மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

இந்த பதிவில் கற்பிதம் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தி இருப்பேன். அதற்கான அர்த்ததை படித்துவிட்டு உங்களது சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள். கற்பிதம் என்றால் என்னவென்று தெரியவில்லையே என்று குழம்பி விடாதீர்கள்.

கற்பிதம் என்பது புனைவு, கட்டுக்கதை, கற்பனை, பொய், அல்லது அனுமானங்கள் போன்ற பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்.

  • புனைவு (Fable): ஒரு கதையை அல்லது சம்பவத்தை புனைந்து பேசுவது.
  • கட்டுக்கதை (Artificial): உண்மையில் இல்லாத ஒன்றை கற்பனை செய்து சொல்லுவது.
  • கற்பனை (Imagination): மனதில் தோன்றும் ஒரு பிம்பம் அல்லது எண்ணம்.
  • பொய் (Lie): உண்மைக்கு மாறாக சொல்லுவது.
  • அனுமானம் (Assumption): ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் செய்யும் யூகங்கள் அல்லது கூற்றுக்கள்.

இப்போது உங்களுக்கு கற்பிதம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். வாருங்கள் பதிவுக்குள் செல்வோம்.

குறிப்பு: தயவுசெய்து இந்த பதிவை தவறான கண்ணோட்டத்தில் யாரும் படிக்க வேண்டாம். மருத்துவ ரீதியாக உருவாக்கப்பட்ட இந்த பதிவினை தவறான பதிவு என்று நினைத்து படிக்காமல் சென்று விடாதீர்கள். நிச்சயம் உங்களுக்கு பல பயனுள்ள தகவல்களை இந்தப் பதிவுத் தரும்.

நமது இந்த பதிவினை படிப்பதன் மூலம் நீங்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் உங்கள் உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தால் தயவு செய்து பதிவினை மட்டும் படித்து விட்டு நமக்கு நாமே டாக்டராக இருக்க முயற்சி செய்யாதீர்கள். தயவு செய்து மருத்துவரையும் அணுகி உங்களது பிரச்சனைக்கான சொலியூசனை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. இந்த இடத்தில் நான் இந்த தகவலை சொல்லுவதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா? முகநூலில் நேற்று நான் பதிவிட்ட பதிவிற்கு கீழே ஒரு தோழி ஒருவர் என்னிடம் இது போல ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு நான் எவ்வாறு பதில் அளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிய நிலையில் இருந்தேன். ஏனென்றால் நாம் வாழக்கூடிய நம் நாட்டில் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

மூடநம்பிக்கை படி பார்த்தால் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்று தெரியவில்லை. ஆனால் மருத்துவ ரீதியாக இதற்கு என்னால் பதில் அளிக்க முடியும். அதற்கான விடையை இந்தப் பதிவில் நான் எழுதி இருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயன் அளிக்கும்.

முக்கியமாக இந்த பதில் ஆனது ஒவ்வொருவரின் நம்பிக்கையை கெடுக்கும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல என்பதை நான் இந்த இடத்தில் கூறிக் கொள்கிறேன். மருத்துவ ரீதியாக மட்டும் இந்த பதிவை படிக்கவும். ஆன்மீக ரீதியாக இந்த பதிவை படிக்க நினைத்தால் தயவு செய்து இப்போதே இந்த பதிவை படிக்காமல் நிறுத்தி விடுவது உங்களுக்கு நல்லது. உங்களுக்கு மட்டும் இல்லை விடிய விடிய கஷ்டப்பட்டு இந்த பதிவிற்காக நான் எடுத்த உழைப்பும் வீணாகாமல் இருக்கும் என்பதை இந்த இடத்தில் நான் கூறிக் கொள்கிறேன்.

வாருங்கள் அந்தத் தோழி கேட்ட கேள்விக்கான விடையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சுடச்சுட அப்டேட்ஸ் வலைதளம். நான் உங்கள் காவியா.

மனித இனம் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வான மாதவிடாயை அருவருப்புடனும், புறக்கணிப்புடனும்தான் அணுகுகிறோம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதுகூடக் கிடையாது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதற்கான வழிகளும் இல்லை.

