இந்த ராட்சசர்கள் உயிரோடு இருந்தால் உலகத்தின் கதி? என்னவாக இருக்கும்..? வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல நாம பார்க்க போறது, ஒரு காலத்துல பூமியில சுத்தி வந்த ரெண்டு ராட்சசனங்களான டைட்டனோபோவா (Titanoboa) பாம்பும், குரோனோசரஸ் (Kronosaurus) ரெப்டைலும் இப்ப பூமியில வாழ்ந்துகிட்டு இருந்தா என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்குங்கிறதை பத்தி இந்த பதிவுல டீடெய்லா பார்க்க போறோம். அதுமட்டுமல்லாமல் அதுங்க எந்த காலத்துல எப்படி வாழ்ந்தது..? இதுங்க எவ்வளவு பெருசா இருக்கும்..? இதுங்களோட சில பிஹேவியர்ஸையும் இந்த பதிவுல பார்க்க போறோம். வாங்க இன்னைக்கான பதிவுகுள்ள போகலாம்.

டக்குனு உங்ககிட்ட இந்த உலகத்தோட மிகப்பெரிய பாம்பு எதுன்னு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க..? அதுக்கு ஒரு ஹின்ட் கொடுக்கிற மாதிரி அந்த பாம்போட பேர்ல ஒரு ஹாலிவுட் படமும் எடுத்திருக்காங்கன்னு சொன்னா நீங்க கரெக்டா அந்த மிகப்பெரிய பாம்பு அணக்கொண்டாதான்னு சொல்லுவீங்க.
அதே மாதிரி உலகத்தோட மிகப்பெரிய முதலை எதுன்னு கேட்டாலும் சால்ட் வாட்டர் குரொக்கடைன்னு (Crocodile) அழகா கெஸ் பண்ணலாம். இதுங்க ரெண்டும் இப்ப இருக்கிற மிகப்பெரிய ஆபெக்ஸ் பிரடேட்டர் (Apex predator) ஆனா பூமியில ஒரு காலத்துல வாழ்ந்த ரெண்டு மிகப்பெரிய ஜெயின்ட் மான்ஸ்டர்ஸ கம்பேர் பண்ணும்போது இதுங்க ஜஸ்ட் நேத்து பேஞ்ச மழையில மொழைச்ச காளான்கள்தான்.

இப்ப இருக்கிற மிகப்பெரிய முதலைகளை அடிச்சு தூக்கி சாப்பிடுற மாதிரி 120 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த கடலோட ஆபெக்ஸ் பிரடேட்டரும், மிகப்பெரிய ரெப்டைலுமான குரோனோசரஸூம், அடுத்து இப்ப இருக்கிற அனகொண்டாவையே முழுங்கக்கூடிய மிகப்பெரிய பாம்பான டைட்டனோபோவாவும் ஒரு காலத்துல பூமியவே ஆட்டி படைச்ச ரெண்டு மிகப்பெரிய வேட்டையாடி இதுங்கதான். கடலில் குரோனோசரசும், நிலத்துல டைட்டனோபாவும் மத்த விலங்குகளை டாமினேட் (Dominant) பண்ணி முதன்மை வேட்டையாடிகளா காணப்பட்டது. இதுங்க ரெண்டும் இப்ப பூமியில வாழ்ந்ததுன்னா மனிதர்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்..?
இதை தெரிஞ்சுக்கணும்னா பல மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி எங்க எப்படி இதுங்க வாழ்ந்தது..? இதுங்களோட லைஃப் அப்போ எப்படி இருந்ததுங்கிறதை நாம தெரிஞ்சுக்கிட்டாதான் இப்ப இதுங்க பூமியில வாழ்ந்தா அதால என்னென்ன விளைவுகள் ஏற்படுங்கிறதை நம்மளால சொல்ல முடியும்.

