாழ்றது கடினம். என்னதான் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பக்கம் இந்திய பெருங்கடலும் இன்னொரு பக்கம் பசுபிக் பெருங்கடலும் இருந்தாலும் இந்த பறந்த நிலப்பரப்புல மழை அவ்வளவா பெய்யுறது கிடையாது.
கொஞ்சமா பெய்யுற மழையும் தென்கிழக்கு கடற்கரை பக்கம்தான் பெய்யுது. இதனாலதான் மக்கள் இந்த கடற்கரையில வாழ விரும்புறாங்க. மழை பெய்யுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னா கடல்ல இருந்து எழும் சூடான காத்து (ஆவியாகக்கூடிய நீர் மேகமாக தோன்றி) ரொம்ப தூரம் பயணிச்சு குளிர்ச்சி அடைஞ்சு மழையாக பெய்யும். ஆனா ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இது முற்றிலும் வேறுபட்டது. ஏன்னா இதோட மேற்குப் பகுதியில காற்று குளிர்ச்சியாக இருக்கிறதுனால, இது கடல் நீரை ஆவியாகாமல் தடுக்குது. இதனால இங்க மழைப்பொழிவு ஏற்படுறது கிடையாது.
அதே மாதிரி ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி பாலைவனமாக இருக்க காரணம் என்னன்னா ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில தி கிரேட் டிவைடிங் ரேஞ் (Great Dividing Range) என்கிற மிகப்பெரிய மற்றும் நீளமான செயின்ஸ் ஆஃப் மவுண்டைன்ஸ் இருக்கு. இது உலகின் அஞ்சாவது மிக நீளமான மலைத்தொடராகும். இந்த மலைகள் ஆஸ்திரேலியாவின் முழு கிழக்கு பகுதியிலும் வடக்குல இருந்து தெற்கு வரைக்கும் நீண்டுருக்கு. இந்த மலைகளோட உயரம்னால பசுபிக் பகுதியிலிருந்து வரும் பல மழை மேகங்களை இந்த மழைத்தொடர்கள் தடுக்குது. இதனால குளிர்ந்த காற்று மற்றும் மேகங்கள் மேற்கு ஆஸ்திரேலியாகுள்ள போகிறது கிடையாது.
இந்த காரணத்தினாலதான் மேற்கு ஆஸ்திரேலியா பூமியின் மிகவும் வறண்ட நிலமாக இருந்து வருது. கடற்கரையில இருந்து உள்ள போகும்போது காற்று அதிக வெப்பம் அடையுது மற்றும் மேற்குல மழை பெய்யாததுனால வானிலை இங்கே வறண்டு காணப்படுது. இதனால இந்த பகுதியில வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல உயரக்கூடும். இவ்வளவு அதிக வெப்பநிலையில மக்கள் வாழ முடியாதுங்கிறதுனால இந்த நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்படாம இருக்கு.







(நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இப்படி ஒரு பொட்டல் காடு கிடைத்தால் அந்த காடு கூட சிட்டியாக மாறும். அதாவது பொட்டல் காட்டை கூட பிளாட்டு போட்டு கூவி கூவி வித்துருவாங்க. நான் சொன்னது உண்மையா இல்ல பொய்யா உங்க கருத்தை மறக்கமெண்ட்ல சொல்லுங்க) சரி வாங்க காமெடிய கட் பண்ணிட்டு விஷயத்துக்கு வருவோம்…
ஆஸ்திரேலியாவுல இருக்கிற நிலமும் சமமாக இல்லாம பெரிய பாலைவனங்கள் மற்றும் புதர்கள்னு இருக்கு. தண்ணீர் பற்றாக்குறையும் இங்க ஒரு பெரிய பிரச்சனை. இதுபோக இங்க ஆபத்தான விலங்குகள், பூச்சிகள், பாம்புகள் இருக்கிறதுனால மக்கள் இங்க வாழ விரும்புறது இல்லை. கிரேட் விக்டோரியா, தி கிரேட் சாண்டி, சிம்சன், திராரி, பெட்ரிகா, கிப்சன் மற்றும் டனாமின்னு பல பெரிய மற்றும் சின்ன பாலைவனங்கள் இங்க இருக்கு. ஆஸ்திரேலியாவின் பாலைவனங்கள் சுமார் 27 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டிருக்கு. இது ஆஸ்திரேலியாவின் மெயின்லேண்ட்ல 18% மட்டுமே இருந்தாலும் 70% பகுதி பாதி வறண்டு, சிலது முழுமையா வறண்டு பாலைவனமாக மாறியிருக்கு.
இந்த காரணம்னால மக்கள் தொகையில 3% மட்டுமே இங்க தங்கி இருக்காங்க இதுக்கு ஒரு உதாரணம் குல்பி கிராமம். இந்த கிராமத்தின் மக்கள் தொகை வெறும் 600 பேர் மட்டுமே. இந்த கிராமத்துக்கு போக தயாரா இருக்கும் மக்களுக்கு மேயர் சில சலுகைகளை அறிவிச்சிருக்காரு அதாவது அவங்க குடியேற இங்க இலவச நிலமும், 12500 ஆஸ்திரேலியன் டாலர்ஸ், இது இந்திய பணத்துக்கு 685000-மும் கொடுப்பதாக சொன்னாரு. அப்படியும் மக்கள் யாரும் இங்க போக விருப்பப்படல. என்னதான் ஆஸ்திரேலியா ஒரு டெவலப்டு கண்ட்ரியாக இருந்தாலும் அதோட கிராமங்கள்ல அடிப்படை இன்பராஸ்ட்ரக்சர் கூட கிடையாது. உணவு குடிநீர் மருத்துவ வசதி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு.
ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதி காடுகள்னால சூழப்பட்டிருக்கு. ஆனால் வெப்பமான காலநிலை காரணமா இந்த காடுகள்ல அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுது. இதனால இங்க வசிக்கும் மக்களின் வீடுகள் இந்த தீயினால அழிக்கப்படுது. அதானால அங்க வாழ்ந்தவங்க அகதிகள் முகாமுக்கு போக வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க. இந்த மக்கள் வேலை தேடி நகரங்களை நோக்கியும் மைக்ரேட் (இடம்பெயர்வு) ஆகுறதுனால இந்த காடுகளும் காலியாக இருந்து வருது. இது மட்டுமில்ல ஆஸ்திரேலியாவின் பாலைவனத்துல மூன்றில் ஒரு பங்கு பழங்குடி நிலமாக அறிவிக்கப்பட்டிருக்கு.