பெரும்பாலான சிறுமிகளும், பெண்களும் பழந்துணியைத்தான் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்துகிறார்கள். சானிட்டரி நாப்கின், டாம்பூன், மாதவிடாய்க் குப்பி போன்றவை பெருவாரியான பெண்களைச் சென்றடையவில்லை. மாதவிடாய் நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வழியில்லாததால் பெரும்பாலான பெண்கள் பள்ளியைவிட்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மாதவிடாய் நாட்களின் சுத்தம் குறித்த விழிப்புணர்வோடு மாதவிடாய் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வை நீக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதுதான் ‘உலக மாதவிடாய் சுகாதார நாள்’.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெறும் என்பதால் ஆண்டுதோறும் மே 28 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘2030-க்குள் மாதவிடாயை வாழ்க்கையின் இயல்பான நிகழ்வாக்குவோம்’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.

மாதவிடாய் குறித்த உண்மைகளைவிடக் கற்பிதங்களே மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றன. அதனால்தான் பெண்கள்கூட அந்தக் கற்பிதங்களை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறார்கள். மாதவிடாய் குறித்த கற்பிதங்களையும் உண்மைகளையும் பிரித்து அறிவோம்.

கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் வெளியேறும் ரத்தம் அசுத்தமானதா?

See also  முகத்தை பளபளப்பாக்கும் கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்கள்

உண்மை : பலரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கும் கற்பிதம் இது. மாதவிடாய் என்பது பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடையது. மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தம், நம் உடல் முழுவதும் பாயும் ரத்தத்தைப் போன்றதே. இதன் நிறம் வெளிர் சிவப்பு நிறத்தில் தொடங்கி அடர் பழுப்பு நிறம் வரை நபரைப் பொறுத்து மாறுபடும். மாதவிடாயின் தொடக்கத்திலும் முடிவிலும் சிலருக்கு அடர் பழுப்பு அல்லது கருநிறத்தில் ரத்தம் வெளியேறும். மாதவிடாயின் போது ரத்தம் மட்டுமல்லாமல் கருப்பைச் சுவரில் ஒட்டியுள்ள திசுக்களும் வெளியேறும்.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் தலைக்குக் குளிக்கக் கூடாது அல்லது அந்த மூன்று நாட்களும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும்.

உண்மை: இரண்டுமே கட்டாயம் அல்ல. மாதவிடாயை முன்னிட்டு நம் வழக்கமான செயல்பாடுகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மாதவிடாய் நாட்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் தயிர், வாழைக்காய், உருளைக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. இவை மாதவிடாய் உதிரப்போக்கைப் பாதிக்கும்.

உண்மை: இதற்கும் அறிவியல்பூர்வமான சான்றுகள் இல்லை. மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதில் தடையில்லை.

  • தயிர் – புரோபயாடிக்ஸ் (Probiotics) நிறைந்ததால், வயிற்று நலத்தை மேம்படுத்தும். சிலருக்கு குளிர்ச்சி அதிகமாகலாம், ஆனால் பொதுவாக இது கேடில்லை.
  • வாழைக்காய் – இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்க்க உதவும், மேலும் பசிப்புணர்வை நீண்ட நேரம் வைத்திருக்க உதவலாம்.
  • உருளைக்கிழங்கு – இது கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவாக இருப்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

மாதவிடாய் உதிரப்போக்கை பாதிக்குமா?

இவை எந்தவொன்றும் மாதவிடாய் உதிரப்போக்கை அதிகப்படுத்தவோ அல்லது குறைக்கவோ செய்யாது. மாதவிடாய் நேரத்தில் உண்ணும் உணவு முறையைக் கருத்தில் கொண்டு உடல்நலம் மேம்படுத்தலாம், ஆனால் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

முடிவுசெய்தல்: இந்தக் கருத்து ஒரு கற்பிதம் மட்டுமே. உணவை உடல்நிலை, உடல்நல உணர்வு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யலாம், ஆனால் அவை மாதவிடாய் நிலைமையை தன்னிச்சையாக பாதிக்காது.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் தனிமைப்படுத்திக்கொள்ள
வேண்டுமா?

உண்மை: இதற்கும் அறிவியல்பூர்வமான சான்று கிடையாது. மாதவிடாய் நாட்களில் சிலர் அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்றவற்றால் சோர்வடைந்துவிடுவார்கள். அப்போது வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் அதிலிருந்து விலக்கு அளிக்க தனிமைப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த நடைமுறை வந்திருக்கக் கூடும் என்று சொல்லப்பட்டாலும், மாதவிடாயை ‘தீட்டு’ என்று சொல்லி ஒதுக்கிவைக்கவே இந்த ஏற்பாடு. அதனால் மாதவிடாய் நாட்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.