சரி வாங்க இந்த ரெண்டு மான்ஸ்டர்ஸ் பத்தி பார்ப்போம். நம்மகிட்ட ஒரு டைம் மெஷின் இருந்திருந்தா இந்த ரெண்டு மான்ஸ்டரும் வாழ்ந்த காலத்துக்கு டிராவல் பண்ணி இதுங்களை பத்தி நிறைய தெரிஞ்சிருக்கலாம். ஆனா அந்த வாய்ப்பு இல்லாததால இதுங்களை பத்தி இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.
டைட்டனோபோவா 58 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மிகப்பெரிய பாம்பு. ஆராய்ச்சியாளர்களோட கருத்துப்படி இது உருவானதுல இருந்து அடுத்த 10 மில்லியன் வருடங்கள் இது பூமியில வாழ்ந்திருக்கு. இது வாழ்ந்த காலத்துல இதுதான் மிகப்பெரிய பிரிடேட்டர். டைனோசர்கள் அழிஞ்ச பிறகு உலகம் ரொம்ப சூடாகவும், நீராவி நிறைஞ்சதாவும் இருந்தது.
இது குளிர் ரத்தம் கொண்ட டைட்டனோபோவாக்கு ஏத்த காலநிலையா இருந்ததால அதுங்க செழித்து வளர்ந்தது. இது 13 m நீளம் வர வளரும் அதாவது 43 அடி. வெயிட் ஒரு டன்னையும் தாண்டி போகும். இப்ப இருக்கிற பாம்புகள்ல ரொம்ப நீளமானது ரெட்டிகுலேட்டட் பைதான் (Reticulated Python). ஆனா இதைவிட நாலு மீட்டர் நீளமானது டைட்டனோபோவா.

ரெண்டு ஒட்டகச் சீவிங்க ஒன்னு மேல ஒன்னு அடுக்குனாலும் அதைவிட டைட்டனோபோவா நீளமா இருக்கும். மேலே இனைத்த மண்டையோடு போட்டோவ பார்த்தீங்களா..? இப்ப இருக்கிற அனகோண்டாவோட மண்டை ஓட்டு சைஸுக்கும், டைட்டனோபோவோட மண்டை ஓட்டு சைஸுக்கும் உள்ள வித்தியாசத்தை. இதுவே டைட்டனோபோவா எவ்வளவு பெருசுங்கிறத நமக்கு புரிய வைக்கும். முக்கியமா இதோட அகலம் தான் நம்மள ரொம்ப ஆச்சரியப்படுத்தும். ஒரு மீட்டர் அகலத்தோட இருக்கிற இது ஒரு நீர் யானையாவே முழுசா முழுங்கிடும். இருந்தாலும் அந்த காலத்துல நீர் யானை இல்லை சும்மா ஒரு எக்ஸாம்பிள்க்கு சொல்றேன்.
இதுங்க இவ்வளவு பெரிய உருவத்தோட இருந்தாலும், அடுத்த வேளை உணவுக்கு இது மீன்களை சாப்பிடத்தான் விருப்பப்பட்டுச்சு. குளிர் ரத்த விலங்கா இருந்ததால இதுங்களுக்கு அதிக வெப்பம் தேவைப்பட்டது. இதனால பூமத்தி ரேகை பகுதியில இருந்த ஈரமான வெப்பமண்டல காடுகளோட நன்னீர் ஆறுகள்ல இதுங்க வாழ்ந்திருக்கு. இதோட வாழ்விடத்தை பகிர்ந்துக்கிற இன்னொரு பிரடேட்டர்னா அது அந்த காலத்துல வாழ்ந்த முதலைதான். அந்த முதலையவே அடுத்த வேலை உணவா இந்த டைடனோபோவா மாத்தி இருக்கு. அற்புதமான வேட்டையாடியான இது இப்ப இருக்கிற அனகோண்டாஸ் மாதிரியே முதலையை தாக்கி இருக்கலாம். அதாவது முதலையோட உடம்பை சுத்தி அதை நெருக்கி மூச்சு திணர வச்சு கொன்னு இருக்கலாம்.