மேலும் இந்த பகுதி பழங்குடி மக்கள்னால நேச்சுரல் ரிசர்வ் பகுதியாக நிர்வாகிக்கப்படுது. இந்த பாலைவன நிலத்தை பயன்படுத்தும் அதிகாரம் பழங்குடி மக்கள் கிட்டதான் இருக்கு. இன்னைக்கு இங்கே நிறைய பழங்குடியினர் வாழ்ந்தாலும், அவங்களுடைய மக்கள் தொகை ரொம்பவே குறைஞ்சிருச்சு. அதாவது ஒரு கிலோமீட்டர் சுற்றளவுல ஒரு நபரை மட்டுமே பார்க்கலாம். மேலும் இந்த காடுகள்ல வசிக்கும் பழங்குடியினர்னா ABORIGINAL AUSTRALIANS & TORRES STRAIT
ISLANDERS மக்கள்தான் ஆஸ்திரேலியாவின் உண்மையான பூர்வீக மக்கள் நம்ம இன்னைக்கு பார்க்கும் வெள்ளையர்கள் எல்லோருமே பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு குடியேறிய ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த ஆப்ஒரிஜினல் பழங்குடியினர் தான் சொமாலியாவின் பூர்வீக குடிமக்களாக சொல்லப்படுது. இந்த பழங்குடியினர்களுக்குள்ள நிறைய வகையான பழங்குடி மக்கள் இருக்காங்க மற்றும் அவங்க எல்லோரும் பல தாய்மொழிகளை பேசுறாங்க. ஆங்கிலேயர்களின் காலனித்துவத்துக்கு முன்னாடி இந்த பழங்குடியினரின் மக்கள் தொகை வெள்ளையர்களை விட அதிகமா இருந்தது. ஆனா இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சு. ஆஸ்திரேலியாவின் இந்த பழங்கால பூர்வீக மக்கள் சுமார் 40000-ல இருந்து 65000 ஆண்டுகளுக்கு முன்னாடி ஆஸ்திரேலியாவுக்கு வந்ததாக நம்பப்படுது.
இதுல ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னன்னா தமிழர்களின் டிஎன்ஏ இந்த பூர்வீக மக்கள் கிட்ட இருப்பதாக சொல்லப்படுது. சரி விஷயத்துக்கு வருவோம். ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியை தவிர்த்து மத்த பகுதிகள் எல்லாம் வறண்ட நிலமாக இருந்தாலும், தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலியன் ஆல்ப்ஸ் ஒரு பனி நிறைஞ்ச மலைத்தொடராகும். அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, கேன்பெரா, கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரிஸ்பென் வரைக்கும் தண்ணி நிறைஞ்ச மலைகள்தான் இருக்கு.

ஆஸ்திரேலியாவின் வரலாறு சுமார் 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. காலநிலை மாற்றங்கள் மற்றும் மழைத்தொடர்களின் உருவாக்கம்னால இங்க தண்ணீரை தேக்கி நிலத்தை வளமாக்கும் திறன் கொண்ட மேல்மட்ட மண் இங்க முழுமையா அழிஞ்சு போச்சு. இதனால இங்கே இருக்கும் பெரும்பாலான நிலங்கள் வறண்டு விரிச்சோடி காணப்படுது. ஜனவரி 10 1939-ல ஆஸ்திரேலியாவின் மெனின்டில அதிகபட்ச வெப்பநிலையா 49.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கு.
அதே மாதிரி 29 ஜூன் 1994-ல ஆஸ்திரேலியாவின் சார்லட் பகுதியில குறைந்தபட்ச வெப்பநிலையாக -30 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கு. இதனாலதான் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை அதிக சூடாகவோ இல்ல குளிரோ இல்லாத பகுதியில வாழ்றாங்க. இதுவே 90% ஆஸ்திரேலியா காலியாக இருக்க காரணம்.





நண்பர்களே இன்னைக்கான பதிவு அவ்வளவுதான், ஆஸ்திரேலியாவின் இந்த கடுமையான காலநிலைக்கு கம்ப்பேர் பண்ணும்போது இந்தியாவின் காலநிலை எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைக்கிறீங்களா..! உங்க பதிலை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. இவ்வளவு நேரம் பொறுமையாக இந்த பதிவை இறுதிவரை படித்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆகவே இதுபோல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸை கிளிக் செய்து அதில் இருக்கக்கூடிய வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் சேனலில் ஜாயின் செய்து கொள்ளுங்கள். மேலும இந்த பதிவு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. இன்னும் ஓர் இன்ட்ரஸ்டிங்கான பதிவுல சந்திப்போம் மறக்காம நம்ம வாட்ஸ் அப் மற்றும் telegram சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி உங்க ஆதரவு கொடுங்க. உங்கள் ஆதரவை வேண்டி 🙏 🙏 🙏
நான் உங்கள் காவியா… 📝
ஆஸ்திரேலியாவின் சில அற்புதமான பகுதியின் புகைப்படங்கள் இதோ..👇