  • மாதவிடாய் ஒரு இயற்கையான செயல்முறை – இது எந்தவித பாதகமான அல்லது ஒதுக்க வேண்டிய ஒரு நிலைமையல்ல.
  • சுயநலன் முக்கியம் – சில பெண்களுக்கு அந்நாட்களில் நச்சுநினைப்புகள், தோன்மயக்கம், வயிற்று வலி போன்றவை ஏற்படலாம். தங்கள் வசதிக்கேற்ப ஓய்வெடுக்கலாம், ஆனால் கட்டாயமான தனிமைப்படுத்தல் தேவையில்லை.
  • சமுதாய பங்கேற்பு தொடரலாம் – இயல்பாகவே பெண்கள் அவர்கள் வேலைகள், பள்ளி, உறவினர்கள், சமையல், பூஜை போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடலாம்.

முடிவுசெய்தல்: மாதவிடாய் நாட்களில் தனிமைப்படுத்தல் தேவை என்பதெல்லாம் பழமையான, அறிவியலுக்கு எதிரான கருத்து. பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழ முடியும், அவர்களின் உடல் நலத்திற்கேற்ப செயல்படலாம்.

கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் ஊறுகாய், உப்பு போன்ற உணவுப் பண்டங்களைத் தொடக் கூடாதா?

உண்மை: மாதவிடாய் நாட்களில் ஊறுகாயையும் உணவுப் பொருட்களையும் தொட்டால் அவை கெட்டுவிடும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையல்ல. அது மூடநம்பிக்கை.

அதாவது ஊறுகாயின் நீடித்துத் தேங்கும் தன்மை (preservation) அதில் உள்ள உப்பு, எண்ணெய், மசாலா போன்றவற்றால் வருகிறது.

தூய்மையான கைகளால் தொடுவதும், நனைந்த கைகளால் தொடாமல் இருப்பதும் முக்கியம், ஆனால் இது எல்லாருக்கும் பொருந்தும், மாதவிடாய் உள்ளவர்களுக்கே அல்ல.

உப்பு போன்ற உணவுகளை தொடக்கூடாதா?

உப்பு போன்ற உணவுகளை தொடக்கூடாதா?
உப்பு போன்ற உணவுகளை தொடக்கூடாதா?

இல்லை. உணவுகளில் உப்பு சேர்ப்பது உணவை பாதுகாக்கும்.

மாதவிடாய் நாட்களில் உப்பு உடல் நீரை பிடித்துவைக்கும் (water retention) காரணமாக சிலருக்கு வீக்கம் ஏற்படலாம். ஆனால் இது உணவைத் தொடக்கூடாது என்பதற்கான காரணமல்ல.

முடிவுசெய்தல்: மாதவிடாய் காலத்தில் உணவுகளைத் தொடக்கூடாது என்பதும், அது கெட்டுப்போகும் என்பதும் அறிவியல் ஆதாரமற்ற மரபு நம்பிக்கைகள். உணவுகளை கவனமாக கையாள வேண்டும் என்பதோடு, மாதவிடாய் காலத்தில் எந்த உணவையும் எதிர்ப்பாராத விதத்தில் பாதிக்க முடியாது.

கற்பிதம்: மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யக் கூடாதா?

உண்மை: இது தவறு. மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்வதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. நடைபயிற்சியைக்கூடக் கைவிட வேண்டியதில்லை. சில ஆசனங்கள் மாதவிடாய் நாட்களின் வயிற்று வலியை மட்டுப்படுத்த உதவும்.