முதலையை கொல்றது இதுக்கு ரொம்ப ஈஸியா இருந்திருக்கும். ஏன்னா இதோட மிகப்பெரிய உருவம்தான் காரணம். ப்ரோக்லைன் (Brooklyn) பிரிட்ஜோட எடையை விட ஒன்றரை மடங்கு அதிகமான போர்ஸ முதலைக்கு இது கொடுத்து அதை நெருக்கி இருக்கும். இதை அக்யூரேட்டா சொல்லணும்னா ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 28 kg ஃபோர்ஸோட டேட்டோனோபோவா, முதலையை நசுக்கி இருக்கும்.
அடுத்து இறந்து போன அந்த முதலையை முழுசா முழுங்கி இருக்கும். ஒரு பெரிய பஸ் அளவுக்கு இருக்கிற இதுங்கள்ல ஆண்களை விட பெண் பாம்புகள் தான் ரொம்ப பெருசா இருக்குமாம். ரெப்டைல்ஸ்லயே (Reptiles) இதுங்களோட மண்டை ஓடுதான் ரொம்ப பெருசானது. இப்படி இந்த அளவுக்கு ஒரு டைட்டானிக் கப்பல் மாதிரி பிரம்மாண்டமாவும் பெருசாவும் இருக்கிறதால, இது டைட்டனோபோவான்னு அழைக்கப்படுது.
குரோனோசரஸ் டைட்டனோ போவா விட நீளத்துல சின்னதா இருந்தாலும் தனக்கு இறையா மாட்டின விலங்க கிழிச்சி ரத்தத்தை பாக்குறதுல இதுங்க பெஸ்ட் ஹன்டர் (Hunter). ரொம்ப அகலமா திறக்கிற இதோட வாயில பற்கள் கூம்பு வடிவத்தில் அமைஞ்சிருக்கும். ஒரு பறவையோட அழகு மாதிரி மண்டை ஓட்டிலிருந்து உருவாகுற தாடையானது இறைவிலங்கை கச்சிதமா கிழிக்கவே வடிவமைக்கப்பட்டிருக்கு.

இதோட உடல் வடிவமும், அளவும் இப்ப இருக்கிற உயிரினமான ஓர்காவேல் (Orca whale- திமிங்கிலம்) அளவுக்கு ஈக்குவலா இருக்கும் 10 m நீளம் வரை வளரும். வெயிட் 10 டன் வரைக்கும் இருக்கும். இது டைட்டனோ போவா விட அதிகமான வெயிட்டுதான். இதோட முழு தோற்றமும் இப்ப இருக்கிற முதலையோட உருவத்தோட ஒத்துப்போகுது. அதாவது முதலையோட மிகப்பெரிய வெர்ஷன் தான் இந்த குரோனோசோரஸ்.
குட்டையான கழுத்தும், ஸ்ட்ராங்கான விலா எலும்பும், நாலு துடுப்புகளும், ஒரு சின்ன வாலும், கூர்மையான மற்றும் நீளமான தலையும் தண்ணில வேகமா நீந்தவும் இறையை ரெண்டு துண்டாக்கவும் பயன்படுது. குரோனோசரஸ் டைட்டனோபோவா கூட மோதி இருக்காது. ஏன்னா இதுங்க ரெண்டும் வெவ்வேறு காலகட்டங்கள்ல வாழ்ந்தது. குரோனோசரஸால 27000 நியூட்டன் பைட் போர்ஸ்ல கடிக்க முடியும். இது இப்ப இருக்கிற சால்ட் வாட்டர் முதலையை விட ரெண்டு மடங்கு அதிகம். சரி இந்த ரெண்டு மிகப்பெரிய மான்ஸ்டரும் அழிஞ்சு போகாம இருந்து..! இப்ப வரைக்கும் நம்ம கூட வாழ்ந்துட்டு இருந்ததுன்னா என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்..?
இப்போ டைட்டனோபோவா உயிரோட இருந்ததுன்னா அது பூமத்திய ரேகை பகுதியிலதான் அதிகமா காணப்படும். ஏன்னா அதுங்க குளிர் ரத்த விலங்குகளா இருக்கிறதால அதிக வெப்பம் தேவைப்படும். எடுத்துக்காட்டா கொலம்பியா, வெனிசுலா, பிரேசில், பெரு, பனாம போன்ற நாடுகள்லதான் அதிகமா வாழும். இவ்வளவு பெரிய வலிமையான பாம்புகள் பக்கத்துல வாழும்போது நாம நம்ம வீட்டை ரொம்ப ஸ்ட்ராங்கா கட்டுவோம்.