  • உடற்பயிற்சி வலியை குறைக்கும் – மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி, தலைவலி, சூடுபிடித்த உணர்வு போன்றவை ஏற்படலாம். இதற்கு சிறிய அளவில் இயல்பான உடற்பயிற்சி (யோகா, நடை, லேசான கார்டியோ) சிறந்தது.
  • மூடுபனை உணர்வை குறைக்கும் – மாதவிடாயின் போது ஹார்மோன் மாற்றங்கள் மனநிலையை பாதிக்கலாம். உடற்பயிற்சி எண்டார்ஃபின்களை (Endorphins) வெளியேற்றி மனதைக் கிளர்ச்சி கொள்ள செய்யும்.
  • இயல்பான நாளுக்கேற்ப செய்யலாம் – பொதுவாக நீங்கள் எந்த அளவுக்கு பயிற்சி செய்வீர்களோ, அதேபோல மாதவிடாய் நாட்களிலும் செய்யலாம். உடல் அமைப்பை பொறுத்து வியர்வைப்பயிற்சியை குறைக்கலாம்.
See also  இறந்த மனிதன் உடலில் இவ்வளோ விஷயம் நடக்குமா?

எதை தவிர்க்க வேண்டும்?

  • மிகுந்த கடுமையான உடற்பயிற்சி சிலருக்கு ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில் உளைச்சலை அதிகரிக்கலாம்.
  • உடல் எரிச்சல் அதிகமானால், குறைவாக செய்யலாம் – பயிற்சி முழுமையாக தவிர்க்க வேண்டியதில்லை, ஆனால் உங்களுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

முடிவுசெய்தல்: மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பதும் அறிவியல் ஆதாரமற்ற ஒரு பழைய நம்பிக்கை. உண்மையில், லேசான உடற்பயிற்சி வலியை குறைக்கவும், மனநிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. உங்கள் உடலுக்கு ஏற்ப பொருத்தமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

மூடுபனை என்றால் என்ன?

“மூடுபனை” என்பது மனதின் சலிப்பு, மந்த நிலை, உற்சாகம் குறைவது போன்ற உணர்வுகளை குறிக்கும் தமிழ்ச் சொல். இதை மனச்சோர்வு, எதிலும் ஆர்வம் இல்லாமை, களைப்பு உணர்வு போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

உதாரணம்:

  • “மாதவிடாய் நேரத்தில் சிலருக்கு மூடுபனை அதிகமாக இருக்கலாம்.”
  • “நீங்கள் தினமும் ஒரே மாதிரியான வேலை செய்தால், மூடுபனை வந்து விடும்.”

மாதவிடாய் நேரத்தில் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு மூடுபனை ஏற்படும், ஆனால் இதை குறைப்பதற்கு உடற்பயிற்சி, சரியான உணவு, ஓய்வு ஆகியவை உதவலாம்.

கற்பிதம்: மாதவிடாய் வரவில்லை என்றால் கருவுற்றிருப்பதாக அர்த்தமா?

உண்மை: இது தவறு. மாதவிடாய் வராமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், முறையற்ற உணவுப் பழக்கம், மனச் சோர்வு, வேறு ஏதேனும் நோய் போன்றவற்றால்கூட மாதவிடாய் தள்ளிப் போகலாம். முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல்
கருவுற்றிருப்பதாக நாமாகவே முடிவெடுப்பது தவறு.

கற்பிதம்: மாதவிடாய் சமயத்தில் கோயிலுக்கு செல்லக் கூடாதா?

உண்மை: இதற்கான பதில் இன்றுவரை நம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் யாராலும் தெளிவாக விளக்கம் தர முடியவில்லை அதாவது ஆன்மீக ரீதியில். ஆனால் இதற்கு அறிவியல் ரீதியாக பலரும் பல விதமாக பதில்களை அளித்துள்ளார்கள். அவைகள் என்ன என்பதை நீங்கள் இந்த பதிவில் நன்றாக தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

கருவுறாமல் இருக்கும் சமயத்தில் உடலில் இருக்கக்கூடிய வேஸ்டான கருப்பை திசுக்கள் ஆனது மாதத்திற்கு ஒரு மறை மாதவிடாய் என்ற அமைப்பின் மூலமாக உடலில் இருந்து வெளியேறுகிறது. இதுதான் அறிவியல் ரீதியாக சொல்லக்கூடிய காரணம்.

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இப்போது பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் சானிட்டரி நாப்கின்கள் அந்த காலத்தில் இல்லை. அப்போது வெறும் காட்டன் துணியை பயன்படுத்தி இவ்வாறான பிரச்சனையை அந்த ஐந்து நாட்களுக்கு கடந்து வந்தார்கள்.

தனிமைப்படுத்தி வைத்ததற்கான முக்கிய காரணம் அப்போது வாசனைகள் நிறைந்த நாப்கின்கள் இல்லாதது முக்கிய காரணமாகவும் கூறலாம். ஏனென்றால் ரத்தத்திலிருந்து வாரக்கூடிய கெட்ட வாடையானது மிகவும் மோசமானதாக இருக்கும். அதனால் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

அச்சமயத்தில் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று சொல்வதற்கான காரணம் என்னவென்றால் இப்போது இருக்கக்கூடிய வசதிகள் அப்போது இல்லாமல் இருந்ததே காரணமாகும். முன்பே கூறினேன் அல்லவா காட்டன் துணியை பயன்படுத்தி இப் பிரச்சனைகளை அந்த காலத்தில் கடந்து வந்தார்கள். அதனால் கோவில்களுக்கு செல்லும்போது நிறைய காட்டன் துணிகளை எடுத்து செல்ல முடியாமல் இருந்திருக்கலாம்.

மேலும் ரத்தத்தில் இருந்து வரும் கெட்ட வாடையும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் அச்சமயத்தில் உடல் சோர்வுகள் அதிகமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதுதான் அனைத்திற்கும் சொல்யூஷன் வந்துவிட்டதே ஏன் கோவிலுக்கு செல்லக்கூடாது? என்ற கேள்வியை நான் பல்வேறு வீடியோக்களின் கமெண்ட்களில் கீழ் பார்த்தேன்.

மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?
மாதவிடாய் நாட்களில் தொட்டால் ஊறுகாய் கெட்டுப்போகுமா?

இதற்கு அறிவியல் சொல்லும் பதில், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். உங்களின் சுதந்திரத்திற்கு யாரும் தடை கிடையாது. நமது நாட்டில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் இதுவும் ஒன்று, என்பதால் ஆன்மீக ரீதியாக பார்த்தால் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று தன் பலரும் சொல்லி வருகிறார்கள். அதுமட்டுமின்றி அச்சமயத்தில் வீட்டுக்குள்ளேயும் வரக்கூடாது என்று சொல்வார்கள் அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கும்.

இந்த ஒரு கேள்விக்கு என்னால் முடிந்தவரை பல பல கட்டுரைகளைப் படித்தும், பல வீடியோக்களை பார்த்தும் நான் பதிலை சேகரித்து ஒரே பதிவாக உருவாக்கி இருக்கிறேன். ஆனால் இறுதியாக ஒரு கேள்விக்கு என்னால் அழுத்தம் திருத்தமாக பதில் கொடுக்க முடியவில்லை. காரணம் நமது நாட்டில் நிலவி வரும் பல சூழ்நிலைகள். அது உங்களுக்கே புரிந்திருக்கும். உண்மையை உரக்க கூறினால் என்னை மதத்திற்கு எதிரானவள் என்று கூறி முத்திரை குத்தி விடுவார்கள். ஆகவே புரிந்து கொள்ளுங்கள் என் தோழியே.

See also  தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லை, எப்படி இதிலிருந்து தப்பிப்பது?

கற்பிதம்: அச்சமயத்தில் உடலுறவு கொள்ளலாமா?

உண்மை: மாதவிடாய் சமயத்தில் உடலுறவு கொள்வதில் பல நன்மைகளும் சில தீமைகளும் இருக்கிறது. முதலில் நன்மைகளை பார்ப்போம்.

  • நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை உங்களுக்கு இருக்காது. அதாவது ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை மாதவிடாய் இருக்கிறது என்றால் அவை பாதி நாட்களாக குறையும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் உறவில் இருக்கும்போது ஒரு பெண் ஆர்கஸம் அடைவதால் கர்பப்பையில் இருக்கக்கூடிய கழிவுகள் அனைத்தும் சீக்கிரமாக வெளியேறுவதால் இது போன்ற நிகழ்வுகள் மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது.
  • மாதவிடாய் சமயத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் menstrual cramps என்னும் நிலை ஏற்ப்படும். அச்சமயத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது யூட்ரஸானது கண்ட்ராக்ட் ஆகுறதால சில ஹார்மோன்கள் ரிலீஸ் ஆகும். இவ்வாறு இந்த ஹார்மோன்கள் ரிலீஸ் ஆவதால் menstrual cramps என்னும் muscle cramps ஐ குறைக்கிறது.
  • மாதவிடாய் சமயத்தில் உறவில் இருக்கும்போது ஒரு பெண்ணிற்கு வாஸ்குலாரிட்டி அதாவது ரத்த ஓட்டமானது பெண்ணுறுப்பில் அதிகமாக இருப்பதால் உணர்ச்சிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும். அதனால் இருபாலருக்கும் இது அளவில்லாத சந்தோஷத்தை அச்சமயத்தில் கிடைக்க உதவும்.
  • மாதவிடாய் சமயத்தில் வெளியேறக்கூடிய இரத்தமானது லூப்ரிகண்டாக செயல்படுவதால் வலி என்பது நேச்சுரலாகவே தெரிவிக்காது.
  • மைக்ரைன் அட்டக்ஸ் பிரச்சினையானது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும். இவ்வாறு ஏற்படக்கூடிய இந்த பிரச்சனையானது உடலுறவில் ஈடுபடும் போது குறைவதாக ஆராய்ச்சியின் முடிவில் கூறுகிறார்கள்.