கண்ணாடி ஜன்னல்கள் எல்லாம் வைக்காம ஃபுல்லா கான்க்ரீட்டால கவர் பண்ணிடுவோம். கதவு ஜன்னல்களை திறக்க கூட பல பாதுகாப்புகளை பண்ணி வச்சிருப்போம். வீட்டை சுத்தி மின்சார வேலி அமைக்கவும் வாய்ப்பு இருக்கு. தலைகாணிக்கு அடியில ஒரு துப்பாக்கி வச்சுக்கிட்டு தூங்கினாலும் கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்லை.
அனகோண்டாஸ் மாதிரி இதுங்களும் மனிதர்களை தாக்க விரும்பாமல் தான் இருக்கணும். ஆனா சில இக்கட்டான நிலையில அதுங்க நகரத்துக்குள்ள வரும்போது மனிதர்களை முழுசா விழுங்கவும் வாய்ப்பு இருக்கு. இப்போ எப்படி சிங்கங்களோட தலையை வெட்டி பெருமைக்காக வச்சிக்கிற ட்ராஃபி (Trophy) ஹன்டிங் மாதிரியான சில விஷயங்கள் இருக்கோ, அந்த மாதிரி டைட்டனோபோவா இருக்கும்போது அதோட தலையை வெட்டி ட்ராஃபியா வச்சிக்கிறதும் நடக்கும். ஒரே ஒரு டைடனோபோவாவ புடிச்சு ஜூல (Zoo) வச்சா அதை பார்க்க மக்கள் அலை அலையா வருவாங்க. நல்லா கல்லா கட்டும். இதோட தோலுக்கு சந்தையில நல்ல மதிப்பு இருக்கும். இதை பிடிக்கிறவங்களை நேஷனல் ஹீரோவாவும் பார்க்க வாய்ப்பு இருக்கு.
டைட்டனோபோவாக்கு ஏத்த மாதிரியான வாழ்விடங்கள்ல முதலைகளும், ஆமைகளும் ரிவர் டால்பின்ஸும் தண்ணில வாழுது. அடுத்து அதே வாழ்விடங்கள்ல நிலத்துல ஜெயின் ஆர்மிலோஸ் (Armadillos), மேனடிஸ் (Manatees), டேப்பைர்ஸ் (Tapir), கூக்கர்ஸ் (Cougar), ஜேகுவர்ஸ் (Jaguar), கேமன்ஸ் (Caiman) அப்புறம் பிரசிலியன் ஆட்டர்ஸும் (Otter) வாழுது. சோ டைட்டனோபோவால இதுங்களோட எண்ணிக்கை குறைஞ்சு மொத்தமா அழியக்கூடிய நிலையில இருக்கும். வெப்பமண்டல பகுதியில் இருக்க உச்சபட்ச வேட்டையாடிகள் கூட டயட்டனோபோவாக்கு உணவா மாறலாம். இதனால உணவு சங்கிலியில சில மாற்றங்கள் உருவாகும்.

சில விலங்குகள் பாதுகாப்பை தேடி வேற இடங்களுக்கு இடம்பெயர்ந்து போயிருக்கும். இல்லைன்னா பரிணாம வளர்ச்சி மூலமா அதுங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக வேகமாவும் சுறுசுறுப்பாவும் மாறலாம். இல்லைன்னா அதுங்க கிட்ட இருந்து மறைஞ்சு போகிற மாதிரி கேமபிளாஜா (Camouflage) உருவாக்கலாம். பூமியோட மத்திய பகுதியான ஈக்குவேட்டார்ல இதுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறதால அங்க இதனுடைய எண்ணிக்கை அதிகமாகும்.
ஆனால் மத்த உயிரினங்களோட எண்ணிக்கை குறையறதால தாவரங்களோட எண்ணிக்கையும் குறைஞ்சு ஈக்கோசிஸ்டம் பாதிக்கப்படும். ஏன்னா விலங்குகளாலதான் பல தாவரங்களோட விதைகள் பரப்பப்படுது. விலங்குகள் இல்லாம போச்சுன்னா தாவரங்களோட எண்ணிக்கை குறைஞ்சு காலநிலை பாதிக்கப்படும். சரி இப்ப குரோனோசர்ஸ் இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும் அதனோட புதை படிவங்கள் கிடைச்ச ஆஸ்திரேலியா, தென் அமெரிக்காவோட பெருங்கடல்கள்ல காணப்பட்டிருக்கும். ஏன்னா அங்க அதுக்கு ஏத்த வெப்பநிலையும், அதிக இறையும் இருந்திருக்கும்.
கிரேட் வைட் ஷார்க் (Great white shark), பிரானா (Piranha) மாதிரியான சின்ன மீன்களை வச்சு ஹாலிவுட் படம் எடுக்கும்போது, இவ்வளவு பெரிய ராட்சசன் கடல்ல இருந்தா நிச்சயமா அதை பத்தி கண்டிப்பா ஒரு ஹாலிவுட் படம் எடுத்திருப்பாங்க. குரோனோசரஸ் வாழ்ந்த அதோட காலத்துல கடல்ல மிகப்பெரிய ஆமைகள் இருக்கும். அதனால இதுங்க ஒரு நாளைக்கு ஒரு ஆமை சாப்பிட்டாலே போதுமானதா இருக்கும். ஆனா இப்ப கடல்ல சின்ன சைஸ்ல ஆமைகள் இருக்கிறதால 12 ஆமைகளை சாப்பிட்டாதான் குரோனோசரஸ் வயிறு நிரம்பும்.