இதுவரை மாதவிடாய் சமயத்தில் உடலுறவு கொள்வதில் ஏற்படக்கூடிய நன்மைகளை பார்த்தோம். இப்போது இதனால் ஏற்படக்கூடிய தீமைகளை பார்க்கலாம் வாருங்கள்.

  • நிறைய பேருக்கு ரத்தத்தை பார்த்தவுடன் பயம் ஏற்படும். பயம் மட்டுமின்றி கவலையும் அதிகமாகும்.
  • மாதவிடாய் சமயத்தில் வெளியேறக்கூடிய இரத்தத்தில் இருந்து ஹப்படைடிஸ் என்னும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம்? நன்மைகளைப் பார்த்தவுடன் சந்தோஷப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் தீமையை பார்த்தவுடன் ஒரு செகண்ட் பயம் தோன்றியிருக்கலாம். நீங்கள் அச்சப்பட்டதில் தவறேதும் இல்லை. உங்கள் பயத்தை போக்குவதற்கு என்னிடம் பதிலும் உள்ளது.

மாதவிடாய் சமயத்தில் ஆணுறைகளை பயன்படுத்தினால் மேற் சொன்ன வைரஸ் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் ரத்தத்தை பார்த்தவுடன் கவலை மற்றும் பயம் தோன்றினாள் அதற்கு யாரும் எந்த ஒரு பதிலும் தர முடியாது. கண்ணைக் கட்டிக் கொண்டுதான் நீங்கள் விளையாட வேண்டும்.

ஒரு தோழி ஒருவர் கேட்ட கேள்விக்காக உருவாக்கிய இந்த பதிலானது நிச்சயம் பலருக்கும் பயன் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். நான் கொடுத்த இந்த தகவல் உங்களுக்கு பயனளித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி. இது போன்ற சந்தேகத்தோடு தெரிந்து கொண்டிருக்கும் உங்களது தோழிகள் மற்றும் தோழர்கள் வீட்டில் உள்ள நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் இந்த பதிவை அனுப்பி அவர்களின் சந்தேகத்தையும் போக்குங்கள்.

இவ்வளவு நேரம் இந்த பதிவை பொறுமையாக படித்திருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு பல்வேறு விதமான சுவாரஸ்யம் நிறைந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் அதிகமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆகவே நண்பர்களே இது போன்ற தகவல்களின் உடனடி அப்டேட்டுகளை பெறுவதற்காக நான் ஒரு டெலிகிராம் சேனல் மற்றும் வாட்ஸ் அப்பில் சேனலையும் கிரியேட் செய்து உள்ளேன். டெலிகிராம் இருக்கும் நண்பர்கள் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். telegram இல்லாத நண்பர்கள் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான டெலிகிராம் சேனல் மற்றும் whatsapp சேனல் ஆனது தெரியும். அதை கிளிக் செய்து மறக்காமல் இணைந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝

உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தால் இந்த பதிவையும் படித்து பாருங்கள்..👇

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்

நுரையீரல் ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் ஐந்து முக்கியமான பெரிய அறிகுறிகள்
இங்கே கொடுக்கப்பட்ட படமானது மார்புச் சளி மற்றும் அது நுரையீரல் மற்றும் இதயத்தை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குவதற்கான ஒரு மருத்துவ விளக்கப்படமாக உள்ளது. தவறான கண்ணோட்டத்தில் யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Popular stories

Please share post link, don't copy and paste 🙏