அது கூட அதுக்கு பத்துமாங்கிறது டவுட்தான். ஏன்னா அது வாழ்ந்த காலத்துல ஒரு ஆமை உட்பட பிளிசியோசர்ங்கிற (Plesiosaur) ஒரு ரெப்டைலையும் சாப்பிட்டாதான் அதோட வயிறு ஃபுல்லா நிரம்பும். அப்போ அந்த ரெப்டைலுக்கு சமமான அளவுல இப்ப எந்த கடல் உயிரினம் இருக்குன்னா..! கடல் பாலூட்டிகளை சொல்லலாம். அதாவது திமிங்கலங்களை சாப்பிடலாம். குரோனோசரஸால திமிங்கலங்களோட எண்ணிக்கை குறையும்.
திமிங்கலங்களை வேட்டையாடி சாப்பிடுற ஓர்கா சுறாக்களுக்கு உணவு இல்லாம போகும். இதுங்க சாப்பிட்ட திமிங்கலத்தோட மிச்ச மீதி இறைச்சிதான் ஆழ்கடல் மீன்களுக்கு உணவா இருக்கும். இப்போ அது கிடைக்காததால ஆழ்கடல்ல மீன்களோட எண்ணிக்கையும் குறையும். அதுமட்டும் இல்லாம அதிகமான மீன்களை இது சாப்பிடுறதால மீன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு சின்ன சின்ன பிஷஸ்க்கு மீன்கள் கிடைக்கும் கிடைக்காம போகலாம்.
குறிப்பாக இது உயிரோட இருந்தா கடலுக்கு மீன் பிடிக்கப் போற மீனவர்களோட போட்டை (Boat) ஸ்ட்ராங்கான மெட்டல்ல பண்ணியே ஆகணும். ஏன்னா கடல்ல இவ்வளவு பெரிய ஜாயின்ட்ஸ் இருக்கும்போது என்ன வேணா நடக்கலாம். இது ஃபிஷிங் போட்டையும், ஃபிஷிங் எக்யூப்மென்ட்ஸையும் கொடூரமா டேமேஜ் பண்ண வாய்ப்பு இருக்கு. சோ இதனால மீனவர்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

இதுங்களால திமிங்கலத்தோட எண்ணிக்கை குறையறதால மட்டுமின்றி இன்னொரு ஆபத்தும் இருக்கு, அது என்னன்னா குளோபல் வார்மிங். பூமிக்கு தேவையான ஆக்சிஜனை கிட்டத்தட்ட 50% கடல் தாவரங்கள் தான் கொடுக்குது. அதுங்க சூரிய ஒளி மூலமா கார்பன் டை ஆக்சைட ஆக்சிஜனா மாத்துது. இந்த கடல்வால் தாவரங்கள் தேவையான உரமா திமிங்கலத்தோட கழிவுகள் தான் இருக்கு.
சோ திமிங்கலத்தோட எண்ணிக்கை குறையும் போது கடல் தாவரங்களும் குறையும். அதிகமான கார்பன் டை ஆக்சைடு பூமியை வெப்பமாக்கும். அதாவது கிட்டத்தட்ட 1000 டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் சேரும். இது குளோமல் வார்மிங்க்கு வழிவகுக்கும். கிரேட் வைட் ஷார்க். கில்லர் வெல், ஸ்பேம் வேர்ல்ட் மாதிரியான பிரிடேட்டர்ஸ் உணவுக்கு இதுங்க கூட போட்டி போடலாம். இல்லைன்னா எதுங்க கிட்ட இருந்து தள்ளி போயிடலாம்.
இவ்வளவு பெரிய ராட்சசன் கடல்ல இருக்கிறதால மீன்பிடி தொழில், கப்பல் போக்குவரத்து, டூரிசம் மாதிரியான விஷயங்கள் மோசமா பாதிக்கப்படும். இதுங்க அதிகமா வாழ்ற இடங்களை ஆபத்தானதா அறிவிச்சு அங்க போக தடைபடவும் வாய்ப்பு இருக்கு. டைட்டனோபோவாவோட ஸ்கின் மார்க்கெட்ல நல்ல விலைக்கு போகும். அதுக்காக அதை வேட்டையாட ட்ரை பண்ணலாம்.

அதே மாதிரி குரோனோசரஸ் ஓட பற்கள் ரொம்ப எக்ஸ்பென்சிவ்வானது. மார்க்கெட்ல ஒரு கிலோவுக்கு 65000 டாலர் வரை இது விற்கப்படலாம். டைட்டனோபோவாவும், குரோனோசரஸும் இப்ப உயிரோட இருந்திருந்தா என்னென்ன விளைவுகள் ஏற்படுங்கிறதை இப்போ நம்ம பார்த்தோம். இது எல்லாமே உண்மையா நடக்கக்கூடிய விஷயங்கள் தான் ஒருவேளை அதுங்க இப்போ வாழ்ந்துட்டு இருந்தா..? இவ்வளவு எதிர்மறையான விளைவுகள் இருக்கிறதால அதுங்க இப்ப இல்லாம இருக்கிறதே ரொம்ப நல்லதுதான்.

ஓகே இதோட இந்த பதிவு முடிக்கிறது. உங்க எல்லாருக்கும் இந்த பதிவு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவு புடிச்சிருந்தா ஃபேஸ்புக்ல லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. இந்த ரெண்டு ராட்சசன்கள்ல இப்போ எது இருந்தா நல்லா இருக்கும்னு நீங்க நினைக்கிறதை கமெண்ட் பண்ணுங்க. மறக்காம நம்ம telegram சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. டெலிகிராம் இல்லாதவர்கள் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள். நெக்ஸ்ட் பதிவுல மீட் பண்ணலாம் தேங்க்யூ.
இந்த பதிவை முழுமையாக படித்த நண்பர்கள் நமது வலைதளத்திலேயே கமெண்ட் செய்யும் ஆப்சன் இருக்கும், அதிலேயேயும் உங்களது பொன்னான கருத்துக்களை பதிவிடுங்கள். மேலும் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இணைய விரும்பும் நபர்கள் கீழே தெரியும் ரோஸ் கலர் மெசேஜ் பாக்ஸ் கிளிக் செய்து அதில் இருக்கக்கூடிய வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள். நமது வலைதளத்தில் வெளியிடக்கூடிய புதிய புதிய பதிவுகள் என் அப்டேட்டுகள் உடனுக்குடன் அங்கு நீங்கள் பெறுவீர்கள்.
மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவில் உங்களை வந்து சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது நான் உங்கள் காவியா 📝






ஐந்து முறை இந்த உலகமானது அழிந்து மீண்டும் உருவாகி இருக்கும் பல சுவாரசியமான தகவல்களை அந்த ஒரு கட்டுரையில் உங்களுக்காக நான் வழங்கி இருக்கிறேன். அந்த கட்டுரையை பிடிப்பதற்கு கீழே இருக்கக்கூடிய மஞ்சள் கலர் தலைப்பை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லது நமது வலைதளத்தில் பல சுவாரசியமான தகவல்களை தினமும் வாங்கிக் கொண்டிருக்கிறோம் படிக்க தவறாதீர்கள்.